மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 3 மார்ச், 2011

'தம்பி இருக்குமிடம் தமிழீழம்!'


நெடுமாறன்
 

 
ழத்தில் 25 நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அந்த அனுபவங்களைக் கூறுகிறார்...  கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இறங்கியபோது எங்கு பார்த்தாலும் புலிக் கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வர வேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில், 'இது வேங்கைகள் விளையும் நாடு!’ என்ற பாடல்.
மூன்று இடங்களில் கார்களும், காவலர்களும் மாற்றப்பட்டனர். அந்தி மயங்கும் வேளையில் ஒரு கானகத்தின் வெளிப்புறத்தை அடைந்தோம். அங்கே இருந்து சில மைல்கள் நடந்து சென்று, புலிகளின் முகாம் ஒன்றினை அடைந்தோம். அங்கு இரவு தங்கிவிட்டு, காலையில் புறப்பட்டு 'தம்பி’ பிரபாகரன் இருக்கும் முகாமுக்குப் போகலாம் என அன்பு என்ற புலி கூறினார். இரவில் அந்த முகாமில் இருந்த புலிகளுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
எவ்வித வசதியும் இல்லாத காட்டில், உணவோ, தண்ணீரோகூடக் கிடைக்காமல் பல நாட்கள் பட்டினிகிடந்த நிலைமை புலிகளுக்கு உண்டு. ஆனாலும், அச்சம்கொள்ளாமல் துணிந்து போராடி னார்கள் என்றால், அதற்கு பிரபாகரனின் தலைமையே காரணம். இந்திய ராணுவத்தின் பெரும் பலத்தை எதிர்நோக்கும் போர்ப் பயிற்சியை மட்டும் அல்ல, துயரங்களையும் துன்பங்களையும் தாங்கும் மன வலிமையையும் பிரபாகரன் தனது தோழர்களுக்கு ஊட்டினார்.
ஒரு முறை, கிடைத்த மாவைக்கொண்டு தோழர்கள் கஞ்சி காய்ச்சினார்கள். மரக் குச்சியைக்கொண்டு மாவைக் கிண்டும்போது, சட்டி உடைந்து அவ்வளவு கஞ்சியும் அடுப்பில் வழிந்து, சாம்பலோடு கலந்து மண்ணில் பரவியது. பல நாட்கள் பட்டினியுடன் காத்துக்கிடந்த தோழர்களின் பசித்த விழிகள் இந்தக் காட்சியைக் கண்டதும் கலங்கின. ஆனால், பிரபாகரன் கொஞ்சமும் கலங்காமல் முன்வந்து அடுப்பின் முன்னால் மண்டியிட்டு, சாம்பலும் மண்ணும் கலந்த கஞ்சியைக் கையால் வழித்து உண்டு காட்டினார். மற்றவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்!
சூரிய ஒளி புகுவதற்குத் தயங்கும் அந்த அடர்ந்த காட்டில் மற்ற தோழர்களுடன் பிரபாகரனைச் சந்திக்க நான் நடந்து சென்றபோது, வழிநெடுக விடுதலைப்புலிகள் ஆங்காங்கே பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருப்பதைப் பார்த்தேன். மரம் வெட்டுதல், பொருட்க ளைச் சுமந்து செல்லுதல் போன்ற பணிகளை,  ஆண் களைவிடப் பெண் புலிகள் மேற்கொண்டு இருப்பதைப் பார்த்துத் திகைப்படைந்தேன்.
பல மைல் தூரம் நடந்து சென்று காலை சுமார் 11 மணியளவில் தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். கூடாரத்துக்குள் இருந்த தம்பி வெளியில் வந்து என்னைக் கட்டித் தழுவியபோது உணர்ச்சிப் பெருக்கால் எனது கண்கள் பனித்தன.
தம்பிக்காக நான் கொண்டு சென்றிருந்த விதை இல்லாத திராட்சைப் பழங்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் கொடுத்தபோது, மகிழ்ச்சியுடன்  பெற்றுக் கொண்டு ஒன்றிரண்டு பழங்களை எடுத்து வாயில் போட்டார். மறுகணம் பக்கத்தில் இருந்த இளம் புலி ஒருவரை அழைத்து, அவர் கையில் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கும்படி கூறிவிட்டார்.
போர்க்காலச் சூழலில் எப்போதும் இருந்து வரும் பிரபாகரனின் இதயம் கடினமாகிடவில்லை. மாறாக அந்த இதயத்தில் நகைச்சுவை உணர்வு ததும்புகிறது. தன்னுடைய சக தளபதிகளைக் கிண்டல் செய்கிறார். சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார். அவரும் சிரித்து மகிழ்கிறார்.
அவருடைய அலுவலகக் கூடாரத்தில் உட்கார்ந்து நான் பத்திரிகை படித்துக்கொண்டு இருந்தேன். அவர் வேறு ஒரு வேலையாக வெளியில் சென்று திரும்பியவர் உரத்த குரலில், ''மாதரசி மதிவதனி... சாப்பாடு தயாரா?'' என்று கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அடுத்த கூடாரத்தில் இருந்த அவரது துணைவியார் மதிவதனி, அவரைப் பின்தொடர்ந்து நான் இருந்த கூடாரத்துக்கு வந்தார். ''எப்போதும் மாதரசி என்று சொல்லி என்னைக் கேலி செய்கிறார்'' என்று என்னிடம் புகார் செய்தார்.
பிரபாகரன் சிரித்துக்கொண்டே, ''அண்ணா, நான் கேலி செய்யவில்லை. நீங்கள் எழுதியிருப்பதைத்தான் நான் சொல்கிறேன்'' என்றார். பிரபாகரன் பற்றி நான் எழுதிய நூலில் 'மாதரசி மதிவதனி’ என்ற தலைப்பில் அவருடைய துணைவியார்பற்றி எழுதியிருந்தேன். அதையே அவர் தன்னுடைய மனைவியைக் கிண்டல் செய்யப் பயன்படுத்தியபோது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அதுபோல கவிஞர் காசி ஆனந்தன் எனது அருகில் உட்கார்ந்திருந்தார். அவரின் வயதும் என் வயதும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். அவருக்குத் தலை முடியோ மீசையோ கொஞ்சமும் நரைக்காதது  கண்டு நான் வியந்தேன். அவரிடம், ''குன்றாத இளமை யின் மாறாத ரகசியம் என்ன?'' என்று கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினார்.
அருகில் இருந்த பிரபாகரன், ''காசி அண்ணாவின் குன்றாத இளமையின் மாறாத ரகசியம் 'டை’ போடுதல்'' என்று சொன்னபோது, சிரிப்பலைகளால் அந்தக் கூடாரமே அதிர்ந்தது.
புலிகள் இயக்கத்தில் உள்ள தோழர்களிடையே எத்தகைய சச்சரவுக்கும் இடம் இல்லை. ஆனாலும்கூட, சில நேரங்களில் யாரேனும் இரண்டு பேருக்கு இடையே சச்சரவுகள் வந்துவிடுமேயானால், அவர்களுக்கு பிரபாகரன் விதிக்கும் தண்டனை மிக வேடிக்கையானது. ஒருவரின் வலது கரத்தையும் இன்னொருவரின் இடது கரத்தையும் இணைத்து விலங்கு பூட்டி, ஒரு வாரம் அப்படியே இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார். தண்டனைக்கு ஆளான அந்த இருவரும் உறங்குவதில் இருந்து உண்பது வரை என்ன செய்தாலும் ஒன்று சேர்ந்தே செய்ய வேண்டும். ஒருவர் உதவி இல்லாமல் மற்றொருவர் எதுவும் செய்ய இயலாது. அப்படி 'தண்டனை’ விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் தற்செயலாக நாங்கள் அமர்ந்திருந்த மரத்தடி பக்கமாக வந்தனர். அவர்களை பிரபாகரன் அருகே அழைத்தார். ''இந்த இணைபிரியாத நண்பர்களைப் பார்த்தீர்களா? எவ்வளவு ஒற்றுமை? சாப்பிட்டாலும் ஒன்றாகச் சாப்பிடுவார்கள். குளித்தாலும் ஒன்றாகக் குளிப் பார்கள். எங்கு போனாலும் ஒன்றாகவே போவார்கள். இப்படி ஒற்றுமையானவர்கள் உங்கள் நாட்டில் உண்டா?'' என்று கேட்டுக் கலகலவென்று சிரித்த போது, அந்த இருவரும் அவருடன் சேர்ந்து சிரித்து விட்டார்கள். அவர்கள் சென்ற பிறகு பிரபாகரன் குறும்பாகக் குரலைத் தாழ்த்தி என்னிடம், ''இனி, ஒரு காலத்துக்கும் இவர்கள் யாருடனும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்''என்றார்.
புலிகளின் உணவு, உடை, குளிப்பு, பல்விளக்குதல், முடி வெட்டுதல், பொழுதுபோக்குதல் போன்ற சகல விஷயங்களையும் பிரபாகரனே மேற்பார்வையிடுகிறார். காட்டு வாழ்க்கையில் சுத்தமும் சுகாதாரமுமே முக்கியமானது என்று அவர் போதிக்கிறார். எந்த இடத்தையும் யாரும் அசுத்தம் செய்வது இல்லை. குப்பைக் காகிதத்தைக்கூட வீசி எறிவது இல்லை. எச்சில்கூடத் துப்புவது இல்லை.
இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பொது மக்களும், இயக்கத்தில் உள்ளவர்களும் தங்களுக்குள்ள குறைகளையோ நாட்டில் நிலவும் குறைகளையோ பிரபாகரனுக்குத் தெரிவிக்க விரும்பினால், அதற்கும் வழி செய்திருக்கிறார் பிரபாகரன். 'விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியின் கிளைகள்’ வடக்கு - கிழக்கு மாநிலத்தில் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த அலுவலகங்களில் 'தலைவருக்கு’ என்று எழுதப்பட்டுள்ள அஞ்சல் பெட்டிகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. 'தங்கள் குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள், கடிதம் எழுதி இந்த அஞ்சல் பெட்டியில் போடலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தளபதிகளிடம் இந்த அஞ்சல்பெட்டிகளின் சாவிகள் இருக்கும். வாரத்துக்கு ஒரு முறை இப்பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள கடிதங்கள் எடுக்கப்பட்டு பிரபாகரனுக்கு அனுப்பப்படுகின்றன. பிரபாகரனின் அலுவலகத்தில் இந்தக் கடிதங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு, அவர் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கூடுமானவரை எல்லாக் கடிதங்களையும் அவரே பார்க்கிறார். சுட்டிக்காட்டப்படும் குறைகள் விடுதலைப் புலிகளைப் பற்றியதாக இருந்தாலும் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை களை உடனடியாக எடுக்கிறார்.
போர்க் களத்திலும் சில நெறிமுறைகளைக் கையாளும்படி புலிகளுக்குக் கண்டிப்பான கட்டளை. களத்தில் சுட்டு வீழ்த்தப்படும் எதிரிகளின் ஆயுதங்கள், பேட்ஜுகள் ஆகியவற்றை மட்டுமே கைப்பற்றப்பட வேண்டுமே தவிர, அவர்களின் கைக்கடிகாரம், மணிபர்ஸ் மற்றும் சொந்த உடைமைகளை யாரும் தொடக் கூடாது. இதை மீறுபவர் களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.
காட்டில் புலிகள் குடிபுகுந்தபோது பல தொல்லைகளைச் சமாளிக்க வேண்டி நேர்ந்தது. அவற்றில் முக்கியமானது ஈக்களின் தொல்லை. பிரபாகரனுக்கு ஈ என்றாலே அருவருப்பு. ஆனால், காட்டில் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. ஒருநாள் பிரபாகரன் தனது தோழர்களை அழைத்து, ஈக்களை எல்லாம் ஒழிக்க வேண்டுமென்று கூறினார். அருகில் இருந்த ஒருவர் ''அது எப்படி முடியும்?'' என்று கேட்டார். ''பத்தே நாட்களில் ஈக்களை ஒழித்துக் காட்டுகிறேன்'' என்று பிரபாகரன் கூறிவிட்டு, தன்னுடன் இருந்த விடுதலைப் புலிகளுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்தார்; ''ஒவ்வொரு விடுதலைப் புலியும் ஒரு நாளைக்கு இருநூறு ஈக்கள் பிடிக்க வேண்டும்.'' பத்தே நாட்களில் ஈக்கள் ஒழிக்கப்பட்டன.
பிரபாகரனின் துணைவி மதிவதனியை மட்டுமன்றி,  மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரைக் காட்டுக்குள் இருக்கும் முகாமுக்குள் சந்தித்தேன். குழந்தைகள் இருவரும் துடிதுடிப்புடன் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த அவர்கள், இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப்போல பள்ளிக்கூடம் செல்லவோ, எல்லோருடனும் சேர்ந்து விளையாடவோ வாய்ப்பு இல்லை. விடுதலைப் புலிகள்தான் அவர்களின் விளையாட்டுத் தோழர்கள். பிரபாகரனைக் காண வரும் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் இந்தக் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் வேடிக்கையாகப் பொழுது போக்குகிறார்கள்.
ஒருநாள் மரத்தடியில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, குழந்தைகள் இரண்டும் புள்ளிமான்களாகத் துள்ளி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பிரபாகரன் பின்வருமாறு கூறினார், ''அண்ணா... சிரித்து விளையாடும் இந்தப் பிள்ளைகள் நாளை குண்டு வீச்சில் பிணமாக மாறலாம். கனவுபோல அவர்களைப்பற்றிய நினைவு கலையலாம். எனவேதான், அவர்கள் மீது அதிக பாசம் வைப்பதில்லை. என்ன நேர்ந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம்!''





unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக