மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

முத்துக்குமாரா.. தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்

முத்துக்குமாரா.. தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்!  Top News
தமிழீழம் எரிந்து கொண்டிருந்த வேளையில், தூங்கிக்கொண்டிருந்த தமிழகத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்பத் தன்னோடு போர் தொடுத்தது முத்துக்குமாரன் என்ற அக்கினிக் குஞ்சு. சிங்கள தேசம் தடை செய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளை வீசி, ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துக்கொண்டிருந்த காலத்தில், தன்னையே எரித்துத் தமிழீழம் காக்கப் புறப்பட்ட வீரத் தமிழன் முத்துக்குமாரன் தமிழகத்தின் ஆட்சித் தலைவரையே தோற்கடித்த நாள் ஜனவரி 29, 2009.
முத்துக்குமாரா� எங்கள் ஈகைப் போரெளியே�! தமிழகத்தை எழுச்சி கொள்ள, தமிழக மக்களை ஒன்றாக எழ வைக்க உன்னை அக்கினிக்கு இரையாக்கினாய்! உனது உன்னதமும், உனது புனிதமும் உன் கனவுகளை நிறைவேற்றும். தமிழீழ மக்களுக்காய் தமிழகம் பொங்கி எழும். எங்களுக்காய் ஒன்றாக எழுந்து போராடும். எங்களைக் காப்பாற்றத் தடை தகர்க்கும். எங்களை மீட்க கடல் கடக்கும் என்று தமிழீழ மக்கள் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். தெற்கின் சிங்களமும், வடக்கின் ஹிந்தியமும் தமிழர்களைப் பூண்டோடு அழிப்பதற்குப் புதிது புதிதாக என்னதான் முயன்றாலும், காலம் மாறும் என்று கரம் கூப்பி நிற்கின்றார்கள்.
முத்துக்குமாரா.. எங்கள் தாய்நிலத்துத் தளபதியே�! நீ மூட்டிய தீ அன்று எம்மைக் காப்பாற்றாது தடுக்கப்படலாம்� ஆனாலும், நீ தீட்டிய போர்வாளாக அது ஆயிரம், ஆயிரம் தோழர்கள் கைகளில் ஆயுதங்களாக உயரும். உண்மையும், தியாகமும் வீணாகித்தான் போகும் என்றால் உலகில் வாய்மை எதற்கு�? சிலுவையில் அறையப்பட்டதனால், யேசுவின் கதை முடிந்து விடவில்லை. சுட்டுக் கொன்றதனால், காந்தியின் வரலாறும் அழிந்துவிடவில்லை. சத்தியம் செத்துவிடுமென்றால், யூதாஸ் கரியோனும், கோட்சேயும் அல்லவா வரலாறாகப் பதிவாகியிருப்பார்கள்.
முத்துக்குமாரா� போலிகளை வீழ்த்திப் புடமாகிப் போனவனே�! �வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்� என்று நீ கதை பேசவில்லை. அதை வாழ்ந்து காட்டியவன் நீ. கட்டுமரமாய் மிதந்து நீ, தமிழர்களைக் கரை சேர்ப்பாய் என்று இப்போதும் நாங்கள் நம்புகின்றோம். இதயத்தால் உன்னைப் பூசிக்கிறோம்� உன்னைப் பின்பற்றி எத்தனையோ தமிழர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்தார்கள், ஆனாலும், தமிழீழத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே� தமிழர்கள் என்றுமே எதிரிகளால் வீழ்த்தப்பட்ட வரலாறு கிடையாது. துரோகிகளாலேயே தமிழீழமும் வீழ்ந்தது.
முத்துக்குமாரா.. தமிழகத்தின் மாவீரனே�! உன்னை வணங்குகின்றோம்�! எங்கள் மண்ணெல்லாம் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் எழும் காலத்தில் நீயும் எழுந்து வருவாய்� தமிழீழக் கொடி பறக்கும் தேசத்தின் காற்றிலும், மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும் உன் நாமம் கலந்து வியாபிக்கும் காலத்தில் கட்டாயம் நீ மீண்டும் வருவாய்� நீ மூட்டிய தீயினை நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் ஏந்தி நிற்கின்றோம். நாங்கள் தோற்றுப்போக மாட்டோம். எந்தத் தடை வரினும், தளர்ந்து நிற்காமல் வெற்றித் திசை நோக்கி விரந்து பயணிப்போம்! தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்!
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!
                                                                  unarchitamilan


 

சனி, 29 ஜனவரி, 2011

மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்:சீமான் அறிக்கை.

மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்:சீமான் அறிக்கை.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான்.
அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். �சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்� என்ற "பதவிப்பித்தர்" கருணாநிதி அவர்களுக்கும், �எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்� என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், �தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை� என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லூறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.
தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.
நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சூடான் பிரிவினையும் இலங்கை படுகொலையும்!

சூடான் பிரிவினையும் இலங்கை படுகொலையும்!
ஆப்ரிக்க நாடான சூடானுக்கும் இலங்கைக்கும் நூற்றியெட்டு ஒற்றுமைகளைக்கூட கண்டுபிடித்துச் சொல்லலாம்.

சூடான் நாட்டை இரண்டாகப் பிரிப்பதா என்பதைத் தீர்மானிக்க, கடந்த ஜனவரி 9ம் தேதி கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மேற்பார்வையில் நடந்துமுடிந் திருக்கும் இந்தத் தேர்தலில் அநேகமாக 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடு சூடான். நைல் நதி தந்த செழுமையும், சஹாரா பாலைவனத்தின் வறட்சியும் இந்த தேசத்தின் இனிய முரண்கள். முரண்பாடுகள் இதோடு முடிந்துவிடவில்லை... வடக்கு சூடான் அரபு முஸ்லிம்கள் வாழும் பிரதேசம்; தெற்கு சூடான் ஆப்ரிக்க கறுப்பினத்தவர் வாழும் பிரதேசம். இனம், பண்பாடு, மதம், மொழி என எல்லாவற்றாலும் முரண்பட்ட இரண்டு மக்கள் குழுக்கள், ஒரே தேசத்துக்குள் வாழ நேர்ந்தால் என்ன ஆகும்? பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை நசுக்கத்தானே செய்யும்! அதுதான் சூடானில் நேர்ந்தது. தெற்கு சூடானின் வளங்களைச் சுரண்டிய வடக்குப் பகுதி மக்கள், அதோடு நிற்காமல் தெற்கு சூடான் கறுப்பினத்தவரை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றார்கள்.
 
நூற்றாண்டுகள் கணக்காகத் தொடர்ந்த இந்த அடிமை வியாபாரமும் சுரண்டலும் இங்கிலாந்து சூடானை ஆக்கிரமித்தபோது நின்றது. 1956ம் ஆண்டில் எகிப்து மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிடியிலிருந்து சூடானுக்கு விடுதலை கிடைத்தது. அதன்பிறகு பழைய குருடி கதைதான்! தெற்கு தேய, அதிகாரம் முழுக்க வடக்கில் குவிந்தது. அடிப்படை கட்டமைப்புகள், பொருளாதார மேம்பாடுகள், கல்வி நிலையங்கள் என வடக்கு சூடான் முன்னேற, மண் குடிசைகளைத் தாண்டி தெற்கில் வேறு எதுவும் வளரவில்லை. வேறுவழியின்றி சூடான் மக்கள் விடுதலைப் படை என்ற போராளிக்குழு உருவானது. ஆயுதம் ஏந்திய போராட்டமும் தனி நாடும்தான் இந்த இன வேறுபாட்டுக்குத் தீர்வு என அந்தக் குழு முடிவெடுத்தது. சூடான் அரச படைகளுக்கும் போராளிப்படைகளுக்கும் மோதல் உருவானது. 50 ஆண்டுகளைத் தாண்டி நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். சூடான் மக்கள் விடுதலைப் படையிலிருந்து நான்கைந்து குழுக்கள் தனித்தனியாகப் பிரிந்தன; ஆனாலும் அது தன் செல்வாக்கை இழக்கவில்லை.

சூடான் மக்கள் விடுதலைப் படையை பல ஆண்டுகளாக வழிநடத்தி வந்த மக்கள் தலைவர் ஜான் கெரங் கடந்த 2005ம் ஆண்டு மரணமடைந்தார். இரண்டு தலைமுறைகளாக நடந்துவந்த விடுதலைப் போராட்டம் அவரது மரணத்தோடு முடிந்துவிடுமோ என்ற அச்சம் தெற்கு சூடான் அபலை மக்களைத் தொற்றிக் கொண்டது. ஆனால், அமெரிக்க அரசு தலையிட்டு சூடானில் அமைதியை ஏற்படுத்தியது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் விருப்பத்தின் பேரில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் மெபெகி, கத்தார் நாட்டு அதிபர் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சூடான் அதிபர் ஒமர் ஹஸன் அல்&பஷீர் இதன்பிறகு பிரிவினை வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்க, இப்போது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. ‘சேர்ந்திருக்கிறோம்’, ‘பிரிவினை’ என இரண்டு சின்னங்கள் கொண்ட ஓட்டுச்சீட்டு தெற்கு சூடான் மக்கள் எல்லோருக்கும் தரப்பட, அதில் முத்திரை குத்த வேண்டும். அநேகமாக சமீபகால வரலாற்றில் இப்படி ஓட்டெடுப்பு நடத்தி பிரிக்கப்படும் தேசம் சூடானாகத்தான் இருக்கும்.

இந்த தேசப்பிரிவினை சுமுகமாக நடந்துவிட்டாலும், அதற்குப் பிறகும் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. தெற்கு சூடானில் இருக்கும் சிறுசிறு போராளிக் குழுக்கள், இப்படி தேசத்தை பிரித்துத் தர விரும்பாத வடக்கு சூடானில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், இன்னும் வடக்கோடு இருப்பதா, தெற்கோடு போவதா என தீர்மானிக்காத வேறு சிறுபான்மை இனக்குழுக்கள் என பல முரண்பாடுகள் நீடிக்கத்தான் செய்யும். ஆனாலும் ‘உலக வரைபடத்தில் ஒரு புதிய நாடு உதயமாவதைத் தவிர்க்க முடியாது. தெற்கு சூடான் மக்களின் விடுதலை தாகத்துக்கு அங்கீகாரம் தந்தாக வேண்டும்’ என்கிறது ஐ.நா. சபை.

‘சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர் ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமின்றி, உலகின் ஸ்திரத்தன்மையையே பாதிக்கும் அபாயம் இருக்கிறது; அதனால்தான் உலக நாடுகள் அமைதி முயற்சியில் தலையிட்டது’ என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. தெற்கை பிரித்துத்தர ஒப்புக் கொண்டதற்காக வட சூடானுக்கு அமெரிக்காவும் உலக நாடுகளும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்க உள்ளன. பொருளாதாரத் தடையை நீக்குவது, தீவிரவாதத்துக்கு அடைக்கலம் தரும் நாடு என்ற பட்டியலிலிருந்து நீக்குவது, கடன் தள்ளுபடி என அந்தப் பட்டியல் நீளமானது.

தெற்கு சூடான் மக்களின் விடுதலைப் போராட்டம் போல, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் நிகழ்த்திய விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் கண்களுக்கோ, ஐ.நா. சபையின் கண்களுக்கோ தெரியாமல் போனது ஏன்? இங்கும் அதே இன முரண்பாடுகள் இருந்தது; படுகொலைகள் நிகழ்ந்தன; அகதிகளாக பல லட்சம் மக்கள் உலகமெங்கும் சென்று அவதியுறுகிறார்கள்; உள்நாட்டுப் போரில் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்; விடுதலைப்புலிகள் அமைப்பையே நசுக்கியபிறகும்கூட சாதாரண தமிழர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் போக்கு நீடிக்கிறது. தமிழ் மக்களின் விடுதலை தாகம் பிரபாகரனோடு முடிந்துபோகுமோ என்ற ஏக்கம் இருக்கிறது. தெற்கு சூடான் விடுதலையில் அக்கறை காட்டிய அமெரிக்காவும் சீனாவும் இலங்கை வராதது ஏன்?

ஒரே விஷயம்தான்... தெற்கு சூடானில் அபரிமிதமான எண்ணெய் வளம் இருக்கிறது. இங்கிருந்து கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதியாவது சீனாவுக்குத்தான். இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்தால், அதனால் சீனாவுக்கு ஆதாயம் உண்டு. அதேபோல தாமிரத்திலிருந்து தங்கம் வரை ஏராளமான கனிம வளங்கள் தெற்கு சூடானில் இருக்கிறது. சுரங்கங்கள் அமைத்து இவற்றை வெட்டி எடுக்கும் உரிமையைப் பெறுவதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் போட்டி. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்ததன்மூலம் இதில் அமெரிக்கா ஜெயித்துவிட்டது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கச்சா எண்ணெயோ, தங்கச் சுரங்கமோ, குறைந்தபட்சம் ஒரு தாமிரச் சுரங்கமோ கூட இல்லை. அப்புறம் எப்படி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், உலக நாடுகளின் கண்களில் படும்! எண்ணெய்க் கிணறும் தங்கச்சுரங்கமும் இல்லாத பூமியில் வாழ்வது தமிழர்களின் தவறுதானே
                                                                                  unarchitamilan

வியாழன், 27 ஜனவரி, 2011

இந்திய நாடாளுமன்றத்தில் பன்றிகளும் பணந்தின்னிகளும்...!

இந்திய நாடாளுமன்றத்தில் பன்றிகளும் பணந்தின்னிகளும்...!
Money eating pigs in Indian Parliament - Tamil Poltics News Article தோழர் லெனின் அவர்கள் "பன்றிகளின் தொழுவம் நாடாளுமன்றம்" என்று முத்திரை பதித்த வார்த்தைகளை சொல்லி ஆண்டுகள் நூறு. இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இன்று, பன்றிகள் மட்டுமல்ல, கொலை, கொள்ளை போன்ற செயல்களை செய்பவரின் கூடாரம் ஆகியுள்ளது.
சாதி சங்கங்களை ஆரம்பித்து தான் இந்த சாதியை சார்ந்தவன், என் சாதிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளது. அதனால் எனக்கு இத்தனை தொகுதி வேண்டும் என்று சாதியின் பெயரால் கேட்டு தன் சாதி பெருமிதத்தை காட்டுகிற அவலம் இன்று வளர்ந்து உள்ளது. அதனால் என் சாதிக்காரன் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று பேசும் நபர்களும் தலைவர்களும் அனைத்துக் கட்சியிலும் உண்டு. அதேபோல் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து செய்து தன்னை சமூகத்தில் பெரிய ரவுடியாக காட்டிக் கொள்பவன் தன்னை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றவாதியாகவும் உள்ளதை இன்று நாம் பார்க்க முடியும்.
இந்தியா மீதும் இந்திய நாடாளுமன்றத்தின் (சட்டமன்றம்) நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அதன் அதிகாரம் நம்மை நேரடியாக பாதிக்கும்போது அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதனால் இந்திய பிரிட்டிஷ் காலணிவாதிகளிடமிருந்து விடுதலை பெற்று பார்ப்பன பனியா கும்பலிடம் ஆட்சி அதிகாரம் வந்த பின் அந்த அதிகார மையத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட சில தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபட்ட அம்பேத்கர், மற்றும் பொதுவுடைமைத் தலைவர்கள், சமூக தளத்தில் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்திலும் அந்த தேசத்தில் (மாநிலம்) உள்ள சட்டமன்றங்களில் அங்கம் வகித்து பல நன்மைகளை செய்து வந்ததை நாம் பார்க்க முடியும்.
ஆரம்ப கட்டத்தில் பணக்காரர்கள் தேர்தலில் பங்கு பெருவதற்கும் தடை விதித்த கட்சிகளும் உண்டு. காங்கிரஸ் போன்ற கட்சிகளை மிட்டா மிராசு பார்ப்பன பனியா அரசு என்று நேரடியாக பொதுவுடைமைக் கட்சிகள், சோசலிச கட்சிகள் சமூக நீதிக்காக போராடிய பல்வேறு தலைவர்கள் பரப்பல் செய்தனர். அதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் பண்ணைக்காரர்கள், பண முதலைகள் நேரடியாக களத்தில் இறங்கியது இல்லை. தமிழகத்தில் மூப்பனார் போன்றவர்கள் கூட கடைசி வரை மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை என்பது தெரியும்.
நேரு குடும்பம் இந்திய விடுதலைக்கு "ஆனந்த பவனை" கொடுத்து விட்டு இந்தியாவை தன் வீடு ஆக்கிக் கொண்டார் என்ற விமர்சனம் இன்றும் செய்யப்படுவதை நாம் பார்க்க முடியும். காங்கிரஸ் கட்சியில், காமராசு, கக்கன், நந்தலால், லால் பகதூர் சாஸ்திரி, பொதுவுடைமைக் கட்சியில் டி.கே.டி.தங்கமணி, ஜீவா போன்ற பல்வேறு தலைவர்களும் சமூக களத்தில் அம்பேத்கர், ராம் மோகன் லோகியா போன்றவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் பணி செய்தார்கள். செய்ய முயன்று தோற்று போனார்கள். இவர்களின் பெயரை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் படம் பெரிதாகப் பொறிக்கப்படும். இவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்வதும் இன்றும் நடந்தேறி வருகிறது.
இந்தியாவின் முதல் அமைச்சரவையில் டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி மீது ஊழல் வழக்கு அப்போது பேசப்பட்டது. அப்போது இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த நேரு அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். அதன் பின் நெருக்கடி நிலை புகழ் இரும்பு மங்கை என்று போற்றப்படுகின்ற இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் பெருக்கெடுத்தது. இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி நிழல் உலக அரசியல் செய்து வந்தார். அந்த ஊழல் எல்லாம் பேசப்பட்டாலும் அது பெரிய அளவில் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று வந்தன.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை காலத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை காரணமாக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திரா காந்தி அதிகார கோட்டை தகர்க்கப்பட்டது. ஆனாலும் அது நீடித்த ஆட்சியாக இருக்கவில்லை. அதன் பின் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. அவரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, அவர் ஆட்சிக் காலத்தில் 60 கோடி போபர்ஸ் ஊழல் இந்தியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னிட்டு 1989இல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ராஜீவ் காந்தி பதவி இழந்தார். வி.பி.சிங் தலைமையமைச்சர் ஆனார். இந்த ஆட்சி 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அந்த ஆட்சியை சமூக நீதிக்காக போராடுபவர்கள் அவர் ஆட்சியை இன்றும் பெருமையாகப் பேசி வருகின்றனர். அவர் ஆட்சிக் காலத்தில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிசன் அறிக்கை தாக்கல் செய்தார். அதனால் சமூக நீதி இயக்கத்தார் அவரைக் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
இடைப்பட்ட காலங்களில் 1977 மொரார்ஜி தேசாய், 1989 வி.பி.சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சியாக இருந்தது. அதன் பின் மீண்டும் வந்த நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஊழல் தலைவிரித்தாடிது. அவர் ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்பு மந்திரியாக இருந்த 'சுக்ராம்' மீது 400 கோடி ஊழல் பெரிதாகப் பேசப்பட்டது. அதன் பின் மந்திரி பதவி இழந்தார். அதேபோல் பங்கு சந்தையில் அர்சாத் மேத்தா 1000 கோடி ஊழல். அதில் பல காங்கிரஸ் கட்சி தலைவர் பங்கு பெற்றனர் என்றும் அப்போது பேசப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த பாரதிய சனதா ஆட்சி காலத்தில் பெரிய ஊழல் நடைபெறவில்லை. என்றாலும் வாஜ்பாய் வளர்ப்பு மகன் மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. குற்றச்சாட்டோடு அது மூடி மறைக்கப்பட்டது. தற்போது பாரதிய சனதா ஆட்சிக்காலத்தில் கார்கில் போரில் உயிரிழந்த இராணுவத்தினருக்கான வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் இப்போது நடந்து வரும் ஆட்சியில் ஊழல் மிகுந்த ஆட்சியாக இந்தியாவை அலைக்கழித்து வருகிறது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாட்டுத் தலைவராக இருந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் அவர்கள் அப்போது நிதி அமைச்சராகவும், இணை நிதி அமைச்சராகவும் இருந்தனர். சோனியாவை வெளிநாட்டுக்காரி அவரை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆவதை எதிர்த்த காரணத்தால் உலக பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக விளங்கி வந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோர் தலைமை அமைச்சர் மற்றும் நிதி அமைசம்சர் பதவி ஏற்று இந்தியாவை நவகாலனியாக்கி விட்டனர் என்று இடதுசாரிகள் குற்றம் சுமத்துவதில் இருந்து நாம் அதை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு இந்தியாவில் ஊழல் அற்ற ஆட்சியை நிறுவ முயற்சி எடுப்பேன் என்று மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி கொண்டு வருகிறார்கள்.
2007 இல் பங்கு சந்தையில் ப.சிதம்பரம் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடித்தார். நிதி அமைச்சர் என்ற போர்வையில், அதனால் அந்த கொள்ளைக்கு பின் பங்கு சந்தை சீர் செய்ய எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாது, அடைவதற்கு வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
2009 பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக தொகுதிகளில் வெற்றி பெற்றும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்கள் கிடைக்காததால் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதற்கு அதிகமாக வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அப்போது பதவி ஏற்கும்போது யாருக்கு என்ன இலாகா ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்தது. அதையெல்லாம் மீறி மன்மோகன் சிங் தலைமை அமைச்சர் ஆனார். அவர் பிரதமர் ஆன பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பிணக்கு வரத் தொடங்கின. ஆனாலும் அதை சரி செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மன்மோகன்.
இப்போது இந்தியாவையே புரட்டிப் போட்டு இருக்கும் அலைகற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல் இவையெல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முறை மக்களிடம் அம்பலப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சி நலன், மற்றும் மாநிலத்தில் நடைபெறும் ஊழலை மறைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக கர்நாடகாவில் பா.ச.க.வின் எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல், ஒரிசாவில் பிஜு பட்நாயக் ஊழல், உ.பி. மாயாவதியின் ஊழல், ஜார்கண்ட் மது கோடாவின் ஊழல், தமிழகத்தில் செயலலிதா மீதான ஊழல், பீகார் லாலு பிரசாத் யாதவின் ஊழல் இந்தியா முழுக்க ஊழல் மிகுந்துள்ளது. இதை எல்லாம் மறைக்கவும் தங்கள் கட்சி நலன் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.
ஊழல் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ் மட்டும் இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு வாதத்தில் தொடர்புடையதாகவும், ஊழல் என்ற பெருங் கடலில் மூழ்கிக் களித்ததாகவும் இருந்திருக்கின்றனர். ஓரிருவர் எத்தகைய ஊழலிலும் தொடர்புடையவராக இல்லாமல் இருந்திருந்தால், அவர் எந்தவிதப் பதவிகளையும் ஏற்காதவராக இருந்திருப்பார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஊழல், இன்று காற்றைப் போல எங்கும் ஊழல் இந்திய நிர்வாகத்தில் நிரம்பியுள்ளது.
63 ஆண்டு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 51 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஊழலைப் பற்றி பேச என்ன நேர்மையுள்ளது என்கிற நியாயமான மக்கள் கேள்விக்கு சோனியாவும், மன்மோகனும் அவரின் கூட்டாளிகளும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு எழுகிறது. அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசிய மன்மோகன்சிங் தான் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு முன் நின்று 2ஜி அலைக்கற்றை விடயத்தில் பதில் அளிக்க அணியமாக உள்ளேன் என அறிவித்து, அங்கு கூடியுள்ள அனைத்து கொள்ளை ஊழல் பேர்வழி வழிமொழிந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தனக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும் தான் அய்யத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் பேசியதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு என்பது பா.ச.க. தலைவர் முரளி மனோகர் ஜோசி தலைமையில் இயங்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அவசியம் என்ன என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வி. நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவுக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் விசாரிக்கும் உரிமை உண்டே தவிர, இதன் பின்னணி பற்றி விசாரிக்கவோ, தொடர்புடையவர்கள் என்று கருதுபவர்களை அழைத்து விசாரிக்கவோ உரிமை கிடையாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு என்பது அப்படிப்பட்டதல்ல. பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றக் கூட்டுக் குழு. தேவைப்பட்டால் இந்த குழு தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஏன் சோனியா காந்தி, உள்ளிட்ட யாரையும் கூப்பிட்டு விசாரிக்கலாம். கேள்வி எழுப்பலாம். இத்தனைக்கும், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பா.ச.கவைச் சார்ந்த முரளி மனோகர் ஜோசி. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படுமானால் அதன் தலைவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். அப்படி இருந்தும் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க ஏன் தயங்குகிறது என்பதுதான் அய்யத்தை எழுப்புகிறது.
மன்மோகன் ஆட்சி ஏற்றுக் கொண்ட பின் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி அரசின் சலுகை வழங்கப்படுகின்றன. இந்தியாவின் வட பகுதியில் குறிப்பாக சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் கிடைக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு அந்த மாநில அரசுகள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்துக் கொடுத்து அங்கு வாழும் மக்களை வெளியேற்ற அரசுகள் முயன்று வருகின்றன. தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து அங்கு மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக பழங்குடிகள், மாவோயிஸ்ட் கட்சியினர் இந்த பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தமிழகத்தில் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தை முன்னால் முதல்வர் செயலலிதாவும் அவரின் தோழியின் குடும்பமும் சேர்ந்து கொள்ளை அடித்தன. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்தன. அதன்பின் 2006 இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க. கட்சியினர் இன்று தமிழகத்தை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதனால்தான் கருணாநிதி தன்னை இராசராசன் வாரிசு என்று தம்பட்டம் அடித்து தன்னை முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு மூன்று இளவரசர்களும் ஒரு இளவரசியும் சேர்ந்து இந்த தமிழகத்தை இவர்களின் சொர்க்க பூமியாக நினைத்து ஆண்டு வருகின்றனர். இந்த முடிசூடா மன்னனின் கீழ் பணிபுரியும் அமைச்சர்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் தங்களை முடிசூடிக் கொள்ள முயன்று வருவதின் விளைவாக இன்று அலைகற்றை ஊழலில் ராசராசனை மிஞ்சிய மன்னனாக இன்று ஆ.ராசா பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்றுக் கொண்டு இந்த நாட்டின் தனி மன்னனாக கருதிக் கொண்டு செயல்பட்டதால் இன்று அவரின் மணிமகுடம் வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த மணி மகுடம் வீழ்வதற்கு இவரின் கொள்ளை பங்காளிகள்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கனிமொழி, கருணாநிதி என இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் போட்டிகள் மற்றும் இந்தியாவை வெளிநாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பின் விளைவுதான் இந்த அலைக்கற்றை ஊழலும் அது வெளிவந்த பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
இன்று இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கட்சிகளிலும் ஊழல் மிகுந்துள்ளது. இந்த இந்தியாவை இனி யாரும் காப்பாற்ற முடியாது.
இந்த அலைக்கற்றை ஊழலில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நட்டம் பல கோடிகள். எதிர்க் கட்சிகள் இந்தச் சிக்கலை எழுப்பாமல் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் மன்றத்தை விழிப்படையாமல் வைத்திருந்தால், இந்த அரசு காதும் காதும் வைத்தாற் போல் முடித்து வைத்து இருப்பார்கள். இந்த ஊழலை பொறுக்க மாட்டேன் என்று திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றனர் மன்மோகனும் சோனியாவும். அதேபோல் தமிழகத்தை ஆண்டு வரும் இராசராசன் கருணாநிதி தனக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் இல்லை. எனக்கென்று இருந்த வீட்டையும் இந்த மக்களுக்காக ஒப்படைத்து விட்டேன் என கபட நாடகம் ஆடுகிறார். அதுமட்டுமல்ல, ஊழல்வாதி இராசாவை காப்பாற்ற "ஆரியர் திராவிடர்" போர் என்ற ஒரு கட்டுக்கதை அமைத்து ஒரு திரைக்கதை அமைத்து தமிழக மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சி என்று ஒன்றை கூட நாம் சுட்டிக் காட்ட முடியாது. அனைத்து தேர்தல் கட்சிகளும் ஊழல் மிகுந்த கட்சிகளாகத்தான் உள்ளது. எந்த கட்சிக்கும் வேறுபாடு இல்லை.
ஊழல் நிறைந்த இந்தியாவை தமிழகத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று மக்கள் மாற்று வழி தெரியாமல், திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மக்களை தேர்தல் வழி போலி சனநாயகத்தை ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆகையால் மாற்று அரசியலை எதிர்நோக்கி மீண்டும் போராட்ட களத்தை நோக்கி அணியமாகி களம் அமைக்க முயன்று கொண்டு வருகின்றனர். அந்தக் களத்தில் இந்த தேர்தல் கட்சிகளின் அரசியல் அயோக்கியத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது நம்மை போன்ற தமிழ் தேசிய இயக்கங்கள், மார்க்சிய லெனினிய இயக்கங்கள், மற்றும் சனநாயக ஆற்றல்களின் கடமையாகும். அதை நோக்கி அரசியல் விடுதலையை முன் நகர்த்துவோம். ஊழல்வாதிகள் மக்கள் விரோத அரசை தூக்கி எறிவோம்.
                                                     unarchitamilan

கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !

கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !
 

ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...
- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில்   கொள்ளா இருப்பு...
- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் 
   பணமும் கோடிகளில்...
- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...

இப்படி நாள்தோறும் பெருகிவரும் கோடிகள்தான் எத்தனை எத்தனை.

- இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 103 கோடி.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்க்கை வாழ்பவர்கள் 25 கோடி.
- ஒருவேளை கஞ்சிக்கும் இல்லாதார் 30 கோடி. 

என்ன முரண்பாடு...? 

மக்களுக்கு என்ன அடிப்படைத் தேவை ?.  இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை கற்க கல்வி, சுகாதரமான வாழ்விடம் ஆகியவை.

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடக்கிறோம். தனக்கென வாழ்விடம் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை கோடி?. ஒருவேளை உணவுக்கும் நாயாய், பேயாய் அலைந்து, உழைத்து உண்ணும் மக்கள் எத்தனை கோடி?.

அடிப்படை வசதியில்லாத - சுகாதாரச் சீர்கேட்டுடன் வாழும் மக்கள்தான் எத்தனை கோடி...? இது தனி மனித கோளாறு என்று புறந்தள்ளிவிடல் கூடாது ; முடியாது.


ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளாய் கறுப்புப் பணம் புழங்குவதும்... ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளில் லஞ்சம் தாண்டவமாடுவதும்... ஒரு பக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் இவ்வளவு என்று புள்ளி விபரம் கூறுவதும்...  என்ன ஐந்தாண்டு திட்டம்... என்ன அதன் வளர்ச்சி?.

இத்தனைக் கோடி கறுப்புப் பணம், லஞ்சப் பணத்திலிருந்தே வறுமையில் வாடும் வேலையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், கல்வியறிவு அற்றோர்க்கு என நலவாழ்வுக்கு குறைந்த பட்சம் ஒரு குடிமகனுக்கு (இல்லாதோருக்கு) ஒரு கோடி திட்டத்தில் அவனது வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட முடியாதா? என்பதே நம்முன் எழும் கேள்வி.

உதாரணமாக :

ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி திட்டம் என்ற வகையில் அவர்கள் வாழ ஒரு இடம், இல்லம் அமைத்து தந்து அதனை விற்கவோ ,அடமானத்துக்கு வைக்கவோ, வாடகைக்கு விடவோ அனுமதிக்காமல் அவை அவர்களில் வாரிசுதாரருக்கு, வாரிசு அல்லாத பட்சத்தில் உறவுகளுக்கு மட்டுமே என்று வரையறை தந்தும்... கட்டாய வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப உருவக்கி தொழில் அல்லது பணி தந்தும்... கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்தி வறுமையில் வாடும் குடும்பத்தினர்க்கு வழிகாட்டி வாழ்வாதாரத்துக்கு அடிப்படை திட்டம் தீட்டினால்தான் என்ன...? இது சாத்தியம் தானே...?

திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் வருவாயிலிருந்து இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி தரலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கறுப்பு பணம் - லஞ்சப் பணம் - தனிமனித சொத்துக் குவிப்பு இவைகளை கொண்டே மக்கள் நலதிட்டங்களுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உருவாக்கிவிடலாமே... இதில் என்ன தயக்கம் இங்கு ஆளும் அரசியலர்க்கு. மேலும், ஒரு அரசு என்று ஏன் இருக்கிறது ? எதற்கு இருக்கிறது ?.

மக்களாக பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வாழ ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெய்யிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை காத்துக்கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது.  அத்தியாவசியமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் குடுபத்தின் கடமைகளை நிறைவேற்றவும் தனக்கென ஒரு வேலையினை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தவிர்த்து தன்னுடைய இனம், சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமை ஓவ்வொருவருக்கும் உண்டு.


பலர் கூடி வாழுகிற சமூகத்தை, அவர்களது பல நற்செயல்களில் இடையூறு இல்லாமல் சமூகம் முழுவதும் நலம் பெறும் வகையில்  சீராக வைத்திருக்க வேண்டும் இப்படி செய்வது ஓர் அரசின் கடமை. 
 
இதனை தவிர்த்து... தங்கள் சுய நலத்துக்காக சமூக வளர்ச்சி என்ற பெயரில் ஆலைகள் சமைப்பதும், அணைகள் கட்டுவதும், நாற்சக்கர சாலைகள் அமைப்பதும்... விண்ணில் உலா வர வழி செய்வதும் சரியான மக்கள் நல வளர்ச்சித் திட்டம் என்று சொல்லிவிட முடியுமா ?.

வளர்முக நாடுகளில், நவீன இந்தியாவில் அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் எத்தனை நன்மைகள் வளர்ச்சிகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வான - அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு சமூகம், வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது என சொல்வது என்ன பம்மாத்துத்தனம்.இந்தியாவின் பாதுகாப்புக்கென காவலர்களையும், நீதி மன்றங்களையும் வளர்த்து கோடிக்கணக்கில் செலவிடுவதும் 
தேவைதான். எனினும் ஆளும் அரசுகள் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், அரசின் பணிகள், திட்டங்கள் பணம் பண்ணும் தொழிலாக ஆக்காமல், அடிப்படை வசதியற்ற மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே வறுமையைப் போக்கும் வழியாகும்.

அரசுகள் தங்கள் சாதனைகளை வெளிச்சமிட்டுக்காட்ட செலவுகள்தான் எத்தனை கோடிகள்... மாநாடுகள், அரசு விழாக்கள், அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள், அவை புறக்கணிப்பு என்ற பெயரில் விரயமாகும் கோடிகள் எத்தனை... இந்தக் கோடிகளில் வறுமையால் வடும், அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு சில கோடிகளை ஒதுக்கினால் என்ன...?
  
அடிப்படை வசதிகள் அற்ற எந்த தேசத்துக்கும், அரசுக்கும் பேரிடியாய், பேரிடராய் உருவாகுவதே தீவிரவாதம் - நக்சல்கள் என்பதை அரசு எப்போது உணருகிறதோ - வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறதோ அப்போதே ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும்.

அப்படி ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால்தான் பல்வேறு நிறத்தவராய், இனத்தவராய், மொழியினராய், கலாச்சார பண்பாடுடையவராய் வாழும் இத்திருத் தேசத்தை வளம்பெற செய்ய முடியும் என்பதை உணர்வோம்.
:- கோ. எழில் முத்து

குயிலுக்கு வாழ்வு கொடு

 குயிலுக்கு வாழ்வு கொடு

காசி ஆனந்தன்

இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?

நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?

உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?

உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்

ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்

ஈரோடு தமிழன்பன்

காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு
கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.
தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?

முழக்கம்

முழக்கம்

காசி ஆனந்தன்
தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!
செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!
வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!
நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!

குழந்தைகள் நெற்றியில் விபூதியாகும் பிரபாகரன் வீட்டு மண்!
                  முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள்.

ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர்.

இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் கொடுமை நடக்கும் தீவிரவாதத் தடுப்புப் புலனாய்வு அமைப்பு இயங்கும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வைத்து விசாரித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழ் ஈழ  ஆதரவுத் தலைவர்கள், மத்திய, மாநில  அரசுகள் தலையிட்டதனால் உயிர் பிழைத்த அவர்களிடம் "இந்தப் பயணம் ஏன்?' என கேட்டோம்.

""எனக்கு நினைவு தெரிந்து 95-ம் ஆண்டு தொடங்கி  ஈழப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரை பார்த்ததும்,  தமிழ்ப் பெண்ணான எனக்குள் ஒரு இயலாமை மேலோங்கிய குற்ற உணர்ச்சி குடிகொண்டுவிட்டது. தமிழகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் ஒரு வழக்கறிஞராக நின்று எதிர்த்துப் போராடும் எனக்கு போருக்குப் பிந்தைய ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டாகியது. அந்தப் போரினால் அனாதைகளான பல்லா யிரம் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க  வேண்டும் என்கிற எனது ஆசையை, எனது குடும்ப நண்பரான திருமலையிடம் தெரிவித்தேன். அவரும் மணந்தால் போரினால் நிர்க்கதியான தமிழ் ஈழ குடும்பத்துப் பெண்ணைத்தான் மணப்பேன் என கடந்த வருடமே பெண் தேடி ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்தார். அவரிடம் அங்குள்ள  பல ஈழத் தமிழ்க் குடும்பங்களின் முகவரிகளும் இருந்தன.

பொங்கல் திருநாளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க  எங்களது ஊதியத்திலிருந்து ஒரு சொற்பத் தொகையை அம்மக்களுக்கு ஆறுதலாக  கொடுக்கலாம் என நாங்கள் திட்டமிட்டோம். ஏற்கனவே திருமலைக்கு நன்கு அறிமுகமான இலங்கைத் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உதவ முன் வந்தார். ஈழத்தின் இன்றைய  சமூகவியல், எதிர்கால அரசியல், போராளிகளின் இன்றைய நிலை... என பல கேள்விகளுக்கும் விடை காணலாம் என 13-ந் தேதி ஜெட் ஏர்வேஸில் பயணமானோம்.

14-ந் தேதி முதல் எம்.பி.யின் சொந்தத் தொகுதி யான வவுனியா மற்றும் மட்டக்களப்பு, கிளி நொச்சி ஆகிய பகுதிகளை 16-ந் தேதி வரை சுற்றி வந்தோம்.  பிறகு  ஓமந்தை  ராணுவ செக்போஸ்ட் முதல் யாழ்ப்பாணம் வரை செல்ல  ராணுவ அமைச்சகத்தின் அனுமதியை எம்.பி. அவர்கள்  பெற்றுத் தந்தார்.

16-ந் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து 3 மணி நேர பேருந்து, ஆட்டோ பயணம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய நாவாலி, நாவலூர் வழியாக பயணித்தோம்.


வல்வெட்டித்துறை  போனதும் எங்கள் மனசு கொந்தளித்தது. தமிழீழ தலைவர் மேதகு  பிரபாகரன் வீடு இடிந்து சின்னாபின்னமாகக் கிடந்தது. அந்த வீட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிலிருந்த மண்ணை நெற்றியில் விபூதிபோல் குழந்தைகளுக்குப் பூசிக் கொண்டிருந்தார்கள். நேராக தலைவரின் தாயார் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்குப் போனோம். அங்கிருந்த தமிழ் நர்ஸிடம் ""அம்மாவைப் பார்க்கணும்'' என்றோம்.  சத்தம் போடாமல் வாருங்கள் என அழைத்துச் சென்றார். பத்து படுக்கைகள் கொண்ட அந்த  வார்டில் உள்ள ஒரு சிறிய படுக்கையில்  ஒரு கொசுவலைக்கு அடியில் அம்மா படுத்திருந்தார்.
கை, கால்கள் இரண்டும் பக்கவாதத்தில் முடங்கிக் கிடந்திருந்தது.  நெற்றியில் ஒரு  ஆபரேஷன் செய்த பிளாஸ்திரி. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ட்யூப்கள்  சொருகியிருந் தது. "தினமும் காலையில் ஒரு டம்ளர் கறுப்புத் தேயிலை. மாலையில் கொஞ்சம் சத்தான திரவ உணவு. அதையும் தலைவரின் அக்காள் மகள் ஒருவர் கொண்டு வந்து தருவார்' என சொன்னார் அந்த நர்ஸ்.
நான் அவரது பக்கத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் ஏந்தி "அம்மா நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கேன் அம்மா' என உரக்கக் கத்தினேன். அம்மா கண் விழித்துப் பார்த்தார். அவர்களது கண்களில் கண்ணீர். "ம்...ம்...ம்...' என  மூன்று முறை  இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு கேவலை வெளிப் படுத்தினார். மாபெரும் புரட்சி வீரனின்  தாயாரது இயலாமை நிறைந்த கேவலை கேட்ட நான்... கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தேன். உடனே நர்ஸ்கள் எங்களை  வெளியேறச் சொன்னார்கள்.
மனதை கல்லாக்கிக்கொண்டு 18-ந் தேதியன்று கொழும்பு நோக்கி திரும்பியபோது ஓமந்தை ராணுவ செக்போஸ்ட்டில் மதியம் 3 மணிக்கு "உங்களை நாங்கள் விசாரிக்க வேண்டும்' என ராணுவ உளவுப் பிரிவு போலீசார் அழைத்துக்கொண்டு போய் ஓமந்தை போலீஸ் நிலையத்தில்  உட்கார வைத்தபோதுதான்... இலங்கை அரசின் மற்றொரு முகம் எங்களுக்குத் தெரிய வந்தது.

நாங்கள் சுற்றிப் பார்த்த பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லாத இடமே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார்கள். கல்வி என்பது இளைய தலைமுறைக்கு மறுக்கப்பட்டிருந்தது. மேற்கூரைகள் இல்லாத பல வீடுகளில்  கை, கால்களை இழந்த பல தமிழ்க்  குழந்தைகள் அடுத்தவேளை உணவுக்காக யாசித்துக்கொண்டிருந்தார்கள். இதுபோன்ற  குடும்பங் களின்  இளைஞர்களையோ, குடும்பத்தலைவனையோ பார்க்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருந்தார்கள் அல்லது புலிகள் என்ற பெயரில் வேறுசில முகாம்களில் கொடுமைகளுக்குள்ளாகிக் கிடந்தார்கள்.

 நாங்கள் கொழும்பு ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் எங்களது அனைத்து அசைவுகளையும் அவர்கள் கண்காணித்துப் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

ஓமந்தையில் சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு  2 பேஜேரோ கார்களில்  6 மணி நேர  பயணமாக பாது காப்புடன்  எங்களை கொழும்பு நகரிலுள்ள தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்திற்குள் 19-ந் தேதி அழைத்துச் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக 4-வது மாடியிலும் ஆறாவது மாடியிலும்  வைத்து விசாரணை  செய்தார்கள். தேசிய பாதுகாப்புப் பிரிவு, தீவிரவாதிகள்  நடவடிக்கையை கண்காணிக்கும் உளவுப்  பிரிவு, சாதாரண  சி.ஐ.டி. பிரிவு மற்றும் ராணுவ போலீஸார் மற்றும் லோக்கல் போலீஸார் என மொத்தம் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த  50 பேர் மணிக்கணக்கில் விசாரித்தனர். நாங்கள் கொண்டு போயிருந்த கேமரா, மொபைல், எங்களது ஈ-மெயில்கள் அனைத்தும் பிரித்துப் பார்க்கப்பட்டது.


அங்கயற்கண்ணி என்ற பெயர் கொண்ட முதல் தற்கொலைப்படைப் பெண்புலி கடலில் தாக்குதல் நடத்திய படகு ஒன்று  கடற்கரையில்  நிறுத்தப்பட்டிருந் தது. அழியாமல் இருந்த அந்த நினைவுச் சின்னத்தின் முன் ஒரு புகைப்படம்  எடுத்துக்கொண்டோம். "அது ஏன்?' எனக் கேட்டார்கள்.

விடுதலைப்புலியாக இருந்த பெண்ணுக்கு  இயக்கத்தில் இருக்கும்போதே திருமணம் நடந்தது. அதற்கு அடையாளமாக  ஒரு புதுவிதமான மாட்டுக் கொம்பு போன்ற ஒரு தாலியை விடுதலைப்புலிகள் பரிசளித்திருந்தார்கள். அதை புகைப்படம் எடுத்திருந்தேன். அது ஏன்  என விளக்கச் சொன்னார்கள்.

திருமலை தனது ஈ-மெயிலில் மாவீரர் தின நாளுக்கான கொண்டாட்டங்களைத் தனது நண்பர் களோடு பகிர்ந்திருந்தார்.  அதைப் பார்த்ததும்  டென்ஷனான  அவர்கள் அவரைத் தாக்க முற்பட்டார்கள்.

தீவிரவாத  புலனாய்வுப் பிரிவின் 4-வது மாடி அறைகளில் நாங்கள் மட்டும் இல்லை. வேறு சில விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர்.  பல மாதங்களாக  அங்கேயே கிடக்கும் அவர் செய்த குற்றம்... வெளிநாட்டிலிருந்து அவரது செல்போனுக்கு யாரோ, பிரபாகரன் படத்தை அனுப்பியதுதான்.

"நீங்கள் யார்? என்ன திட்டத்தை நிறைவேற்ற  இங்கு வந்தீர்கள்? ஏன் பிரபாகரனின்  தாயாரை சந்தித்தீர்கள்?' என்கிற கேள்விகளோடு அரசிய லும் பேசினார்கள். "தமிழீழ  அரசியலை ப் பற்றி பேசி வைகோ, ராமதாஸ் எல்லாம் என்ன கிழிச்சாங்க. சீமானால தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிக்க முடியுமா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?' என 21-ந் தேதிவரை கேள்வி களால் மிரட்டிக்கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் உயிருடன் தமிழகம் வருவோம் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. 21-ந் தேதி மதியம் இரண்டரை மணிக்கு எங்களை ஒரு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுதுதான் எங்களை விடுதலை செய்ய ஒரு பெரிய போராட்டமே நடந்தது என தெரிந்துகொண்டோம்.

விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் ஒரு  நிம்மதி பெருமூச்சு வந்தது.

தமிழீழ போக்குவரத்துக் கழகம்,  தமிழீழ  பாடசாலை, தமிழீழ  குடிநீர் வாரியம் என ஈழப் பகுதிகளில் வாழ்ந்த ஈழ மக்களில் பலர் கடைசி முள்ளிவாய்க்கால் வரை  தலைவர் பிரபாகரனுடன் வீரமுடன் பயணித்திருக் கிறார்கள்.

அந்தப் போரில் காயப்பட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்கு இன்றைய  தேவை தமிழ் ஈழம் அல்ல.  நல்ல சோறும், குடிநீரும்தான். அதைப் பெற்றுத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்? என்கிற கேள்வியே எனக்குள் எழுந்தது. இலங்கை ராணுவத்தினருக்கு போர் முடிந்த பிறகும் இருக்கும் புலிகள் மீதான பயமும், தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஈழம் மலரும் என்கிற நம்பிக்கையும் ஒரு பெரிய ஆச்சரியத்தை என் மனதில் ஏற்படுத்தியது.

சந்திப்பு : பிரகாஷ்
                                                                  unarchitamilan

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் -- விடை தெரியா வினாக்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் -- விடை தெரியா வினாக்கள்

E-mail அச்செடுக்க
டிமை இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி, சுதந்திர இந்தியாவில் அரசின் கையிலும் கட்டுப்பாட்டிலும்  இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த 1947  காலகட்டத்தில் ஐயாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தொலைபேசி இணைப்பு  இருந்தது.  பெரிய வணிகர்களும் தொழிலதிபர்களும்  முதலாளிகளும்  பணக்காரர்களும் மட்டுமே தொலைபேசி இணைப்புப் பெற முடியும். தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்காக  முன்பணம் கட்டி மாதக்கணக்கில் காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டிய நிலை. பக்கத்து ஊருக்கு   ஓர் அவசரச் செய்தியைத் தெரிவிப்பதற்குக் கூட ட்ரங்க் கால் பதிவு செய்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

அறுபதுகளில் இந்தியாவில்   எஸ்.டி.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ட்ரங்க் கால் புக் செய்து காத்திருக்கும்  நிலையில் மாற்றம் வந்தது. வாடிக்கை யாளர்கள் நேரடியாக டயல் செய்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சாதாரண பொதுமக்கள் தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்குப் பல ஆண்டுக் காலம் காத்திருக்க வேண்டிய நிலையே நீடித்தது.  இணைப்புக் கிடைத்தாலும் தொலைபேசிகள் சரியாக வேலை செய்யா. 1980 ஆம் ஆண்டில் அன்றைய தொலைதொடர்புத் துறை  அமைச்சரான சி.எம். ஸ்டீஃபனை நோக்கி இது குறித்து வினா எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான சுதந்தராக்கட்சித் தலைவர் பிலூ மோடி "எஸ் டி டி என்பது Steephan's Telephonic Disaster" எனக் கிண்டல் செய்த நிகழ்ச்சியும் நடந்தது.  "தொலைபேசி என்பது ஆடம்பரப்பொருள்;  இன்றியமையாத ஒன்று எனக்கோரும் உரிமை யாருக்கும் இல்லை. தொலைபேசிச் சேவையில் அதிருப்தி உள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக் கருவிகளை அரசிடம் ஒப்படைத்து விடலாம்.தொலைபேசிக்காகப் பதிவு செய்து விட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவர்களுக்கு அவற்றைக் கொடுப்போம்" என்று அமைச்சர் ஸ்டீபன் அவையில் அறிவித்ததும் நிகழ்ந்தது.

இப்படி எட்டாக்கனியாக  இருந்த தொலைபேசியை மக்களுக்குப் பரவலாக்கியவர் இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ்காந்திதான். 1987 ஆம் ஆண்டில் அவரது தொழிநுட்ப ஆலோசகர் ஸாம்பிட்ராடோ மூலம் தொலைதொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் ராஜீவ்காந்தி.  நாடெங்கும் பி.சி.ஒ எனப்படும் பொதுத்தொலைபேசி அழைப்பகங்கள் உருவாக்கப்பட்டன. வெளிநாட்டுத் தொடர்புகூட நேரடி அழைப்பின் மூலம் எளிதாக்கப்பட்டது. சுக்ராம்  காலத்தில் தாராளமயமாக்கல் கொள்கையால் நாடெங்கும் இணைப்புகள் காத்திருப்பின்றி வழங்கப்பட்டன.  தயாநிதிமாறன் காலத்தில் இன்னும் எளிமையாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டிற்குள் வீட்டு இணைப்பும் மொபைல் இணைப்புமாக  706.37  மில்லியன் வாடிக்கையாளர்களும்   670.60 மில்லியன் மொபைல் இணைப்புகளுமாக மிளிர்கிறது இந்தியாவின் தொலைதொடர்பு வளர்ச்சி. ஒரு தனியார் மொபைல் இணைப்பு நிறுவனம் மட்டும் 200 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்குவது,  தொலைதொடர்புத் துறையில் தனியாரின் மிதமிஞ்சிய வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டு  ஆகும்..

வளம் கொழிக்கும் துறையாக இன்று மாறி இருக்கும் தொலைதொடர்புத் துறையில் ஆண்டிமுத்து ராசாவுக்கு முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊழல் குற்றசாட்டிலிருந்து  தப்பவில்லை.

1991-1996 காலகட்டத்தில்  சுக்ராம்  தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது மொபைல்ஃபோன் புரட்சிக்கு வித்திட்டார். எனினும் அவர் தம் துறையில் 1500 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைதொடர்புக் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் வழங்குவதற்குப் பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுக்கும் ஆளானார். வருமானத்துக்கு அதிகமாக நாலேகால் கோடி ரூபாய் அளவுக்குச்  சொத்துச் சேர்த்திருந்த குற்றத்திற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டார்.

1998-99 காலத்தில் பி.ஜே.பியைச் சேர்ந்த ஜக்மோகன் அமைச்சராக இருந்தபோது   தொலைதொடர்புத் துறைக்கு மாதம் ஒன்றுக்கு 41.57 கோடி ரூபாய் (92 மில்லியன் டாலர்) இழப்பு எற்பட்டது. இதனால் அவரை அத்துறையில் இருந்து மாற்றிவிட்டுத் தாமே அத்துறையின் பொறுப்பைக் கூடுதலாக ஏற்றார் அன்றைய பிரதமர் வாஜ்பாய்.

இத்துறையில் தமக்கு உதவியாக ராம்விலாஸ்பாஸ்வானை ராஜாங்க அமைச்சராக நியமித்தார் வாஜ்பாய். . 1999 முதல் 2001 வரை பொறுப்பில் இருந்த பாஸ்வான்  மீதும் Global System for Mobile Communications (GSM) மற்றும் Code Division Multiple Access (CDMA) உரிமங்கள் வழங்கியது தொடர்பாக ரூபாய் 1300 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து  ராம்விலாஸ் பாஸ்வான் நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு ப்ரமோத்மகாஜன்  நியமிக்கப்பட்டார்.

2001 முதல் 2003 வரை ப்ரமோத்மகாஜன் அமைச்சராக இருந்த  காலத்தில் தனியார் மொபைல் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய  கட்டணங்களை விட்டுக் கொடுத்ததால் கோடிக் கணக்கில்  அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சட்ட விதிகளுக்கு முரணாகச் சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாஜன்  அதற்கென ஆயிரம் கோடிகளில் பலன்பெற்றார் என்றும் கூறப்பட்டது.

ப்ரமோத் மகாஜனை நீக்கிவிட்டு அவ்விடத்தில் அமர்த்தப்பட்ட அருண்ஷோரி மீதும்  குற்றச்சாட்டு உண்டு. 2003 முதல் 2005 வரை தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ராசா மீதான பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது எனக்  கூறி வருவது குறிப்பிடத் தக்கது.

பி.ஜே.பி ஆட்சி முடிவுக்கு வந்த பின் பதவி ஏற்ற காங்கிரஸ் கூட்டணி அரசில் பணம் கொழிக்கும் தகவல் தொடர்புத் துறையைப் போராடிப் பெற்று, முதன் முறையாக அரசியலிலும்  நாடாளுமன்றத்திலும் அடியெடுத்து வைத்த -- எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தம் பேரன் தயாநிதி  மாறனை அத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி . மதுரை தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் எதிர்விளைவாக அந்நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டு, விலைமதிக்க வொண்ணா மூன்று  உயிர்கள் பறிக்கப்பட்டபோது  எழுந்த குடும்ப கலகத்தில், பேரன் தயாநிதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தம்  நம்பிக்கைக்கு உரியவரான ராசாவை நியமித்தார் கருணாநிதி. அன்று முதல் கடந்த வாரம் வரை ராசாவே தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.

ஒரு கோடி ... இல்லை பத்துக் கோடி...  இல்லையில்லை ... நூறுகோடி..? எத்தனை பூஜ்யங்கள் இட்டால் ஒரு கோடி என்பதை எண்ணால் எழுத முடியும் என்று கூடத் தெரியாத பாமர  மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில்  1.76 இலட்சம் கோடி ரூபாய்  என்பதைக் கற்பனைகூடச் செய்ய  முடியவில்லை. இந்தியாவின் தொலைதொடர்புத்துறை  அமைச்சராக இருந்த ஆண்டிமுத்து ராசாவால் இந்திய அரசுக்கு / இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள  துரோகம் இது.

தொலைதொடர்பில் மிகவும் மதிப்பு மிக்கது  2nd Generation electro-magnetic spectrum -- இரண்டாம் தலைமுறை  மின்காந்த அலைக்கற்றை--!  பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல்,  தொலை தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளையும் மீறி, எதிர்ப்புத் தெரிவித்த தம் துறை அதிகாரிகளை மாற்றி,  யாருடைய   லாபத்துக்காகவோ தம்மிச்சையாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட  ஒரு நாளில், ஒரு மணி நேரத்துக்குள், "முந்துவோருக்கு முதல் சேவை" (First come first service) என்ற அடிப்படையில் ராசா வழங்கிய ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் -- உரிமங்கள் சினிமா டிக்கட்டுகள்போல் விற்கப்பட்டன என டில்லி உயர்நீதிமன்றம் விமர்சித்திருந்தது -- நாட்டுக்கும் மக்களுக்கும்    பேரிழப்பை ஏற்படுத்திவிட்டார் ஆண்டிமுத்து ராசா.  ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி  ஆராசா தம் முறைகேட்டால் சுமார் 1,76,379 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டார்.

2008-2009 ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டின் பற்றாக்குறையில் நான்கில் மூன்று பங்கை இத்தொகையால் நிரப்பியிருக்க முடியும். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இதை வைத்து அரசியல் செய்தாலும் நாட்டு நலனில் அக்கறையுள்ள பொதுமக்கள் அனைவரையும் ஆத்திரமுறச் செய்த செயல் இது

இதைப்பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு விட்ட நிலையில்  இவ்விவகாரத்தில் சில வினாக்களுக்கு விடை தெரியாமலே உள்ளன.
 • * இப்போது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் பீஜேபி, ராசாவுக்கு முன் அத்துறையில் நடந்த ஊழல்கள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?அன்றைய ஊழலின் மதிப்பான   கோடிகளின் எண்ணிக்கை இலட்சத்தைத் தொடவில்லை என்பதாலா அல்லது சொந்தக்கட்சி அமைச்சர்கள் என்பதாலா?
 • * நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வைத்து நடத்திய போராட்டத்தால் அமைக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பீஜேபியின் அமைச்சர்களின் ஊழல்களையும் விசாரிக்கும் என்று இன்று சொல்லும் காங்கிரஸ் , எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதைப்போன்ற போராட்டங்களை ஏன் நடத்தவில்லை?
 • * ராசா பொறுப்புக்கு வந்தபின் 2008 ஆம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி இடதுசாரிகள் வினா எழுப்பினர்.  எனினும் முக்கிய எதிர்க்கட்சியான பீஜேபி இன்று காட்டும் வேகத்தை அன்று காட்டியிருக்கவில்லை. 2009 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ராசா போட்டியிட்டபோதும் தி.மு.கவுக்கு    எதிராக இவ்வூழல்  தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும்  மிகப்பெரிதாக முன்னிலைப்படுத்தப்படாதது ஏன்?
 • இன்று பீஜேபியுடன் கைகோர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அஇஅதிமுக தேர்தல் நேரத்தில் இதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை?
 • தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வென்று மத்தியில் ஆட்சி அமைக்க முயலும்போது ஆ.ராசாவைத் தொலைதொடர்புத்துறை அமைச்சராக்க வேண்டும் என டில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்த கருணாநிதி வெளியில் இருந்து அரசை ஆதரிக்கப்போவதாகப் பயமுறுத்தியது  ஏன்?
 • ராசாவுக்கு தொலைதொடர்புத்துறையில் அப்படி என்ன தனித்திறமை? ராசாவை விட்டால் வேறு திறமையான ஆளே இந்தியாவில் இல்லையா ?
 • ராசாவின் இலட்சம் கோடி ஊழலில்  கருணாநிதிக்கு என்ன ஆர்வம் ? கருணாநிதி குடும்பத்தாரின் பங்கு என்ன?
 • கருணாநிதியின் மிரட்டலால் மீண்டும் அமைச்சரான ராசா,  தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது  ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகக்  குற்றம் சுமத்தினார். பதிலுக்கு  மாறன் சகோதரர்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் தமது  சன்  டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் ரூ. 60,000 கோடி ஊழல் எனச் செய்தி வெளியிட்டு  நாறடித்தனர். கண்கள் பனித்து இதயம் இனித்து , கருணாநிதி குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர்ந்தபின் இவ்வூழல் மாறன் குடும்பத்தால் மறக்கப்பட்டது ஏன்?
 • ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ராசாவுக்கு ஆதரவாக வந்த கருணாநிதி "ராசா ஒரு தலித்" எனக் கீழ்த்தர அரசியல் செய்வது ஏன்?
 • ராஜீவ்காந்தி காலத்து போஃப்பர்ஸ் ஊழலைப் பிரமாண்டமாக்கிப் போராடிய கருணாநிதி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஊழலே இல்லை என்று சொல்வது ஏன்?
 • இத்தனைக்கும் பிறகும் மத்திய அரசும் பிரதமரும் ராசாவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்?

யாரேனும் விடை கூறுவரா?

இவ்வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை வேறொருவருக்காக வேறொரு சமயத்தில் ஜெயலலிதா  சொன்னதுதான்.

ஆம்!  Selective amnesia.
                                                                             unarchitamilan

சனி, 22 ஜனவரி, 2011

ஈழத் தமிழர்கள் தவிக்கிறார்கள்: முள்வேலி முகாமை நேரில் பார்த்த சென்னை பெண் வக்கீல் கவலை

ஈழத் தமிழர்கள் தவிக்கிறார்கள்: முள்வேலி முகாமை நேரில் பார்த்த சென்னை பெண் வக்கீல் கவலை


உணவு, மருத்துவ வசதி எதுவும் இல்லாமல், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தவிக்கிறார்கள் என்றும், அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நேரில் சந்தித்து திரும்பிய சென்னை பெண் வக்கீல் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற போருக்கு பிறகு, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு, சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை திரும்பிய பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கூறியதாவது,

கடந்த 1 ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து வரும் எண்ணத்தில்தான் சென்றோம்.

அங்கு, இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும், குழந்தைகளும் கை, கால்கள் இல்லாத நிலையில், கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள். அழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் சிங்கள ராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள் என்றார்.
                                           unarchitamilan

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்! சென்னையில் மன்றாடிக் கேட்ட சிங்களப் பெண்.

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்! சென்னையில் மன்றாடிக் கேட்ட சிங்களப் பெண். Top News
ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?� என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.

இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?� என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.
இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும்.


பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன்.
எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்...
சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?� என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர், ''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா?
அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?� என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள். மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை..
இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.
போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள்.
அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும் மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள்.
உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நடக்​கிறது.
தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.
இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ வெளியேறும் காலம் வரும்.
அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள். இனவெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்�கள்!
                                    unarchitamilan

புதன், 19 ஜனவரி, 2011

ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..

ஈழத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு உதவி.. அவசரம்..
ஆஸ்திரேலியாவில் அடித்த கனமழை..அப்படியே இலங்கையிலும் கால் பதிக்க வெள்ளம் வெள்ளம்…. எங்கும் வெள்ளம்…வீடு இழந்த எம்மக்களை இந்த மழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது…
14 மாவட்டங்கள்……
10லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள்.
38 பேருக்கு மேல் மழை வெள்ளத்தில் இறந்து போய் இருக்கின்றார்கள்..
40க்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து இருக்கின்றார்கள்..
12க்கு மேற்ப்பட்டவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த மழை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் உறவுகளின் குழந்தைகள்.. மாற்றுதுணிக்கு கூட வழியில்லாமல் தவிக்கின்றனர்…
காசு பணம் கூட தேவையில்லை. குழந்தைகளுக்கான மாற்றுத்துணிகள் உங்களிடத்தில் இருந்தால் கொடுத்து உதவவேண்டுகிறோம். சுவெட்டர் போன்ற குளிர்கால உடைகள், போர்வைகள் இருந்தாலும் கொடுத்து உதவலாம்.
தொடர்புகொள்ள / உதவிட அழையுங்கள்:
மினா அப்துல்லா – பிரபாகரன் – 97896908
பாகில் – செந்தில், பெஸ்ட் லைன் கார்கோ – 67065006
மங்காப் – தமிழ்நாடன் 66852906
                   – உதயம் உணவகம்
அபுகலிபா – இராமன்(பொன்னி) 97522453 / 99015013
மெகபூலா – முத்துக்குமார் – 99014512
சால்மியா – அன்பரசன் 97480871, மகேந்திரன் சேது 90974710
குவைத் சிட்டி – பிரியா மியுசிகல் மதி -99816937
                                – பாலிவுட் உணவகம்
அபாசியா – இக்பால் 97861531
சுற்றிலும் வெள்ளம்..உயிர் பிடித்து இருப்பதே பெரிய விஷயம்… குழந்தைகளுக்கு உடை இல்லை..
மேலும் மழை வெள்ளத்தின் தீவிரம் பற்றி அறிய…
http://tamilwin.org/view.php?22GpXbc3BI34ei29302jQ6dd3Qjb20N922e4ILBcb3pGu2
http://www.bbc.co.uk/news/world-south-asia-12198143
http://asafardeen.blogspot.com/2011/01/blog-post_2274.html
http://www.nerudal.com/nerudal.24514.html
பொங்குதமிழ் மன்றம் – குவைத்
www.pongutamil.org
thamizh@pongutamil.org
+965 66852906
                                    unarchitamilan

கண்ணீர் தேசம் - 13

கண்ணீர் தேசம் - 13
பத்திரிகைகளில் பிரசுரமாகும் யுத்தம் குறித்த புகைப்படங்களை நேர்கொண்டு காணும் சக்தியற்றவர்களாக இருக்கிறோம். இரண்டு கால்களையும் இழந்தும், சிரித்தபடி இருந்த ஒரு சிறுமி நம் கன்னங்களில் புன்னகையால் அறைந்தாள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன் இணையாகவும், துணையாகவும் இருந்த இல்லக்கிழத்தியை ஒரு குண்டு கிழித்து எறிந்தபோது இயலாமையில் கதறிய ஒரு பெரியவரின் காதல், செவிடாக்கும் குண்டுகளின் இரைச்சலை மீறி வெளிப்பட்டதாம். கொட்டிய ரத்தத்தை நிறுத்தத் தெரிந்த மருத்துவர்களுக்கு, இமைகளின் நுனியில் எப்போதும் வழிந்தோடிக்கொண்டிருக்கும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. புகைப்படத்தில் தெரியும் அவரின் சோகம் நம் மீதும் படர்கிறது.

‘மக்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகள் மீதே தாக்குதல் நடத்தினோம்’ என்று கூசாமல் சொல்கிறார் இலங்கை அதிபர். தலைமுழுவதும் ரத்தக் காயங்களோடு மயங்கிய நிலையில் இருக்கிற கைக்

குழந்தையை ஏந்தியபடி ஒரு தகப்பன் நிற்கிற காட்சியைக் காணும்போது உள்ளம் பதறி உடல் நடுங்குகிறது. ராட்சத ராணுவ டாங்கிகளும், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களும் இருக்கிற இன்னொரு புகைப்படத்தைப் பார்க்கும்போது பகீரென்று இதயம் படபடக்கிறது. இன்னும் எத்தனை கைக்குழந்தைகளை பயங்கரவாதிகளாக ராணுவம் கண்டெடுக்கப் போகிறதோ? மற்றொரு புகைப்படத்தில் மருத்துவர்கள் போட்ட கட்டுகளை மீறி, ஒரு இளைஞனின் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளிப்படுகிற ரத்தம் நமக்கெல்லாம் எதையோ சொல்ல வருவதைப்போலவே இருக்கிறது. பச்சிளங் குழந்தையின் கதறலையே கண்டுகொள்ளாத உலகம், கட்டு மீறி பீறிடும் ரத்தம் சொல்லும் அர்த்தங்களையா கண்டடையப்போகிறது?

‘எங்கள் நாட்டில் எதுவுமே நடக்கவில்லையே’ என்பதுபோல எப்போதும் சிரித்தபடியே எல்லா புகைப்படங்களிலும் தெரிகிற இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது அதீத பயம் ஏற்படுகிறது. நடுக்கம் இல்லாமல் செய்யப்படுகிற குற்றங்கள், குற்றவுணர்ச்சியே இல்லாமல் நிகழ்த்தப்படும் போர்கள், தனக்கு வராதவரையில் எதையும் கண்டுங்காணாமல் இருக்கிற உலகத்தின் மௌனம்... இவையெல்லாம் இதயம் இருப்பவர்களுக்கு அதீத பயத்தை ஏற்படுத்துகின்றன. ஹிட்லரைப் போல ஆட்சியாளர்கள் இனத்தை அழிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக தினம் தினம் செத்தழிகிறது தமிழ் இனம். அப்பாவி மக்களைக் கொன்றழித்துவிட்டு பெருமை கொண்ட ஹிட்லரின் கருப்பு&வெள்ளை புகைப்படங்களை, இப்போது கலர் படங்களாக்கி இருக்கிறது இலங்கை யுத்தம். 

சமீபத்தில் அப்படி அதீத பயம் ஏற்படுத்தியது ஒரு புகைப்படம். இலங்கை ராணுவ வீரர் அடைக்கலம் நாடி ‘அரசு நலன்புரி நிலையம்’ வந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிஸ்கெட் வழங்கிய காட்சியைப் புகைப்படம் எடுத்து, அரசே எல்லா பத்திரிகைகளுக்கும் கொடுத்தனுப்பியது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அரசால் அமைக்கப்பட்டிருக்கும் ‘நலன்புரி நிலையங்களை’ வேறு வார்த்தையில் சொல்வதென்றால், அவை உள்நாட்டு அகதி முகாம்கள்.

பட்டிகளில் அடைக்கப்பட்ட ஆடுகளைவிட மோசமாக நடத்தப்படும் மக்கள், சுகாதார வசதிக் குறைவால் காலரா, மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எளிதாக இலக்காகிறார்கள். ஆயுதங்கள் வாங்கவே காசு இல்லாமல் அயல்நாடுகளிடம் கையேந்தும் அரசாங்கம், தமிழர்களைக் காப்பாற்ற மருந்து வாங்க பணத்திற்கு எங்கே போகும்? சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளில் சிக்கி வாழ்விழந்தவர்களின் வளர்ச்சிக்கு உலக நாடுகள் கொடுத்த பணத்தில், மிச்சமிருக்கிற தமிழர்களையும் கொல்ல ஆயுதம் வாங்கியவர்கள், எப்படி மருந்து வாங்குவார்கள்?

தலைமுறைக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ரசாயன ஆயுதங்களை அரசு பயன்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்களே குற்றம் சுமத்துகிறார்கள். தங்களிடம் என்னென்ன வகையான ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள், துப்பாக்கிகள், போர்த் தளவாடங்கள் இருக்கின்றன என்று பட்டியலிட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறது இலங்கை அரசு. சொந்த நாட்டு மக்களைக் கொல்ல இவ்வளவையும் பயன்படுத்துகிறோம் என்கிற வெட்க உணர்வே இல்லாமல் பெருமைப்படுகிறவர்கள் இன்னொரு நூதன ஆயுதத்தைக் கையிலெடுக்கிறார்கள்... அது பசி!

‘உயிர் பிழைத்தால் போதும்’ என்று அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கு போதிய உணவு வழங்காமல் பசியால் கொடுமைப்படுத்துவதும், நோய்கள் எளிதாகத் தாக்கும் சூழல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்களாக மக்களை மாற்றுவதும், மருந்துப் பற்றாக்குறையால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதும் இப்போதும் நடைமுறையாக இருக்கிறது. 

இந்தியாவுக்கு வெளியே காந்தஹாருக்கு, இந்தியர்கள் இருக்கும் விமானத்தைக் கடத்தினர் தீவிரவாதிகள். நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொன்னதும், அவர்களை விடுவித்து குடிமக்களைக் காப்பாற்றியது இந்திய அரசு. இலங்கையில் குடிமக்களையே பயங்கரவாதிகளாக்கி, விமானம் அனுப்பி, அதில் குண்டுகள் நிரப்பி அவர்களைக் கொன்று குவித்து, ‘போரில் வெற்றி கிடைத்துவருவதாக’ பெருமைப்படு
கிறார்கள் பெரிய மனிதர்கள்.

தமிழர்களின் உரிமைக்கான சில கோரிக்கைகளை முன்வைத்து கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினான் வீரப்பன். இது நியாயமற்றது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்தனர். மனித உரிமை ஆர்வலர்கள் வீரப்பனிடம் தூது சென்று, மக்களின் உணர்வை எடுத்துச்சொல்லி, நடிகர் ராஜ்குமாரை மீட்டு பத்திரமாக கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தனர். சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குற்றவாளியாகக் கருதப்பட்ட வீரப்பனுக்கு தெரிந்த நியாயம், இலங்கையை ஆளும் தலைவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் மக்கள் பயங்கரவாதிகளாகவும், கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறும் சோகம் அரங்கேறுகிறது.

இலங்கைப் போரின் அக்கிரமத்தை எதிர்க்கும் அடையாளமாக ‘அரை பெடலில்’ சைக்கிள் ஓட்டி, அதில் விறகு கட்டி விற்றுக்கொண்டிருக்கிறார்கள் பல தமிழ்ச் சிறுவர்கள். மக்கள் வாழும் பகுதிகளைத் தேடித்தேடி வேட்டை நாயைப்போல் விமானங்கள் குண்டெறிந்து அப்பாவிகளின் உயிரைக் கொல்வது ஒருபுறமும், இன்னொரு புறம் சிறுவர்களுக்கு பிஸ்கெட் வழங்கி அதைப் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்குக் கொடுப்பதையும் பார்க்கிறார்கள் சிறுவர்கள். தந்தையைக் கொன்றவர்கள், தாயைக் கொன்றவர்கள், சகோதரர்களைக் கொன்றவர்கள், உறவுகளைக் கொன்றவர்கள் தருகிற உணவுப்பொட்டலங்களை நம்பி இல்லாமல், சுடும் வெயிலில் வெறுங்காலோடு சுள்ளி விறகுகளைப் பொறுக்கி சைக்கிளில் சென்று விற்கும் சிறுவர்களின் சுயமரியாதை, உலகத்தின் மனசாட்சியை உலுக்கவே செய்கிறது. 

ராணுவத்தின் கொலையில் தப்பி, சித்ரவதைகளில் சிக்காமல் மீண்டு, விமான குண்டுவீச்சில் தப்பித்து, காடுகளில் பாம்புகளின் விஷப்பல் படாமல், பூச்சிகளின் கடிகளில் தப்பி, பசிக்கொலையில் உயிர்த்தெழுந்து, மருந்து தட்டுப்பாட்டின்போது தாய்ப்பாலில் சேகரித்த நோய் எதிர்ப்பு சக்தியால் பிழைத்து, ‘போரில் வென்று வருகிறோம்’ என்கிற வெற்றிச் சிரிப்பின் கோரத்தில் தப்பி, உணவுப் பொட்டலங்களுக்குக் கையேந்தாமல், சுயமரியாதையோடு விறகு பொறுக்கும் சிறுவர்களைக் கொலை செய்யும் திட்டம்கூட அரசாங்கத்திடமும் ராணுவத்திடமும் இருக்கலாம். அதுகுறித்த புகைப்படங்களையும் நாம் காண நேரிடலாம். போரில் வெற்றி பெற்றதாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இனிப்பு வழங்கும் புகைப்படங்களையும் காணநேரிடலாம்.

அப்போது நம்முடைய மனசாட்சி நம்மை நிச்சயம் உலுக்கி கேட்கும்... குழந்தைகள் கொல்லப்படுவதை வெறும் புகைப்படங்களாகப் பார்ப்பதற்கு மட்டுமேவா நமக்கு இரண்டு கண்கள்?              
  unarchitamilan

செவ்வாய், 18 ஜனவரி, 2011

- முள்ளிவாய்க்கால் - ஊரின் பெயரல்ல. - உலகத் தமிழர்களின் கொதிப்புணர்வின் குறியீடு முள்ளிவாய்க்கால்.

உலகத் தமிழர் பேரமைப்பு
- முள்ளிவாய்க்கால் - ஊரின் பெயரல்ல.

- உலகத் தமிழர்களின் கொதிப்புணர்வின் குறியீடு முள்ளிவாய்க்கால்.

- நமது சகோதரத் தமிழர்களைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்து சிங்கள இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தின் இரத்த சாட்சியம் - முள்ளிவாய்க்கால்.

- தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் பதிந்திட்ட சொல் - முள்ளிவாய்க்கால்.

பழமையும் பெருமையும், பெருமிதமும் மிக்க தமிழர் வரலாற்றில் படிந்துவிட்ட இந்தத் துயரக் கறையைத் தமது உயிர்களைச் சிந்திக் கழுவ முன்வந்தனர் முத்துக்குமார் உட்பட 18 ஈக மறவர்கள்.

முள்ளிவாய்க்கால் மக்களையும், அவர்களுக்காகத் தீயில் கருகி தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த தீந்தமிழ் மறவர்களையும் என்றென்றும் மறவாமல் நினைவுத்தூண்கள் எழுப்புவதற்கான அடிக்கற்கள் நாட்டும் விழா கடந்த 2-6-10 அன்று தஞ்சையில் நடைபெற்றது.

இதுவரை தமிழகம் கண்டறியாத சிறப்புடனும் முற்றிலும் புதுமை நிறைந்த முறையிலும் தமிழரின் சிற்பக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையிலும் நினைவுத் தூண்கள் அமைக்கும் பணி தஞ்சையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

2011 மே 17 ஆம் நாள் திறப்பு விழாவும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9ஆம் ஆண்டு நிறைவு விழாவும் தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கவிஞர்களும், தலைவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நினைவுத் தூண்களை நிறுவவும், விழா சிறப்பாக நடைபெறவும் தமிழுணர்வுடன் நிதியினை அள்ளித்தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பழ. நெடுமாறன், தலைவர்

6, தெற்கு மதகுத் தெரு, கோட்டூர்புரம்,

சென்னை-600 085. தொலைபேசி : 2377 5536

நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!

நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!

 - ராஜ்ப்ரியன்ந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர். உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம் ஜனவரி 23.

1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில் ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ். பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர். பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ் தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ் என்பது அப்போது மிகப்பெரிய பதவி. அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம், அரசியல், உலக நாடுகளின் வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில் நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வென்றார்.

ஆனால், 1921 மே மாதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஐ.சி.எஸ் என்ற பதவியை தூக்கி எறிந்து விட்டு லண்டனில் இருந்து இந்தியா வந்து காந்தியை சந்தித்தார். அவர் கல்கத்தாவின் தலைவர் சித்ரன்தாஸ்குப்தாவிடம் அனுப்பி வைத்தார். தாஸ் காந்தியை போன்றே செல்வாக்கு உடையவர். அவரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். 25 வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.


போஸ் காங்கிரஸில் இணைந்த நேரம், முதல் உலக போரில் பிரிட்டிஷுக்கு ஆதரவாக கலந்து கொண்ட இந்திய வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் இந்தியா வருவதாக அறிவித்தார். இதனை முறியடிக்கும் பணி போஸிடம் வந்தது. 1921 நவம்பர் 17ஆம் தேதி இளவரசர் கப்பல் மூலம் பம்பாய் வந்து இறங்கினார். பம்பாய் நகரம் வெறிச்சோடியிருந்தது. கல்கத்தாவில் காக்கா, குருவிக்கூட அவரை வரவேற்க வரவில்லை. வெள்ளைத் தோல்களுக்கு ஏமாற்றம், அவமானம். சாதித்து காட்டியது போஸ். இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்களிடம் ஆதரவு பெற்ற போஸ் சொன்னால் கல்கத்தாவில் துரும்புக்கூட அசையாது. இதில் கடுப்பான ஆங்கில அரசு போஸை கைது செய்து சிறையில் அடைத்து வைத்தது. முதல் சிறை வாசம். போஸ் மட்டுமல்ல தாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த தாஸுக்கும்-காந்திக்கும் கருத்து வேறுபாடு. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயராஜ்ய கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர ஃபார்வர்ட் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். கல்கத்தா கார்ப்பரேஷன் தேர்தலில் சுயராஜ்ய கட்சி வென்றது. போஸ் மேயராக பதவியேற்றார். 1925 ல் தாஸ் காலமான போது சிறையில் இருந்த போஸ் நொறுங்கிப் போனார். தனக்கு எல்லாம் முடிந்து போய்விட்டது என எண்ணினார். 1926 ல் நடந்த வங்க சட்டசபை தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றார். மக்கள் செய்த போராட்டத்தின் விளைவாக 1927 மே 17ல் விடுதலை செய்யப்பட்டவர். எலும்பும் தோலுமாக சிறையை விட்டு வெளியே வந்தார்.

முன்பை விட தீவிரமாக செயல்பட்டார். 1928 ல் கல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். தன்னை எதிர்க்க ஒருவனா என கோபமான காந்தி இது மாநாடேயில்லை என விமர்சனம் செய்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து விடுதலை சங்கம் என்ற பெயரில் காங்கிரஸில் இருந்தபடி இயக்கம் நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனுவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது, அங்கு எங்களுக்கு வேலையில்லை என காங்கிரஸ் ஜனநாயக கட்சியை சீனுவாச அய்யரை தலைவராக கொண்டு தொடங்கி காந்திக்கு புளிப்பு தந்தார்.

1930 ல் நடந்த கல்கத்தா மாநகர மேயர் தேர்தலில் நின்று சுபாஷ் வெற்றி பெற்று மேயரானார். 1931ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ஆரம்பித்தபோது போஸ் சிறையில் இருந்தார். காந்தி உட்பட பலர் உள்ளே இருந்தனர். வெளியே வந்து காந்தியின் தீவிர போராட்டத்தை ஆதரித்தார். கடைசியில் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி போரட்டம் புஸ்ஸானது. அதைப் பற்றி காந்தியிடம் விவாதிக்க போன போஸ், அப்படியே கராச்சியில் நடந்த மாநாட்டுக்கு ரயிலில் சென்றார். மாநாட்டின்போது, மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்வை தூக்கில் ஏற்றியது பிரிட்டிஷ் அரசு. அதை மாநாட்டில் காந்தி கண்டிக்கவில்லை. இதை எதிர்த்தார் நேதாஜி.


13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியட்னா போனவர் அப்படியே ஐரோப்பிய நாடுகளான செக்கஸ்லோவியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

1938 ஜனவரியில் தாயகம் திரும்பினார். அதே ஆண்டு ஹரிபுராவில் காங்கிரஸின் 51வது மாநாடு. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போஸை 51 காளைகள் பூட்டிய வண்டியில் அழைத்து சென்றனர். போஸ் பேரியக்கத்தின் தலைவரானார். நேருவுடன் இணைந்து பல காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சினார். இது காந்தி ஆதரவாளர்களை வெம்ப வைத்தது. 1 ஆண்டு முடிந்து 1939ல் கவுகாத்தியில் நடந்த மாநாட்டில் பேரியகத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. தலைவர் பதவிக்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளராக நிறுத்தினார் காந்தி. எதிர் வேட்பாளர் போஸ். காந்தியின் ஆதரவாளர்கள் சுபாஷை மண் கவ்வ வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினர். தேர்தலில் நானே நிற்கிறேன் என எண்ணிக்கொள்ளுங்கள் என்றார் காந்தி. ஆயினும், போஸ் தேர்தலில் சீதாராமையாவை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்று தலைவராக தேர்வானார் . காங்கிரஸ் என்றால் காந்தி என்ற பிம்பத்தை உடைத்தெரிந்து காந்தியின் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியை உருவாக்கினார் சுபாஷ். அப்போதுதான் 
சுபாஷின் முழு திறமை பற்றி உலகத்திற்கு தெரிந்தது .

பட்டாபி தோற்றது நானே தோற்றது போல இனி எனக்கு இவ்வியக்கத்தில் என்ன வேலை என மிரட்டல் விடுத்தார். காந்தி ஆதரவாளர்கள் வரிசையாக ராஜினாமா செய்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன சுபாஷ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற சரியான சந்தர்ப்பம் என கருதி காந்தியை அணுகி இரண்டாம் உலகபோரில் பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என கேட்டார் சுபாஷ். காந்தியோ மறுத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று பிரிட்டிஷ் படைக்கு உதவ வேண்டுமென வேண்டுக்கோள் விடுத்தார். மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு, காந்திக்கு கறுப்பு கொடி காட்டினர் மக்கள். காரி துப்பினாலும் அசராதவர்கள் தானே காங்கிரஸார். பிரிட்டிஷ் படைக்கு ஆதரவு தந்தனர்.


துவலவில்லை சுபாஷ். பிரிட்டிஷ் படைக்கு எதிர்ப்பான நாடுகளை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என எண்ணி வீட்டு காவலில் இருந்து 1941 ஜனவரி 17 ந் தேதி மாறு வேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி ஹிட்லர், இத்தாலி முசோலினி ஆகியோரிடம் உதவி கேட்டார். அங்கு இந்திய சுத்திர போராட்ட தலைவர்கள் சிலரின் நம்பகமான ஆதரவு கிடைக்க 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு என தனி கொடியை உருவாக்கி ஜனகன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.

1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆக்டோபஸ் நாடான பிரிட்டிஸ் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தவித்தது. மனம் தளரவில்லை இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்ததாக கொன்று குவித்தது பிரிட்டிஷ் படை. இந்திய தேசிய படை தோல்வியை தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்து விட்டதால் போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை. இதனால் வேதனையின் உச்சிக்கே போனார் சுபாஷ். அவரின் திறமை அறிந்து அவரை காக்க ஜப்பான் முடிவு செய்தது. இரண்டு பேர் செல்லும் விமானத்தில் அவரை அழைத்துக்கொண்டு ரஷ்யா சென்றார்கள்.

1945 ஆகஸ்ட் 12 ந் தேதி விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் நேதாஜி இறந்து விட்டார் என உலகத்திற்கு தகவல் சொன்னது ஜப்பானிய அரசு. எப்படி என்பது இன்று வரை மர்மமாகவேயிருக்கிறது. மர்மத்தை கலைய சுதந்திரத்திற்கு பின் பல கமிட்டிகள், பல ஆய்வுகள் இந்திய அரசு செய்தது. இதுவரை யாராலும் உண்மையை கண்டறிய முடியவில்லை. உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று வரை மர்மம் தொடர்கிறது.