தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த ஓர் நாள் இன்றைய நாள். 24 ஆண்டுகளின்முன் இதே நாளில்தான் அப்போதைய இந்தியப்பிரதமர் இராசீவ் காந்தியும் - ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முற்றாக அழிப்பதையே நோக்காகக் கொண்ட இந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்றவென தமிழீழமண் விரைந்த இந்திய ஆக்கிரமிப்புப்படையினர் 8000 அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்றுகுவித்தனர். 5000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் இந்தியப் படையினரால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மனநிலைசிதைக்கப்பட்டு, நடைபிணங்களாக்கப்பட்டனர். யாழ். பொது மருத்துவமனையில், மருத்துவ வல்லுனர்கள், மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள், காயப்பட்டவர்கள், அப்போதே பிறந்திருந்த சிசுக்கள் என ஈவு இரக்கமின்றி எல்லோரையும் கொன்று குவித்தது இந்திய ஆக்கிரமிப்புப் படை. 'அண்ணன் பிறந்த ஊர்' என்று வல்வெட்டித்துறை மண்ணையே சுடுகாடாக்கியது, பிஞ்சுக்குழந்தைகளை அவர்கள் பெற்றோர் கண்முன்னேயே சுவரில் அடித்துக்கொன்றது, குடும்பமே பார்த்துக் கதறி அழ, அவர்கள் கண்முன்னேயே பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது, இளையவர்களை நிரைப்படுத்தி படுக்கவைத்து அவர்கள்மேல் கவசவாகனத்தை ஏற்றி உடல்களைச் சிதைத்துக்கொன்றது, 'ஹிந்தி'யில் ஏதேதோ கேட்டுவிட்டு, எதுவும் புரியாமல் பதில்சொல்லத்தெரியாது விழித்த அப்பாவித் தமிழ் மக்களின் வாய்களுக்குள்ளே சுடுகலனை வெடிக்கவைத்துக் கொன்றது. பேருந்துகள், இயந்திர வண்டிகள் போன்றவற்றில் பயணித்த பயணிகளை நிரைப்படுத்தி சுடுகலனது அடிக்கட்டையால் அடித்துக் குதறிய தமிழ் உடல்கள் இன்றும் அவற்றின் வடுக்களைத் தாங்கியே உள்ளன. பாரததேசத்தின் பொய்யான அகிம்சை முகமூடியைக் கிழித்தெறிந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் எங்கள் திலீபன் அண்ணா. இன்றைய நாள் நெஞ்சுகனக்கும் வேதனையோடும் வலியோடும் எம் மக்களின்/மாவீரர்களின் நினைவுகளை மட்டும் மனதில் சுமக்க நினைத்தாலும், ஆக்கிரமிப்பாளன் மீதான அடங்காத வன்மம் இன்றும், என்றும் - எம் தமிழ் மக்களின் குருதிக்கொதிப்பில்! கண்ணீர் வணக்கம் என் மக்களே!
பக்கங்கள்
|
ஞாயிறு, 31 ஜூலை, 2011
புதன், 20 ஜூலை, 2011
ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது
நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள். பிரித்தானியாவைச் சேர்ந்த "சனல்-4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்கிற பெட்டக நிகழ்ச்சி பலரின் மனக்கதவை திறக்கவைத்துள்ளது. |
மே 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளை சனல்-4 தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து தர்மத்திற்காக குரல் கொடுக்கிறது. இப்படியான நிறுவனங்களை உலகத்தமிழர்கள் போற்றுவதுடன், தம்மாலான ஆதரவை நல்கி இவர்களின் சேவையைப் பல மடங்காக்க ஊக்கமளிக்க வேண்டும். ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சனல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுடன், உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல், வெகுவிரைவில் ஐந்து இலட்சம் பிரதிகளை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதிகள் வெளிவந்தால் நிச்சயம் சிங்கள அரசுக்கு ஆதரவளிக்கும் பல நாடுகள் தமது நிலையை பரிசீலிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு, சமீபத்தில் ஒளிபரப்பாகிய சிறிலங்காவின் கொலைக்களம் என்கிற பெட்டக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கடம் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதை பகிரங்கமாகவே கேட்டுள்ளார். நான்காம் கட்ட இறுதி யுத்தத்தின் போது சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐநாவின் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கெவின் ரூட் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனிதவுரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தான் கோரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பல தமிழ் மக்களை சிங்கள அரச படையினர் சிறைச்சாலையில் அடைத்துவைத்து பல அட்டூழியங்களைக் குறித்த சிறைவாசிகளுக்கு செய்தது. குறித்த பல சிறைவாசிகள் தற்போது விடுதலைபெற்றோ அல்லது பணத்தை கொடுத்தோ நாட்டை விட்டு தப்பித்து மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒன்றிணைத்து குறிப்பிடப்பட்டவர்களை நேரடி சாட்சிகளாக இணைத்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நீதிமன்றங்களில் வழக்குப்போட சில அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இப்படியாக பல வழிகளில் சிங்கள அரசுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது. |
ஞாயிறு, 10 ஜூலை, 2011
தெற்கு சூடான் உதயமானது போல் தமிழ் ஈழம் மலரவும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)