மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 17 மார்ச், 2011

இன்டர்நெட் ஒரு உளவாளி இயந்திரம் விக்கிலீக்ஸ் அசாஞ்ச் புகழாரம்

உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது' என, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது, லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது: இன்டர்நெட் குறிப்பாக, பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள், ரகசியங்களை திரட்ட, அரசுகளுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, கெய்ரோவில் பேஸ்புக் புரட்சி வெடித்து இருக்க வேண்டும். முக்கிய பங்கேற்பாளர்களை திரட்ட, பேஸ்புக் உதவியாக இருந்தது. இதன் பின்னர் இவர்கள் அடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை தெரிவிக்கும் திறன், இன்டர்நெட்டுக்கு உள்ளது. உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு, இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. கொடுங்கோல் ஆட்சிகளை அழிக்க தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கோ அல்லது மனித உரிமைக்கோ தொழில்நுட்பம் ஆதரவானது இல்லை. அரசாங்கங்களை உளவு பார்க்க உதவக் கூடியது. அரபு நாடுகளில் எழுந்துள்ள புரட்சிக்கு என்னுடைய இணையதளம் உதவியாக இருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் வெளியானது மூலம் டுனீசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அசாஞ்ச் பேசினார்.
டில்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் இருந்து பரிமாறப்பட்ட தகவலில், "கேரளா மாபியா' பிரதமர் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்,"நாங்கள் கேரளா மாபியாக்கள் அல்ல. அமெரிக்கர்கள் கூறுவதை நாங்கள் கேட்க வேண்டியது இல்லை' என்று, சபரிமலை சென்றிருந்த போது, கேரள "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.



unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக