மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 12 மார்ச், 2011

'முப்பது நாளில் கோடீஸ்வரனாக..'

நல்லக்கண்ணு சொல்லும் நான்கு வழிகள்!
'மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியே மீண்டும்
நாற்காலியைப் பிடித்துவிடலாம்!’ என்ற தி.மு.க-வினரின் நம்பிக்கையைத் தகர்க்க இந்த ஒரு புத்தகம் போதும்’ என்று சொல்​கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அரசு நிறை​வேற்றிவருவதாகச் சொல்லப்படும் நலத் திட்டங்களில் மறைந்திருக்கும் பல்வேறு குறைபாடுகளை வைத்து, 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் இவர். ஆளும் கட்சித் தரப்பை ஏகத்துக்கும் கடுப்பேற்றிய இந்தப் புத்தக வெளியீட்டு விழாப் பேச்சுகள் இங்கே அப்படியே....
பிரபல ஆடிட்டர் எம். ஆர்.வெங்கடேஷ்:
''1975-லேயே கருணாநிதி 'விஞ்ஞானபூர்வமாகக் கொள்ளையடிப்பவர்!’ என்றால், அதன் பிறகு இந்த நாற்பது வருடங்களில் கொள்ளையடிப்பதில் பி.ஹெச்டி பட்டம் எல்லாம் வாங்கி இப்போது எங்கே  வந்துவிட்டார் பாருங்கள். ஆக இவருடைய நாற்பது வருடக் கொள்ளை வரலாற்றையும் சேர்த்து நாற்பது வகைப் புள்ளிவிவரங்களோடு விளக்கும் இந்தப் புத்தகத்துக்கு 'அலிபாபாவும் நாற்பது திருட்டுகளும்’ என்றுதான் பெயர் வைத்திருக்கவேண்டும்.  காங்கிரஸோடு கூட்டணி சரிப்பட்டு வந்துவிட்டதால், இப்போது '63 நாயன்மார்கள்’ என்கிறார். இல்லை என்றால், '63 அயோக்கியர்கள்’ என்று சொல்லி இருப்பார்!''
தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்த திருச்சி சவுந்தர்ராஜன்:
''இனத்தின் உரிமைகளை மீட்டெடுக்க உருவாக்கப்​பட்ட தி.மு.க. இயக்கம், இன்று கருணா​நிதி​யின் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே மாறி​விட்டது. அண்ணா மறைந்துபோன நேரத்தில், நினைவு நாள் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் அன்பழகன், கருணாநிதியை சுட்டிக்காட்டி 'கருணாநிதியை நான் ஒருக்காலும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படி ஏற்றுக்கொண்டால், என் மனைவிகூட என் முகத்தில் காறி உமிழ்வாள்!’ என்றார். ஆனால், அப்படிப்பட்டவரைக்கூட இன்று எந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டார்கள் பாருங்கள்!''
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு:
''ஆட்சி அதிகாரம் தங்களுக்கும் தங்களுடைய பேரன் பேத்திகளுக்குமே சொந்தம் என்பது போல் நடந்துகொள்வதால்தான் இன்றைக்கு நமக்கு இப்படி ஒரு நெருக்கடியான சூழல். இதே தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த கக்கன் பதவியை விட்டுப் போகும்போது, அரசு கொடுத்த வீட்டைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்குச் சென்றார். அது வரையிலும் தான் வளர்த்துவந்த மாட்டை வாடகை வீட்டுக்குக் கொண்டுசெல்ல முடியாது என்பதால், மாட்டை விற்றுவிட்டுப் போனார். அதேபோல், காமராஜர், ஜீவானந்தம், அண்ணா என்று அப்போது இருந்த தலைவர்கள் எல்லாம் 'மக்கள் பிரதிநிதிகள் எப்படி இருக்க வேண்டும்’ என்று முன்மாதிரிகளாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் பெயரைச் சொல்லிக் கட்சி நடத்தும் இன்றைய தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
நிலம், நீர், மின்சாரம், வான்வெளி, காற்று என்று எல்லாவற்றையும் மோசடி செய்து அழித்துவிட்டார்கள். இந்தியாவைப் பாதுகாக்கக்கூடிய நமது ராணுவத்தின் பட்ஜெட் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி. ஆனால், இவ்வளவு பெரிய தொகை ஒரேயரு துறையில் கொள்ளையடிக்கப்பட்டது என்றால்... இதுதானே சிகரம் தொட்ட ஊழல்!
டாட்டா பிர்லாவே தங்களுக்குப் பிடிச்ச அமைச்சர் வேணும்னு ராடியா பின்னாடி போனால்... நாட்டில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது?
இதுவரையிலும் இல்லாத இப்படி ஒரு சிகரம் தொட்ட ஊழலையும் செய்துவிட்டு 'நான் அநாதை’ என்று சொன்னால்..... தாயைக் கொன்றுவிட்டு கோர்ட்டில் போய், 'நான் தாய் இல்லாத பிள்ளை’ன்னு சொன்னா... என்னன்னு சொல்லுறது? (அரங்கம் அதிர 'சிரிப்பொலி’). கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடிதான் இப்படி ஒரு முன்மாதிரி ஊழலை செய்திருக்கிறார்கள் என்றால், இனிமேல் இவர்கள் ஆட்சி இருக்கக் கூடாது!
ஒரு ரூபாய்க்கு அரிசி, தவிடு எட்டு ரூபாய் என்று விலைவாசி முறைகெட்டுப் போகிறது. மன​சாட்சியே இல்லாத மணல் கொள்ளையால் பாலாறு... பாழாய்ப்போச்சு, தாமிரபரணி ஆறு... அழிஞ்சேபோச்சு. காவிரி விவகாரத்தில், பதினேழு வருட நீதிப் போராட்டத்தில் கிடைத்த இறுதித் தீர்ப்பும் மூன்று வருடங்களாக நிலுவையிலேயே இருக்கு. ஆனால், இதை எல்லாம் முறைப்படுத்த வேண்டியவர்களே கொள்ளையடித்து கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். இப்போதெல்லாம் கோடீஸ்வரர் ஆவதற்கு அடியாட்கள் நாலு பேர், அதிகாரிகள் நாலு பேர், இன்னும் சப்போர்ட்டுக்கு நாலு பேருன்னு வெச்சுக்கிட்டா... முப்பதே நாள்ல நானும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். இன்னும் முக்கியமான ஒண்ணு.. மனசுல துளி ஈரம்  கூட இருக்கக் கூடாது.
ஏமாளிகள் இருக்கும் வரையிலும் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இது​போன்ற ஆட்சியாளர்களின் தகிடுதத்தங்களை விளக்கிச் சொல்லி ஏமாளிகளை விழிப்படையச் செய்யத்தான் இந்தப் புத்தகம். அதனால் யார் வந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடாமல், 'யார் வரக் கூடாது’ என்பதை தெளிவாகச் சிந்தித்துச் செயல்​படுங்கள்!'' என்று முத்தாய்ப்புடன் பேசி முடித்தார் தியாகி நல்லக்கண்ணு!
- த.கதிரவன்

படங்கள்:   ச.இரா.ஸ்ரீதர்


unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக