மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 6 மார்ச், 2011

இந்தியாவில் எகிப்து ஸ்டைல் புரட்சி?

எகிப்தில் நடந்த 18 நாட்கள் மக்கள் போராட்டமும், 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக்கை அந்தப் போராட்டம் ஓட ஓட விரட்டியதும் உலகம் முழுக்க உற்சாக அலைகளைப் பரவ விட்டுள்ளது. ‘காந்தி கற்றுக்கொடுத்த அகிம்சை வழி, இன்றைக்கும்கூட வெற்றி தருவதாக இருக்கிறது’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெருமைப்பட, ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் இதே ஸ்டைல் போராட்டத்தை பல நாடுகளில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். உலகின் வேறெந்த நாட்டுக்கும் சளைக்காத அளவுக்கு ஊழல் தலைவர்களை நாம் ஆட்சியாளர்களாக பெற்றிருக்கிறோம். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், 2 லட்சம் கோடி ரூபாய் என அவர்களின் ஊழல்களும் உலகை வியக்க வைப்பவை. தொடர்ச்சியாக வெளிவரும் ஊழல் செய்திகள் மக்களை வெறுப்பிலும் விரக்தியிலும் ஆழ்த்தியிருப்பது நிஜம்.

அப்படியானால், இந்தியாவிலும் எகிப்து ஸ்டைலில் ஜனநாயகப் புரட்சி சாத்தியமாகுமா? இப்படி ஒரு கேள்வியை எழுப்பும் ஜனநாயகவாதிகள், எகிப்து புரட்சி தொடர்பாக மீடியாக்களில் சொல்லப்படும் சில புனைகதைகளை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

‘ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஒரு இளம்பெண் அறைகூவல் விடுக்க, அதைத் தொடர்ந்து எகிப்திய இளைஞர்கள் அலையலையாகத் திரண்டு தலைநகர் கெய்ரோவின் தாஹ்ரிர் சதுக்கத்துக்கு வந்தார்கள். இணையதளங்களும் சமூக வலைதளங்களும்தான் இந்தப் புரட்சித் தீயை தேசம் முழுக்க பரப்பின’ என்பது அதில் ஒரு புனைவு. நாளைக்கே டெல்லி செங்கோட்டை எதிரே இந்தியர்களை அணிதிரளச் சொல்லி யாரோ ஒரு இளம்பெண் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ அறைகூவல் விடுத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் போய் கூடிநின்று ஆட்சியை அசைத்துவிடுவார்களா என்றால்... சாத்தியமில்லை! சமூக வலைதளங்களில் உலாவும் இந்திய ஒயிட் காலர் பட்டாளத்துக்கு, போலீஸ், கண்ணீர்ப்புகை, லத்தி அடி எல்லாம்தான் நிதர்ஸனம் என்பது புரியும். (காஷ்மீர் மட்டும் விதிவிலக்கு!)

எகிப்து புரட்சிக்கு முன்னாலும் உலகெங்கும் புரட்சிகள் நடந்து வந்திருக்கின்றன. குறிப்பாக இந்த மில்லினியம் பிறந்த 11 ஆண்டுகளில் 11 நாடுகளில் மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாமே கிட்டத்தட்ட இதே ஸ்டைல் போராட்டங்கள்தான்! கடந்த 2000 ஆண்டு ஜனவரியில் ஈக்வடார் நாட்டு அதிபர் ஜமீல் மஹூத் மக்கள் போராட்டத்தால் ஆட்சியைத் துறந்து ஓடினார். அதே ஆண்டு அக்டோபரில் யூகோஸ்லாவிய அதிபர் மிலோசெவிக் இதே ஸ்டைலில் ஆட்சியைத் துறந்தார். பிலிப்பைன்ஸ் அதிபர் ஜோஸப் எஸ்ட்ராடாவை ஆட்சியைவிட்டு விரட்ட 2001 ஜனவரியில் மக்கள் போராடியபோது, அவர்களுக்கு ராணுவம் ஆதரவு அளித்தது. டிசம்பர் 2001ல் அர்ஜென்டினா அதிபர் ஃபெர்னாண்டோ டி லா ருயாவை பதவியிலிருந்து விரட்ட மக்கள் போராடியபோது, போலீஸை விட்டு போராட்டத்தை நசுக்கினார் அதிபர். 
 
போராட்டம் பெரிதாக, அவர் பதவியிலிருந்து ஓடினார். பொலிவியா, ஜார்ஜியா, ஹைதி, உக்ரைன், கிர்கிஸ்தான், டுனீஷியா என எல்லா நாடுகளிலும் இப்படி நடந்த போராட்டங்களுக்குக் காரணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அது சர்வாதிகார ஆட்சியையும் ஊழலையும் சகித்துக்கொள்ள முடியாத மக்களின் போர்க்குணம். அமெரிக்கா, ரஷ்யா என வல்லரசுகளின் கைப்பாவையாக அதிபர்கள் இருந்ததும் இன்னொரு காரணம். மக்கள் போராட்டத்தால் பதவியைத் துறக்கும் இப்படிப்பட்ட அதிபர்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா போன்ற நாடுகள் அடைக்கலம் கொடுக்கத் தயாராக இருக்கின்றன.

எகிப்தில் நடந்த போராட்டம்கூட டுனீஷியாவின் தொடர்ச்சிதான். 24 ஆண்டுகளாக டுனீஷியாவை ஆண்டுகொண்டிருந்த பென் அலியின் ஆட்சியில் ஊழலும் வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் பெருக, மக்கள் கொதித்துப் போயிருந்தார்கள். தலைநகர் டுனீஸில் தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒரு பட்டதாரி இளைஞரைப் பிடித்த போலீஸ், அவர் அனுமதியின்றி வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டி, தள்ளுவண்டியை பறிமுதல் செய்தது. திரும்ப வண்டியைக் கேட்ட அவரிடம் லஞ்சம் கேட்டார்கள். தாங்க முடியாத விரக்தியில் அவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கொதிநிலையில் இருந்த மக்களைத் தூண்டிவிட்ட சம்பவம் இதுதான்! வீதியில் இறங்கி போராடிய மக்கள், 200 பேரின் உயிர்த் தியாகத்துக்குப் பிறகு ஆட்சியை அகற்றினார்கள்.

கடந்த மாதம் நடந்த இந்த ஆட்சி மாற்றம், பக்கத்து நாடுகளான லிபியாவிலும் எகிப்திலும் மக்களைத் தூண்டிவிட்டது. எகிப்தில் இதேபோல நான்கு பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்கள். அதன்பின் ஆங்காங்கே போராடிய மக்களை போலீஸ் கலைத்தது; மிரட்டியது. தாஹ்ரிர் சதுக்கத்துக்கு லட்சக்கணக்கில் மக்கள் போராட வந்தபிறகும் போலீஸ் மனநிலையில் மாற்றமில்லை. போராட வந்து வீடு திரும்பிய பலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்கள்; உறவினர்கள் சித்ரவதைக்கு ஆளானார்கள்.
 
வீடு திரும்பினால் ரகசிய போலீஸின் பிடியில் சிக்குவோம் என்ற கவலையில் சதுக்கத்திலேயே டேரா போட்டிருந்தவர்கள் அநேகம் பேர். போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தின் மறைமுக ஆதரவு கிடைத்தபின் நிலைமை மாறியது. எகிப்தில் மட்டுமில்லை... ஆட்சி மாற்றம் நடந்த எல்லா நாடுகளிலும் ராணுவத்தின் ஆதரவு மக்களுக்கு இருந்ததால்தான் ஆட்சி மாற்றம் சாத்தியமானது. குறிப்பாக எகிப்தில் ராணுவத்தையும் ஆட்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஹோஸ்னி முபாரக் ராணுவத்தில் இருந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்தான். இப்போது அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ராணுவப்படைகளின் தலைவர் முகமது ஹுசைன் தான்டவி, முபாரக் நியமித்த அமைச்சரவையில் 20 ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.
 
சர்வாதிகாரத்தின் இறுக்கமான பிடியால் ஆளப்படும் அரபு நாடுகளில் ராணுவம் அதிகார மையமாக இருப்பதைத் தவிர்க்கமுடியாது. மூன்று முறை இஸ்ரேலுடன் போர் தொடுத்த எகிப்து, அரபு கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மையமாக கருதப்படும் நாடு. நாசர் காலத்திலிருந்து அரபு தேசங்களின் அங்கீகரிக்கப்படாத தலைவனாக கருதப்படுவது. இடையில் சவூதி அரேபியா டேக் ஓவர் செய்துவிட்டாலும், எகிப்தின் மரியாதை குறையவில்லை. இதனாலேயே அமெரிக்கா எகிப்துக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து குஷிப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் மீது மீண்டும் போர் தொடுக்கக்கூடாது; அரபு ஏரியாவில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக தரப்படும் மானியம் இது. இப்போதுகூட எகிப்தில் பிரச்னை வந்ததும் கச்சா எண்ணெய் விலை ஏறி, உலகம் முழுக்க மக்களை பாடாய்ப்படுத்தியது. எகிப்து அரசு பாதை மாறி, மதவாதிகளின் கைகளில் சிக்கி, அமெரிக்க எதிர்ப்பு கோஷம் வலுத்தால் இந்த நிதியுதவி நின்றுவிடும். பிரமிடுகளை பார்க்க சுற்றுலா பயணிகளும் வரமாட்டார்கள். தேசத்தின் முதன்மையான இரண்டு வருமானங்களும் அடிவாங்கினால், அப்புறம் அது நோஞ்சான் நாடாகிவிடும்.

நம் விஷயத்துக்கு வருவோம்... இந்தியாவைப் பொறுத்தவரை சர்வாதிகாரம் என்பது அதன் நேரடியான அர்த்தத்தில் இங்கு இல்லை. தேர்தல்கள் ஜனநாயகரீதியாகவே நடக்கின்றன. ஆளுங்கட்சிக்கு 99.9 சதவீத ஓட்டுகள் விழும் மோசடி தேர்தல்கள் இங்கு இல்லை. தப்பு செய்தால் அடுத்த தேர்தலிலேயே மக்கள் கவிழ்த்துவிடுவார்கள் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், ஊழல் மட்டும் வளர்ந்திருக்கிறது; அதை மக்கள் தட்டிக் கேட்டால் உதவி செய்ய வேண்டிய ராணுவமோ தங்கள் பங்குக்கு ஊழல்களைச் செய்துகொண்டிருக்கிறது. இலவசங்களும் ஓட்டு போட பணமும் பிரியாணியும் கொடுத்து, மக்களையும் ஊழல் பேர்வழிகளாக மாற்றிவிட்டார்கள்.

அதோடு தீக்குளிப்பு என்ற விஷயத்தையும் தியாகம் என்ற படிநிலையிலிருந்து கீழே இறக்கி, நம்ம ஊர் அரசியல் கட்சிகள் ரொம்பவே மலினப்படுத்திவிட்டன. போலீஸை நம்பாமல் எல்லா அரசியல் கட்சிகளுமே ‘தொண்டர்’களை வைத்திருக்கும் தேசம் இது. இங்கே சாதாரண உண்ணாவிரதம் நடத்துவதற்குக்கூட ‘தொண்டர் பலம்’ வேண்டும். இல்லாவிட்டால் சப்பையான கோரிக்கைகளாக இருக்க வேண்டும்; அப்போதுதான் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

காந்தியின் தேசத்தில் காந்திவழி புரட்சியாவது... புடலங்காயாவது! 

    
 



unarchitamilan                       
                                        thanks thennali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக