மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 31 டிசம்பர், 2010

பிரபாகரன் வாழ்ந்த ஊரில் இருந்து மண் எடுத்து செல்லும் சிங்களர்கள்

பிரபாகரன் வாழ்ந்த ஊரில் இருந்து மண் எடுத்து  செல்லும் சிங்களர்கள்
இலங்கையில் தனி ஈழம் கேட்டு சிங்கள அரசுக்கு எதிராக பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் போராடினர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகளை வென்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இதையடுத்து இலங்கையில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது.  
எனவே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு இலங்கை அரசின் வசமானது. இதை தொடர்ந்து வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள முல்லைத்தீவுக்கு பெரும்பாலான சிங்களர்கள் சுற்றுலா வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அவர்கள் அங்கு வீரத்தின் விளைநிலமாக திகழும் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்புக்கு வந்து செல்கின்றனர்.  பிரபாகரன் வாழ்ந்த ஊர் என்பதால் அங்கு மண்ணை எடுத்து செல்கின்றனர். இதில் எந்த வித வேறுபாடும் அவர்கள் பார்ப்பதில்லை. அங்கிருந்து மண் எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பிரபாகரனின் முகாம் எங்கிருந்தது. அவர் எங்கு தங்கியிருந்தார் என அப்பகுதி மக்களை கேட்டு மண் எடுத்து செல்கின்றனர். இந்த தகவலை முல்லைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

உயிர் பயம் தரும் உஷார்!

PDFஉயிர் பயம் தரும் உஷார்!
ெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2010 13:12

த்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் ஆ.ராசா கம்பீரமாக இருந்த காலத்திலேயே, அவரது துறை அலுவலகத் துக்குள் சி.பி.ஐ. நுழைந்தது. கடந்த ஆண்டு (2009) நவம்பர் மாதம் இது நடந்தது. சில ஆவணங்களை அள்ளிச் சென்றது.

கடந்த மாதத்தில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆ.ராசாவின் டெல்லி வீட்டுக்குள் சி.பி.ஐ. புகுந்து ரெய்டு நடத்தியது. அவரது உடன்பிறப்புகள் முதல் நேரடி, மறைமுக நண்பர்கள் வரை அனைவரும் சி.பி.ஐ-யின் ரெய்டுப் பிடியில் சிக்கினார்கள்.  டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராகும்படி ஆ.ராசாவுக்கு அழைப்பு வந்தது. கடந்த வெள்ளிக் கிழமை அவரும் ஆஜரானார். அதையடுத்து, சனிக்கிழமையும் அவரை வரவழைத்து கேள்விக் கணைகளால் துளைத்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள்!

இந்த விசாரணைகள் எதுவும் அவர் எதிர்பார்க்காமல் நடப்பவை அல்ல. தெரிந்து, அறிவித்துவிட்டுத்தான் சி.பி.ஐ. பூதம் அவரை மெள்ள மெள்ள தன் பிடிக்குள் இழுத்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணிக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே, தன் கட்சியின் முக்கிய தளகர்த்தர் ஒருவரை நாள் முழுவதும் விசாரணைக் கைதி போல உள்ளே உட்கார வைக்கும் நிலைமையை தி.மு.க. இதற்குமுன் ஒருபோதும் சந்தித்து இராது! மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் டெல்லியில் நம்மிடம், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் சாதாரண ஊழல் வழக்கு மட்டும் அல்ல. ஏதோ சில விதிமுறைகளை மீறி சிலருக்கு சலுகைகள் காட்டி ஆதாயங்களை அடைந்த விவகாரமாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. 2-ஜி டெண்டர் எடுத்த கம்பெனிகள் எவை, அதன் பின்னணியில் இருக்கும் முதலாளிகள் யார், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களது வெளிநாட்டுத்  தொடர்புகள் என்னென்ன என்பது குறித்த விரிவான தகவல்களை இன்னமும் முழுமையாக அறிய முடியவில்லை. 'ஆ.ராசாவை விசாரிக்கிறார்கள்... அவரை எப்போது கைது செய்வார்கள்? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முறியுமா? இதைவைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?’ என்று மேலோட்டமான அரசியல் விவகாரமாகவே பலரும் இதைப் பார்க்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிய சர்வதேச சதிகள் இதற்குள் இருக்கின்றதா என்பதுதான் எங்கள் விசாரணை. ஆ.ராசாவை விசாரிப்பதோ, தேவைப்பட்டால் கைது செய்வதோ தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை மட்டும் கோபப்படுத்தும் அரசியல் சமாசாரம் அல்ல. வெளிநாட்டு கம்பெனிகள், முதலாளிகளின் ரியாக்ஷன்களை முக்கியமானதாகக் கவனித்து வருகிறோம். இந்த உஷார்த்தனம் எங்களைவிட ஆ.ராசாவுக்கு அதிகமாகவே இருக்கிறது...'' என்றார். அவரே தொடர்ந்தார் -

''சி.பி.ஐ. அதிகாரிகளின் முன்பு ஆஜராவதற்காக டிசம்பர் 24-ம் தேதி வந்த ஆ.ராசா, அந்த அலுவலகத்தில் தரப்பட்ட காபி, டீயைக்கூட முதலில்  குடிக்க மறுத்துவிட்டார். 'நீங்கள் என்ன மாதிரியான உணவை விரும்பிச் சாப்பிடுவீர்கள்? அதை வரவழைக்கிறோம்’ என்று அதிகாரிகள் கேட்டபோதும் ஆ.ராசா மறுத்தார். 'என் வீட்டில் எனக்கான உணவு தயாராக இருக்கும். அதை எடுத்து வர நீங்கள் அனுமதி தந்தால் மட்டும் போதும்!’ என்று சொன்னார்.

அதன் பிறகு, அவர் வீட்டிலிருந்து ஹாட் பேக்கில் மதிய உணவு கொண்டு வரப்பட்டது.

ஆ.ராசாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களின் கண்காணிப்பிலேயே அந்த உணவு வந்து சேர்ந்தது. மாலை நேரத்தில் மறுபடியும் டீ குடிக்கலாம் என்று விரும்பியபோது, அதற்கும் ஓர் ஆளை வீட்டுக்கு அனுப்பிவைக்க முடியாது என்பதால், 'இங்கேயே டீ சாப்பிடலாமே...’ என்று அதிகாரிகள் சொன்னார்கள். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகுதான் அதை வாங்கிக் குடித்தார். ஆ.ராசாவின் இந்த சுதந்திரத்தை சி.பி.ஐ-யும் அதிகமாகத் தடுக்கவில்லை. இதுவரை, உறவாக இருந்தவர்களும் பகையாக மாறக்கூடிய வாய்ப்புதான் எல்லா வழக்குகளிலும் நடக்கும். அதை நினைத்துக்கூட ஆ.ராசா ஜாக்கிரதையாக இருக்கலாம்...'' என்றார் அந்த அதிகாரி.

''மத்திய காங்கிரஸ் ஆட்சி மேலிடத்தில் நெருக்கமான சில மனிதர்கள், 2-ஜி டெண்டர் எடுத்த கம்பெனிகளுடன் நெருக்க மாக இருந்தார்களாம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையைத் தடுப்பதற்கான மறைமுகக் காரியங் களைப் பார்த்து வருகிறார்கள். டெண்டர் எடுத்த இரண்டு கம்பெனிகளில் நீரா ராடியாவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. எனவே, அவருக்கு வேண்டியவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். ராடியாவை இந்த வழக்கு விசாரணையிலிருந்து எப்படியாவது மீட்டுவிட பெரிய முதலாளிகள் இரண்டு பேர் துடியாய்த் துடிக்கிறார்கள். இந்நிலையில்தான், ஆ.ராசாவின் பாதுகாப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது!'' என்றும் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. வசம் சிக்கியவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, மற்றவர்கள் மீது பழி போடுவது அதிகமாக நடக்கிறதாம். ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் இரண்டு பேரும், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர்கள் இருவரும் அப்ரூவர்களாக மாறி வருவதாகச் சொல்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சமயத்தில், கூடுதல் தனிச் செயலாளர்கள் இரண்டு பேர் இருந்தனர். இதில் ஒருவர் ஆர்.கே.சந்தோலியா. இவரை தாமதப்படுத்தாமல் அப்ரூவராக கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட வேண்டும் என்று சி.பி.ஐ. துடிப்பதாகத் தகவல்.

ஆ.ராசா சி.பி.ஐ-யின் விசாரணையின்போது, இந்த இரண்டு நாட்களும் எப்படி நடந்துகொண்டார் என்று விசாரித்தோம். ''ஆ.ராசா ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதால், தனது தரப்பு வாதங்களை பதற்றமில்லாமல் முன்வைத்தார். தான் எடுத்த முடிவுகள் புதியவை அல்ல என்றும் அவை ஏற்கெனவே பின்பற்றப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை என்றும் அசராமல் வாதங்களை அடுக்கினார். 'என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியானவை’ என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார். விதிமுறை மீறல் என்ற கோணத்திலேயே போய்க் கொண்டிருந்தால், இப்படி விவாதம்தான் வளர்ந்துகொண்டு போகும் என்பதால், ரிவர்ஸில் வரும் முடிவில் இருக்கிறது சி.பி.ஐ.! அதாவது, விதிமுறைகள் மீறப்பட்டு, அதன்மூலம் மிதமிஞ்சிய ஆதாயம் அடைந்தவர்கள் அந்த ஆதாயத்தை எப்படியெல்லாம் கைமாற்றினார்கள் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி முடித்துவிடும் மூடில் சி.பி.ஐ. இருக்கிறது!

இதற்கு, 'ஜெயின் சகோதரர்கள் மூலமாகத்தான் பல தகவல்கள் கிடைக்கும்’ என்று சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது. ஸ்பெக்ட்ரம் பணப் போக்குவரத்தைத் தீர்மானித்தவர்கள், இந்த ஜெயின் சகோதரர்களே. டெல்லியில் இருந்திருக்கிறார் மகேஷ் ஜெயின். சென்னையில் இருந்திருக்கிறார் அவரது சகோதரர் தவுலத் ஜெயின். இன்னொரு சகோதரரான ராஜேஷ் ஜெயின் ஹாங்காங்கில் இருக்கிறார். ராஜேஷ் தனது இருப்பிடமாக துபாயைச் சொன்னாலும் கணக்கு வழக்குகள் பெரும்பாலும் ஹாங்காங்கில்தான் இருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் பணப் பரிவர்த்தனைகள் இவர்கள் மூலமாக நடந்துள்ளதாக சி.பி.ஐ. நம்புகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறு செய்தவர்களை முழுமையாக வளைக்க வேண்டுமானால், மகேஷ் ஜெயினை விசாரித்து முடித்தாக வேண்டும். ராஜேஷ் ஜெயினை இந்தியாவுக்கு அழைத்து வருவதற் கான வேலைகளும் தொடங்கிவிட்டன.

இந்த சகோதரர்களை வளைப்பது சாதாரண விஷயமும் அல்ல. இவர்கள் இதைப்போல எத்தனையோ பெரிய பண முதலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களைப் பிடித்தால்... இன்னும் வேறு பூதங்களும் கிளம்பலாம்!'' என்கிறார்கள். அதிலும், சென்னையில் இருக்கும் ஜெயின் சகோதரர் இன்று நேற்றைக்கு அரசியலோடு தொடர்பு கொண்டவர் அல்ல... மத்தியில் பி.ஜே.பி. ஆண்ட காலம்தொட்டே இவர் மூலமாக தமிழக பெருந்தலைகள் பணத்தை நாடு கடத்தியதாக சி.பி.ஐ-வசம் தகவல் சிக்கியிருக்கிறதாம். எனவே, இந்த சென்னை ஜெயினை சி.பி.ஐ. நெருங்க நெருங்க... தமிழ்நாட்டின் வேறு பல தலைகளுக்கும் ஜுரம் காணத் தொடங்கிவிட்டதாகத் தகவல்!

மொத்தத்தில், ஹவாலா மனிதர்களின் சர்வ தேசத் தொடர்புகளையும் வைத்துப் பார்த்தால், ஆ.ராசாவும், சி.பி.ஐ. அதிகாரிகளும் பயப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது!

சி.பி.ஐ-யின் கேள்வி பதில் செஷனுக்கு வந்தபோது, மறக்காமல் தனது டாக்டர் ஒருவரை ஆ.ராசா அழைத்து வந்ததை சில அதிகாரிகள் காட்டுகிறார்கள். உள்ளே சி.பி.ஐ-யின் கிரில்லிங் நடந்துகொண்டிருந்த சமயம், இந்த டாக்டருடன் நாம் பேச முயன்றோம்.  'என் பெயர் குமார். நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன்’ என்று மட்டுமே சொன்னார்.

சி.பி.ஐ. அலுவலகத்தின் முதல் தளத்தில்தான் ஆ.ராசா மீதான விசாரணை நடந்தது. அருகில் இருந்த இன்னோர் அறையில் இந்த டாக்டர் இருந்தார். சில மணி நேரம் கழித்து, அதிகாரிகள் என்ன நினைத்தார்களோ... அந்த டாக்டரை வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்கள். மேலும், தனது வக்கீலாக ராஜேந்திரன் என்பவரையும் பெரம்பலூரில் இருந்து ஆ.ராசா அழைத்து வந்திருந்தார். அவரும் டாக்டருடன் காத்திருந்தார். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் துரைசாமி, அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், எம்.எல்.ஏ-வான ராஜ்குமார் என்று பெரம்பலூர் வட்டாரத்தில் இருந்து பலரும் குவிந்து, சி.பி.ஐ. அலுவலகத்தின் முன்பாகத் திரண்டிருந்தனர். ''ஆ.ராசாவின் பாதுகாப்புக்காக வந்திருக்கோம்...'' என்று அதில் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்!

நன்றி ஜுனியர் விகடன்

புதன், 29 டிசம்பர், 2010

விடைபெறுகிறது ஊழல்களின் ஆண்டு

விடைபெறுகிறது ஊழல்களின் ஆண்டு!
புத்தாண்டு அன்று ‘தினத்தந்தி’ வெளியிடும் முதல்பக்க கருத்துப்படத்தை கடந்துவராத தமிழர்கள் இருக்கமுடியாது. முடிந்துபோன ஆண்டை அடையாளப்படுத்தும்விதமாக, நீளமாக தாடி வளர்த்த கிழவர் ஒருவர் விடைபெறுவார். இளமைத் தோற்றத்தோடு புத்தாண்டு வரும். ‘புத்தாண்டு பிறந்தது’ என்று அந்தக் கருத்துப்படம் அறிவிக்கும்.

2010ம் ஆண்டு என்ற கிழவரை நினைத்துப் பார்க்கையில் சராசரி இந்தியன் மனதில் ஆவேசம் பொங்கக்கூடும். இந்த ஆண்டில் ஊழல்களைத் தவிர வேறு எதுவும் இந்தியாவில் நிகழவில்லையோ எனும் அளவுக்கு ஏகப்பட்ட ஊழல் செய்திகள். அதைவிட வேதனையான விஷயம்... இந்த ஊழல்கள் நியாயப்படுத்தப்பட்ட விதம்!

காமன்வெல்த் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது சுரேஷ் கல்மாடி, சத்தியவந்தன் போல ஆவேசமாகப் பேசினார். 10 ரூபாய் மதிப்புள்ள பொருளை விலைகொடுத்து வாங்காமல், 25 ரூபாய் வாடகைக்கு எடுக்கும் கொடூரமான ஊழல் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். ஊழல் நிகழ்ந்து பல மாதங்கள் கழித்து, எல்லா ரெக்கார்டுகளையும் எங்காவது பாதுகாப்பாக ஒளித்துவைக்கும் அளவுக்கு அவருக்கு கால அவகாசம் கொடுத்துவிட்டு, சி.பி.ஐ. இப்போது அவர் வீட்டில் ரெய்டு நடத்துவதும், எங்கும் நடக்காத கேலிக்கூத்து!
  
கர்நாடகாவில் எடியூரப்பா மீது நில ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. தன் மகன்களுக்கும் உறவினர்களுக்கும் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தபோது எடியூரப்பா கூனிக் குறுகி நிற்கவில்லை. ‘வேறு யாரும் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன்?’ என்று கேட்டார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எல்லாக் கட்சிகளின் முதல்வர்களும் இப்படிச் செய்தது வரிசையாக வெளியில் வந்தது. எடியூரப்பாவை பதவிநீக்கம் செய்ய பி.ஜே.பி. மேலிடம் முயற்சி செய்தபோது, தனது ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சியையே உடைக்கப்போவதாக அவர் மிரட்டினார். வேறு வழியின்றி மேலிடம் அவரிடம் மண்டியிட்டு, அவரைப் பதவியில் தொடர அனுமதித்தது நடந்தது. ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலை ஒழிக்கப் போவதாகக் கிளம்பிய எடியூரப்பா என்ற ‘மிஸ்டர் க்ளீன்’ மனிதர் இப்படி ஊழல் கறையோடு அம்பலமானது இந்த ஆண்டில்தான்!

இதேபோன்ற ஒரு நில ஒதுக்கீட்டு ஊழலில் தமிழக அரசும் சிக்கியது. ஸ்பெக்ட்ரம் பூதாகரத்தில் இந்தச் சின்ன ஊழல் அமுங்கிவிட்டது. அமைச்சர்களின் உறவினர்கள், ‘நக்கீரன்’ காமராஜ் போன்ற பத்திரிகையாளர்கள், ஜாஃபர் சேட் போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி முதல் வீட்டு வேலை செய்பவர்கள் வரை பலருக்கும் வீட்டுவசதி வாரிய மனைகள், மிகக்குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது முதல்வர் சொன்னார்... ‘தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என்பது ரியல் எஸ்டேட் நிறுவனம் அல்ல; வெறும் லாபத்தை மட்டுமே பார்ப்பதற்கு!’

மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தருவதற்காக கட்டப்பட்ட வீடுகளை ராணுவ உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் தங்கள் உறவினர்களுக்கு ஒதுக்கிக்கொண்ட விவகாரம் வெடித்தது. குற்றவாளிக் கூண்டில் நின்ற முதல்வர் அசோக் சவான், அம்பலப்பட்டு நின்றபோதும் கூசாமல் சொன்னார்... ‘நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து வெளியில் வருவேன்!’ காங்கிரஸ் ரொம்பவே கூச்சப்பட்டு அவரை பதவியிலிருந்து நீக்கியது.

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது. கார்ப்பொரேட் தரகர் நீரா ராடியாவின் டேப் பேச்சுகள் அம்பலமானதும் பல தலைவர்கள் சந்திக்கு வந்தார்கள். நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி எல்லா விரல்களும் நீண்டதும் அவர் ராஜினாமா செய்தார். ‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கேட்க, ‘பொதுக் கணக்குக்குழு விசாரணைக்குத் தயார்’ என பிரதமர் பிடிவாதம் பிடித்தார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுசாக நடக்கவில்லை. காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக சோனியா கூச்சமற்றுப் பேசியது தலைப்புச் செய்தியானது. ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகள் கேலிக்கூத்தாக்குவதாக’ பிரதமரால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பேசமுடிகிறது.

இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் விவகாரத்தில் எல்லாக் கட்சிகளின் ஆட்சியாளர்களுமாகச் சேர்ந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக ஒரு விவகாரம் எழுந்து, ஸ்பெக்ட்ரம் அலையில் அது காணாமலே போய்விட்டது.


மொத்தமாக இந்த ஆண்டு வெளியான ஊழல்களில் புழங்கிய பணம் மொத்தமும் முறையான கணக்குக்கு வந்து, அவை முறையாகவும் செலவிடப்பட்டால், இந்தியாவை விட சொர்க்க பூமி உலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது என்பது நிச்சயம். கடந்த 87ம் ஆண்டு போபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, 64 கோடி ரூபாய் ஊழல் என்பது இந்தியாவையே பதற வைத்தது. நாடாளுமன்றம் 45 நாட்கள் ஸ்தம்பித்தபிறகு கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அதோடு ஒப்பிடும்போது இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 23 நாட்கள்தான் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. ‘இன்னும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மிச்சம் இருக்கிறது’ என்கின்றன எதிர்க்கட்சிகள்.

போபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. ராஜீவ் காந்தி கிட்டத்தட்ட ஒரு திருடர் போல சித்தரிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கொந்தளித்தபோது நாடே அவர்கள் பின்னால் நின்றது. ஊழல் கறை படிந்த ராஜீவ் காந்தியின் காங்கிரஸை வி.பி.சிங் என்ற அப்பழுக்கற்ற தலைவர் தேர்தலில் தோற்கடிக்க முடிந்தது. இப்போதும் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன; ஏராளமான தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஊழலை எதிர்த்துப் பேசும்போது நமக்கெல்லாம் எந்த உணர்வுமே தோன்றுவதில்லை. காரணம், இவர்களில் யாரையும் அப்பழுக்கற்றவராக நம்மால் பார்க்க முடிவதில்லை. ஒரு தலைமுறை காலத்துக்குள்ளாகவே, அரசியல் என்பது சேவைக்கான துறையாக இல்லாமல் பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாறிப்போன அவலம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதைய அரசியலில் இரண்டுவிதமான தலைவர்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. ஊழல் செய்பவர்கள் ஒரு ரகம்; அதிகாரப் பதவிகள் கிடைக்காததால் ஊழல் செய்யமுடியாது போனவர்கள் இன்னொரு ரகம். இதனால்தான் யாராவது அடுத்தவரை நோக்கி விரலைச் சுட்டி ஊழல் குற்றச்சாட்டு கிளப்பினால், மீதி நான்கு விரல்கள் அவரையே சுட்டுவதைப் பார்க்க மட்டுமே தோன்றுகிறது.

64 கோடி ரூபாயே பெரிதாகத் தெரிந்த இந்தியாவில், 23 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் வளர்ச்சி கண்டிருக்கிறது. வளர்ச்சி என்பதே காலமாற்றங்களின் நியதி என்பதால், புத்தாண்டில் எந்த அளவுக்கு ஊழல் வளர்ச்சி பெறுமோ என்கிற பயம் இயற்கையாக எழுகிறது.

ஏழை & பணக்காரன் என்பதைத் தாண்டி இன்றைய அரசியலும், அதில் நிலவும் ஊழல்களும் வேறுவிதமான வர்க்கப் பிரிவினையை தவிர்க்க முடியாமல் இந்திய சமூகத்தில் நுழைத்திருக்கிறது. அது, எல்லா சட்டங்களையும் விதிகளையும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப வளைக்கும் அதிகார வர்க்கம்; சட்டத்தின் சிக்கலான விதிகளில் நசுங்கி வாழ்க்கையைத் தொலைக்கும் எளிய வர்க்கம்.

வீட்டு வசதி வாரியம் தனக்கு ஒதுக்கிய வீட்டை இடித்து மாற்றிக் கட்டிய அரக்கோணம் எம்.எல்.ஏ. பூவை மூர்த்தியை அந்த வாரியம் எதுவும் செய்யவில்லை; திருட்டு நடந்துவிடுமோ என்ற பயத்தில் ஓட்டைக் கதவுக்கு எக்ஸ்ட்ரா பாதுகாப்பு செய்தவருக்கு ‘வீட்டை காலி செய்யுமாறு’ நோட்டீஸ் வருகிறது. 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடிக்கிறார்கள். பத்திரிகையில் போட்டோ போட்டு உறவுகள், நட்பு வட்டாரத்தில் அந்தக் குடும்பத்தை கூனிக் குறுகச் செய்கிறார்கள். வேலை போகிறது. மரியாதை போகிறது. பூஜ்ஜியங்களை எண்ணிப் பார்த்தாலே மயக்கம் வருகிற அளவுக்கு ஊழலில் திளைக்கும் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூட யோசிக்கிறார்கள்; துளியும் குற்ற உணர்வு இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்; விசாரணை என்ற ஆயுதம்கூட அவர்கள் முன்னால் மண்டியிடுகிறது. அடுத்த தேர்தலில் நின்று அவர்களால் ஜெயிக்கவும் முடிவது இன்னும் வேதனை! பஸ்ஸில் கூட்ட நெரிசலில் செயின் திருடும் ஆசாமி கையும் களவுமாக மாட்டினால், அவன் திருடிய நகைகளை போலீஸ் ஸ்டேஷன் டேபிளில் வரிசையாகப் பரப்பி, அத்தனை அதிகாரிகளும் அவன்னோடு நின்று பெருமையாக போஸ் கொடுக்கிறார்கள். ஊழல் செய்த எந்த அரசியல் தலைவருக்காவது இப்படி நேர்ந்திருக்கிறதா?

ஊழலை விட ஆபத்தானது, அதைப் பற்றிய எந்த சொரணையும் யாருக்கும் இல்லாமல் போவது! தப்பானவர்களே ஊழலைப் பற்றிப் பேசுவதும், அதை ஒரு சமூகக் கொடுமையாகப் பார்க்காமல் சாதாரண செய்தியாகவே இன்றைய ஊடகங்கள் சித்தரிப்பதும்தான் ஆபத்தான விஷயங்கள். டெண்டுல்கர் ஐம்பதாவது டெஸ்ட் செஞ்சுரி அடித்ததையும், உ.பி.யி. நிகழ்ந்த 2 லட்சம் கோடி ரூபாய் ரேஷன் ஊழலையும் ஒரேமாதிரி பார்ப்பதற்கு நாம் மீடியாக்களால் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம்.

இந்த மனநிலையை துடைத்து அழித்துவிட்டு புத்தாண்டை எதிர்கொள்வோம். இந்தப் புதிய ஆண்டாவது ஊழல்களற்ற ஆண்டாக இந்தியாவுக்கு இருக்க வேண்டுவோம்.   
unarchitamilan manikandan

செவ்வாய், 28 டிசம்பர், 2010

துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்தியா இரகசியத் திட்டம்!

துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்தியா இரகசியத் திட்டம்!இந்திய அரசின் 'ரா' உளவுத்துறை தமிழீழ அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

1986ஆம் ஆண்டில் 'ரா' உளவுத்துறை விடுதலைப் புலிகளுக்கு எதிராக டெலோ, ஈபிஆர்.எல்.எஃப் ஆகிய இயக்கங்களை தூண்டிவிட்டும் ஏராளமான ஆயுதங்களைத் தந்தும் மோதல் ஏற்படவைத்தது. அந்த மோதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றிபெற்றதோடு மட்டுமல்ல இந்திய உளவுத்துறையால் துரோக இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த ஆயுதங்களையும் பறித்தெடுத்தது. திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில் 'ரா' உளவுத்துறை என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்தது.

ராஜீவ்-செயவர்த்தனா உடன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு புதிய இயக்கம் ஒன்றினை 'ரா' உளவுத்துறை கட்டமைத்தது. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் ஆகிய துரோகக் குழுக்களை ஒன்றிணைத்து மூன்று நட்சத்திர அமைப்பு என்ற பெயரால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிறகு இந்த அமைப்பின் பெயர் ஈ.என்.டிஎல்.எஃப் என்று மாற்றப்பட்டது. ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்திய அமைதிப்படையின் முகாம்களுக்கு அருகே தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டு ஆள்காட்டும் வேலையில் ஈடுபட்டார்கள். விடுதலைப்புலிகளின் குடும்பத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை இந்தியப்படைக்கு அடையாளம் காட்டும் வேலையை இவர்கள் செய்தார்கள். இதன் விளைவாக பலர் உயிரிழந்தார்கள். ஏராளமானவர்கள் சித்திரவதைகள், சிறைவாசம் போன்ற கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மக்களின் பேராதரவோடு இந்திய அமைதிப்படையோடு போராடி அதை தங்கள் மண்ணிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினார்கள். அமைதிப்படை வெளியேறும்போதே அவர்களுடன் சேர்ந்து துரோகக் கும்பலும் இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டது.

இக்குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா அதிலிருந்து விலகி தனது தலைமையில் மற்றொரு ஒட்டுக்குழுவை அமைத்துக்கொண்டு சிங்கள ஆட்சியாளர்களுடன் ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவியைப் பெற்றார்.

இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்ட பிறகு அதனுடன் சேர்ந்து தப்பி ஓடி இந்தியாவில் தலைமறைவாக இருந்த வடக்கு-கிழக்கு மாநிலத்தின் முன்னாள் பொம்மை முதலமைச்சரான வரதராஜபெருமாள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு தைரியமாக இலங்கை திரும்பினார்.

கடந்த நவம்பர் 13, 14 தேதிகளில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரகசியக் கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள். பிரிட்டன் போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இருநாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இவர்கள் கலந்துரையாடியதுடன் இந்திய அரசிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்கள்.

வட-கிழக்கு மாநிலத்திற்கு சுயாட்சி உரிமை அளிக்கவேண்டும் என்று கேட்டுப் போராடவுள்ளதாகவும் இதற்கான பிரகடனம் ஒன்றினையும் விரைவில் வெளியிடப்போவதாகவும் அதற்கு இந்திய அரசு முழுமையான ஆதரவு தரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளும் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் தங்களுக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு பண ஆசை உட்பட பல்வேறு ஆசைகளைக் காட்டி அவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்குள் நுழைவதற்கு யாரையும் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. ஆனால் இந்த துரோகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்விதமான தங்கு தடையுமில்லாமல் பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஆள்சேர்க்கும் வேலைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக இவர்கள் வசம் பெருந்தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய 'ரா' உளவுத்துறையே இவர்களைப் பின்னின்று இயக்குவதாகக் கூறப்படுகிறது.

தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக இந்திய அரசு இந்த வேலைகளில் ஈடுபடுவதன் பின்னணி என்ன? விடுதலைப்புலிகள் தலைமையில் ஈழத்தமிழர்கள் போராடியபோது அந்தப் போராட்டத்தை ஆதரிக்காததோடு அதை முறியடிக்க, சிங்கள இராணுவத்திற்கு ஆயுத உதவிஉட்பட அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்ததது. ஆனால் இப்போது மாநில சுயாட்சி கேட்டுப் போராட ஈழத்தமிழர்களைத் தூண்டிவிடுகிறது.

சீனாவின் இறுக்கமான பிடியில் சிக்கியிருக்கும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவரவும் விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சியைத் தடுத்து நிறுத்தி தமிழர் பகுதியை தனது தீவிரக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் இந்தத் துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஈழத்தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட துரோகக் கும்பலை இந்திய அரசு மீண்டும் மீண்டும் நம்புவதும், பயன்படுத்துவதும் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை.

இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்! - பழ. நெடுமாறன்

இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்!
- பழ. நெடுமாறன்
தமிழ்நாட்டில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத் திலும் அறியாமையிலும் இந்தியா உலகத் தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வரு மானம் பெறுகின்றன. சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைக ளாகும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத் தைப் பெருக்குவதற்கான வழிவகை களை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெய ரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச் சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டி ருக்கிறது.

இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங் களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? - என் பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.


கல்வி
காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. நல்ல குடிமக்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. அரசு நடத்தும் பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படா மல் உள்ளன. அரசு நடத்தும் 69 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் 42 கல்லூரிகளில் முதல்வர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

பிறமாநிலங்களில் மெட்ரிக் குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.

400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்ட மைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.

புற்றீசல் போல தனியார் பள்ளி களும், பொறியியல் மற்றும் கல்லூரி களும் பெருகக் காரணம் என்ன? குறிப் பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப் பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகள், கல்லூரி கள் ஆகியவற்றிலும் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், மாணவர் களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.


விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்
1972ஆம் ஆண்டில் மின்கட்ட ணத்தில் யூனிட்டுக்கு அரை பைசா குறைக்கும்படி போராடிய விவசாயிகளின் மீது கடும் அடக்குமுறையை கருணாநிதி அரசு ஏவிவிட்டது. 21 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு கருணாநிதி மீண்டும் பதவிக்கு 1990ஆம் ஆண்டில் வந்தார். வந்தவுடன் விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற் காக அவர்களே கேட்காத சலுகையை அளித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட் பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின் திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டு களுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது தான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப் படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித் துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.

மின்மோட்டார்களை வாங்குவதற் காக அரசு அறிவித்துள்ள டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பம்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பகுதிவாரியாகப் பிரித்து 500 பம்புசெட்டு கள் வீதம் டெண்டர் விடவேண்டும். இதன் மூலம் பல உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டு மென்று உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.


இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்
தமிழ்நாட்டில் 2 கோடியே 80 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப் பட்டதில் பெறப்பட்ட கமிசன் எவ்வளவு?

சுமார் 2500 ரூபாய் பெறுமான தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொடுத்தால் பெறுபவர்களுக்கு பய னில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பிய வற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத் தைச் செயல்படவிடாமல் முடக்கி விட்டார்கள்.

ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாக வேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங் களுக்கு போகிறது. மக்கள் வரிப் பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவச மாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைவது முதலமைச்சரின் குடும்ப மாகும். இதைவிடப் பன்படங்கு அதிக மான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது.


இலவச கேஸ் அடுப்பு
11 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 220 கோடி ரூபாய் செல வில் இலவசக் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதற்குரிய கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் ஏற்கனவே உள்ள பயனாளிகளும் இதனால் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். திட்டமிடுவதைச் சரியாகச் செய்யாததால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.


இலவச மருத்துவக் காப்பீடு
தமிழக அரசின் இந்தத் திட்டத் திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்து வமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி களோடு இணைந்த பெரிய மருத்துவ மனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன் படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் கள். இந்த தனியார் மருத்துவமனை களுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண் டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளிலிருந்து அது கிடைக்காது.

கடந்த ஆண்டு 1.53 இலட்சம் பேர் இந்த இலவச மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் விளைவாக பயன் பெற்றிருக்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்குச் சிகிச்சை தர எல்லாவிதமான வசதிகள் இருந்தும். அவைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கையாளும் முறையில் திருப்தியில்லை என மக்களும் கருதுகிறார்கள்.


தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப் பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதி யம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட் டத்தின் நோக்கமாகும். ஆனால் விவ சாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழை களுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக் கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறை யாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் என்ற பெயரில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு விளை நிலங்கள் எடுக்கப் படுகின்றன. 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மண்டலத்தில் தொடங்கப்படும் தொழில் களுக்கு இறக்குமதி ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியி லிருந்து விலக்கு, விற்பனைவரியிலிருந்து விலக்கு, ஈட்டும் லாபத்தின் மீது 15 ஆண்டுகளுக்கு வரிகிடையாது என்பது போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படு கின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் இந்த சிறப்புப் பொருளாதார நிறுவனங்களை அமைத்து அதில் உள்ள இடங்களைத் தொழில் நிறுவனங் களுக்கு விற்கலாம்; குத்தகைக்குக் கொடுக்கலாம், அதுமட்டுமல்ல, இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட சிறு நகரங்களை அமைத்துக்கொள்ளலாம்.

விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அரசினால் பறித்தெடுக்கப் படுகிற விளைநிலங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. பிற்காலத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விற்பனைசெய்யலாம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தனியாரைக் கொழுக்கச் செய்வதற்காக விவசாயி களை வயிற்றில் அடிக்கும் வேலையை அரசு செய்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனுமதிப்பிற்கான பரிசீலனையில் உள்ளன. இவ்வளவு மண்டலங்களுக்கும் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த ஆரம் பித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். உணவு உற்பத்தி குறையும், விவசாயிகள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் படுவார்கள்.

தமிழகத்தில் விவசாயம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 1994-1995ஆம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராக விளைநிலங்களின் பரப்பளவு தமிழகத் தில் இருந்தது. ஆனால் 10 ஆண்டு களில் அதாவது 2005-2006இல் 50.6 இலட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 7 இலட்சம் ஹெக்டேர் அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள விளை நிலம் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி போன்ற மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத் தால் அந்த மாவட்டங்களும் மக்களும் வளர்ச்சியடைவார்கள். அந்த மாவட்டங் களில் பெரும்பாலும் தரிசு நிலங்கள்தான் அதிகம். ஆனால் தொழிலதிபர்கள் அங்கு தொழில்நடத்த விரும்பவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பு கிறார்கள். அதற்குத் தமிழக அரசு ஒத்துழைக்கிறது.

எடுத்துக்காட்டாக கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் 8 அனல் மின்நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதற் காக இந்தப் பகுதியில் கடற்கரை யோரத்தில் பல்லாயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்களின் தேவைக்கு அதிக மாக பன்மடங்கு நிலங்கள் விவசாயி களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்கள் அமைக்கப் பட்டதுபோக மீதமுள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.


மது மயக்கம்
1967ஆம் ஆண்டுக்கு முன் முழு மையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி யில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போனார்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாழும் பதின்வயது மாண வர்களில் 3ல் ஒரு பங்கினர். பள்ளிப் பருவத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தி னர் மதுகுடிப்பதாகவும் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாணவரும் மதுகுடிப்பதற்காக ஆண்டுக்கு 3,500

லிருந்து 4,500 வரை செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கள் கணவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மையங் களுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வருகிற கொடுமையும் நடைபெறுகிறது.

கிராமப்பகுதிகளிலும் மதுக்கலாச் சாரம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியுடன் சேர்த்து குவார்ட்டர் கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளில் உருவாகி யுள்ளது. தமிழக அரசு திறந்துள்ள 6000க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடை களின் மூலம் ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மது உற்பத்திச் சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 36,000 கோடிலிட்டர் மது உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் மது விற்பனை ரூ.90 கோடி யாகவும், அந்த வாரத்தில் ரூபாய் 400 கோடி விற்பனையானதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசுக்கு மது விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசின் மொத்த வருவாயில் இது 25சதவீதம் ஆகவும் இருக்கலாம். இந்தப் பணம் யாரிடமிருந்து கிடைக்கிறது? மக்களின் மடியிலிருந்து இந்தப் பணம் திருடப்படுகிறது. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை குடிப்ப தற்காகச் செலவழிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங் கள் பட்டினியாலும் வறுமையாலும் வாடுகின்றன. இன்னும் பலவகைகளிலும் குடிப்பழக்கம் சமூகத்தைச் சீரழிக்கிறது. ஏராளமான தற்கொலைகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. எய்ட்ஸ் நோய், காசநோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் நிறையத் தொடர்புண்டு, சாலை விபத்து சாவுகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடும்ப சச்சரவுகளுக்கும் சிலவேளைகளில் கொலைகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடிப்பழக்கத் தால் வேலை இழப்பு, உற்பத்திப் பாதிப்பு, உயிரிழப்பு, பொருள் இழப்பு மூலம் ஏற்படும் நட்டம் அதிகம். மொத்தத்தில் சமூக அமைதியை மது கெடுக்கிறது.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் இலவசங்களை தமிழக அரசு வாரித் தருகிறது. ஆனால் அதே வேளையில் மக்கள் மடியிலிருக் கிற பணத்தை அரசு சூறையாடுகிறது என்பதுதான் உண்மையாகும்.


சுமங்கலித் திட்டம்
திருமணமாகாத இளம் பெண் களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப் பட்ட திட்டம்தான் சுமங்கலித் திட்ட மாகும். தொழிற்சாலைகளில் 3 ஆண்டு கள் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும். முடிவில் இவர் களுக்கு ஒரு பெருந்தொகை அளிக்கப் படும். இவர்களின் திருமணத்திற்கு அது உதவும் எனக் கவர்ச்சிகரமான திட்டமாக இது வர்ணிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறை என்ன? கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது ரூ.20 ஊதியமாகத் தரப்படும். சாப்பாடு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ.10 கழித்துக்கொள்ளப்படும். 3 வருடங்களில் 1 நாள் விடுமுறை எடுத்தால்கூட இவர் கள் கூடுதலாக ஒரு மாதம் உழைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 3ஆம் ஆண்டின் முடிவில் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிற கொடுமையும் நடைபெறுகிறது. தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் துன் பங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் குறித்து புகார் செய்தாலும் அவர்கள் வேலைபறிபோகும். எனவே கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை.


வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
2002ஆம் ஆண்டு முதல் தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களி னால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயி களுக்கு நட்டஈடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு அளிக்கிறது.

ஆனால் நடைமுறையில் இத்திட் டத்தினால் பயன்பெறும் விவசாயிகள் மிகமிகக் குறைவாகும். இத்திட்டம் வட் டம், குறுவட்டம் அளவில் செயல்படுத் தப்படுகிறது. ஒரு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கை உற்பாதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அந்த வட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் பாதிப்பில்லை என்று சொன்னால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது. எனவே வட்டம், குறுவட்டம் என்ற அளவில் இத்திட்டம் செயற்படுத்தப் படுவதற்குப் பதில் கிராம அளவில் செயற்படுத்தப்பட்டால் ஒழிய இத்திட் டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிபெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?

பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ கத்தில் பல தொழில்களைத் தொடங்கி நமது வளங்களையும் நமது தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி யைத் தமிழகத்தின் வளர்ச்சியாக ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டுவது - மக்களை மேலும் மேலும் வறியவர்களாக ஆக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இலவசத் திட்டங்களின் விளை வாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்தி ருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக இலவசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது அரசு. இதனால் மக்களில் ஒருபகுதியினர் பயன்பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அரசின் நிதிநிலைமை சீர்கேடடைந் திருக்கிறது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.1,00,876 கோடி யாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

தொலைநோக்குத் திட்டங் களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப் படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாக வும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளி விடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய் கிற வகையில் திட்டங்கள் தீட்டப் படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறை வேற்றினால் அவர்கள் சுய சார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச் சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்ச மும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாகத் தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங் களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர் களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.

இலவசம் என்ற பெயரில் வகுக் கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்ற பொருட்களை உற் பத்தி செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றன. எடுத் துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புபவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.

ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி 8-12-10

திங்கள், 27 டிசம்பர், 2010

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் தலையிடவும் வேண்டாம்! எங்களைக் கொலையிடவும் வேண்டாம்!:- திருப்பி அடிப்பேன்! சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 04.

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் தலையிடவும் வேண்டாம்! எங்களைக் கொலையிடவும் வேண்டாம்!:- திருப்பி அடிப்பேன்! சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 04.

"நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்..." - "நான் தமிழகத்து நடேசன் பேசுகிறேன்..." எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும். வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், "தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே... அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்சினைகள் வருமா?" - தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.

"நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்... பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!" எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.
"வா... வா..." என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. "இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது..." எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!
இதுபோல் ஒன்றா... இரண்டா... ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், 'நிச்சயம் வெல்வோம்!' என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, 'சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!' என உறுதியோடு சொன்ன குரல்கள்!
உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?
தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்... மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச்சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?
"ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?" - அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.
ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, 'இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்... தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்' என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது... ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?
மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே... இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே... ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்?
'நாங்கள்தான் திரட்டவில்லை... நீ எங்கே போனாய்?' என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர்களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும், பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.
இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, 'நாம் தமிழர்' அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல... தொடரப்பட்டது. ஐயா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். 'என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!' என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக ஐயாவின் வழியில் பின்தொடர்கிறோம்.
ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர்களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.
ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க... தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, 'இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சயமாகத் தலையிடுவேன்!' எனச் சொல்லி இருக்கிறாராம்.
வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்... 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்களா?
ராகுல் காந்தி அவர்களே.... நீங்கள் தலையிடவும் வேண்டாம்... எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.
தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றியவனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்?
ராகுல்காந்தி அவர்களே... தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக்கிறீர்கள்... 'மது குடிப்பது தவறு'!
அப்படியானால்... இரத்தம் குடிப்பது?!
திருப்பி அடிப்பேன்....
unarchitamilan manikandan

சனி, 25 டிசம்பர், 2010

தேர்தல் நேரத்தில் ஆ.ராசா வேண்டாம்!

தேர்தல் நேரத்தில் ஆ.ராசா வேண்டாம்! PDF அச்சிடுக மின்-அஞ்சல்
அப்பாவை நெருக்கும் அண்ணன் - தம்பி
ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல்!
த்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி மாநில மந்திரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்க... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேச்சாக எழுந்தது. ''இப்படியே போனால் தி.மு.க. எத்தனை ஸீட் ஜெயிக்கும்?'' என்று ஒரு கிடுக்கிப்பிடிக் கேள்வியை அழகிரி எழுப்பினாராம். ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொல்ல... ''இவ்வளவு ஸீட்டெல்லாம் வரவே வராது. மிகமிக மோசமா சொற்ப இடங்கள்தான் வரும்!'' என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய கணக்கு, வெளியில் சொல்ல முடியாதது!

அழகிரி - ஸ்டாலின் தரப்பு வைக்கும் ஒற்றை வரிக் கோரிக்கை, ''சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ளும்போது ஆ.ராசா நம்முடைய கட்சியில் இருக்கக் கூடாது'' என்பதுதான். இந்தத் தகவலை இவர்களது ஆதரவாளர்கள் நாலா பக்கமும் பரப்புகிறார்கள். எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாக முடிவு களை நினைத்தாலும், அதை வெளிப்படையாக தலைமைக்குச் சொல்ல மாட்டார் ஸ்டாலின். கருணாநிதியே கேட்டால்தான் சொல்வார். ஆனால், அழகிரி அதற்கு நேர் மாறானவர்.
நவம்பர் முதல் வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் வெடித்தபோதே முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி, ''ஆ.ராசாவை கொஞ்ச நாளைக்கு மந்திரி பதவியில் இருந்து நீக்குங்க! இந்தப் பிரச்னை அப்படியே அமுங்கிப்போகும்!'' என்று கறாராக தீர்ப்பைச் சொன்னாராம் அழகிரி. இது கனிமொழிக்கு தெரிய... அவர், அழகிரியிடம் பேசி இருக்கிறார். ''பூங்கோதையை விலக்கி வெச்சுட்டு அவர் குற்றமற்ற வர்னு நிரூபிச்ச பிறகு மந்திரி பதவி கொடுத்தோம்ல... அதை மாதிரி சில மாதங்கள் ராசாவும் இருக்கட்டுமே...'' என்று பதில் அளித்திருக்கிறார் அழகிரி. இதற்கு மறுநாள் மதுரைக்கு ஸ்டாலினும், செல்வியும் சென்று அழகிரி மகன் திருமணத்தின் பந்தலைப் பார்வையிடப் போனார்கள்.
அப்போது அழகிரியும் ஸ்டாலினும் மனம்விட்டுப் பேசினார்கள். ஆ.ராசா விஷயம் பற்றி பேச்சு வந்தபோது, ''ஏதாவது பிரச்னை பண்ண வேண்டியது. நம்ம குடும்பத்திலேயே யாரையாவது காக்கா பிடிச்சுக்க வேண்டியது. இதுதான் பாதிப் பேரோட வழக்கமா இருக்கு'' என்று சொன்னார்களாம். அழகிரியும் ஸ்டாலினும் 'ஆ.ராசா மீது நடவ டிக்கை எடுத்தாக வேண்டும்’ என்று சொன்னாலும் அதைச் செய்ய முடியாத அளவுக்குத் தடையாக ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் இருந்தனர்.
ஸ்டாலினுடன் அழகிரி அதிகமாக முட்டிக்கொண்டு இருந்தபோதும், தயாநிதி குடும்பத்துடன் மோதல் ஏற்பட்டபோதும், ராஜாத்திஅம்மாள் வீட்டினருடன்தான் அழகிரி அதிக நெருக்கம் காட்டினார். கனிமொழிக்கு எம்.பி. பதவியைக் கொடுத்து, 'இனி நீயே டெல்லியைக் கவனிக்க வேண்டும்’ என்று முதலில் முடுக்கிவிட்டதும் அழகிரிதான். ஆனால், ஆ.ராசா விஷயத்தில்தான் இவர்களுக்குள் மோதல் துளிர்த்தது. இதற்கு இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள்.
''தயாநிதி மாறன் - அழகிரி நெருக்கம் அதிகமானதால், கனிமொழி மெள்ள விலக ஆரம்பித்தார்'' என்று ஒரு தரப்பு சொல்கிறது. இன்னொரு தரப்பினர், ''சமீப காலமாக ராஜாத்தி அம்மாள் தன் மகள் கனிமொழியை தலைவருக்கு அடுத்து அரசியல் வாரிசாகக் கொண்டுவரும் காரியங்களைக் கமுக்கமாகப் பார்த்து வந்தார். சில மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி, 'கனியை வெச்சு மீட்டிங் போடுங்க... வேலை வாய்ப்பு முகாம் நடத்துங்க’ என்று கட்டாயப்படுத்தினார். குறிப்பிட்ட சாதிச் சங்கத்தினரைத் தொடர்ச்சியாக அழைத்துப் பேசினார். அவரே காமராஜர் பிறந்த தினத்தன்று, அவரது நினைவகத்துக்குச் சென்று மாலை மரியாதை செலுத்தினார். இவை எதுவும் அழகிரி - ஸ்டாலின் தரப்புக்குப் பிடிக்கவில்லை.
கனிமொழிக்கு எம்.பி. பதவி கேட்கும்போது, 'அவங்களுக்கு ஒரு செக்யூரிட்டி வேணாமா?’ என்று கேட்டார்கள். 'அதன் பிறகு மந்திரி பதவி... அதுவும் கேபினெட் பதவிதான் வேணும்னாங்க. இப்ப தலைமைப் பதவிக்கே அடி போடுறாங்களா...’ என்று கோபப்பட்டதன் விளைவே சி.ஐ.டி. காலனி வீட்டுடனான நட்பை அழகிரி முறித்துக்கொண்டார் என்கிறார்கள்.
ஆ.ராசாவுக்கு அளவுக்கு மீறி பச்சைக் கொடி காட்டுவதும் இந்தக் கோபத்துக்கு கூடுதல் காரணமாகி இருந்த நிலையில்தான்... நீரா ராடியா - அமைச்சர் பூங்கோதையின் டேப் வெளியானது. 'அழகிரியை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் ரக அரசியல்வாதி’ என்று பூங்கோதை சொன்னதாக வரும் டயலாக் குறித்து அழகிரி கோபம்கொண்டார். ''பூங்கோதை சொன்னது உங்களை அல்ல... பொதுவாக டெல்லி அரசியல்வாதிகளே இப்படிப்பட்டவர்கள்தான் என்ற அர்த்தத்திலே பூங்கோதை சொல்லி இருக்கிறார்'' என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் சொன்ன சமாதானத்தையும் அழகிரி ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாதிரியான விஷயங்கள் தினமும் வெளிவர வெளிவர, அழகிரியும் ஸ்டாலினும் அதிகப்படியான கோபமும் கொண்டார்களாம். ''ஆ.ராசாவைக் கைது செய்த பிறகே கட்சியைவிட்டு நீக்குவோம் என்றால், அதற்குள் கட்சி எல்லாவிதமான அவமானங்களையும் பட்டுவிடும். அதற்குப் பின்னால் பதில் சொல்ல நமக்கு வலிமையே இருக்காது...'' என்று இவர்கள் தரப்பு ஆட்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
ஆக, கருணாநிதியும் ரொம்பவே குழம்பிப்போய் இருக்கிறார்!

நன்றி ஜுனியர் விகடன்
 

மரங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

 மரங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின்
வருத்தம் புரியா உலகமிது;
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்
அதோ எங்கோ போகிறதே….!!

சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?

சொல்லி அடித்த பரம்பரைதான்
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!

யோ; மரம் கூட ஆயுதமானது
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!

றையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;

ருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!

லகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????

ல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!
———————————————————————–
வித்யாசாகர்

புதன், 22 டிசம்பர், 2010

பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. - ஐ.நா. மன்றுக்கு ஒரு ஈழமகன் அனுப்பிய கண்ணீர்மடல்

பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. - ஐ.நா. மன்றுக்கு ஒரு ஈழமகன் அனுப்பிய கண்ணீர்மடல் PDF அச்சிடுக மின்-அஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2010 16:20
1958ல் பிறந்த எனது தாயாரான குழந்தையை பிறந்த அன்று சிங்கள இனவாத இராணுவம் வைத்தியசாலையில் வைத்து சப்பாத்துக் காலால் தாக்கியது. போர்க்குற்ற தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவுக்கு ஈழமகன் ஒருவர் நீதிகேட்டு அனுப்பிய மடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த மோதலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவைக்கான பொறுப்புப் பற்றிய விடயங்கள் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருக்கும் பெரு மதிப்பிற்குரிய யஸ்மின் சூகா, மார்சுகி டருஸ்மன், ஸ்ரிவன் ரற்னர் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
நான் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். இலங்கையில் உயிராபத்து ஏற்பட்டிருந்த நிலையில் புலம்பெயர் நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகின்றேன்.
திருமதி சூகா அவர்களே! தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்த உங்கள் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் நம்புகின்றேன்
திரு.மார்சுகி அவர்களே! இந்தோனேசியக் குடியரசின் சட்டவாளர் நாயகமாக கடமையாற்றிய உங்கள் தகுதியையும், இந்தோனேசியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த உங்கள் அனுபவத்தையும், ஐ.நா.வின் இரு உண்மைகாண் செயற்பாட்டிலும் பங்குபற்றிய உங்கள் உண்மைத் தன்மையையும் நம்புகின்றேன்.
பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் அவர்களே! மிசிகன் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் சட்டத்துறைப் பேராசிரியராக இருக்கும் உங்கள் வழிகாட்டலை மதிக்கின்றேன்.
தாங்கள் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட் குழு மட்டுமே என்பதை நான் நன்கு அறிவேன். இக்குழு இலங்கையைக் கட்டுப்படுத்தாது. இந்தக் குழுவினர் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது என்பதையும் அறிவேன்.
இருந்தாலும் தமிழ்மக்களாகிய எங்களுக்கு முதன் முதலாக கிடைத்திருக்கும் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் ஆறுதலடைகின்றேன். எனக்குள் புதைந்திருக்கும் உண்மைகளையும் உள்ளக்குமுறலையும் தங்களுக்கு எப்படியும் முழுமையாக தெரிவித்துவிட வேண்டும் என்ற அவாவில் எங்கு தொடங்குவது எதில் முடிப்பது என்று தெரியாமல் எழுத முற்படுகின்றேன். இதில் தங்களிற்கு ஏதும் சிரமம் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.
தாங்கள் வழங்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றது என்பதை என்னால் முடிந்த அளவு தங்களுக்கு உறுதிப்படுத்த முற்படுகின்றேன். இலங்கை அரச இயந்திரம் மீது பல தசாப்தங்ளாக நம்பிக்கை இழந்திருக்கும் தமிழர்களாகிய நாம் ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.
அத்துடன் தாங்கள் நீதிக்காக வழங்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தை பல தசாப்தங்களாக எங்கள் மனங்களிலும் உடல்களிலும் தேசத்திலும் பதியப்பட்டிருக்கும் ஆழமான காயங்களை ஐ.நா சபைக்கு ஆத்மார்த்தமாக தெரிவிக்கும் அரிய வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய தாயார் 1958ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அன்றைய நாட்களில் இலங்கையில் இனக்கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதாவது சிங்கள இராணுவமும் அதனுடன் சேர்ந்த காடையர் கூட்டமும் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் சூறையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது சிங்கள அரசிற்கு எதிராக போராட்ட இயக்கங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் சிங்கள இனவாத இராணுவம் வைத்தியசாலையில் அன்று பிறந்திருந்த குழந்தையான எனது தாயாரை காலால் தாக்கியது. பச்சைக் குழந்தையை காலால் தாக்கிய கொடியவர்களைப் பற்றி நீங்கள் இதற்கு முதல் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று என் தாயாருக்கு நடந்த தாக்குதல் இலங்கையின் சிங்கள மேலாதிக்க மனோபாவத்திற்கும் மனிதநேயமற்ற தன்மைக்குமான குறியீடு ஆகும்.
இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களும் அரசியல் கல்வி சமூக, பொருளாதார ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவுமே இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டத்தில் புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கும் விசாரணைகளுக்கும் முதல் ஆயுதப்போராட்டத்தை தூண்டியவர்களுக்கும் உருவாக்கியவர்களுக்கும் என்ன தீர்ப்பினை மானிடத்தின் தலைமை மையமான ஐ.நா சபை வைத்திருக்கின்றது? என தங்களை பணிவுடன் பாதிக்கப்பட்ட சக மனிதனாக கேட்டுக்கொள்கின்றேன்.
இத்தகைய வினாவை எங்களுக்கு நீதியைப்பெற்றுக் கொள்வதற்காக மட்டுமல்ல, உலகில் இனிமேல் எந்தவொரு தீவிரவாதமும் தோற்றம் பெறாமல் மனிதமும் மனித உரிமைகளும் பேணப்பட்டு இந்தப் பூமி சகல மக்களுக்கும் சமாதான சொர்க்கமாக விளங்கவேண்டும் என்பதற்காகவுமே கேட்கின்றேன் என்பதை நீங்கள் ஆத்மார்த்தமாக புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.
தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் என்னுடைய சகோதரன் பிறந்திருந்த போதும் இன அழிப்பு நடைபெற்றது. (இதையும் இனக்கலவரம் என்றே கூறுகிறார்கள் ஆனால் அப்பாவி மக்களாகிய ஒரு இனத்தை இன்னொரு இன இராணுவம் அழித்துச் சிதைப்பதை இனக்கலவரம் என்று சொல்லமுடியாதென்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்).
எனது தாய் பிறந்ததிலிருந்து எங்கள் ஒவ்வொருவருடைய பிறப்புக்களும் அன்றாட வாழ்வும், கல்வியும் இலங்கை அரச படைகளின் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களாலும் ஆக்கிரமிப்புக்களாலுமே நிறைந்து வந்திருக்கின்றது.
இதற்குள் அப்போது அமைதிகாக்கவென இலங்கைக்கு வந்திருந்த இந்திய இராணுவம் அப்பாவியான என் தந்தையை குழந்தையான என் கண்முன்னேயே சுட்டுக்கொன்றது. அப்போது என் தந்தை என்னைத் தூக்கி வைத்திருந்தார். ஆனால் அவர்கள் சிறிதும் இரக்கம் இல்லாமல் என்னை நிலத்தில் தூக்கி எறிந்தார்கள். அப்போது என் சகோதரியை என் அம்மா வயிற்றில் ஏழு மாதக் குழந்தையாக சுமந்தபடி இருந்தார். நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள். ஐந்தாவதாக பிறக்க இருந்த தன் பெண் குழந்தையை பார்க்காவிடாது படுகொலை செய்யப்பட்ட என் தந்தைக்கும் அதனால் இன்றும் அநாதையாக அலையும் என் குடும்பத்திற்கும், பாடசாலை மாணவர்களாய் இருந்த என் மைத்துனரையும் அவர் நண்பனையும் நடுவீதியில் போட்டு உருட்டி உருட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கும் எம் போன்ற பாதிக்கப்பட்ட பல்லாயிரம் உறவுகளுக்கும் இந்திய தேசமும் ஐ.நா சபையும் என்ன நீதியைத் தரப்போகின்றது. நாங்கள் அத்தனை ஆவணங்களையும் வைத்திருக்கின்றோம். உங்களால் முடிந்தால் உலகில் எங்களுக்கன நீதியை எங்கே எப்படிப்பெறுவதென்று கூறுங்கள். நாங்கள் சாட்சிகளாய் இரு தசாப்தங்கள் கடந்தும் நீதிக்காகக் காத்திருக்கின்றோம். என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கின்றோம்.
இன்று வரலாற்று ரீதியான எமது சொந்த மண் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வந்தேறு குடிகள் என எங்களை துரத்தும் அளவுக்கு இலங்கை அரசு துணிந்து நிற்கிறது. “கணவனை இழந்த உங்கள் பெண்களுக்கு நாங்கள் கணவன்மாரை கொடுக்கின்றோம். பிள்ளைகளை இழந்த உங்கள் பெண்களுக்கு நாங்கள் பிள்ளைகளையும் கொடுக்கின்றோம்” என பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் எங்கள் இனமும் கலாச்சாரமும் கேவலப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்த பின்னரும் யுத்தத்தால் ஏற்பட்ட காயங்கள் ஆறவழியின்றி நாம் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் எங்கள் மனங்கள் சிங்கள மேலாதிக்க மனோபாவத்தால் ரணப்படுத்ப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. உயிர்களும் நிலமும் கலையும் கலாச்சாரமும் என எம் இனம் தொடர் இன அழிப்புக்கு உட்பட்டவண்ணமே இன்னமும் இருக்கின்றது.
நாங்கள் பிரித்தானியா ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்ததன் படி பிரிந்து வாழ்வதே எங்கள் இருப்பையும் இயல்பு வாழ்வையும் உறுதிப்படுத்தும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். ஐ.நா விதிகளின்படி எங்களிற்கு பிரிந்து செல்வதற்கான உரிமையும் தகமைகளும் இருந்தும் நாங்களும் கொசோவே போல் மொன்றொநீக்றோ போல் இனிவரும் தென்சூடான் போல் பிரிந்து சென்று சுதந்திரம் பெற ஒரு வாக்கெடுப்பை நடாத்த ஏன் ஐ.நா மன்றம் இன்னமும் முன்வரவில்லை என்ற என் கேள்விக்கும் தாங்கள் பதில் பெற்றுத் தருவீர்கள் என்று நம்புகின்றேன்
இறுதியாக முள்ளிவாய்க்காலில் நூறிற்கும் மேற்பட்ட என்னுடைய நேரடி குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கின்றேன் அல்லது தொலைத்திருக்கின்றேன். பலர் பொஸ்பரஸ் குண்டுகளாலும் தடைசெய்யப்பட்ட வேறு பல குண்டுகளாலும் காயப்பபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கங்களை இழக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனுடன் சரணடைந்த என்னுடைய சகோதரன் உட்பட பல உறவுகளிற்கு இன்னமும் என்ன நடந்தது என அறியமுடியவில்லை.
இலங்கை அரசு இன்று வெளியுலகுக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு காட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த என்னுடைய சகோதரியும் அவள் குழந்தைகளும் உட்பட பல உறவினர்கள் சிங்கள அரச புலனாய்வுத்துறையால் உடல் உள ரீதியாக இன்றும் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எங்கள் உறவுகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட தற்போதும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாதத்தை பல நூறு நேரடிச் சாட்சிகள் மூலமாகவும் ஆவணங்கள் மூலமாகவும் அம்பலப்படுத்தி எமக்கான நியாயத்தைப் பெற காத்துக்கொண்டிருக்கின்றேன்.
இப்படிக்கு
உண்மையுள்ள
ஈழமகன்

திங்கள், 20 டிசம்பர், 2010

காசி ஆனந்தன் கவிதைகள்

காசி ஆனந்தன் கவிதைகள்
kasi-anandan3
சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.
போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.
மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
மந்தை..
மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா… நீ என்றேன்
கைதட்டினான்
உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?
மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….
முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!
நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி
ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.
வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்..
unarchitamilan manikandan

வைகோ போட்ட வழக்கும்.. புலிகளால் கிளம்பும் பீதியும்!

வைகோ போட்ட வழக்கும்.. புலிகளால் கிளம்பும் பீதியும்!
[Monday, 2010-12-20 15:01:02]
 
'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!' என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன்.
ஆனால், சிவில் நடைமுறை சட்டத்தின்படி நான் அனுமதி கேட்டது தவறு என்றும், கிரிமினல் நடைமுறைச் சட்டம் தான் இதில் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பாயத்தின் தலைவர் கூறி இருப்பது, சட்டத்தின் அடிப்படையில் முற்றிலும் முரணானது. 1967-ல் கொண்டுவரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமானது, 2004-ம் ஆண்டு திருத்தப் பட்டபோதும், சிவில் நடைமுறைச் சட்டம் கையாளப்படுவதைத் தொடரவே பல பிரிவுகளில் சட்டம் வழிசெய்கிறது" என்று விவரித்தார்.
'நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா?' என நீதிபதி இக்பால் கேட்க, "நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. ஆனால், அதன் தீவிர மான ஆதரவாளன்!" என்று அழுத்தமாகச் சொன்னார் வைகோ.
மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், "தடையை நீக்குவதுபற்றி மத்திய அரசிடம் முறையிட, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 6-வது பிரிவில் வாய்ப்பு உள்ளது. அதை வாதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூற, வைகோ சூடாகி, "இந்தத் தடையை விதித்த மத்திய அரசாங்கத்திடமே தடையை நீக்க எப்படி கேட்க முடியும்? அநீதி இழைத்தவர்களிடமே நீதியைக் கேட்க முடியாது. தடை விதித்ததன் மூலம் தமிழர்களுக்கு மத்திய அரசு தீங்கு இழைத்துவிட்டது!" என்று குமுறலுடன் முழங்கினார்.
"அரசுத் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது. எனவே, வைகோவின் ரிட் மனு தொடர் பாக மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும்!" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை வெளியிட்டதும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் டெல்லியின் சௌத் பிளாக் பகுதியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் புலிகள் மீதான தடை இந்த ஆண்டுதான் இவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும். இது தொடர்பான தீர்ப்பாயம் இதை விவாதித்து சரியான நடவடிக்கைதான் என்று சொல்லி அறிவிக்கும். ஆனால், இந்த முறைதான் வைகோ, டெல்லி ஆணையத்தில் ஆஜராகி விவாதப் பொருள் ஆக்கினார். ஆனாலும் தடை நீடிக்கப் பட்டது. இந்நிலையில் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, மத்திய அரசுக்கு மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற அச்சம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது!" என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
இந்த நிலையில்தான், 'விடுதலைப் புலிகளால் பிரதமர் மன்மோகன், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல பிரமுகர்களுக்கும் ஆபத்து!' என மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை அனுப்பி உள்ளது. திடீரெனக் கிளம்பி இருக்கும் இந்த எச்சரிக்கையால், இனி, 'தமிழகம் வரும் பிரதமர் உட்பட்ட தலைவர்களுக்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு செய்யப்படும் என்றும், முதல்வர் கருணாநிதிக்கும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அவ்வப்போது ஆய்வுசெய்யப்பட்டு, பலப்படுத்தப்படும்� என்றும் டி.ஜி.பி. லத்திகாசரண் கூறி இருக்கிறார்.
வைகோவின் வழக்கையும், இந்த திடீர் எச்சரிக்கை யையும் இணைத்துப் பேசும் 'புலி' ஆதரவாளர்களோ,"சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளம்பியிருக்கும் வழக்கு காரணமாகத்தான் இந்த பீதி கிளப்பப்படுகிறது!" என்கிறார்கள்.
"ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ போலீஸ் பாதுகாப்பு அதிகம் வேண்டும் என்கிறபோது எல்லாம், புலிகளால் ஆபத்து என்கிற 'எச்சரிக்கை' டெல்லியில் இருந்து வந்துவிடும். 'அதற்கான முகாந்திரம் இருக்கிறதா� இல்லையா?' என்பதெல்லாம் யாரும் கேட்கக் கூடாதது ஆகிவிடும். இதில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் குற்றம்சாட்டுபவர்களுக்கு வசதியாகிப் போய்விடுகிறது. புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிறகு, அவர்கள் மீதான தடையை நீக்க தமிழகத்தில் எழுந்துள்ள ஆதரவுதான், டெல்லியின் 'புலி பீதி'க்குக் காரணம்!" என்கிறார்கள்.
ஜூனியர் விகடன்.
unarchitamilanmanikandan

‘பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!’ – காசி ஆனந்தன்

‘பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!’ – காசி ஆனந்தன்


கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:
ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.
உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. வியட்நாம், தென் அமெரிக்கா, க்யூபா, சீனா, ரஷ்யா… என அனைத்து நாடுகளிலும் இன, நாடு விடுதலைக்கான போர் நடந்துள்ளது. ஆனால் அது அந்த மண்ணுக்குள்ளேயேதான் நிகழும்.
ஆனால் ஈழப்போர் மட்டும்தான், அந்த மண்ணிலும், மண்ணுக்கு வெளியேயும் பெரும் வீர்யத்துடன் நடக்கிறது.
உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு… நம்மைத் தவிர வேறு யார்?
இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.
பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.
இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது… அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும்.
பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிற பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வேலை இது.
32 ஆண்டுகள் களத்தில் தன் உயிரையும், உயிரனைய தோழர்களையும் பணயம் வைத்து போராடும் எங்கள் தலைவனை கொச்சைப்படுத்தாதீர்கள்.
துரோகிகளைக் களையெடுப்பது தவறல்ல…
எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் துரோகிகளைக் களையெடுப்பது தொன்று தொட்டு இருந்து வருவது.
இயக்கத்தைக் காத்து, இறுதி லட்சியத்தை அடைய அந்தத் தண்டனைகள் அவசியம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இயக்கத்திலேயே சேருகிறார்கள்…seeman-3
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் துரோகி ட்ராட்ஸ்கியை அமெரிக்காவிலும் துரத்தித் துரத்திக் கொன்ற ஸ்டாலின் பயங்கரவாதியா, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தலையெடுத்துவிட்ட துரோகிகளைக் களையெடுத்த ம சே துங் பயங்கரவாதியா… இவர்களை உலகின் மாபெரும் புரட்சித் தலைவர்கள் என்று உலகமே கொண்டாடவில்லையா… பிரபாகரன் செய்ததில் மட்டும் என்ன பயங்கரவாதம் வந்துவிட்டது?
பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது… இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்… உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள்.
இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே… அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
தமிழினத் துரோகி மேயர் துரையப்பாவை அழித்துவிட்டுத்தான் முன்பு தமிழகம் வந்தார் பிரபாகரன். அன்று அவரை இருகரம் நீட்டி பாசத்துடன் அரவணைத்தவை அன்னை இந்திராவின் கரங்கள். இந்த பிராந்தியத்தின் அசைக்கமுடியாத தலைவி அவர். அவருக்குத் தெரியாதா பிரபாகரன் இயக்கம் செய்த களையெடுப்பு வேலை? தெரியும்… ஆனாலும் அவர் பிரபாகரனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். புலிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார்.
ஒரு இனத்தை வாழ வைக்க சிலவற்றை மறக்கலாம்…
ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது?
3000 தமிழ் தாய் – சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?
புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே…
எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?
எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா?
எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?
பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். இந்தியாவை உண்மையாக நேசிக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவனாக இப்போதும் நாம் உடனடியாக வேண்டுவது:
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம், தமிழீழம் மலரச் செய்ய வேண்டும், என்றார் காசி ஆனந்தன்.
unarchitamilanmanikandan

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

கஸ்பரைச் சுற்றிய 'கனிமொழி' கேள்விகள்!

கஸ்பரைச் சுற்றிய 'கனிமொழி' கேள்விகள்! PDF அச்சிடுக மின்-அஞ்சல்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2010 12:41
 ''ஆ.ராசாவை வேட்டை நாய்கள்போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபசாரிக்குக்கூட நியாயம் வேண்டும் என்றார் ஏசு பிரான். ஆனால், ஆ.ராசாவின் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள்!''   - ஊடகப் பேரவை என்ற பெயரில் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் இப்படி முழங்கினார் ஜெகத் கஸ்பர். ஆனால், சி.பி.ஐ. திடீரெனத் தன்னையே வேட்டையாடும் என்று ஜெகத் எதிர்பார்க்கவில்லை!
மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் இருக்கும் சாந்தோம் கலை தொடர்பு மையத்தின் கட்டடத்தில்தான் ஜெகத் கஸ்பரின், 'தமிழ் மையம்’ அலுவலகம் இயங்குகிறது. அதிரடியாக சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே புகுந்த கொஞ்ச நேரத்திலேயே... மொத்த மீடியாவும் குவிந்தது. அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் உட்பட யாரையும் வெளியே விடவில்லை.  உள்ளே சி.பி.ஐ. நடத்திய விசாரணைகளை எல்லாம் அங்கே இருந்த ஷோகேஸ் கண்ணாடியின் வழியாக வெளியிலிருந்து 'லைவ்’வாகப் பார்க்க முடிந்தது.
சொற்களைக் கோத்து மேடைகளில் வார்த்தைகளில் விளையாடும் ஆற்றல்கொண்ட ஜெகத் கஸ்பரை கேள்விகளால் சி.பி.ஐ-யினர் துளைத்தபோது, அவருடைய பேச்சில் சுரத்தே இல்லை. ஏதோ ஒரு டாக்குமென்ட்டைக் கேட்டு சி.பி.ஐ. அவரைக் குடைந்தபோது, 'அது வெளியே வேறு ஒருவரிடம் இருக்கிறது’ என்றார் கஸ்பர். 'அவர் பெயரைச் சொல்லுங்கள்’ என்றதும், தயங்கியபடியே நிற்க... சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருவர் பெயரைச் சொல்லி 'இவரிடம்தானே இருக்கிறது’ என்றபோது... வெளியே இருந்தபடி காதைத் தீட்டிக் கேட்டுக்கொண்டு இருந்த மீடியா ஆட்களே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
உடனே, அந்த நபருக்கு போன் போடச் சொன்னார்கள் அதிகாரிகள். மறு பேச்சு சொல்லாமல் போன்போட்டார் கஸ்பர். '2008-ம் ஆண்டில் இருந்து எந்தெந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் போனீர்கள்?’ என்று  கேட்டனர் அதிகாரிகள். சில நாடுகளின் பெயர்களைச் சொன்னார். 'அங்கே யார் யாரை சந்தித்தீர்கள்? எதற்காகப் போனீர்கள்?’ என்று 'ஷூட்' பண்ணிக்கொண்டே இருந்தார்கள்!
'இவரைத் தெரியுமா? அவரை சந்தித்தது உண்டா? இங்கே உங்களுக்கு கணக்கு இருக்கிறதா?’ என்று வரிசையாக அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாமே, முன்கூட்டித் தயாராகத் திரட்டிவைத்துவிட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான்!
''முறைகேடு நடந்து இத்தனை காலம் கழித்து ரெய்டு நடத்தினால், என்ன கிடைக்கும்? இது கண் துடைப்பு நாடகம்!'' என்று வரும் விமர்சனங்கள் குறித்து பிறகு நம்மிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், ''நாங்கள் ஆவணங்களைத் தேடிப் போனோம் என்று யார் சொன்னது? திரட்டிவைத்த ஆவணங்களை சரிபார்க்கவும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை வாங்கவும்தான் இந்த சர்ப்ரைஸ் ரெய்டு!'' என்று விளக்கம் அளித்தார்!
அப்படித்தான் ஜெகத் கஸ்பரிடம் பல செல் நம்பர்களையும் வாசித்தார்களாம் அதிகாரிகள். 'இந்த போன் நம்பர்கள் யாருடையவை? இதுபோக, இவை உங்களுடைய மற்ற போன் நம்பர்கள். இந்த நம்பர்களில் இருந்துதான் நீங்கள் பலரைத் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள். அதற்கான ஆவணங்கள் இவைதான்...’ என்று, தங்கள் வசம் உள்ள டெலிபோன் டேப்களுக்கான ஆதாரங்களை வலுப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது!
தமிழ் மையம் தொடர்பான ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் மீதுதான் ஏராளமாக விசாரித்தது சி.பி.ஐ. தமிழ் மையத்தின் முக்கியப் பொறுப்பில் கனிமொழி இருப்பதால், அவருடைய பங்கு பற்றியும் கேள்விகளைக் கேட்டனர். இந்த விசாரணை நடந்தபோது தமிழ் மையத்துக்கு தினமும் வந்து கூரியர்களை வாங்கிச் செல்லும் ஒருவர் வந்தார். என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, ''சார் கூரியர் கொடுங்க... கேட்டைத் திறங்க..'' என்று கேட்டார்.
''நாளைக்கு வா...'' என்று உள்ளே இருந்து குரல் வர, தொடர்ந்து கூரியர் பையன் நேரம் காலம் புரியாமல் நச்சரித்தார். உள்ளே இருந்து வந்த ஒரு நபர் அவரிடம் ஏதோ சொல்லி, பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். அலுவலகத்தில் இருந்து யார் வந்தாலும், உள்ளே யார் போனாலும் ஒருவரையும்விடாமல் படம் எடுத்துத் தள்ளியது மீடியா வட்டாரம். ஒரு சமயத்தில் ரிலாக்ஸாக வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரியை மொத்த மீடியாவும் ஃப்ளாஷ் அடிக்க.. அவர் வெளியே சில 100 மீட்டர்கள் லஸ் சர்ச் ரோட்டில் நடந்தே போக... மீடியாவும் துரத்தியது. 'என்னவோ ஏதோ..!’ என்று பொதுமக்களும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், அந்த அதிகாரி எதற்கும் அசராமல் சாலையில் போய்க்கொண்டே இருந்தார். அவரை ஒரு 'தம்’ அடிக்கக்கூட விடவில்லை மீடியா!
முக்கியமான மூன்று கவர்களை சீல் வைத்தது சி.பி.ஐ.! அதோடு, கஸ்பரிடம் இருந்த லேப்டாப்பையும், ஒரு சின்ன அட்டைப் பெட்டியில் பெரிய ஃபைல்களையும், டாக்குமென்ட்களையும் அள்ளிப் போட்டுக்கொண்டார்கள். மறக்காமல் லேப்டாப் பாஸ்வேர்டையும் கேட்டு வாங்கினர். உள்ளே நிறைய பேப்பர் டேப்புகள் கிழிக்கப்படும் ஓசை வெளியே கேட்டது. எல்லாம் சீல் வைப்பதற்காக கிழிபட்டவைதான்.  இரவு 7 மணிக்கு சோதனைகள் முடித்து அதிகாரிகள் கிளம்பிப் போகும்போது, ''எங்க வேலை முடிந்துவிட்டது. நீங்க வீட்டுக்குக் கிளம்பலாம்...'' என்று அவர்கள் சொல்ல... ''வெளியே மீடியா ஆட்கள் நிற்கிறார்கள். அப்புறம் கிளம்புறேன்...'' என்று சொன்னார் கஸ்பர். அதிகாரிகள் கிளம்பிய பிறகும் வெகுநேரம் வரை அவர் வெளியே வரவில்லை. அலுவலகத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டே இருந்தன.
மீடியா வெளிச்சத்தை ரொம்பவே ரசிக்கும் கஸ்பருக்கு, அன்று அப்படி இல்லை! ஒரு மணி நேரம் கழித்து மாடிப் படி வழியாக விறுவிறு என இறங்கினார். ஓட்டமும் நடையுமாக வேகமாக வந்தவரை மீடியா வளைத்துப் பேட்டி கேட்டது. ''எனக்கான அரசியல் தொடர்புகளின் காரணமாகவே என் மீது இந்த ரெய்டு...'' என்று சில வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு காரில் வேகமாக கிளம்பிப் போனார்.
அந்த அலுவலக வாசலில் ஒரு பேனர் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த மாரத்தான் போட்டிக்காக வைக்கப்பட்ட அந்த பேனரில்... run make a difference என்று எழுதப்பட்டிருக்க, அந்த பேனரில் கனிமொழி சிரித்துக்கொண்டு இருந்தார்!
பத்திரிகையாளர் காமராஜ் வீடு, பெசன்ட் நகரில் இருக்கும் ஈஸ்வரி அப்பார்ட்மென்ட்டில் முதல் மாடியில் இருக்கிறது. காலை 6.45 மணிக்கே அவர் வீட்டின் கதவைத் தட்டினர் சி.பி.ஐ. அதிகாரிகள். வட இந்திய சேனல்களின் ஓ.பி. வேன்கள் தெருவை அடைத்துக்கொண்டு நின்றன. மதியம் சுமார் 2 மணி அளவில் சோதனைகள் முடிந்து வெளியே வந்தார்கள் அதிகாரிகள். உங்களுக்கும் ஆ.ராசாவுக்கும் எத்தனை வருடங்களாக நட்பு? இதுவரை எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளீர்கள்? என்பது மாதிரியான கேள்விகள் காமராஜிடம் கேட்டனராம் அதிகாரிகள். அதன்பிறகு அவரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று அவரது கணக்கை சோதித்தனர்.  அவரது வீட்டில் எடுக்கப்பட்ட டாக்குமென்ட்களை  புத்தம் புது காடா துணியில் சேர்த்துக் கட்டி மூட்டையாகக் கொண்டுபோனார்கள்.அவரது பாஸ்போட்டை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்த சோபாவை எல்லாம் புரட்டிப் போட்டு சோதனை செய்தார்களாம் அதிகாரிகள். டாக்குமென்ட்களை எடுத்துப் போவதற்காக காடா துணி, அதை வெட்டுவதற்கு கத்தி என்று தயாராகவே வந்திருந்தார்களாம் அதிகாரிகள். ''ஆ.ராசாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களில்  காமராஜும் ஒருவர். இரண்டு பேரும் பெரம்பலூர் மாவட்டத்துக்காரர்கள். அதனால் காமராஜ் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம்!'' என்கிறார்கள் அவரது நண்பர்கள்!

சி.பி.ஐ. லிஸ்ட் பெருசு!

ஸ்பெக்ட்ரம் டெண்டர், ஆ.ராசாவின் நட்பு என சி.பி.ஐ. வளையத்தில் சிக்கி இருக்கும் சென்னை மனிதர்கள் மற்றும் இடங்களிலும் புலனாய்வுக் கண்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் அகமது ஷகீர், சேத்துப்பட்டு முகமது ஹசன், அண்ணா நகர் வளவன், ராசாவின் முன்னாள் உதவியாளர் அகிலன் ராமநாதன், தேனாம்பேட்டை செல்வராஜ், ஏ.ஜி.எம். இன்வெஸ்
மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் (கோடம்பாக்கம்), வெல்கம் கம்யூனிகேஷன்ஸ், சாலி ரோடு சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் (செனடாப் ரோடு), ஜீனஸ் வென்சர்ஸ் (மயிலாப்பூர்), சாலி தெர்மா பிளாஸ்டிக்ஸ் (ஈக்காட்டுத்தாங்கல்), சாலி தெர்மல் (ஸ்ரீபெரும்புதூர்), ஜே.ஜி.எக்ஸ்போர்ட்ஸ் (கீழ்ப்பாக்கம், சௌகார் பேட்டை)... இப்படி ஒரு மைல் நீளப் பட்டியல் சி.பி.ஐ. கையில் இருக்கிறதாம்!
'கிரீன் ஹவுஸ் நிறுவனம் நிதி கொடுத்துள்ளது!’
சி.பி.ஐ. விசாரணை நடந்ததற்கு மறுநாள் 'தமிழ்மையம்’ அலுவலகத்தில் ஜெகத் கஸ்பர், ஊடகங்களுக்குவிளக்கம் அளித்தார்.
''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்துக்கு வந்ததா என்பதை அறியவே, சி.பி.ஐ. தேடுதல் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. 2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மையத்துக்கும் அதன் நிர்வாக அறங்காவலரான எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ் மையமானது அரசியல் ஆளுமைகளோடு இணைந்து செயல்படும் ஒரே காரணத்துக்காக ஐயப்பாடுகள் சுமத்துவது அநீதியானது.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பே தமிழ் மையத்துடன் கனிமொழி இணைந்து செயல்பட்டு வருகிறார். நல்ல காரியங்களுக்காக அவருடன் சேர்ந்து செயல்படுவதை மதிக்கிறோம். அவர் தனிப்பட்ட வகையில் தமிழ் மையத்துக்கு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. அதேபோல, மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவும் தனியாக எந்த நிதியும் அளிக்கவில்லை. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது!'' என்று சொன்னார் கஸ்பர்.

நன்றி ஜுனியர் விகடன்

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்

[ பிரசுரித்த திகதி : 2010-04-25 09:18:00 AM GMT    ]

எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!
unarchitamilanmanikandan