விடுதலைப்புலிகள்,செத்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில்,அழுதவர்களுக்காக செத்தவர்கள்.மது,புகையிலை என எந்த தீய பழக்கத்தையும், மேற்கொள்ளாத தியாக மறவர்கள்.மானத்திற்காக மரணத்தை தழுவுகிற மாவீரர்கள்.பெண்களை தாயாக போற்றும் கண்ணியம் கொண்டவர்கள்.தன் எதிரிகளையும் மதிக்கிற மாண்பு தெரிந்தவர்கள்.புறநானூறு கண்ட தமிழனின் வீரம்,மனம்,கொடை,ஒழுக்கம் கொண்டவர்கள்.ஆனால்,விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகிறார்களே........!!!
|
அவர்கள்,ஏன் ஆயுதமேந்தினார்கள்....????
பூகோளப்பரப்பில் ஒன்றாக இருந்த இலங்கையையும் , இந்தியாவையும் கடல்நீர் பிரித்தது.கடல்நீர் பிரித்தாலும் ,தமிழகத்திலிருந்த தமிழர்களுக்கும் ,இலங்கையிலிருந்த தமிழர்களுக்கும் இடையிலான உறவுமுறை மாறவில்லை.தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் வந்து குடியேறினான்,சிங்களன்.ஆங்கிலேயர்கள்,இந்தியாவைப்போல இலங்கையையும் அடிமைப்படுத்தி பின், சுதந்திரம் அளித்தார்கள்.ஆனால்,ஆட்சி அதிகாரத்தை சிங்களர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்கள்.விளைவு...........? ஆட்சி மொழி,பயிற்றுமொழி என எல்லாவற்றிலும் சிங்களம்.தமிழர்கள் அடக்கி ஒடுக்கி,சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்த பகுதிகளை ஒருங்கிணைத்து தமிழர்கள், "தமிழீழம்" என்ற தனிநாடு கேட்டு போராடினார்கள்.இலனகையின் பூர்வீகமக்களாகிய தமிழர்கள்,வாழ வந்த சிங்களனிடம் நாடு கேட்டு போராடவேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டார்கள்.தமிழீழத்தை காண விரும்பிய குட்டிமணி என்ற போராளியின்,கண்களை கத்தியால் தோண்டி,காலில் போட்டு மிதித்தார்கள்,சிங்களவெறியர்கள்.தமிழச்சிகளின் மார்பில் கொதிக்கும் தாரால் 'சிறீ' என்ற சிங்கள வார்த்தையை எழுதினார்கள்.தமிழச்சிகளின் மார்பை அறுத்து,'தமிழச்சி கறி கிடைக்கு' எனக் கூவினார்கள்.தமிழர்களின் தொடையை அறுத்து, 'தமிழர்கள் தொடைக்கறி கிடைக்கும்' என விளம்பரம் செய்தார்கள்.கொதிக்கும் தாரில் பச்சிளங்குழந்தைகளை போட்டு கொன்றார்கள்.கர்ப்பிணி தமிழச்சியின் வயிற்றை கிழித்து ,வயிற்றிலிருந்த சிசுவை ,சுவற்றில் அடித்து கொன்றார்கள்.இதனையெல்லாம் நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும்,இதெல்லாம், அங்கு நடந்த கொடுமைகளின் அணுவளவுதான்.....!
இதற்கெல்லாம் 'ஆயுதமே தீர்வு' என்ற பிறகு தான், மேதகு.வேலுப்பிள்ளை.பிரபாகரன் அவர்களால், "தமிழீழ விடுதலைப்புலிகள்" இயக்கம் துவங்கப்பட்டது.இலங்கையில் நிறைய போராளிக்குழுக்கள் இருந்தன.அவையெல்லாம்,ஒழுக்கத்தோடு காணப்படவில்லை.ஆனால்,புலிகள் ஒழுக்கத்துடனும், கட்டுக்கோப்புடனும் விளங்கினார்கள்.உலகில் மது, புகையிலை போன்ற போதைப்பொருள்கள் தடை விதிக்கப்பட்ட ஒரே இயக்கம் ,புலிகள் இயக்கம் தான்.தன் தாயக விடுதலைக்காக பெண்களும் புலிகளாக களம் புகுந்தார்கள்.லட்சக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்றது.
ஆனால்,விடுதலைப்புலிகள் கடைசிவரை சிங்களர்கள் மீது, சிறு தாக்குதலையும் தொடுக்கவில்லை.பல்லாயிரக்காண தமிழ்ப்பெண்களை பாலியல்வல்லுறவு கொண்டு படுகொலை செய்தது,சிங்கள ராணுவம்.ஆனால்,புலிகளின் நுனிவிரல் கூட சிங்களபெண்கள் மீது ,பட்டதாக வரலாறு இல்லை.அந்தளவுக்கு கண்ணியமானவர்கள், புலிகள். உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிற 'தமிழர்' எனும் தேசிய இனத்திற்காக ,தேசம் கட்ட இவர்கள், 'சயனைட்' குப்பியை கழுத்தில் மாட்டிக்கொண்டு போராடுகிறார்கள்."என் தாய்த்தமிழ் உறவுகள் வாழ்கிற இந்தியாவிற்கு எதிராக, என் சிந்தை ஒருபோதும் திரும்பாது" எனக் கூறியவர், 'புலிகளின் தலைவர்' பிரபாகரன்."தமிழர்களுக்காக நாடு உருவாகக் கூடாது !" என்பதற்காக ,விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாய் சித்தரித்து ,இவர்கள் மீது பழி போடுகிறார்கள்."தமிழன் ஒருபோதும் நாடு அடையக்கூடாது!
தாயகத்தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்து விடக் கூடாது"என்பதற்காக பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்துகிறார்கள்.மேதகு.பிரபாகரன் நாடு கேட்டு போராடுவது, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிற தமிழர்களுக்காகத்தான்.ஆனால், தமிழினத்துரோகிகள் 'அது ஈழத்தமிழர்களுக்கான நாடு' என கூறி , அதனை புறந்தள்ளி, தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்.அமரர்.ராஜீவ் காந்தியை புலிகள் படுகொலை செய்துவிட்டதாக கூறும் பெருமக்கள்(?),ராஜீவ் காந்தியின் அமைதிப்படை, ஈழத்தில் 6500 தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு படுகொலை செய்ததே , மொத்தம் ௦௦ க்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததே , அதனை மூடி மறைக்கிறார்கள்.
தனது வாழ்வையே அர்ப்பணித்து விட்டு, உலகமெங்கும் உள்ள தமிழர்களாகிய நமக்காக, நாடு கேட்டு போராடும் 'விடுதலைப்புலிகள்' பயங்கரவாதிகளா.....???????????
இந்திய விடுதலைக்காக சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதம் ஏந்தி போராடினால், அது புரட்சி...!!!
தமிழர்களின் விடுதலைக்காக பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடினால்,அது தீவிரவாதமா....?????????
அடிக்கிற சிங்களன் மிதவாதி.....!!!
திருப்பி அடிக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளா..........????
தமிழன் நாடு அடையவே கூடாதா....??????
தமிழன் நாடு கேட்டால் குற்றமா.......????
தமிழன் அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமா........??????
திருப்பி அடிக்க கூடாதா.............??????
மக்களே.....! தீர்ப்பு கூறுங்கள்.........!!
--திலீபன்--
unarchitamilan |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக