மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 5 ஜூலை, 2013

கட்டுமஸ்தான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களே... இதோ உங்களுக்காக சில புதிய வழிமுறைகள்!

News Service
பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர். ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள். அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள். அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள். நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது. இப்போது அழகான உடல் கட்டமைப்பைப் பெறுவதற்கு எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட வேண்டுமென்று பார்ப்போம்.
   ஓட்ஸ் கஞ்சி
ஓட்ஸ் கஞ்சியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை குறைக்கும். மேலும் இது உடம்பில் உட்சேர்க்கைக்குரிய (anabolic) செய்முறையை அதிகரித்து, சிதைமாற்றம் (catabolism) மற்றும் கொழுப்பு தேங்குதலை குறைக்கிறது.
மோர்
மோர், புரதச்சத்து அதிகமுள்ள பானமாகும். உடற்பயிற்சி செய்த பின் மோரை குடித்தால், உடலானது புரதச்சத்தை உடனே உறிஞ்சிக் கொள்ளும். இதனால் அதிகப்படியான புரதச்சத்தை பெறலாம். மேலும் கெட்டியான மோர் அல்லது தண்ணீர் கலந்த மோரை பருகினால், உடம்பின் ஆற்றல் அதிகரிக்கும்.
முட்டை
உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டைகளை சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
பாலாடைக்கட்டி
உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.
வேர்க்கடலை
வெண்ணெய் புரதச்சத்து, வைட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து, போலேட் (folate) மற்றும் அர்ஜினைன் (arginine) போன்றவை நிறைந்தது தான் நிலக்கடலை வெண்ணெய். இதை அளவாக எடுத்துக் கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.
நண்டு
நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கடல் சிப்பிகள்
கடல் சிப்பிகளில், உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பாலுணர்வூட்டியாகவும் விளங்குகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
வாழைப்பழம்
உடலை ஏற்றுபவர்கள் பலரும் அதிகப்படியாக சாப்பிடுவது வாழைப்பழத்தை தான். இதில் ட்ரிப்டோபைன் நிறைந்திருப்பதால், இது செரோடோனின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, நரம்புகளை சாந்தப்படுத்தும். மேலும் இதில் உணவு கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கும் மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கும்.
மிளகாய்
உணவில் மிளகாய் சேர்ப்பதனால், உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை இது தடுக்கும். மிளகாயில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
சர்க்கரைவள்ளி
கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்குகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்து உள்ளது. இதிலுள்ள சர்க்கரை ஆக்கத்திறன் மற்றும் தாங்கு திறனை அதிகரிக்க செய்யும்.
அத்திப்பழம்
இரும்பு போல உடலை வளர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். அத்திப்பழத்தில் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத்தின் (Alkali) அளவை சமநிலையோடு வைத்துக் கொள்ளலாம்.
இறைச்சி
ஆட்டு இறைச்சியில் அதிகமான அளவில் விலங்கின புரதம் இருக்கிறது. மேலும் இதில் அர்ஜினைன் (arginine) மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
பருப்பு வகைகள்
சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வளமையான புரதச்சத்து, அதிமுக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சூப்பர் கணினிகளை விட வேகம் கூடியது மனித மூளை!

News Service
நம்மை விட ஒரு புத்திசாலி இந்த உலகத்தில் இருக்கிற தென்றால், அது கணினி தான் என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல! தற்போது சூப்பர் கணினிகள் தான், கணினி உலகின் ராஜாவாக இருக்கின்றன. சுமார் 530 பில்லியன் நரம்புகளின் திறனை பிரதிபலிக்கும் தன்மையுள்ள புளூ ஜீன்-கியூ சீக்குவா எனும் சூப்பர் கணினி, ஒரு நொடிக்கு சுமார் 16 லட்சம் கோடி கணக்குகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாம். ஆனால் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் க்வாபெனா போஹென், இந்த புளூ ஜீன்-கியூ சீக்குவாவின் கணக்குத்திறன் கூட மனித மூளையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு திறன் கொண்டதல்ல என்கிறார்.
   ஏனென்றால், உலகின் அதிவேகமான சூப்பர் கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்கிறார் போஹென்.
இதற்கு காரணம், மனித மூளையானது ஒரே சமயத்தில் பல கணக்குகளை செய்யக்கூடிய திறன் கொண்டது என்பதுதான்! அதாவது, மூளையிலுள்ள பல்வேறு நரம்புக்குழுக்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிகின்றன. ஆனால் எவ்வளவு பெரிய சூப்பர் கணினியாக இருந்தாலும் கூட அதனால் ஒவ்வொரு படியாகத்தான் முன்னேறிச் செல்ல முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பிரச்சினைக்கான தீர்வைத்தான் கண்டறிய முடியுமாம்.
சுவாரசியமாக, நியூரோ மார்பிக் பொறியியல் எனும் நவீன பொறியியல் துறையானது, புதுமையான வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் துணையுடன் மூளையின் கணக்குத் திறன்களை பிரதிபலிக்கக்கூடிய மின்னணு கருவிகளை உருவாக்க முனைகிறது. இத்துறையில் பணியாற்றும் பேராசிரியர் போ ஹெனின் ஆய்வுக்குழு, சமீபத்தில் நியூரோ கிரிட் எனும் செயற்கை மூளைக்கருவியை உருவாக்கியுள்ளது. சுமார் 10 லட்சம் நரம்புகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் திறனுள்ள இந்த நியூரோ கிரிட் ஒரு சூப்பர் கணினி அல்ல!
பிற சூப்பர் கணினிகளைப்போல, நியூரோ கிரிட்டினால் உலகம் தோன்றக் காரணமான, பிக் பாங் மாதிரியை செய்து காட்டவோ, சூறாவளிகள் அல்லது உலகில் பரவும் தொற்று நோய்களை வருமுன் எச்சரிக்கவோ முடியாது. ஆனால் பிற சூப்பர் கணினிகளால் முடியாத செயலான 10 லட்சம் நரம்புகள் இயற்கையில் எப்படி இயங்கும் என்பதை நம் கண்முன்னே தத்ரூபமாக கொண்டுவர நியூரோ கிரிட்டினால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோருமே சொந்தமாக ஒரு சூப்பர் கணினி வைத்துக்கொள்ளும் அளவுக்கு மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கணினிகளின் விலை மலிவாகிவிட்டது. ஆனால் மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள இவை சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனவாம். மிகவும் சுவாரசியமாக, மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள நியூரோகிரிட்டும் ஒரே ஒரு நொடி தான் எடுத்துக் கொள்கிறதாம். நியூரோகிரிட்டிலுள்ள 16 சிப்களில் சுமார் 65 ஆயிரம் சிலிக்கான் நரம்புகள் உள்ளன. இந்த சிலிக்கான் நரம்புகளின் செயல்பாடுகளை, சுமார் 80 சோதனைக் குறியீடுகளின் தேவைக்கேற்ப புரோகிராம் செய்து கொள்ளலாமாம். இதன் மூலம் மூளையிலுள்ள வெவ்வேறு விதமான நரம்புகளின் இயல்புகளை பிரதிபலிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூளையின் நரம்பு இணைப்புகளான சினாப்ஸ்களை பிரதிபலிக்கும் பல மென் கம்பி இணைப்புகள் நியூரோ கிரிட் பலகையில் இங்கும் அங்குமாக, செல்கின்றன. இதன் மூலம், மூளையில் உள்ள ஆயிரக்கணக்கான நரம்புகளுக்கு இடையில் நிகழும் மின்சார உரையாடல்களை துல்லியமாக பிரதிபலிக்க முடியும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மிக முக்கியமாக சூப்பர்கணினிகள் பயன்படுத்தும் மின்சாரத்தில், ஒரு சிறு பகுதியைத்தான் நியூரோகிரிட் பயன்படுத்துகிறதாம். உதாரணமாக, ஒரு புளூ ஜீன்-கியூ சீக்குவா சூப்பர் கணினியை இயக்க (சுமார் 1,60,000 வீடுகளை இயக்கும்) 8 மொகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு நியூரோ கிரிட்டை இயக்க வெறும் 5 வாட்ஸ் மின்சாரமே போதுமாம். இது ஒரு செல்போன் சார்ஜர் பயன்படுத்தும் மின்சார அளவே என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில், மனித மூளையை ஆய்வுசெய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படும் இந்த நியூரோ கிரிட் மனிதர்களுக்கு ஒரு சிறந்த பயனாகும். மனித மூளையின் இயல்புகளை படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், இதுவரை முழுமையாக ஆய்வு செய்ய முடியாத ஆட்டிசம் மற்றும் ஷைஷோ பிரீனியா போன்ற சிக்கலான மூளைக்கோளாறுகள் குறித்த அறிவியல் உண்மைகளைக் கண்டறியவும் நியூரோ கிரிட் உதவும் என்கிறார் பேராசிரியர் போஹென்.