மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 28 மார்ச், 2011

பங்குச் சந்தையின் பீஷ்மர்...

வாரன் பஃபெட் வழியில் 6 அசத்தல் ஷேர்கள்!

'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் 'மதிப்பு, தரம் மற்றும் தகுதி’ சார்ந்த முதலீடுகள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

'என்ன இது! 'வேல்யூ’ என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு மூன்று தமிழ் வார்த்தைகளா?’ என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானதே! ஆனால், ஆங்கிலத்தில் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்று தேடினால் வாரன் பஃபெட் என்றுதான் அர்த்தம் வரும்! காரணம், 'மதிப்பு, தரம், தகுதி’ என்ற மூன்றையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்வதுதான் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபெட். சொன்னதோடு நிற்காமல், சந்தையில் நிரூபித் தும் காட்டியவர் அவர். அதனால்தான் 'வேல்யூ’ என்கிற ஒரு வார்த்தைக்கு மூன்று தமிழ் வார்த்தைகளைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விற்பனை, லாபம், மார்க்கெட் ஷேர், இ.பி.எஸ்., பி/இ ரேஷியோ போன்ற எண்களையெல்லாம் தாண்டி, சந்தை முதலீட்டிற்குத் தேவையான இந்த யுக்திகள்தான் அவரை உலகின் பெரிய முதலீட்டாளராக ஆக்கியுள்ளது. உள்ளபடி சொல்ல வேண்டு மென்றால் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்பது பஃபெட்டின் கண்டுபிடிப்பு கிடையாது. பஃபெட்டுக்கு முன்பே, பெஞ்சமின் கிரஹாம் மற்றும் பிலிப்ஸ் ஃபிஷர் போன்றவர்கள் அது பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் போதனைகளை தன்னுடைய தனித்திறமையால் சாதனைகளாக மாற்றிக் காண்பித்த பெருமை பஃபெட்டையே சேரும்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த பஃபெட்டின் முதலீட்டு சித்தாந்தங்களில் சிலவற்றை இங்கே விளக்கி, அதில் அடங்கும் சில பங்குகளையும் கடைசியில் பரிந்துரைத்துள்ளோம். இந்தப் பங்குகளை சந்தை நன்றாக இறங்கும் (படிக்க மார்ஜின்- ஆப்-சேஃப்டி பகுதியை) போது வாங்கிப் பலனடையலாம். இந்தப் பங்குகளை மட்டுமல்ல, சந்தையில் உள்ள மற்ற சில பங்குகளை நீங்கள் வாங்கலாம் என்று நினைக்கும்போதும் அவை இந்த சித்தாந்தத்தின் கீழ் வருகிறதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கினாலும் பலனடையலாம்.
அடிப்படை!
பங்கு முதலீடு என்பது ஒரு தொழிலில் செய்யப்படும் முதலீடு. நீங்கள் ஒரு தொழிலை தொடங்க விரும்புகிறீர்கள் எனில் அது எந்த மாதிரியான செயல்பாடுகள் கொண்ட தொழில், என்ன லாபம் வரும், அரசாங்கத் தொந்தரவுகள் இருக்குமா என்பது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து அதன் பிறகுதானே அந்த தொழிலை ஆரம்பிப்பீர்கள்? அதுபோலவே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதும் இதே அளவுகோல்களை எல்லாம் வைத்து ஆராய்ந்தபிறகே அந்த தொழிலில், அதாவது அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் பஃபெட் டின் அடிப்படை சித்தாந்தம்.
தவறு செய்யாத நிர்வாகம்!
எந்த ஒரு தவறும் செய்யாமல் யாராலும் தொழில் நடத்த முடியாது. இன்று பெயர் சொன்னாலே பெருமைப்படும் அளவிற்கு இருக்கும் 'பெர்க்ஷயர் ஹாத்வே’ என்ற கம்பெனியை நடத்த வாரன் பஃபெட் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானவை.
'பெர்க்ஷயர் ஹாத்வே’ முதலில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியாக இருந்தது. அதை சரிசெய்து மீண்டும் லாபத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது இன்னொரு சிறுதவறு நடந்துவிடும். அதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படும். அப்போது அவர் தனது பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'ஒரு தொழிலை செய்யலாம் என்று ஆரம்பிக்கின்றீர்கள், அந்தத் தொழிலை நடத்தும்போது சிற்சில தவறுகள் அவ்வப்போது ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அந்தத் தவறுகளையும் தாண்டி அந்த தொழில் லாபகரமாக நடக்க சாத்தியம் இருந்தால் மட்டுமே, அதில் இறங்குவது உபயோகமாக இருக்கும்’ என்று எழுதினார். பஃபெட் இதைச் சொன்னது 1977-ல். ஆனால், கார்ப்பரேட் உலகில் இன்றுவரை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது இந்த சிந்தனை.
டெக்ஸ்டைல் தொழிலின் இந்தக் குணாதிசயத்தால் பஃபெட் அந்தத் தொழிலையே விட்டுவிட்டு வெளியே வந்தாலும், அந்த டெக்ஸ்டைல் கம்பெனியின் பெயராகிய 'பெர்க்ஷயர் ஹாத்வே’தான் ஹோல்டிங் கம்பெனியாக மாறி, இன்று வரை அவருடைய முதலீட்டு கம்பெனிகளில் முன்னணி கம்பெனியாகவும் இருக்கிறது.
மதிப்பு!
பஃபெட் கம்பெனிகளிடம் இருந்து எதை வெகுவாக எதிர்பார்க்கிறார் என்றால், போட்ட முதலீட்டிற்கு ஒரு கம்பெனி நல்ல லாபத்தை தரும் வேளையில் கடன் என்பது மிகக்குறைவாகவோ அல்லது கடனே இல்லாமலோ தொழில் நடத்தப்படவேண்டும் என்பதைத்தான். நல்ல தொழில்/கம்பெனி என்பது அதில் செய்யப்படும் முதலீட்டைவிட அதிகப் பணத்தை லாபமாகத் தரவேண்டும். அதாவது, கிட்டத்தட்ட தொழிலின் விரிவாக்கத்துக்குத் தேவையான பணம்கூட லாபத்திலிருந்தே கிடைக்கிற அளவுக்கு லாபம் தருகிற கம்பெனியே நல்ல கம்பெனி என்கிறார் பஃபெட்.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் அதிகப்படியான புதிய முதலீடுகள் ஒரு தொழிலுக்குத் தேவைப்பட்டால் அப்படிப் போடப்படும் அதிகப்படியான முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட மிக அதிக லாபம் கிடைக்க வேண்டும். அதுதான் முதலீடு செய்ய உகந்த கம்பெனி. அப்படி இல்லாமல் புதிதாக போடப்படும் முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட குறைவான லாபமே கிடைத்தால் அந்த கம்பெனியின் பக்கமே நான் போகமாட்டேன் என்கிறார் அவர். இந்த அளவீடுகளை வைத்துக்கொண்டு ஒரு கம்பெனி மதிப்புமிக்கதா? மதிப்பை அதிகரிக்கச் செய்யும் குணாதிசயம் அந்த கம்பெனிக்கு இருக்கிறதா என்பதை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.
தரம்!
ஒரு கம்பெனியின் பிராண்டின் மதிப்பு, அது தயார் செய்யும் பொருட்களின் தரம், அதன் டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் போன்றவை அந்த கம்பெனியின் போட்டி போடும் திறமையை வெகுவாக அதிகரிக்கிறது. எனவே, கம்பெனியில் முதலீடு செய்யும்போது ஃபைனான்ஷியல் விஷயங்களையும் தாண்டி இந்த குணாதிசயம் இருக்கிறதா என்று முக்கியமாகப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர்.
ஒரு கம்பெனி அசாதாரண மான சூழ்நிலைகளில் - அதாவது, விற்பனை டல்லடிக்கும் நாட்கள், டிமாண்ட் அதிகரிக்காமல் இருக்கும் நாட்கள், உற்பத்தித்திறனை முழுமையாகப் பயன் படுத்தாத நாட்களில்கூட விற்பனையை ஏற்ற முடிகிறதென்றால் அதுவே சிறந்த கம்பெனி என்கிறார் அவர். ஏனென்றால், மேலே சொன்ன சூழ்நிலைகளில் விலையை ஏற்ற ஒரு கம்பெனி துணிகின்றதென்றால் அந்த விலையேற்றத்தால் விற்பனை செய்யும் பொருட்களின் எண்ணிக்கை குறையவோ அல்லது மார்க்கெட் ஷேர் குறையவோ செய்யும் என்ற பயம் எள்ளளவும் இல்லாமல் அந்த கம்பெனி இருக்கிறது என்று அர்த்தம். அந்த பயமில்லை என்றால் அந்த கம்பெனி தரமான பொருட்களை உற்பத்தி செய்வதாக அர்த்தம்'' என்கிறார் பஃபெட்.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் கொண்ட தொழில்களிலும் முதலீடு செய்யக்கூடாது என்கிறார் அவர். வேகமாக மாறிவரும் தொழில்களில் அதிக லாபம் கிடைத்தாலும் அதிக அளவில் நஷ்டம் வரவும் வாய்ப்புண்டு. முதலீட்டாளர்களுக்குத் தேவை நிச்சயமான லாபமே தவிர, அதீத வளர்ச்சியல்ல. இதுபோன்ற தொழில்களில் அந்த நிச்சயத்தன்மை குறைவதால் அவை முதலீட்டிற்கு உகந்ததல்ல என்கிறார் அவர்.
தகுதி
மேனேஜ்மென்ட்டின் தகுதி குறித்துச் சொல்லும்போது, 'எல்லா விதமான சந்தை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளிலும் பணத்தை சரியான வகையில் பயன்படுத்தத் தெரிந்த மேனேஜ்மென்ட்டே நீங்கள் முதலீடு செய்யத் தகுதியான மேனேஜ்மென்ட்’ என்கிறார். ஒரு கம்பெனி சம்பாதிக்கும் லாபத்தில் எந்த அளவு பணத்தை முதலீட்டுக்கான வருவாயாக முதலீட்டாளர்களுக்குத் தருகிறார்கள் என்பதை வைத்தே அந்த கம்பெனியை நிர்வாகம் செய்பவர்களின் தகுதியைத் தெரிந்து கொள்ளலாம். சம்பாதிக்கும் லாபத்தில் பெரும் பகுதியை நிர்வாகமே எடுத்துக் கொண்டால் அதன் தகுதி குறைவுதான் என்கிறார் அவர்.
நீண்ட நாட்களுக்குண்டான தொலைநோக்குப் பார்வை கொண்ட மேனேஜ்மென்ட், லாபத் தைக் குறைத்துக் கொள்ளாமல் தரத்தை உயர்த்திக் கொள்ளும் தகுதி, பல்வேறு பொருளாதார ஏற்ற இறக்க சூழ்நிலைகளிலும் செயல்பாட்டுத்திறனும் லாபமும் குறையாத பிஸினஸ் மாடல்களைக் கொண்டிருப்பது, அந்தந்தத் தொழில் துறையில் தலைசிறந்த வல்லுனர்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களையும் முக்கியமான தகுதிகளாகச் சொல்கிறார் அவர்.
மார்ஜின் ஆஃப் சேஃப்டி!
மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கம்பெனி எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போகும் லாபத்தையும், அந்த லாபத்தால் அதிகரிக்கவிருக்கும் பங்கின் மதிப்பையும் கணக்கீடு செய்யும்போது விற்பனை, லாபம், செலவு, மார்க்கெட் ஷேர், வரி என பல விஷயங்களைப் பற்றியும் அனுமானிக்க வேண்டியிருக்கும். அப்படி அனுமானிக்கும்போது எதிர்காலத்தில் வியாபார சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் லாபம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் கம்பெனியின் மதிப்பும் மாறும். மதிப்புகள் மாறினால் பங்கின் விலையும் குறையும். எனவே, இன்றைக்கு முதலீடு செய்வதற்காக கம்பெனிகளை அலசும்போது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறை நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகளையும் கணக்கில் கொண்டு அதற்குண்டான 'மார்ஜின் ஆஃப் சேஃப்டி’யுடன் சேர்த்து அந்த விலையில் இன்றைக்குக் கிடைக்கும் பங்குகளை மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து வாங்கினால் மட்டுமே எல்லாக் காலகட்டத்திலும் தேவையான லாபத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் பஃபெட்.
பஃபெட்டின் செலக்ஷனில் தேறக்கூடிய இந்திய பங்குகள் சரி, பஃபெட் கோட்பாடுகளைக் கொண்டு தேர்வு செய்தால் நமக்குக் கிடைக்கிற பங்குகளின் பேரைச் சொல்லுங்க என்கிறீர்களா! இதோ பஃபெட்டின் மந்திரத்துக்குக் கட்டுண்ட பங்கு பட்டியல்:
(இந்தப் பங்குகளை இப்போதுள்ள விலையிலும் வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம் என்பதே எங்கள் ஆலோசனை!)

unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக