மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 30 மார்ச், 2012

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு பெரும் இராஜதந்திரத் தோல்வி! நீதிக்கான போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்திடுவோம்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. 22.3.2012 வியாழக்கிழமை இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இந்தியா, நோர்வே உட்பட்ட 24 நாடுகள் இத் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் சீனா, ருஸ்யா, கியூபா, வங்களதேஷ் உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா பகீரத முயற்சி எடுத்த போதும் அது கைகூடவில்லை.
நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைத்துலக அரங்கில் சிறிலங்கா பெரியதொரு இராஜதந்திரத் தோல்வியினைச் சந்தித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணை என்ற ஈழத் தமிழர் தேசத்தின் நீதியின்பாற்பட்ட நிலைப்பாட்டை எட்டவில்லை. எனினும் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக அனைத்துலகக்கவனத்தினை ஈர்ப்பதற்கு இத் தீர்மானம் உதவியிருக்கிறது. போர்க்காலத்தில் அனைத்துலகச் சட்டங்களை மீறியமை தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் இவ் விடயத்தையே அனைத்துலக நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கிவிட முனைந்த சிறிலங்காவுக்கு பெரும் தோல்வியினையும் கொடுத்துள்ளது.
இது போரின் பின் சிறிலங்காவுக்கு கிடைத்த முதலாவது தோல்வி. சிறிலங்கா தற்போது கடைப்படிக்கும் அணுகுமுறைகள் இத்தகைய தோல்விகள் தொடரவே வழி செய்யும். 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வரலாற்றில் முக்கியமானதொரு ஆண்டு எனவும் இவ் ஆண்டில்; யார் முன்னோக்கி ஓடுகிறார்களோ அவர்களுக்கு அடுத்த கட்ட நகர்வுகளில் வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும் எனவும் நான் முன்னர் விடுத்த புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா முன்னோக்கி ஓடுவதற்கு ஒரு தடை விழுந்துள்ளது. இதனையும் ஈழத் தமிழர் தேசம் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டு சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைக்கான ஆண்டு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மூன்றாவது அமர்வில் தீர்மானித்திருந்தது. இவ் ஆண்டில் சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைகைளக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகைளை முடுக்கி விடும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரின் முன்னரும் தொடரின் போதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும் செயல்வள நிபுணர்களும் அனைத்துலக விசாரணைக்கான தேவையினை வலியுறுத்தி அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகைளை மேற்கொண்டிருந்தனர். இவர்களின் செயற்பாடுகள் ஈழத்தமிழர் தேசத்தின் நீதி கோரும் குரலை அனைத்துலக அரங்கின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு துணை புரிந்திருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் கோருவது போல உள்நாட்டில் போதிய நடவடிக்கைகைளை சிறிலங்கா எடுக்கப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது போன்று சிறிலங்காவுக்கு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவதற்காhன அரசியல் முனைப்பும் இல்லை. இது அனைத்துலக விசாரணை என்ற எமது நிலைப்பாட்டை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும். சிறிலங்கா அரசாங்கம் மீதான அனைத்துலக விசாரணைகளை கொண்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இயங்கி வரும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்தவாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது குறித்த தனது நடவடிக்கைகைளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா மீதான தீர்மான வாக்கெடுப்பு உலகப் புவிசார் மூலோபாயம் மற்றும் அரசியலில் காணப்படும் முரண்பாடுகளையும் சுட்டி நிற்கிறது. அமெரிக்கா தலைமையிலான ஒரு முகாமும் ருஸ்யா � சீனக் கூட்டின் தலைமையில் இன்னொரு முகாமுமாக வளர்ச்சியடைந்து வரும் - புதியதொரு பனிப்போர்க்கால அரசியல் நிலைமையினையும் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா தலைமையிலான ஒற்றை மைய அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது வெளிப்படும் அதேவேளை அமெரிக்கா தென்னாசியப் பிராந்தியத்தில் - சிறிலங்காவில் கூடுதலாக நேரடிப்பாத்திரத்தை வகிக்கும் நிலைமைகளையும் இத் தீர்மான நடைமுறை காட்டி நிற்கிறது. இச் சூழலையும் இதன் தர்க்கரீதியான முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கினையும் ஈழத் தமிழர் தேசம் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டிய அவசியத்தையும் நாம் குறித்துக் கொள்ளல் முக்கியமானது.
இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது சிறிலங்காவின் விருப்பத்துக்கு மறான செயற்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டிய இராஜதந்திரத் தேவையுடன் தமிழகத்தில் இருந்து கிளம்பிய அழுத்தமும் துணைபுரிந்திருக்கிறது. இத்தகைய அழுத்தத்தை சிறிலங்கா மீதான தவறான வெளியுறவுக் கொள்கையினை இந்தியா மாற்றியமைக்கும் வரை உறுதியாகத் தொடரவேண்டும் எனத் தமிழக அரசியல் தலைவர்களையும் மக்களையும் நாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஈழத் தமிழ் மக்களுக்கு உலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டுமென குரல் கொடுத்து வரும் நட்பு சக்திகளின் குறிப்பாக தமிழக, மலேசியத் தமிழ் உறவுகளது கரங்களைத் தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றோம். ஈழத் தமிழர் தேசம் தனக்கென தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்வதுதான் இனஅழிப்புக்குள்ளாகி நிற்கும் நமது தேசத்தக்கு உண்மையான நீதியினைத் தரக்கூடியது. இந்த உணர்வினை உயிர்ப்புடன் உள்ளிருத்திக் கொள்ளும் அதேவேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலக மயப்படுத்திய மாவீரர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.
சிங்களத்தின் கொடும் இனஅழிப்புக்குள்ளாகி கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களின் உயிர்க்கூடுகளும் நமது நீதிக்கான குரலை அனைத்துலக அரங்கில் உரத்து ஒலிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. நமது தேசத்தின் நீதிக்கான இந்தப் போரில் அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வெற்றியடைவோம் என நாம் இத் தருணத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் - ஈழத்தமிழர் பிரச்சனைக்கான வாசல் கதவு திறந்துவிட்டது:

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாக ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகூட்டதொடரில் சிறீலங்கா மீதான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வெற்றி அமைகின்றது என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நொடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜ.நா மனிதஉரிமைகள் அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தமிழ்மக்களுக்கு முழுமனநிறைவு அளிக்காத தீர்மானமாக இருந்தாலும் அந்த தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து வெற்றிபெற செய்தது என்பது தமிழ்மக்களுக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.
ஜ.நாடுகள் சபையிலோ அல்லது அது சார்ந்த துணைஅமைப்புக்களிலேயோ உள்நுளைந்து ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாகும் தொடர்ந்து நாங்கள் எடுத்துக்கொள்கின்ற முயற்சிகள் இறுதி வெற்றி கிடைப்பதற்கு வளிவகுக்கும் அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நின்று நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்தியாஅரசு தன்னுடைய நிலையினை மாற்றிக்கொண்டு தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது இன்னெரு பாரிய வெற்றியாகும்.
இந்தியாவின் போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் தொடர்ந்து நீடிக்கவேண்டும் அதற்கு 7கோடி தமிழ்மக்களின் ஒன்று பட்டபோரட்டமூலமே சதிக்கமுடியும் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் வெற்றிபெறுவோம். என்று தமிழக தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தில் இந்த செய்தியினை தெரிவித்துள்ளார்.