மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும் அழியாது உம் புகழ் பாரினிலேஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும்
அழியாது உம் புகழ் பாரினிலே
ராஜ கோபுரமாய் உயர்ந்த எம் தலைவா
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
பெரும்பான்மை என பெரும் சீற்றம் கொள்ளும்
பேரினவாதத்தை அழித்திட வா வா
அழிந்தது பயங்கரவாதம் என அறிவிப்போருக்கு
பதுங்கும் புலி பாயும் என பறை சாற்றிட வா ...........,


போன வழி மாறலாம் ஆனால்
போகும் வழி மாறாது
ஆழ்கடலில் அலை ஓய்ந்தாலும்
பாயும் புலியின் சீற்றம் அடங்காது ,
முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிவல்ல
எம் வாழ்வில்
மீண்டும் எழுவோம் புதியதோர் பூகம்பமாய்
புறப்பட்டு தலைவனே புறப்பட்டு வா தலைவா............,


கடற்படை தரைப்படை வான்படை என
முப்படையின் தலைவனே பிரபாகரா
எப்படை வரினும் அப்படை வென்று
எம்படை வெல்ல துணிவாய் பிரபாகரா ,
சாகவில்லை எம் தலைவன்
சரித்திரம் படைப்பான் தரணியிலே
மரணிக்கவில்லை எம் தலைவன் என
மார்தட்டி சொல்கிறோம் தமிழர் நாம்...............


தழிழர் கண்ணீர் துடைக்க வந்த தலைவனே
நீ சுட்டும் திசையில் செல்ல புறப்படுவோம் தமிழர் நாம்
காட்டி கொடுத்திட்ட கயவரை கொன்றிடுவோம்
கரிகாலன் படையில் இணைந்திடுவோம்
நாகரீக வாழ்க்கையல்ல நம் வாழ்வு
நமக்கென வேண்டும் ஒரு தனிநாடு...................


அதற்கென போராடுவோம் ஒன்றிணைவோம்
புறப்படுவோம் புதியதோர் பாதையில்,
தமிழர் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லுடா
புலம்பெயர் தமிழினமே புறப்படு போரிட............

புதியதோர் ஈழம் படைப்போம்
எமக்கென ஒரு நாடு வேண்டுமென
தன்னுயிரை தியாகம் செய்த
மண்ணில் மடிந்த மாவீர செல்வங்களின்
கனவை நனவாக்கிடுவோம்,
மாவீரர் கனவு நனவாக
தலைவனின் புதிய அகவையிலே
தமிழீழம் பெறுவோம்
இது தலைவன் எம் மேல் உறுதி ................


- தமிழ் ஈழத்தில் இருந்து கவிப்பிரியா -

உறவுகளே - இளையோரே - நாம் செய்த தவறு என்ன?உறவுகளே நாம் செய்த தவறு என்ன?
எமது தாயகத்தில் நாம் அமைதியோடு வாழ ஆசைப்பட்டது தவறா?
சுதந்திர உணர்வுள்ளவராக - மனித நேயத்தோடு - மானிட தர்மம்
கண்டு நாம் வாழவே முடியாதா? - அன்னியனுக்கு தலை வணங்காது
வாழ்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

 
ன்றைய காலம் பொழுது போக்கிற்கான - கருத்து நிலைக்
காலமல்ல - துடித்தெழுந்து செயற்படவேண்டிய வேளை இது -
அன்னியன் எமது உரிமையைத் தீர்மானிக்க விடுவதா உறவுகளே? -
வாதங்களையும் - கருத்துக்களையும் - முன் வைத்து
மக்களைக் ஓரணியாக்கி - ஒன்றாகிச் செயற்படுவோம்.


இன்றைய காலம் எமதாக - விடியல் காண விரைந்துசெயற்படுவோம் -
வாருங்கள் - கடந்த காலம் மீளாது - நிகழ்காலத்தை
நியமாக்க - உறுதி கொண்டு - உணர்வு கொண்டு -
தாயக மக்களினதும் - புலம் பெயர்ந்த - எமது நிலையற்ற
வாழ்வினூடாக - தாயகத்தை மீட்டெடுக்க - தடை தாண்டி வாருங்கள்.


தாயகமும் - தமிழ்மொழியும் எமதுதான் - மட்டுமல்ல -
நீயும் - நானும் உறவுதான் - உனக்கும் - எனக்கும் -
உணர்வும் - உற்றம் - சுற்றம் - வாழுமிடம் - வாழ்வாதாரம் -
எல்லாமே ஒன்றுதான் - எம்மைக் காக்க - தம்மைத் தந்த -
உத்தமர்களின் உணர்வுகளோடு - நாம் உண்மை காக்கப் புறப்படுவோம்.


இன்றைய காலம் உனதும் - எனதும் - வேற்றுமைகளை
மறந்துவிடுவோம் - விட்டுக்கொடுத்து - தடை தாண்டி -
முன்னேறுவோம் - உறவுகளே ஓரணியாக - ஓர்குரலாக
உரிமைக்காக ஒன்றுபடுவோம் - தலைவனின் பாதையில் -
உலகத்தை அரவணைத்து - தாயகத்தை மீட்டெடுப்போம்.


இது வசந்தம் காலமல்ல - போர் மேகம் சூழ்ந்த தேசத்தின் -
புது விடியலுக்கான காலம் இது - உனது கைகளில் தவிக்கிறது -
தூக்கி வீசிவிடாதே - அன்போடு அரவணைத்துக்கொள் - மனிதம்
உன்னையும் மனிதனாக்கும் - வாலாறு உனக்கும் தலைவணங்கும்
தமிழர் தாயகத்தின் வரலாற்றில் நாமும் இணைந்துகொள்வோம்.


தோப்பூரான் 12.12.12.

திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் மீண்டு எழுந்து தமிழீழ வரலாறு படைக்க வாரீர்.


உண்மையோடு - உணர்வோடு - உரிமையோடு வாழ - மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம். 1505ஆம் ஆண்டிலிருந்து - அடைக்கலம் நாடி - நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயனுக்கும் - ஒல்லாந்தனுக்கும் - பிரித்தானியனுக்கும் எதிராக - எமது உரிமை காக்க போராடினார்கள் - எங்களது முப்பாட்டனார்களும் - அன்றிலிருந்து போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டுதானே இன்றுவரை தமிழினம் உயிர்வாழுகின்றது என்பதும் வரலாறு - நீ அறியாயா?
   ஈழத்தீவில் இருந்த மூன்று தனி நாடுகளும் (தமிழீழ நாடு � கண்டி நாடு � கோட்டை சிங்கள நாடு) என்பன - மொழி � கலை � பண்பாடு � சமயம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் - என்பவற்றால் வேறுபட்டிருந்த - இரு இனங்களையும் - தமது நிர்வாக நலனுக்காகவே பிரித்தானிய அரசு 1833ஆம் ஆண்டில் - தமிழ் மக்களின் அனுமதியின்றி - ஒற்றை ஆட்சி முறைக்குள் நிர்வாகப்படுத்தினர் - ஆங்கிலேயரின் இவ் இணைப்பினால் - தமிழீழம் தனக்கே உரித்தான - பிரதேசம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் என்பவற்றை அழித்துவிட்டனர் என்பதே - ஆங்கிலேயர் வரவால் தமிழீழம் அடைந்த அடிப்படைத் தீமைகளாகும். இது வரலாறு.
ஈழத்தீவை நிர்வகிக்கவென பிரித்தானியரால் ஒரு சட்ட நிருபண சபை உருவாக்கப்பட்டது அதில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள இனவாதத் தலைவர்களின் திட்டமிடல்களால் -1835ஆம் ஆண்டிலிருந்தே - தமிழர் வாழ்விடங்களில் - அபிவிருத்தி என்ற பொய்யுரையோடு -சிங்கள மக்களை - தமிழர் தாயகம் எங்கும் - ஊடறுத்து குடியமர்த்தினர் என்பதும் - இது இன்றுவரை தொடர்வதையும் மறக்காதீர்கள் -
இது பற்றி அன்று எமது தலைவர்களும் - மக்களும் எடுத்துரைத்தும் கருத்தில் கொள்ளாது பிரித்தானிய அரசு செய்த தவறான திட்டமிடல்களால் - 1948ஆம்; ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய போது - எமது தலைவர்கள் - எமது உரிமையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்த அத்தனை முயற்சிகளையும் - சிங்களத் தலைவர்களின் ஏமாற்றுத் தனங்களைப் புரிந்து கொள்ளாத - பிரித்தானியர் - தமிழீழ நாட்டையும் சிங்களத்தோடு விட்டுச் சென்றுவிட்டனர் - அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத்தால் அழிக்கப்படும் ஓர் இனமாக முகவரியற்றவர்களாக்க சிங்களம் பல்வேறு வளிகளிலும் செயற்படுவதை உணரவே மாட்டாயா?அன்றிலிருந்து - தமிழினத்தைக் காக்க - உரிமையோடு வாழவைக்க - இடர் பல சுமந்த - சனநாயக வழியில் உரிமை கேட்ட எம் தலைவர்களுக்கும் - பௌத்த சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தால் தாக்கப்பட்டு கொழும்பு கோல்பேசு கடலில் தூக்கி எறியப்பட்டதும் - சிறைகளில் அடைக்கப்பட்டதும் - ஒப்பந்தங்கள் - பேச்சுவார்த்தைகள் - குழுக்கள் - சபைகள் என்று காலத்துக்குக் காலம் ஏற்ப - தமிழர்களை சிங்கள அரசுகள் ஏமாற்றி வந்ததும் - வருவதும் - வரலாறும் -பிரித்தானிய அரசு விட்டுச் சென்ற தவறுதல்களின் ஊடாக - இலங்கை என்ற இரு தேசிய இனங்கள் வாழ்ந்த நாட்டில் - தமிழ்த் தேசிய இன மக்களின் அனுமதியற்று � ஆதரவற்று - தன்னை 1972ஆம் ஆண்டில் சிறிலங்கா பௌத்த சிங்கள நாடு என்றும் - சிங்களமே அரச மொழி என்றும் பிரகடனப்படுத்தி � தமிழரின் இறைமையை தனது கையகப்படுத்த - அல்லது ஈழத்தீவை வந்தேறு குடிகளான சிங்களத் தேசிய வாதிகள் - பௌத்த சிங்கள நாடாக்கக் கனவு காண்கின்றனர் என்பதறிக -
சிறிலங்காவின் விவகாhங்களில் தலையிடும் நீதிமான்களுக்கு ஓர் வேண்டுகோள்!
நாம் கோருவது எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட உரிமையையே! 1970 ஆண்டின் - ஐநா சாசனத்திற்கு உள்ளடங்கிய � தாயகம் - தேசியம் - தன்னாட்சி � கொண்ட சுயநிர்ணய உரிமையே. � வீதியும் - வீடும் - மருந்தும் - உணவும் - உதவிகளே தவிர இவை உரிமையல்ல என்பதறிக - மீண்டும் சிறிலங்காவுடன் இணைந்து எம்மை அழிக்க முற்படாதீர்கள்! அடக்கு முறை சட்டங்களோடு - தமிழரை ஆழ நினைத்த சிங்களம் - அமைதியின்றி தவிப்பதைப் பார் - ஒன்றுபட்ட தமிழராய் ஓரணியாய் - எம் உரிமைக்காக மீண்டும் மீண்டெழுவோம்.
தம்பி உன்னைத்தான்:
உரிமைக்காக - உறவைக் காக்க - தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வரலாற்றின் ஊடாக களமாடினாய் - இன்றும் இயங்கு நிலையில் இருக்கும் நீங்கள் - நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட துறைகளினூடாக � எமது மக்களாக - தமிழ்த் தேசியத்தையும் இன்றைய தாயக நிலையையும் - மக்களையும் - முதன்மைப்படுத்தி விட்டுக்கொடுப்புக்களின் ஊடாக ஒன்று பட்ட இயங்கியல் நிலையினூடாக � செயற்பாடுகளை விரைவு படுத்த முடியும் என்ற ஆதங்கங்களோடு � தம்பிகளே � தங்கைகளே - எமது உரிமைக்காக - நாம் மீண்டும் மீண்டெழுந்து செயற்படுவோம் வாருங்கள்.
1995ல் இருந்து � தமிழினத்தின் வாழ்வியலுக்கு எதிரான தடைச்ச சட்டங்களுக்கு மத்தியில் -வாழ்வாதாரங்களும் - வாழ்விடங்களும் அழிக்கப்பட்டு - சுனாமியும் - வெள்ளப்பெருக்கும் தந்த அனர்த்தனங்களோடு � அனந்தபுரத்தையும் - வலைஞர்மடத்தையும் - வட்டுவாகலையும் - நந்திக்கடலையும் - நினைவிற் சுமந்து எம்மக்களின் வாழ்வின் துயக் போக்க ஓன்று பட்ட உலகத் தமிழராய் மீண்டும் மீண்டெழுவோம் வாரீர்.
சிறிலங்கா நண்பர்களே! நண்பிகளே!
தமிழர்கள் நாம் எந்த ஒரு இனத்தவர்க்கும் - தேசத்திற்கும் எதிரானவர்களல்ல!
நாம் கோரி நிற்பது எம்மிடம் இருந்து பறிக்கப்படும் - அழிக்கப்படும் எமது பிறப்புரிமைகளேயே.
நாம் உரிமை கொண்ட இனமாக வாழவே - முயன்றோம் - முயற்சிக்கின்றோம்.
தமிழீழம் மலரும் - அப்போதும் சிறிலங்காவின் நட்பு நாடாகவே இருக்கும். தமிழின அழிப்பும் - தமிழின நிலப்பறிப்பும் - யுத்தமும் - மக்களின் மேலான பொருளாதார அழுத்தங்களும் - சர்வாதிகாரப் போக்கும் பௌத்தத்தின் காருண்யமல்ல என்பதறிக.
ஒன்றுபடுவோம் உரிமையைக் காக்க.
தோப்பூரான்
7.12.2012

ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் - அணிந்துரை - பழ.நெடுமாறன்

ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழகமெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
 நீதி, நேர்மை, உண்மை, ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டன. ராஜீவ் கொலை வழக்குப் புலன்விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதமும், தீர்ப்பு அளிக்கப்பட்ட வரையிலும் பல உண்மைகள் ஆழக்குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் கொலை வழக்கு விசாரணையும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை வழக்கு விசாரணையும் பகிரங்கமாகத்தான் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டபோது இரகசியமாக நடத்தப்பட்டது. அதுபற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. உண்மைக் குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்தில்தான் தொடக்கத்திலிருந்து எல்லாமே நடத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவிவிடாமல் தடுக்கும் கருவியாக ராஜீவ்  கொலை வழக்கை தில்லி பயன்படுத்தியது. அதனால்தான் இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13பேர் ஈழத் தமிழர்கள். சரிசமமான எண்ணிக்கை என்பது தற்செயலானது அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைப்பதற்காக இந்தச் சதி வகுக்கப்பட்டது. இந்த உள்நோக்கத்துடனே சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக்குழு தனது புலன்விசாரணையை நடத்தியது.
அகில இந்திய ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி அகில இந்திய செயலாளராகத் திருச்சி வேலுசாமி பதவி வகித்தார். சுப்பிரமணிய சாமி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உடன் பயணம் செய்பவர் வேலுசாமி ஆவார். சு.சாமியின் நம்பிக்கைக்குரிய மிகநெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.
1991 மே 21ஆம் தேதி ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட நாளிலும் அதற்கு முன்பாக 2 நாட்களும் தமிழ்நாட்டில் சுப்பிரமணிய சாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம், பேசிய பேச்சுகள் உடனிருந்த வேலுசாமியின் உள் மனத்தில் சந்தேக அலைகளை எழுப்புகின்றன. அது பற்றி விரிவாக இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார். பிறகு நன்கு விசாரித்து சுப்பிரமணிய சாமிக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதை அறிந்து கொண்ட வேலுசாமி முதலில் திடுக்கிட்டபோதிலும் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும் என முடிவு செய்து ஜெயின் கமிசன் முன் அறிக்கை அளிக்கிறார். சோனியா காந்தியைச் சந்தித்துத் தானறிந்த உண்மைகளைக் கூறுகிறார்.
தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார்.
இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார்.
சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியும்கூட புலன் விசாரணைக் குழுவினர் அவற்றைச் சட்டை செய்யாமல் புலிகளை மையமாகக் கொண்டே செயல்பட்டனர்.
உலகம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை.
அதுமட்டுமல்ல, ராஜீவ் கொலை குறித்த பல கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படவில்லை. அவற்றுள் சில: 
1. ராஜீவ் கொலை குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் ஆட்சி அமைத்தது. ராஜீவ் காந்திக்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா? என்பதைப்பற்றித்தான் இந்தக் கமிசன் விசாரிக்கும் என்றும் இந்தக் கொலைக்கான சதியின் பின்னணி குறித்து கமிசன் ஆராயாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரம்புக்குட்பட்டு விசாரணை நடத்திய ஜே.எஸ். வர்மா தனது அறிக்கையை 1992ஆம் ஆண்டு சூன் மாதம் மத்திய அரசிடம் அளித்தார். ஆனால் ஐந்தாண்டு காலமாக இந்தக் கமிசன் அளித்தப் பரிந்துரைகள் எதுவும் அமுலாக்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பிரதமர் நரசிம்மராவ் அரசுக்கு ஏற்பட்டது. சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிசன் செய்த முக்கியமான பரிந்துரை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் வினோத் பாண்டே உளவுத்துறைத் தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மணி சர்மா பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொன்னால் இந்த நால்வரும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றப்பிறகே இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக அந்த நாலுபேரும் மத்திய நிர்வாக மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஓய்வுபெற்றப்பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என அது ஆணையிட்டது. இதன் மூலம் மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்? இந்தக் கேள்விக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.
2. ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்திருந்தார் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத். கொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே யாசர் அராபத்தின் பிரதிநிதி ராஜீவைச் சந்தித்துச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். ஆனால் புலன் விசாரணைக்குழு யாசர் அராபத்தைச் சந்தித்து எந்த அடிப்படையில் அவர் எச்சரிக்கைச் செய்தார் என இறுதிவரை விசாரிக்கவேயில்லை. இது ஏன்?
3. ராஜீவ் கொலை பின்னணிக் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிசன் முன் ஆஜராகும்படி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்  கி.வீரமணி. ம.தி.மு.க. பொதுச் செலயாளர் வைகோ, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். ஆனால், ஜெயின் கமிசன் தனது இடைக்கால அறிக்கையை அளித்தப் பிறகு இவர்களை கமிசன் அழைத்தது என்பது மட்டுமல்ல. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மட்டும் இரகசிய விசாரணையாக நடத்தப்பட்டது. ஏனெனில் இந்த நால்வரும் புலிகளின் ஆதரவாளர்கள் எனவே இவர்கள் கூறும் தகவல்கள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரகசிய விசாரணை என்று திட்டமிட்டுச் செய்தார்கள்.
4. இந்திராகாந்தி கொலை குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தக்கர் கமிசன் தனது அறிக்கையில் இந்திரா கொலையில் அவர்களது இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. இக்கொலையில் இந்திராவின் தனி உதவியாளர் ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தவான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இது ஏன்? இந்திராவின் அலுவலகத்தில் சாதாரண வேலையில் இருந்த ஆர்.கே. தவான், இந்திராவின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக திடீரென உயர்ந்தது எப்படி? சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த போது காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு நடைபெற்றப் பொதுத் தேர்தலில் தில்லி தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்குக் காங்கிரஸ் வேட்பாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அளவுக்கு அவர் செல்வாக்குப் பெற்றதற்கு யார் காரணம்? சோனியாவின் தயவினால்தான் இவருக்குப் பெரும் பதவிகள் கிடைத்தன. தனது மாமியாரின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு சோனியா உதவி செய்ததின் மர்மம் என்ன?
இந்திராவின் இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன என தக்கர் கமிசன் சாட்டிய குற்றச்சாட்டின் பின்னணி என்ன? இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் பொருள். இந்திரா குடும்பத்தில் ராஜீவ் காந்தி சோனியா, சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா ஆகிய மூவரும் இருந்தனர். இந்திரா உயிரோடு இருந்த காலத்திலேயே அவருடைய வெறுப்புக்கு ஆளாகி மேனகா வெளியேற்றப்பட்டார். எஞ்சியுள்ள ராஜீவ் சோனியா, ஆகிய இருவரோ இருவரில் ஒருவரோ இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி சம்பந்தப்பட்டவர் யார் என்பது? ஆர்.கே. தவானுக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அல்லது இந்தச் சூழ்ச்சியில் அவருக்கும் பங்கு இருக்க வேண்டும்? கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிலிருந்து மீளுவதற்கும் காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவிகளை அடுக்கடுக்காக வழங்கியும் உதவவேண்டிய கட்டாயம் என்ன? உதவாவிட்டால் சூழ்ச்சிகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் விடை இல்லை.
5. பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து முக்கியமான கோப்புகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டன என புது தில்லியில் இருந்து வெளிவரும் அவுட்லுக் வார ஏடு (24-11-97) ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது.  காணாமல் போன கோப்புகளில்  என்ன இருந்தது? ராஜீவ் கொலை நடந்த அன்று சந்திரசாமியும், சுப்பிரமணிய சாமியும் எங்கே போனார்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்கள் இருந்தன. கொலையாளிகளுக்குத் தேவையானப் பணத்தை சந்திராசாமியே கொடுத்தார் என்பதற்கான ஆவணங்கள் இருந்தன. என அவுட்லுக் ஏடு குற்றம்சாட்டியது. இதற்கு அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்?6. திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கு ராஜீவ் காந்தியைக் கட்டாயப்படுத்தி வரவழைத்த மரகதம் சந்திரசேகர்  குறித்து பல புகார்கள் எழுந்தன. எத்தகைய சூழலில் ராஜீவை இக்கூட்டத்திற்கு அவர் வரவழைத்தார் என்பது குறித்தோ அல்லது இந்தப் படுகொலை குறித்தோ மரகதம் சந்திரசேகரிடம் இதுவரை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தாதது ஏன்?7. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுக்கு ராஜீவ் கொலையில் பங்கு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது இந்த கோணத்தில் புலன் விசாரணை நடத்தப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. சிங்களத் தலைவர்களான காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரமசிங்கே போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் பிரேமதாசா இருந்தார் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டது. இந்தியப் படையைத் திரும்பப் பெறுவதற்கு ராஜீவ் மறுத்தக் காரணத்தினால் கடுங்கோபம் அடைந்திருந்த பிரேமதாசா ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடாது என்ற கேள்விக்குரிய பதிலை புலன்விசாரணைக்குழு அறிவதற்கு எத்தகைய முயற்சியும் செய்யாதது ஏன்?
8. ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சி.பி.ஐ. அதிகாரியான cகுமார் என்பவர் இலண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் இந்த வழக்குத் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டதாக அந்த விமான நிலைய காவல்நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். முக்கியக் கோப்புகளை தொலைத்த அந்த அதிகாரிமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளை திரும்பப்பெற ஏன் மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இதுபோன்ற பல உண்மையான சந்தேகங்களுக்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது சி.பி.ஐ. தரப்பிலிருந்தோ எத்தகைய விளக்கமும் அளிக்கப்படவில்லை. புலன் விசாரணையின் தொடக்கக் கட்டத்திலிருந்தே விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்தவர்கள் என தீர்மானித்துக்கொண்டு அந்த அடிப்படையில் விசாரணையும் பிறகு வழக்கும் நடத்தப்பட்டனவே தவிர உண்மையை அறியும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தடா நீதிமன்றத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் கூறமுடியாமல் சி.பி.ஐ. தரப்பு திணறிய விவரங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டன. இதற்காகத்தான் இந்த விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது.26 பேர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்துச்சென்று நடத்திய குழுவின் தலைவர் என்ற முறையில் நான் இதைக் கூறுகிறேன். தடாச்சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என எங்கள் தரப்பு வழக்கறிஞர் என்.நடராசன் வாதாடியபோது 3 நீதிபதிகளும் திகைப்புடன் அவர் கூறியதற்குச் செவிமடுத்தார்கள். சி.பி.ஐ. தரப்போ பதறியது. இறுதியாக எங்கள் வழக்கறிஞரின் வாதம் வென்றது. தடாசட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 19 பேரை குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்தது. 
அப்படியானால் தடாச்சட்டத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்  செல்லாததுதானே. அப்படிப்பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தானே மூவர் இன்னமும் தூக்கு மேடையின் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலே நான் குறிப்பிட்ட கேள்விகளுக்குரிய விடைகள் முழுமையாக வெளிவந்தால் இந்த மூவரும் இன்னும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிற நான்கு பேரும் குற்றம் அற்றவர்களாக வெளிவரத்தானே செய்வார்கள்.
சி.பி.ஐ. புலன்விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய நூலில் புலன்விசாரணை உண்மையாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டுள்ளாரே? அதற்கு முன்னாள் அதே புலன்விசாரணைக் குழுவில் ஆய்வாளராக பணியாற்றிய மோகன்ராஜ் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவிட்டு தனது பதவியில் இருந்து விலகினாரே? ஏன்? அடுக்கடுக்கான இந்த வினாக்களுக்கு இதுவரை விடை இல்லை.
மாணவர் காங்கிரசின் துடிப்புள்ள இளைஞராக வேலுசாமி இயங்கிய காலத்திலிருந்து நான் அவரை அறிவேன். தலைவர் காமராசர் மீது அளவற்ற பக்தி கொண்டு அவரது தொண்டராக அன்றும் இன்றும் விளங்கி வருகிறார். அதனால்தான் உண்மைக்காகப் போராடும் துணிவும், சத்திய ஆவேசமும் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளால் உந்தித் தள்ளப்பட்டு, தான் அறிந்த உண்மைகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்காக அவரை மனமாறப் பாராட்டுகிறேன்.
சந்திரசாமிக்கும், சுப்பிரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் நிச்சயமாகப் பங்கு உண்டு என்பதை பல்லாண்டு காலமாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிவரும் நண்பர் வேலுசாமியின் இந்த நூல் திறவாத விழிகளையும் திறக்க வைக்கும். சிந்திக்காதவர்களையும் சிந்திக்கவைக்கும் என நம்புகிறேன்.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

காவிரியில் தமிழக அரசு கோரும் தண்ணீரை திறந்து விடக் கோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

கர்நாடக அணைகளில் இப்போதுள்ள 80 டி.எம்.சி. தண்ணீரில் தமிழக அரசு கோரியுள்ள 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். தண்ணீர் இன்றி கருகிப் போன சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,

வேளாண்மைக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய பேரணியை தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி கீழ்ப்பாலம், ரயிலடி, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முடிவடைந்தது.

இதில்,மத்திய அரசு, பிரதமர், கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீர் விட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யானாபுரம் சி. முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலர் தெ. காசிநாதன், வோளாண்மை உழவர் இயக்கம் கோ. திருநாவுக்கரசு, இயற்கை வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கே.கே.ஆர். லெனின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
தொடரட்டும் இந்த ஒற்றுமை!

காவிரி பிரச்னை என்றாலே... கர்நாடகத்தின் மைசூர், மாண்டியா பகுதி விவசாயிகள் மிகவும் ஒற்றுமையோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆனால், தமிழகத்தில் அரசியல் உள்ளிட்ட பற்பல காரணங்களால் அந்த ஒற்றுமையை பார்க்க முடியாமலே

இருந்து வந்த நிலை, தற்போது மாற ஆரம்பித்துள்ளது. சமீப காலங்களாக அந்தப் பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை... வியக்க வைக்கிறது.
 பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறது 'காவிரி உரிமை மீட்புக்குழு'. இக்குழுவில் அனைத்து விவசாய சங்கங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

சனி, 1 டிசம்பர், 2012

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி காந்திநாடு - பழ. நெடுமாறன்

2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில்  ஐ.நா. மனித உரிமைக் கமிசனின்  உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்கே தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும், நார்வே நாட்டு பிரதிநிதிகள், இராசபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நாவிற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை இராசபக்சே அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
இராசபக்சே அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷ்யா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமை குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின.
இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும் இலங்கையில் அனைத்துலக மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே வேளையில் 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என இந்தியா கனவு காண்கிறது. ஆனால், இலங்கையில் சிங்கள தீவிரவாத கட்சிகள் 13வது சட்டத் திருத்தத்தை அடியோடு இரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் இராசபக்சே அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்கு தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி இராசபக்சே ஒருபோதும் செயல்படமாட்டார் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு இந்த நாடகத்தை இந்தியா நடத்துகிறது.
சுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணை குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவைகளை தனது நாட்டிற்குள் நுழையவோ விசாரணை நடத்தவோ அனுமதிக்க இராசபக்சே பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும்  இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.
2010ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம் போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம்  வந்து குவிந்தன. மிகக்கொடுமையாக நடைபெற்ற அட்டுழியங்கள் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013 ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின்  நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்து பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளனர். அவற்றை கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில்  விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 2ஆம் உலகப்போருக்குப்பின் 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி இலண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2ஆம் உலகப்போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள்  படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லோவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த  கொசவோ மக்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்சினையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின்  இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய இராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா.வின் சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன. இதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக் நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சூலையில் கைது செய்யப்பட்டு போர் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
மேலேகண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி இராசபக்சே ஆவார்.  மனித குலத்திற்கு எதிராக மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர் ஆவார். ஆனால் அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். இந்தியாவும் சீனாவும் தனக்குத்துணையாக இருக்கும்வரை  எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் சனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக்கட்டுகிறார். அவர்கள் சிங்களவராக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் சனநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட 79 துறைகளைக் வைத்திருக்கிறார்.
அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள இராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகா மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராசபக்சே கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் இராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த இராசபக்சே இப்போது அந்நாட்டின் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப்பணிகளுக்கான தேர்வாயம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் குடியரசுத் தலைவராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வரமுடியாது என்ற அரசியல் சட்டப்பிரிவை திருத்தி எத்தனைமுறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக்கொண்டுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியின் தலைவரான சந்திரிகா உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் இராசபக்சே தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த  யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கைப் பார்த்தன. சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவிலிருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாக கைப்பற்றினான். வேடிக்கைப் பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணிசேர்ந்தன. 2ஆம் உலகப்போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்கு புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற இராசபக்சேவுக்கு எல்லாவகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள். தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிகதூரத்தில் இல்லை.
ஆனால் காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக விளங்குகிறது என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.

மாபாரதப் போரில் கண்ணன்! ஈழப்போரில் பழ. நெடுமாறன்!!

தமிழில் "வாள்' என்பது அனைத்துப் படைக்கருவிகளையும் குறிக்கும். "கோல்' என்பது செங்கோல் என்று விரிந்து ஆட்சியைக் குறிக்கும். இந்த இரண்டையுமே தமிழர்க்கு வழங்கி, தமிழர் எழுச்சியின் வடிவமாக வாழ்ந்து காட்டியவர் பிரபாகரன். 
வாராது போல் வந்த மாமணி.
அந்த மாமணியின் ஒளிவீச்சை நாமறியத் தருவதுதான் "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற மாவீரன் பழ.நெடுமாறனின் நூல்.
ஈழ விடுதலைப் போரை இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதப் போரோடு ஒப்பிட்டால், மகாபாரதத்தில் கண்ணன் வகித்த பாத்திரத்தை ஈழ விடுதலைப் போரில் ஏற்று புதிய வரலாறு படைத்தவர் பழ. நெடுமாறன் அவர்கள் என்றால் மிகையாகாது.
மகாபாரதப் போரில் கண்ணன் கருவியேந்திக் களத்தில் இறங்கியதில்லை. பார்த்தனுக்குத் தேரோட்டியாக இருந்தே பாண்டவர்களுக்குப் பல வகையிலும் உதவினான். அதுபோல் பழ. நெடுமாறன் அவர்களும் ஆயுதப் போர் நடத்திய புலிகளுக்கு எந்தவிதமான ஆயுதமும் ஏந்தாமல் ஆலோசகராக இருந்தே அனைத்து வகையிலும் உதவினார்.
மகாபாரதத்தில் கெளரவர்கள் பெரும்பான்மையினர். பாண்டவர்கள் சிறுபான்மையினர். ஈழப்போரிலோ சிங்களவர்கள் பெரும்பான்மையினர். ஈழத்தமிழர் சிறுபான்மையினர்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் எப்படித் தங்கள் உரிமைப் பங்காக முதலில் ஐந்து நாடுகள், பிறகு ஐந்து ஊர்கள் கேட்டு, அப்புறம் ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்று கேட்டு, கெளரவர்கள் அதற்கும் உடன்படாததால் போருக்குப் புறப்பட்டார்களோ, அப்படி ஈழத்தமிழர்களும் வெள்ளையர் வெளியேறிய பிறகான இலங்கையில் ஆட்சியை ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களரிடம், எல்லா உரிமைகளிலும் முதலில் 50க்கும் 50 கேட்டார்கள், அதாவது இணையாட்சி (சமஷ்டி) கேட்டார்கள்.
அடுத்து சுயநிர்ணய உரிமையோடு கூடிய தனித்தமிழ் மாநிலம் கேட்டார்கள். அடுத்து ஒன்றுபட்ட தமிழர் பாரம்பரியத் தாயகம் என்றாவது தமிழ்மக்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்டார்கள்.
அதாவது இணையாட்சி கேட்டு, மாகாணசபை கேட்டு, பிரதேசசபை, மாவட்டசபை என்று இறங்கிவந்த பிறகும், தமிழர்களுக்கு எதைக் கொடுக்கவும் சிங்களப்பேரினவாதம் உடன்படாததுதான் காரணமாகவும், வடகிழக்குத் தமிழர் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஒரு தலைப்பட்சமாகக் கிழித்தெறிந்ததின் காரணமாகவுமே ஈழத்தமிழ் இளைய குமுகாயம் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
அப்படித் தள்ளப்பட்டபோது ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பல ஆயுதப் போராட்டக் குழுக்கள் எழுந்தன என்றாலும், பாண்டவர்க்குக் கண்ணன் போல் புலிகளுக்கு நெடுமாறன் கிடைத்ததால் தமிழீழ விடுதலைப் புலிகளே நின்றார்கள். நான்கு ஈழப்போர்களில் மூன்றில் வென்றார்கள். தனியாட்சியும் கண்டார்கள்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஈழத் தமிழ்மக்களின் தேசியத் தலைவராகவே உயர்ந்தார். ஒளிர்ந்தார். ஆம், "ரா' போன்ற இந்திய உளவுப்படைகள் போராளிக் குழுக்களை ஒன்றை ஒன்றுடன் மோதவிட்டு அழியுமாறு செய்தபோது, அந்த அழிவுக்கு ஆட்படாமல் நிமிர்ந்து நின்று பிரபாகரன் தலைமையின் கீழ், நெடுமாறன் ஆலோசனையுடன் நடைபோட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே.
இதைத் தெரிந்திருந்தும் புரிந்து கொள்ளாமல் "சகோதரச் சண்டையினால்தான் அவர்கள் வெற்றி பெறுவது தவிர்ந்து போனது'' என்று தப்புக் கருத்துச் சொன்னவர்கள் தமிழ்நாட்டில் பலபேராவர்.
வியட்நாம் போரில் ஓசிமின் போல, பாலத்தீன விடுதலை போரில் யாசிர் அராபத் போல ஈழப்போரில் தம்பி பிரபாகரன் தரணியே வியக்கும் வண்ணம் சாதனை படைத்தார். நெடுமாறனின் நெளிவு சுழிவான ஆலோசனைகளுடன் தோள்கள் புடைத்தார்.
எனினும், நாலாவது ஈழப்போரில் எதிரிகள் வெல்லவும், புலிகளிடம் பூத்திருக்க வேண்டிய வெற்றி நழுவிப்போகவும் காரணம், ஓசிமின்னுக்குச் சீனாவும், சோவியத் ஒன்றியமும் பக்கபலமாக இருந்ததைப் போல, அராபத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளும், முசுலிம் நாடுகளும் அணிவகுத்து நின்றதைப்போல பிரபாகரனுக்கு எந்த நாடும் பின்புலமாக இருக்க முன்வராததாகும்.
பின்புலமாக எந்த நாடும் இல்லாவிட்டாலும்கூட அவர் தன் பலத்தில் வெற்றி பெற்றிருக்கவே செய்வார். ஆனால் பின்புலமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டே இந்தியா எதிரிக்கு உதவி, காலை வாரிவிட்டுவிட்டது. அன்றைய தமிழக ஆட்சியும் அதற்குத் துணைபோய்விட்டது.
அதைவிடக் கொடுமை! 1958-ல் இருந்தே "நாங்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவு, புதிய புறநானூறு படைக்கும் புலிகளுக்கு அரணாக இருப்போம்'' என்று சொல்லிக்கொண்டு, 1986-ல் அனைத்திந்தியத் தலைவர்களையும் கூட்டி வந்து மதுரையில் தமிழீழ ஆதரவாளர்கள் (டெசோ) மாநாட்டை நடத்தியவர்களே, நாலாவது ஈழப்போரின்போது (2008-2009) தமிழ்நாட்டு ஆட்சியில் மட்டுமின்றி, தில்லி நடுவரணசு ஆட்சியிலும் நாட்டாண்மை பண்ணிக் கொண்டிருந்தபோது முதுகில் குத்தியதாகும்.
மகாபாரதம் கதையிலேனும் பாண்டவர்கள் நாடுகேட்க உலகநீதியின்படி எந்த அடிப்படை உரிமையும் இல்லை. ஏனெனில், அத்தினாபுரி மன்னன் சந்தனுவின் வாரிசாக மூத்த தாரத்தின் மகன் வீடுமன் (பீஷ்மன்) முடிசூடிக்கொள்ள மறுக்கவே, இளைய தாரத்தின் மூத்த பேரன் திருதராட்டிரனே முடிசூட்டப்படுகிறான். அவன் குருடனானதால், அவன் தம்பியாகிய பாண்டு அவன் சார்பில்தான் அரசை நடத்தினான். திருதராட்டிரனுக்கு வாரிசு இல்லையென்றால்தான், பாண்டுவின் மக்களுக்கு ஆட்சியில் பங்குகேட்க உரிமையுண்டு. இருப்பினும் திருதராட்டிரனின் வாரிசு துரியோதனன் இந்திரப்பிரத்தத்தைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் பாண்டவர்களுக்காக வழங்கவே செய்கிறான்.
பின்னர் சகுனி மூலம் சூதாட்டத்தில் கபடமாக அதைக் கவர்ந்து கொள்கிறான் என்றாலும், இவர்கள் ஏன் சூதாட்டத்திற்கு இணங்க வேண்டும்? கிடைத்த நாட்டை இழக்க வேண்டும்?
இலங்கையைப் பொறுத்தவரை அதன் மூத்தகுடி தமிழினமே. வந்தேறி இனமே சிங்களராகும். அது மட்டுமின்றி, இலங்கையைச் சுதந்திரம் என்ற பெயரில் சிங்களரிடம் ஒப்படைத்த ஆங்கிலேயர்கள், அதற்கான இலங்கையின் இறையாண்மையைப் பெற்றது தமிழரிடமிருந்தேயன்றி, சிங்களரிடமிருந்தல்ல. அந்த உரிமை மாற்று ஆவணம்கூட இன்றும் இருக்கிறது.
னவே, அந்த இறையாண்மையைத் திரும்ப வழங்கியபோது நீதிப்படியும், உலக நியதிப்படியும் தமிழரிடம்தான் வழங்கியிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இலங்கைக்கு ஆங்கிலேயரிடமிருந்து முதன்முதலில் விடுதலை கேட்டவர்களும் தமிழரேயன்றி சிங்களரல்லர்.
மேலும், ஆங்கிலேயர் உட்பட்ட ஐரோப்பியர் இலங்கையை ஆக்கிரமிக்க வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டவர்களும் தமிழ் மன்னர்களேயன்றிச் சிங்கள மன்னர்களல்லர்.
மகாபாரதப் போரின்போது அன்றைய தமிழ்ப் பெருவேந்தனாகிய உதியன் சேரலாதன், கெளரவர்கள் - பாண்டவர்கள் இரு தரப்பாருமே அவன் உதவியைக் கேட்டபோது, ஒரு தரப்புக்குச் சார்பாக அவன் ஓடவில்லை. மாறாக, இரு தரப்புப் படைகளுக்குமே சோறிட்டு நடுநிலைமை காத்தான்.
அப்படி இந்தியா நடுநிலைமை காத்திருந்தால்கூட கண்ணனைப் போல் நெடுமாறனை அறிவுரைஞராகக் கொண்டிருந்த புலிகள், நாலாவது ஈழப்போரிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார்கள். இராசபக்சேவுக்குப் பிரபாகரன் தமிழன் வீரன் எப்படியென்று காட்டியிருப்பார்.
ஆனால், இந்தியா தமிழ்நாட்டு எட்டப்பர்களின் இரட்டை வேடத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சிங்களர் வெற்றி முரசு கொட்ட உதவி செய்தது. அதனால்தான் மகாபாரதக் கண்ணனைப் போல் ஈழப்போரில் நெடுமாறனால் வெற்றி ஈட்டிக் கொடுக்க முடியாமல், அது நழுவி விட்டது.
ஆயினும், "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற இந்த நூலின் மூலம் உலகத் தமிழர்களுக்கெல்லாம் அவரின் ஏற்றம் பற்றி மட்டுமல்ல "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல்'' உண்டாகும் விதமாக அருந்தமிழ்ச் சாதனை புரிந்திருக்கிறார் ஐயா நெடுமாறன்.
ஆம். 1200க்கும் மேற்பட்ட பக்கங்களில் அரிய, ஒளிப்படங்களோடு, தெளியாரும் தெளிவடையும் வண்ணம் பிரபாகரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஈழப்போராட்ட வரலாற்றையே வரைந்தளித்துள்ளார்.
புறநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழன் வீரத்தை, தனது வாழ்க்கையின் மூலம் கண்கூடாகத் தரணிக்கு உணர்த்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றால், அதில் மாசு மருவேது?
"பண்டை நாளில் மூவேந்தரையும் வென்ற பேராற்றல் படைத்த பெருவீரனான வாணனின் பெயரை இளைஞர்கள் தங்கள் மார்புகளில் எழுதிக்கொண்டு பெருமிதம் பொங்கத் திரிந்தனர் எனப் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அதைப்போல இலட்சிய வேங்கையான திரு. பிரபாகரன் தீரவாழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் இளைஞர்கள் வீறுபெற்று எழ வேண்டும்'' என்கிறார் நெடுமாறன் தன் முன்னுரையில்.
வாணன் வென்றது தமிழ் மூவேந்தர்களை. பிரபாகரன் வெற்றி கொள்ளப் படை நடத்தியதோ அயலவராகிய, தமிழினத்தை அழிக்க எண்ணும் சிங்களப் பேரினவாதிகள் மற்றும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த பன்னாட்டு ஏகாதிபத்தியவாதிகளை.
ஆகவே, வாணனிலும் உயர்ந்து நிற்கும் பிரபாகரனை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் இளைஞனும் வீரத்துக்கு முன்னுதாரணமாகக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.
அவருடைய பெயரை மட்டுமல்ல, படத்தையும் ஏந்தி நிற்கும் பட்டாளமாகத் தமிழ் இளைஞர்கள் உருவாகி வருவதை இப்போதே உலகமெங்கும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த நூல் தமிழ் இளைஞருக்கு மட்டுமல்ல, தமிழ் முதியோருக்கும் ஆண்-பெண் வேறுபாடின்றி ஆற்றலூட்டுகிறது என்றால் மிகையல்ல.
அதேவேளை மொத்த அரபுலகின் ஆதரவும் யாசிர் அராபத்துக்குக் கிட்டியது போல தமிழுலகின் முழு ஆதரவும் பிரபாகரனுக்குக் கிடைக்கவிடாமல் திசை திருப்பல்களைச் செய்த இந்திய தேசியம், திராவிட தேசியங்களின் திருகுதாளங்கள் மறுபடியும் ஈழ ஆதரவில் தொடராமலிருக்க, தமிழ்த்தேசிய அணுகுமுறை ஒன்றுதான் வழி என்பதை தமிழர் தேசிய இயக்கத் தலைவரான நெடுமாறன் அவர்கள் உணர்ந்து, பிரபாகரன் போல் பீடு நடைபோட முன்வரவேண்டும் என்பதே பாரகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
வெல்க பிரபாகரன் வெற்றியணி!
வாழ்க ஐயா நெடுமாறன் தமிழர் தேசியப் பணி!
நன்றி : "எழுகதிர்' ஆகத்து 2012

திங்கள், 26 நவம்பர், 2012

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: - நாம் தமிழர் கட்சி

News Service
மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.
   நம் இனத்திற்கு நேர்ந்த அந்த இழிநிலையை மாற்ற, சிங்களர்களுக்கு இணையான அரசியல் விடுதலையைப் பெற ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான், நம் மண்ணைக் காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, நமது இறைமையை மீட்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். உன்னதமான அந்த விடுதலை இலட்சியைத்தை நோக்கிய போராட்டத்தை, அக, புற வலிமையுடனும் உறுதியுடனும் முன்னெடுத்தவர்தான் நவம்பர் 26ஆம் நாளான இன்று பிறந்த நாள் காணும் நமது தலைவர், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத் திகழும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
தனது பிறந்தநாளுக்கு நமது தலைவர் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிக நாளாக, நம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், குடும்ப உறவுகளையும், மானுடம் எல்லாவற்றினும் பெரிதாகக் கருதும் உயிரையே ஆயுதமாக்கிய போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.
மாவீரர் தினமென்பது நமது மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த அந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளல்ல, மாறாக, அந்த ஈகையின் நோக்கம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க நாம் உறுதியேற்பதற்கேயாம். இதனை நமது தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரைகளில் இருந்து நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். நம் இனத்தை அடிமைப்படுத்தி, தமிழீழ தேசத்தை சிங்கள மயமாக்கிடும் நோக்கோடு நம் மீது இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள பெளத்த இனவாத அரசை எதிர்த்து, நம் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீரர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் மெளனிக்கப்பட்டது.
விடுதலைக் களத்தில் ஏற்பட்ட அந்த பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு, முடிந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இலங்கை அரசும், தம்மை இனத்தின் தலைவர்கள் என்று பீற்றிக்கொண்டவர்களும் கூச்சமின்றி பேசிய நிலையில்தான், நாம் தமிழர் கட்சி பிறந்தது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழினத்தை தட்டி எழுப்பியது. இனத்தின் விடுதலை என்கிற அந்த உன்னத இலட்சியத்தை நிறைவேற்ற ஜனநாயக வழியில் தமிழ் மக்களைத் திரட்டி போராடுவது என்று உறுதிபூண்டு, நம்மினத்தில் முளைத்த துரோகிகளின் துணையுடன் இனப் பகைவர்கள் புணைந்த அரசியல் சதியை தொடர்ந்து முறியடித்து, தமிழினத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் காத்து வருகிறது.
இனத்தின் விடுதலை என்பது மற்றுமொரு பிரச்சனையல்ல, அது அரசியலும் அல்ல, அது எம்மினத்தின் புனிதமான உரிமை. அதனை விட்டுத்தந்துவிட்டால், பிறது நமக்கென்று அரசியல் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவேதான் மாவீரர் தினத்தை கடைபிடிக்கும் நாம், அந்த நாளில், நமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்றிணைந்த திரட்சியே இனத்தின் விடுதலை வென்றெடுப்பதற்கான புரட்சியாகும் என்பதை தமிழர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.
நம் இனத்தை பூண்டோடு அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். போரின் கடைசி நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை.
தமிழினத்திற்கு எதிரான அந்தப் போரில் போர்க் குற்றங்கள்தான் நடந்துள்ளது என்று கூறுகின்றனவே தவிர, உண்மையில் நடந்த இனப் படுகொலையை பேச மறுக்கின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்றும், அதில் எம்மினத்தின் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், அது திட்டமிட்ட இன அழித்தலே என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காகவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.இப்படிப்பட்ட சர்வதேச சூழலில்தான், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க முன்னணியில் இன்று உழைத்திடம் நம் இனத்தின் பெருமைமிக்க போராளிகளை, நம் இனத்தில் தோன்றிய துரோகிகளைக் கொண்டே அழித்திடும் வேலையை சிங்கள அரசு செய்து வருகிறது. அதுதான் நம் தலைவரால் பன்னாட்டு அரசியலிற்காக நியமிக்கப்பட்டு, அரும்பணியாற்றிவந்த மதீந்திரன் எனும் பரிதி பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வாகும்.தமிழினத்தின் ஆயுத போராட்டத்தை முடக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த நம் இனத்தின் எதிரியாக சிங்களம், அது சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிவதை சகிக்க முடியாமல் மேற்கொண்ட நடவடிக்கைதான் பரிதியின் கொலையாகும். எனவே நமது இனத்தின் விடுதலையை முறியடிக்க எதையும் செய்த நம் எதிரிகள் முனைப்பாக செயலாற்றிவரும் நிலையில், அதனை முறியடித்து, விடுதலையை வென்றெடுக்க இனத்தின் ஒற்றுமை ஒன்றே ஒரே வழியும் வலிமையுமாகும். இலக்கை நோக்கிய ஒன்றிணைந்த செயல்பாடே அந்த ஒற்றுமையை உண்டாக்கும்.ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவு சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை: எல்லாளன் படையின் அறிக்கை.


News Service
எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.   இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சர்வதேச நாடுகளுக்காக எமது ஆயுதங்களை நாம் மௌனிப்பதாக அறிவித்து இருந்தோம். இதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்றோ எமக்கான விடுதலைப் போராட்டம் முடிக்கப்பட்டதென்றோ அர்த்தம் அல்ல.அன்பான எம் உறவுகளே,பல ஆயிரம் மாவீரர்களினதும், பல ஆயிரம் பொது மக்களினதும் தியாகத்தில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களின் கடும் உழைப்பில் இருந்தும் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் இலங்கை, தமிழீழப் பகுதி எங்கும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருந்தும் இன்றைய சூழ் நிலையில் பல பகுதிகளில் புனரமைப்பு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் துப்புரவு பணிகள் நடந்து வருவதை நாம் அறிவோம். அத்துடன் எமது போர் தளபாடங்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களாக அறிவித்தல்களை விடுத்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எமது போர் ஆயுதங்கள், இயக்க உடைமைகள், ஆவணங்கள் காணப்படும் இடத்து அவற்றை இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி காட்டிக் கொடுக்காமல் உரிய முறையில் பேணி பாதுகாத்து காலச் சுழலில் உங்களுக்கான தொடர்புகள் உருவாகின்ற போது உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
தமிழீழ எல்லாளன் படை

மேதகு பிரபாகரன் அவர்களை வணங்கி வாழ்த்துவோம்... எனது பிறந்தநாள் வாழ்த்துகள்...


58 வருடங்களுக்கு முன்னால் தமிழுக்கு விடிவெள்ளியாய், தமிழினத்தின் உன்னத தலைவனாய், தமிழீழ விடுதலை போராட்டத்தின் மருவடிவாய் ஆன எங்கள் தலைவன் மேதகு வே பிரபாகரன் பிறந்தார். இன்று நாங்கள் அனைவருமே அந்த விடுதலை நெருப்பை பங்கு போட்டு கொண்டு மீண்டும் பிறக்கிறோம் இன்னுமோர் பிரபகரனாய்.....
ஆம்!
நானும் ஓர் பிரபாகரன்.

எமக்கு உயிராகவும் ஆற்றலாகவும் எல்லாமுமாகமும் விளங்கும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை வணங்கி வாழ்த்துவோம்...
எனது பிறந்தநாள் வாழ்த்துகள்...


ஞாயிறு, 25 நவம்பர், 2012

மாவீரர்தினம் எதற்காக.....

News Service
யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.
ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம்.
எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம்.
மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது.
13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை.
77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள்.
ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை. இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும்.
சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?. ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது.
ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .
இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.
விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான்.
'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம். 'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.
ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள். மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.
இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம். அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.
நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை.
அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும்போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும். அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.
-இதயச்சந்திரன்-

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குல்தீப் நய்யாரின் பேட்டி! வைகோ தான் என் சாய்ஸ்.

மகாத்மா காந்தி, முகமது அலிஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்… பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல்  கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்… இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் ‘ஸ்கூப்’கள் இவை.
 ”91 வயதில் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இன்றும் ‘விஷயம் அறிந்த’ பத்திரிகையாளராகவே இருப்பதன் ரகசியம் என்ன?”
”என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. தொடர்புகளையும் நட்பையும் பெரிதும் மதித்துக் கொண்டாடுகிறேன். பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே தூங்குகிறேன். நாளன்றுக்குச் சாதாரணமாக 27 செய்தித்தாள்கள் படிக்கிறேன். வார இதழ்களும் இன்ன பிற புத்தகங்களும் கணக்கில் வராதவை. முதுமை சுமை குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் ஆயில் மசாஜ். மீதி நாட்கள் யோகா. முடிந்தவரை என் துன்பங்களையும் சோகங்களையும் சிந்திக்க மறுக்கிறேன். இதன் பெயர் ரகசியமா? தெரியவில்லை.”
”70 ஆண்டு ஊடகத் துறைப் பணியில் உங்களை மிக அதிகமாகப் பாதித்த அசைன்மென்ட் எது?”
”மகாத்மா காந்தியின் படுகொலை. ‘காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற டிரங்கால் தகவல் கேட்டு ‘பிர்லா’ ஹவுஸ் நோக்கி ஓடினேன். பிர்லா ஹவுஸில் கூடியிருந்த ம‌க்களின் அழுகை ஓலங் களையும் கண்ணீரையும் ஆங்காங்கே ஈரம்கூடக் காயாமல் சிதறிக்கிடந்த பாபுஜியின் ரத்தத்தையும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.”
”உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”
”ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் டால்ஸ்டாய். அவருடைய ‘வார் அண்ட் பீஸ்’ எனக்கு மிகப் பிடித்த நாவல்.”
”இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களோடும் பழகியவர் என்ற முறையில் சொல்லுங்கள்… இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் சிறந்தவர் யார்… மோசமானவர் யார்?”
”சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மோசமான பிரதமர் அவருடைய மகள் இந்திரா காந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களைக்கூட அவர் ஒழுங்காக நடத்தவில்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தி செய்த அட்டூழியங்களை எவராலும் மறக்க முடியாது!”
”காமராஜருடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் இருந்தது அல்லவா?”
”ஆமாம். காமராஜர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதமர் பதவி பல முறை அவரைத் தேடி வந்தபோதும் மறுத்தவர் அவர். எத்தனை பெரிய தியாகம்? லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் பேசி இந்திரா காந்தியைப் பிரதமர்ஆக்கியவர் காமராஜர். ஆனால், இந்திரா பிறப்பித்த ‘எமர்ஜென்ஸி’ காமராஜரை வெகுவாகப் பாதித்தது. நான் எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்துவிட்டு காமராஜரைச் சந்திக்க சென்னைக்கு வந்தேன். அப்போது இந்திரா காந்தியைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு என் எதிரிலேயே நான்கு முறை தலையில் அடித்துக்கொண்டார். அந்தக் குற்ற உணர்வுதான் அவர் உயிரைச் சீக்கிரமே பறித்துக்கொண்டது.”
” ‘இந்தியா ஜனநாயகரீதியாகத் தோல்வி அடைந்துவிட்டது!’, ‘ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ – சமீப கால‌மாக மிக அதிகமாக அடிபடும் வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
(நீண்ட மௌனத்துக்குப் பிறகு…) ”இந்தியாவில் சமீபமாக அரங்கேறும் அத்துமீறல்கள், ஊழல், வன்முறை, மக்கள் விரோத அரசியல் ஆகியவையே அந்த வாதங்களின் பிறப்பிடம். இவற்றை எல்லாம் பொய் என மறுக்க முடியாது. இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சைப் போராட்டம், கவனத்தில்கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்… இவை எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவைதான். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலகட்டம், தற்போதைய இந்தியா ஆகிய மூன்று காலகட்டத்திலும் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்… எனக்கு இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தலைமுறை தலையெடுக்கும் காலத்தில் இந்த நிலை மாறலாம்!”
”இந்திய ஜனநாயகத்துக்குச் சவாலான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?”
”பசி. இன்றைய இந்தியாவில் அரங்கேறும் அத்தனை பயங்கரங்களுக்கும் பின்னணியில் பட்டினியோடு தூங்கப்போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினைவாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித்தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டுவிடும். இன்னொரு முக்கியக் காரணம், இந்து தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந்தியையே பழிவாங்கியது. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான்களால் உருவாக் கப்பட்டவைதானே. சமீப காலமாகத் திரைக்குப் பின்னால் தென்படும் இந்து தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்!”
”ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’
”மோசமாக… மிக மோசமாக… மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார் களோ… அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை… ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்தி களையும் வெளியிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.”
”இப்போதைய இந்திய முதல்வர்களில் உங்கள் பார்வையில் சிறந்தவர் யார்?”
”பீகார் முதல்வர் நித்திஷ் குமார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பீகாரைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மெள்ள மெள்ள முன்னேற்றி வருகிறார். சாதிய அரசியல், மோசமான நிர்வாகம், ஊழல், மதப் பிரச்னை போன்ற சமூக விரோதச் சாயல்கள் அவரிடம் இல்லை. அதனால் ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டும் நித்திஷ் வளர்ந்துவருகிறார்.”
”ராகுல் காந்தி – நரேந்திர மோடி… இந்தியப் பிரதமர் போட்டி இவர்களிடையேதான் இருக்குமா?”
”இருவருமே மோசம். சோனியா காந்தியின் மகன் என்பதாலேயே, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மற்றபடி அவருக்கு பிரதமர் ஆவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. இந்து – முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது)விட்டு வெளியேறியபோது ‘இனி இந்தியாவில் மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது’ என வேண்டிக்கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன். ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. தூக்கம் வராமல் மூன்று மாதங்கள் தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினேன். அவரா இந்தியத் திருநாட்டின் பிரதமர்? நெவர்!”
”நேரு குடும்பம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா?”
”ஆம். மிகச் சரியாகவே அழிவின் பாதையில் பயணிக்கிறது. அதை சோனியா நன்றாக வழிநடத்திச் செல்கிறார்.”
”தமிழக அரசியலைக் கவனிக்கிறீர்களா? கருணாநிதி, ஜெயலலிதா யார் உங்கள் சாய்ஸ்?”
”இருவருமே இல்லை. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவர் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். மூன்றாம் சக்தி இல்லாததால் மக்களும் வேறு வழியின்றி மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள். இப்போதைக்கு என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்க லாம்.”
”கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத் தைக் கவனிக்கிறீர்களா?”  
”கூடங்குளம் மக்களின் போராட்டம் மெய்சிலிர்க்கவைக்கிறது. இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறது. உலகின் பல நாடுகள் எதிர்க்கும் அணு உலையை அடம்பிடித்து இந்தியா அமைப்பது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அணு உலைகுறித்த அச்சத்தினால் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தைக் களைய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரச பயங்கரவாதத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன. தனிப்பட்ட முறையில் அணு உலை மீது எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. சூரிய சக்தியையும் காற்றாலையையும் முறையாகப் பயன்படுத்தினாலே, போதிய மின்சாரம் கிடைக்கும்.”
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?”
” ‘இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என ‘சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, ‘இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்

வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்பப்படமுடியாது: - 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஹரிகரன்


தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இடம் யாராலும் நிரப்பப்பட முடியாதது என்று இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் என்ற தனிமனித ஆளுமை ஈழப்போராட்டத்தில் பெரும் சரித்திரமும், வீரத்தின் அடையாளமும் ஆகும் என்ற கருத்தியல் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி வருகையிலேயே, கேணல் ஆர்.ஹரிகரன்னின் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேணல் ஆர்.ஹரிகரன் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக இராணுவப் புலனாய்வு சிறப்பு அதிகாரியாக பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய அதேவேளையில், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகள் போன்றவற்றை முறியடிப்பதிலும் பங்காற்றியுள்ளார்.
1965ல் குச் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971ல் தற்போதைய பங்களாதேசான கிழக்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கை, வடக்கு கிழக்கு மாநிலங்கள், பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா ஆகியவற்றில் கிளர்ச்சிமுறியடிப்பு நடவடிக்கைகளிலும் கேணல் ஆர்.ஹரிகரன் பங்கெடுத்துள்ளார்.

இந்தியா செய்தது வரலாற்றுப் பிழை! - குல்தீப் நய்யார்

ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு ராஜபக்ச அரசு அழித்தொழித்த போது தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, இலங்கை எங்கள் நட்பு நாடு என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் குல்தீப் நய்யார் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்? என சேனல் 4 என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும்.
போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, இலங்கை எங்கள் நட்பு நாடு என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்!

திங்கள், 24 செப்டம்பர், 2012

வசைத் தமிழ் வல்லவர் - பழ. நெடுமாறன்

சகோதரச் சண்டையால்தான் ஈழத்தில் தோல்வியும் அழிவும் ஏற்பட்டது என்ற பொய்யை திரும்பத் திரும்ப கருணாநிதி கூறிவருவதைக் கண்டித்து நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை 
அவரை படாதபாடு படுத்திவிட்டது.  உண்மை சுட்டதுதான் அதற்குக் காரணமாகும்.  தனது முரசொலி இதழிலும் பொதுக் கூட்டங் களிலும் கடந்த சில நாட்களாக எனக் குப் பதில் சொல்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
"தி.மு.க.வையும் அதன் தலைவ ராகிய அவரையும் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை பழிப்பதும் இழித்துப் பேசுவதும் தவிர வேறு எதையும் கற்றதுமில்லை கடைப்பிடித்ததுமில்லை. புலிகளுக்கிடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும் அதனால் தளபதிகளும் மாவீரர்களும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு ஏற்பட்ட தற்கும் நெடுமாறன் கும்பல் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.'' என புலம்பியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரன் அவர்களும் யாரு டைய தூண்டுதலின்படியும் செயல்படுபவர்கள் அல்லர். உலகத்தின் மிகச் சிறந்த விடுதலை இயக்கத்தை இவ்வாறு கூறுவது அதைக் கொச்சைப்படுத்துவதாகும். கருணாநிதியால் பேணி வளர்க் கப்பட்ட டெலோ போன்ற இயக்கங்கள் தான் "ரா'' உளவுத்துறையின் தூண்டுதலுக்கு இரையாகி அழிந்தன.
எனது கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் அவரைப் பற்றி தரக்குறை வான வார்த்தைகள் இடம் பெறவில்லை. அவரைப் பழித்தோ இழித்தோ எதுவும் கூறவில்லை. அவ்வாறு எழுதுவதும் பேசுவதும் எனக்குப் பழக்கம் இல்லாத ஒன்றாகும். அது கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும்.
சகோதரச் சண்டையை யார் தொடக்கிவைத்தது? திம்பு மாநாட்டில் போராளிகள் ஒற்றுமையாக இருந்து முன்வைத்த கோரிக்கையின் விளைவாக ஆத்திரமடைந்த  "ரா'' உளவுத்துறை இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலைகளை மேற்கொண்டது என்பதை யும் அதன் விளைவாகப் போராளி களுக்கிடையே மோதல் எப்படித் தூண்டிவிடப்பட்டது என்பதையும் ஆதாரப்பூர்வமாக கூறியிருந்தேன். இந்திய அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் "ரா'' உளவுத்துறை குறித்து எழுப்பிய குற்றச் சாட்டினையும் "ரா'' உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் வெளியிட்ட உண்மை களையும் எடுத்துக்காட்டியிருந்தேன். தமிழக சட்டமன்றத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி "ரா'' உளவுத்துறைதான் போராளிக் குழுக் களைப்  பிளவுப்படுத்தியது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதையும் சுட்டியிருந்தேன். மேற்கண்ட ஆதாரப் பூர்வமான தகவல்கள் எதற்கும் அவர் எவ்விதப் பதிலையும் கூறவில்லை. என்மீது வசைமாரி பொழிவதில் ஈடுபட்டிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யான தும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே தந்துள்ளார். இலங்கையில் போர் மும்முரமாக நடந்தபோது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசை நடத்தும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கி யத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய மற்றொரு குற்றச் சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் "மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இது போன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார ரம்புகளைப் 
பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும்'' என்று கூறியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங் கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங் களில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்ச ராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்து டன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார். ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர் உடன்பாடு செய்ய முடியாது. எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை. இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு. ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப் படித்தான் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் எனது நிலைப் பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி.
போர் நிறுத்தம் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பிரதமரையும், பிரணாப் முகர்ஜியையும் தான் வலியுறுத்தியிருப்ப தாக கருணாநிதி கூறினார். ஆனால் 18-2-2009 அன்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை அளித்தார். "அந்த அறிக்கையில் போர் நிறுத்தம் செய்யும் படி இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த முடியாது. ஆனால் இலங்கை அரசு அறிவித்திருக்கிற பாதுகாப்பு வளையங் களுக்கு மக்கள் செல்வார்களானால் அவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு கிடைக்கும்'' என்று கூறினார்.
ஆனால் சிங்கள அரசின் வாக்குறுதியை நம்பி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் படு கொலை செய்யப்பட்டனர். மருத்துவ மனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டு அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு நாட்டைவிட்டு வெளியேற்றி யுள்ளது. மேற்கண்டவை குறித்தெல்லாம் பிரணாப் முகர்ஜியின் அறிக்கையில் சிறு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. பிரணாப் முகர்ஜியின் அறிக்கையின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அறிவிக்கும் துணிவை இராசபக்சே பெற்றார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு போர் நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கருணாநிதி பொய்யான தகவல்களைத் திரும்பத் திரும்பக் கூறினார். 
இலங்கையில் போரை நிறுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இது வரை எந்தத் தலைவரும் கூறாத ஒரு பதிலை கருணாநிதி கூறியிருக்கிறார். "என் மீது புகார் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள். சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை'' எனக் கொந்தளிக்கிறார். கோபத்தில் அவர் நிதானம் இழந்திருப் பது நன்கு தெரிகிறது. "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்ற பழ மொழிதான் நினைவிற்கு வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது இன்னுயிர்களை அர்ப்பணித்து தீயில் கருகி மாண்ட முத்துக்குமார் உட்பட 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் உன் னதமான உயிர்த்தியாகம் செய்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதில் முனைந்தார். குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் வேறு சொந்தப் பிரச்சினையின் காரணமாகவும் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் கள் என இவரின் கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். முதலமைச்சராக இருந்த இவர் அவற்றை ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே எனக் கேட்கிறார். மனிதநேயம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை ஒருபோதும் எழுப்ப மாட்டார்கள்.
1-7-09 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த தமிழர் களையும் அதிர்ச்சியடைய வைத்தன.
"ஈழத் தமிழர்களின் வாழ்வா தாரத்தை பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமே அதைச் செய்ய முடியும். எனவே நம்முடைய பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களரு டைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக்கூடாது'' என தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கக் கூடியவர் கூறினார். அதுமட்டுமல்ல, "தமிழீழ'' தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சமஉரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்'' என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
உலகத்தின் பலநாடுகள் இராச பக்சே அரசின் மனித உரிமை மீறல் களை மிகக்கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் இராசபக்சேக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத்தமிழர் போராட் டம் குறித்து ஒரு தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றிபெறப் போவதில்லை.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க் கால் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது 13-8-2009இல் இவர் என்ன கூறினார். "இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும்கூட அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்'' எனக் கூறினார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதினாரா? அல்லது மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் முள்வேலி முகாம்களுக்குள் முடக் கப்பட்டு போதுமான உணவு மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக்கொண்டிருந்தார்களே அதை சுமூக நிலை என்று கருதினாரா? தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்று வதை சுமூக நிலை என்று கருதினாரா? எது சுமூக நிலை? இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒருவார்த்தை இதுவரைல்லாதவர்; 

இப்போது அங்கு சுமூக நிலை என்று கூறுவதன் மூலம் இராச பக்சே நடத்திவரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை நின்றார். ஆனால் இப்போது டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர் நிலை மிக இரங்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பேசி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
"காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது பழமொழி. இலங்கையில் போர் நடைபெற்றபோது நான் எதுவும் செய்யவில்லையா? இதோ பட்டியல்'' என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலி, சட்டமன்றத்தில் தீர்மானம், தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம், பேரணி, முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் என ஒரு நீண்ட பட்டியலையே அளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை மாநிலத்தில் ஆளுங் கட்சியாகவும், மத்தியில் ஆளுகின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சி யாகவும் இருக்கிற ஒரு கட்சி செய்வது சாதனையா என்ன? எதிர்க்கட்சிகளுக்கு வீதியிலே இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுங்கட்சியி னரும் அதே வேலையைச் செய்வது கேலிக் கூத்தாகும். மத்திய அமைச்சர வையில் இவர் மகன் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். 

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமைச்சரவையில் இவர்கள் போராடியிருந்திருக்க வேண்டும்.  அங்கு அதை செய்யாமல் முச்சந்தியில் நின்று முழங்குவது பிரச்சினையைத் தட்டிக் கழிப்பதாகும். மக்களை ஏமாற்றுவதாகும். அது மட்டுமல்ல, "மாநில அரசின் பொறுப்பில் இருந்து தி.மு.க. ஏன் விலக வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். 

நாங்கள் அப்போது பதவி விலகியிருந்தால் இலங்கை அரசு போரை நிறுத்தி யிருக்குமா?'' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவரது நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறேன். பதவி மீதுள்ள அவரது அடங்காத ஆசை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் ஒரு இனம்  திட்டமிட்டு அழிக்கப்படும்போதுகூட பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாதமிடும் ஒருவரை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. பதவி விலகினாலும் எதுவும் நடக்காது எனக்கூறி உலகை ஏமாற்ற முற்படும் அவருக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறேன். ஒன்றுபட்ட பம்பாய் மாகாணத்தை மொழிவழியாக மராட்டியம், குசராத் என பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. பம்பாய் நகரத் தின் மீது இரு தரப்பும் உரிமை கொண்டாடியதால் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவான தலைநகரமாக பம்பாய் இருக்கட்டும் என பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்த அறிவிப்பைக் கண்டு மராட்டிய மக்கள் கொதித்தெழுந்தார்கள். பெரும் போராட் டம் மூண்டது. அப்போது இராணுவத்தை ஏவி அந்தப் போராட்டத்தை ஒடுக்கு வதற்கு முயற்சி நடைபெற்றது. இராணுவ துப்பாக்கிச் சூட்டில் 300க்கு மேற்பட்ட மராட்டியர்கள் இறந்து போனார்கள். இந்த பதட்டமான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக் பிறப்பால் மராட்டியர். எனவே அவரது மனச்சாட்சி அவரை உறுத்தி யது. அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த அவரை நேரு நிதியமைச்ச ராக்கினார். நேருவின் மதிப்பையும் அன்பையும் ஒருங்கே பெற்றவராக இருந்தபோதிலும்கூட தனது மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்தார். "மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் சொந்த மானது. அதற்காகப் போராடும் எனது மக்களைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கும் வகையில் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுகிறேன்'' எனக் கடிதம் எழுதக்கூடிய துணிவு அவருக்கு இருந்தது. நேரு தமது வாழ்நாளில் என்றும் அடையாத அதிர்ச்சியை அடைந்தார். தேஷ்முக்கின் பதவி விலகல் அவரைச் சிந்திக்க வைத்தது. 

இதன் விளைவாக பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம் என நேருவை அறிவிக்க வைத்தது. தேஷ்முக் என்ற தனியொரு மனிதன் தனது பதவியைத் தியாகம் செய்ய முன்வந்ததன் மூலம் மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் கிடைத்தது. இது வரலாறு. 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தேஷ்முக்கின் தியாக வரலாறு  தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் பதவிமீது அவர் கொண்ட வெறி அவர் கண்களைக் கட்டிப்போட்டுவிட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. வின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பித்தான் மன்மோகன் சிங் அரசு  பதவியில் நீடித்தது. தி.மு.க.வின் அமைச் சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டால் அந்த அரசுக்கு அளிக்கிற ஆதரவைத் திரும்பப் பெறு வோம் எனக்கூறி இருந்தாலே போதும்;  இந்திய அரசுக்கு வேறு வழி இருந் திருக்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி துணியவில்லை.
டெசோ மாநாட்டிற்கு காவல் துறை தடை விதித்ததை யும் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதையும் பெரும் சாதனையாகவும், அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது தவறு என நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அந்த சனநாயக விரோத நடவடிக்கையை நான் ஆதரிக் கவில்லை. ஆனால் அதைக்கூறும் தகுதி கருணாநிதிக்கு இல்லை. ஏன் என்றால் நாங்கள் நடத்த இருந்த 8க்கும் மேற் பட்ட தமிழீழ ஆதரவு மாநாடுகளுக்குத் தடைவிதித்தவர் கருணாநிதியே. உயர் நீதிமன்றத்தில் நீதியை நிலைநிறுத்தி அதற்குப் பிறகுதான் அந்த மாநாடுகளை நடத்தினோம்.
1985இல் நான் இலங்கைக்கு ரகசிய சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் இவருக்கு எழுதிய கடிதத்தில்  போராடும் விடுதலைப் போராளி களுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தை தவிர வேறு உற்ற துணைவன் இல்லை. அதை மேலும் வளர்க்க வேண்டியது நம்முடைய கடமையாகும் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இவர் என்ன செய்தார். எனக்கும் வீரமணி அவர்களுக்கும் தெரியாமல் டெசோ இயக்கம் இனி செயல்படாது என அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். அப்போது ஏன் அவ்வாறு செய்தார்? இப்போது ஏன் மீண்டும் டெசோவைத் தூக்கிப் பிடிக்கிறார்? என்பதற்குரிய விளக்கத்தை இதுவரை  கூறவில்லை.
அது மட்டுமல்ல உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடியபோது அவர்கள் மீது அதிரடி காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்க வைத்தவர் கருணாநிதி. தமிழகமெங்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் போராடியபோது அனைத்துக் கல்லூரி களையும் மூடியவர் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகப் பேசுப வர்கள், எழுதுபவர்கள், செயல்படுப வர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்துக் கைது செய்தார். பல தோழர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போடப்படும் கூட்டங் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டியது. சுவரொட்டிகள், துண்ட றிக்கைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாது என அச்சகங்கள் பயமுறுத் தப்பட்டன. மொத்தத்தில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிலவியது.
23-4-2009இல் ஒரு நாள் முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் செய்த தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 4-2-2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வேலை நிறுத்தமும் முழுஅடைப்பும் நடத்த நாங்கள் முற்பட்டபோது தலைமைச் செயலாளரை விட்டு அது சட்ட விரோதம் என அறிவிக்கச் செய்தார். அது மட்டுமல்ல இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவ தாக எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வைத்தார். அவரின் இந்த கெடுபிடியெல்லாம் மீறித்தான் நாங்கள் அந்தப் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி னோம். எதைச் சட்டவிரோதம் எனக் கூறினாரோ அதே பந்த் போராட்டத்தை இவரும் நடத்த நேர்ந்தது.
ஈழத்தில் போர் உச்சக்கட்டமாக நடந்துகொண்டிருந்த போது 27-4-09 அன்று ஒரு நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார். அண்ணா நினைவிடத் தில் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டுமென்பதற்காகவே இந்தப் போராட்டம் என்று கூறினார். ஆனால், அன்று பகல் 11 மணியள விலேயே மத்திய நிதியமைச்சராக அப்போது இருந்த ப. சிதம்பரம் இலங்கை யில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக தமக்கு செய்தி அனுப்பியிருப்பதாகக் கூறி உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.
ஆனால் 30-8-12 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27-4-09 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை யில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டன. கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கி டும் ஆயுதங்கள் போன்றவற்றை இலங்கை பாதுகாப்புப் படை பயன் படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறி வித்த பிறகும் அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்குத்தான் இப்போது களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
பிரணாப்பை நம்பிதான் நான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என இப்போது புலம்புகிற அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் போட்டி யிட்டபோது வரிந்துகட்டிக்கொண்டு முதல் ஆளாக அவரை ஆதரித்து களத்தில் இறங்கியது ஏன்? இந்த கேள்விக்காவது அவர் பதில் கூறவேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதத்தை முடித்து வைப்ப தற்கு மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய செய்திதான் காரணம் என்று அப்போது கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என்று புலம்புகிறார். எது உண்மை? இவருக்கு வாக்குறுதி அளித்தது சிதம்பரமா? பிரணாப் முகர்ஜியா? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. அவற் றுக்கு இதுவரை எந்தப் பதிலையும் அவர் கூறவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நெருக் கடியான காலக் கட்டத்தில் போர் நிறுத்தம் குறித்துப் பொய்யான வாக்கு றுதிகளையும்  செய்திகளையும் கூறி தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றி னார் என்பது பின்னர் அம்பலமாகி விட்டது. இப்போதும் அதைப்போல முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடையே கூறி வருகிறார். அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பவர்கள்மீது பாய்கிறார். வசைமாரி பொழிகிறார். பொது வாழ்க்கைக்குப் பொன்விழா கொண் டாடிய மூத்த தலைவர் ஒருவர் தன்னிலை பிறழ்ந்து ஆத்திர வயப்பட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவது அவரின் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அவருடைய தொண்டர்கள் அவருக்கு முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தை சூட்டியிருக் கிறார்கள். ஆனால் உண்மையில் வசைத் தமிழ் வல்லவர் என்ற பட்டம் அவருக்கு மிகமிக பொருத்தமானதாகும்.