மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 28 மார்ச், 2013

பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!


முன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் அரச கதைகளில் வல்லமையொண்ட மன்னர்கள் வருவார்கள்... பகையை வெல்லும் ராஜகுமாரர்கள் வருவார்கள்... அந்தக் கதைகளைக் கேட்பதற்கு குழந்தைகள் ஒரு பாட்டியின் பக்கத்திலோ, அல்லது ஒரு தாத்தாவின் பக்கத்திலோ அமர்ந்திருந்து, ஆவலுடன் கதை கேட்பார்கள். அந்தக் கதைகள் அவர்களைக் கற்பனை உலகத்திற்குத் தூக்கிச் சென்றுவிடும். அதனுடன் அவர்கள் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
இன்று, தமிழுலகத்தின் குழந்தைகள் அனைத்தும் கதை கேட்க உட்கார்ந்துகொண்டால், அவர்கள் முன்னொரு காலத்pல்... என்ற கதைகளை முற்றாக நிரகரித்துவிட்டு, பிரபாகரன் மாமாவின் கதையைச் சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறார்கள். முன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் கதைகளின் கற்பனை பாத்திரங்களை அவர்கள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. இன்றைய காலத்தில்... பிரபாகரன் என்றொரு மாமனிதன்... என்ற நிஜம் அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல... அத்தனை தமிழர்களையும், அதையும் தாண்டி அத்தனை மனிதர்களையும் கட்டி வைத்துள்ளது.
இத்தனைக்கும், பிரபாகரன் என்ற அந்த மாமனிதன் நேற்றைய பொழுது வரைக்கும் ஈழத் தமிழர்களின் மீட்பராக மட்டுமே அடையாளப்பட்டிருந்தார். அவரது சொல்லும், செயலும், நேர்மையும், சத்தியமும், வீரமும் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது என்ற எதிரிகளின் கொக்கரிப்பை மீறி, சத்தியப் பெருவெள்ளமாக மாறிய அற்புதம் இப்போது நிகழ்ந்துகொண்டுள்ளது. யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்ட சத்தியம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஒரு சின்னஞ்சிறிய தீவான இலங்கையின் தமிழ் மக்களின் தேசியத் தலைவனாக, நிகரற்ற வீரனாக, இலட்சியத்தின் உறுதியாக, தியாகத்தின் வடிவமாகப் போற்றப்பட்ட பிரபாகரன் என்ற பெரு மனிதன் இன்று உலகத் தமிழினத்தின் ஒற்றை அடையாளமாகப் பிரவாகித்துள்ளான். அதையும் தாண்டி, உலகத்தின் அத்தனை மனிதர்களும் அறிந்துகொள்ளத் துடிக்கும் அற்புத மனிதனாகவும் பிரபாகரன் உயர்ந்து நிற்கின்றார்.
ஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிரபாகரன் ஒரு ஒற்றை உதாரணம். அதனால்தான், இன்று தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழின உணர்வுக்கும் பிரபாகரனே மூலமாக உள்ளார். தமிழகத்தில் போராடும் அத்தனை மாணவர்களும் ஒற்றை வழிகாட்டியாகப் பிரபாகரனே உள்ளார். அதனையே அரங்கங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாணவர்களது சொல்லிலும் வெளிப்படுகின்றது.
தலைவனாக வருவதற்காகப் பலரும் போராடுகின்றார்கள். தங்களது வெற்றிக்காக அத்தனை போராட்டங்களையும் முதலீடாக மாற்றிக்கொள்கின்றார்கள். பதவி கிடைக்கும்வரை அவர்கள் மிகச் சிறந்த போராளிகளாகவே தம்மை முன் நிறுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு எல்லாமே அறுவடை காலங்கள்தான். இதற்கு, வாழும் உதாரணமாக மு. கருணாநிதி அவர்களைச் சொல்லலாம்.
வெற்று மனிதராக, தமிழக அரசியல் போர்க் களத்தில் நின்ற கருணாநிதியின் வாழ்நிலையையும், இன்றைய டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் சிறிது ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் புரியும் அவரது அறுவடை காலம் எத்தகைய சிறப்பாக இருந்தது என்று. அண்மையில், அவரது பெண் அரசியல் வாரிசான கனிமொழி அவர்களும் தன் தந்தையார் 14 வயதில் அரசியல் போர்க் களத்திற்கு வந்ததாகப் பெருமையுடன் தெரிவித்திருந்தார். அப்போது, அவர் கொண்டு வந்தது என்ன...? இப்போது அவர்வசம் உள்ள சொத்துக்களின் பெறுமதி என்ன...? அவரை நம்பிய தமிழகம் வளர்ந்ததோ இல்லையோ, அவரது வளர்ச்சி மட்டும் ஆகாயத்தைத் தாண்டுகின்றது. ஆனாலும், அவரது பெயரை உச்சரிப்பதற்கே தமிழகத்து இளைஞர்கள் அருவெறுப்புக் கொள்ளுகின்றார்கள்.
தனக்கேயான ஒரு தமிழகத்தை... தனக்குப் பின்னரும் அந்தத் தமிழகத்தை ஆள்வதற்கான வாரிசுகளை... அதனால் குவியும் செல்வத்தை அனுபவிக்க சொந்தங்கள்... என்ற கருணாநிதியின் கனவுலகத்தைக் கலைத்தவர் பிரபாகரன் என்ற பெருந் தலைவன். இதனால்தான் என்னவோ, கருணாநிதி அவர்களுக்கு பிரபாகரனை என்றுமே பிடித்ததில்லை. தனது தேசத்தைத் தனக்கேயானதாகத் தப்ப வைப்பதற்காகவே, பிரபாகரன் என்ற பேரொளி வீழ்த்தப்பட வேண்டும் என்று கருணாநிதி நம்பினார். அதனாலேயே, ஈழத் தமிழினத்தின் பேரழிவிற்கும் இந்திய ஆட்சியாளர்களுடன் சேர்ந்தே துணை நின்றார். அதன் பின்னரும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவே, தள்ளாத வயதிலும் பிணி தீர்க்கும் தாய் மடியாக எண்ணித் தமிழகம் வந்த தமிழ்த் தேசியத்தின் அன்னை பார்வதி அம்மாவையும் அந்த நிலத்தில் கால் பதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினார்.
ஆனாலும், கருணாநிதி அவர்களது கனவு தகர்ந்தே போய்விட்டது. தமிழகம் இப்போது பிரபாகரன் தேசமாக மாறிவிட்டது. கருணாநிதி என்ற மனிதனை மறப்பதனையே தமிழகத்து மாணவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களது நெஞ்சிலும், நினைவிலும் பிரபாகரனே நிறைந்து நிற்கின்றார். பிரபாகரனே அவர்களை வழிநடாத்துவதாக அவர்கள் நம்புகின்றார்கள். பிரபாகரனை முன்னிறுத்தியே அவர்கள் போராட்டங்களை நடாத்துகின்றாhகள். அவர்கள் பிரபாகரன் வருவார் என்று நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையுடனேயே போராடுகின்றார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு அவர்கள் இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது.
'பிரபாகரன் வருவார்!'
- சுவிசிலிருந்து கதிரவன்-

சனி, 16 மார்ச், 2013

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருக  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த இராசபக்சே மற்றும் கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்  ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இவற்றுக்கான
 தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிய வேண்டுமென்றும் மாணவர்கள் கடந்த 4 நாள்களுக்கு மேலாக அமைதியான வழியில் போராடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டினிப் போராட்டம்  மாணவர்களால் நடத்தப்படுகிறது.
அமைதியாக தங்கள் கல்லூரி வளாகங்களுக்குள்ளிருந்து போராடும் மாணவர்களின் போராட்ட வேகத்தைத் தணிக்கும் வகையில் கல்லூரிகளும் பள்ளிகளும் திடீரென மூடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அறவழியில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் நிற்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
மாணவர் போராட்டக் குழுவின் சார்பில் வருகிற 20ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தப் போவதாக  அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவாக கட்சி வேறுபாடின்றி அணிதிரண்டு பங்கேற்கும்படியும் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

'சாந்தா அல்லது பழனியப்பன்' - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ' - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.


கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்' நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்' நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை. ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி.

  
அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது.
மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது.
அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?' என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!' என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்� பச்சைத் துரோகம்!
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
"இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார்.
சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்� என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் 'முதல்வராக' இருந்தபோது, "நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்� என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. 'கோபப்படாதே' என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்� என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். "பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி" என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
"இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்" என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்' என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம்.
தவறில்லை. "அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்" என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பான இடத்துக்கு' அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
"நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?" என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, "மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்" என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார் கள்... கொடுமைப்படுத்தினார் கள்� சித்ரவதை செய்தார்கள்� என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.
முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் �முதல்வர்� கருணாநிதி, "இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல" என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், "போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல.
இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை� என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
"இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்� என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். 'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்' என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
"போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல" என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். "அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது" என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். "ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்" என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, "முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து" என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், "அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்" என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, "இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்" என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. "பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்" என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், "விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்� என்று கிண்டல் அடித்ததும், �இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்" என்பவர், அன்று, "ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்" என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.
ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது.
தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. "ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!" என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
நன்றி - ஆனந்த விகடன்

திங்கள், 4 மார்ச், 2013

இந்தியாவின் இலங்கை ஆதரவை எதிர்த்தும்,ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தொடர் முழக்க பட்டினிப்போராட்டம்

News Service இந்திய காங்கிரசு அரசு இலங்கைக்கு அளித்து வரும் தொடர் ஆதரவை நிறுத்தக்கோரியும், இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்து உடனடியாக ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தொடர் முழக்க பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பெருந்தமிழர் பழ.நெடுமாறன், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
   அப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சென்னை பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டத்தல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பேசியது:
"தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள டெசோ அமைப்பை நெடுமாறனில் இருந்து சீமான் வரை எதிர்ப்பது என்பது, அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கும் மறைமுக ஆதரவாகும் என்று தி.மு.க. ஆதரவு அறிவு ஜீவிகள் பேசி வருகின்றனர்.
நாங்கள் டெசோவை எதிர்ப்பது ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரிப்பதாகும் என்றால், ஈழ விடுதலையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றாத டெசோ, தமிழனப் படுகொலையாளன் ராஜபக்சவுக்கு நேரடி ஆதரவு அளிக்கும் அமைப்பாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை எங்களின் அரசியல் நிலைப்பாடு என்பது, ஈழத் தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டுமெனில், உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஒரு நேரடியான வாக்கெடுப்பை ஐ.நா. அவை நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
ஆனால், தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காது என்று ராஜபக்ச கூறுகிறார். இந்தியா தனக்கு எதிராக வாக்களிக்காது என்று எந்த தைரியத்தில் ராஜபக்ச கூறுகிறார்? இலங்கையில் போர்க் குற்றம் நடந்துள்ளது என்று இந்தியா கூறினால், நான் இந்தியாவின் போரைத் தான் நடத்தினேன் என்றும், தமிழருக்கு எதிரான அந்த போருக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், நிதி என்று எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்து, தமிழினத்தை வேகமாக அழித்தொழிக்கச் சொன்னது இந்தியாதான் என்றும் ராஜபக்ச கூறுவார். இலங்கையில் நடந்த போருக்கு மூல காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் பிள்ளைகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிதான் என்று ராஜபக்ச கூறுவார்.
அதுதான் உண்மை. எனது தாய், தந்தை, தங்களைகள், தம்பிகள் என்று வேறுபாடு இன்றி, அனைவரையும் கொன்றொழிக்க இலங்கை அரசுக்கும், இராணுவத்திற்கும் ஆயுதம், பயிற்சி, ஆலோசனை கொடுத்தது மட்டுமின்றி, நிதியின்றி தவித்த ராஜபக்ச அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி உதவியும் செய்தது இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர் நடந்ததற்கு மூல காரணம் தமிழினத்தின் மீது சோனியா காந்தி கொண்டுள்ள வெறுப்புணர்வே. அது தமிழினத்தின் அழிப்பை நடத்தி முடிக்க ராஜபக்சவை தூண்டியது. அதனால்தான் தான் இந்தியாவின் போரை நடத்தியதாக ராஜபக்ச வெளிப்படையாக கூறினார்.
ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீ்ர்மானம் என்னவென்றே தெரியாமல், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கோருகின்றன. தீர்மானத்தின் உள்ளடக்கம் தெரியாமல் அதனை ஆதரிக்குமாறு கேட்பது எந்த அடிப்படையில்? இலங்கைக்கு எதிராக எப்போதெல்லாம் ஐ.நா. அவையில் விவாதம் வந்தாலும், உடனே இங்குள்ள கோயில்களுக்கு சாமி கும்பிட வருகிறார் ராஜபக்ச. கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் வந்த போதும் திருப்பதி வந்தார், இப்போதும் திருப்பதிக்கு வந்து சென்றுள்ளார். இலங்கையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வணங்கும் கோயில்களையும், தேவாலயங்களையும் இடித்துத் தள்ளிவிட்டு, அங்கு புத்தர் கோயில்களை கட்டும் ராஜபக்ச, இந்தியாவிற்கு வந்த இந்து கோயில்களில் சாமி கும்பிடுகிறார். அவர் ஒரு பெளத்தர், இங்கு வந்த கும்பிடுவது இந்து கடவுள்களை. இப்படிப்பட்ட அண்டை நாட்டின் அதிபருக்கு இந்திய மத்திய அரசு, ஒவ்வொரு முறையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறதே, எதற்காக? ராஜபக்ச அரசை ஒரு ஜனநாயக அரசாக தாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு காட்டிக்கொள்ள அவருக்கு இப்படிப்பட்ட கெளரவங்களை அளிக்கிறது இந்திய அரசு. அதன் மூலம் அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மறைக்கப் பார்க்கிறது.
டெல்லியிலே ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, பிறகு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தபோது, இந்த நாடும், இந்த அரசும் அதற்காக எப்படியெல்லாம் துடித்தன. கற்பழித்தவனை தூக்கி போட வேண்டும் என்கிற அளவிற்கு சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், அதற்குக் காரணமான இலங்கை அரசு அதிபரை கண்டிப்பதற்கு பதில் கெளரவிக்கிறீர்களே? இதுதான் ஜனநாயகத்தின், மனிதாபிமானத்தின் அடையாளமா? இலங்கையில் தமிழ்ப் பெண்கள் இன்றளவும் கற்பழிக்கப்படுகிறார்கள், அது அரச பயங்கரவாதம் இல்லைய? நாங்கள் கேட்பது எம் இனத்தின் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி. அதற்காகத்தான் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று ஐ.நா.வை கேட்கிறோம். எங்களின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனுக்காக மட்டும் நியாயம் கேட்கவில்லை, அவரைப் போல் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் படுகொலைக்கு நியாயம் கேட்கிறோம்.
பாலசந்திரன் கொல்லப்பட்டது சரிதான் என்கிறார் சுப்ரமணியம் சாமி. இனப்படுகொலையாளன் ராஜபக்சவை கொழும்புவிற்குச் சென்று சந்தித்துப் பேசுகிறார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் சுப்ரமணிய சுவாமியின் பங்கு பற்றி, திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தில் பல கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால் எதற்கும் பதில் சொல்ல வக்கில்லை இந்த சாமிக்கு. ராஜீவ் காந்தியை கொல்வதற்கு போடப்பட்ட சதித்திட்டத்தி்ல் முக்கிய பங்கு வகித்த இந்த சுப்ரமணிய சாமி, ஒரு அரசியல் தரகர், பயங்கரவாதி.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார் கருணாநிதி. ஒரு இனமே அழித்தொழிக்கப்பட்டது திட்டமிட்ட இன அழித்தலா அல்லது மனித உரிமை மீறலா? தமிழர்கள் அறிவார்ந்தவர்களாகவும், சுய மரியாதை உள்ளவர்களாகவும் இருந்திருந்தால், இந்தக் கருணாநிதி ஒரு வட்டச் செயலாளராகக் கூட ஆகியிருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தனது மகனை ஐ.நா.அலுவலகத்திற்கு அனுப்பி மனு கொடுக்க வைத்தாரே? இப்போது ஏன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்? தனது மகனை மீண்டும் ஐ.நா.விற்கு அனுப்பி பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை கொண்டு வரக்கோரி வற்புறுத்தலாமே? ஏன் செய்யவில்லை? எல்லாம் தமிழர்களை ஏமாற்றி செய்யும் திட்டமிட்ட நாடகமாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் ஏன் இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்கு சென்று, மனித உரிமை ஆணையரைப் பார்த்து பன்னாட்டு விசாரணைக்கு வற்புறுத்தக் கூடாது? இவர்களெல்லாம் தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அல்லர்.
ஒரு மானமுள்ள தமிழ் மகன் இந்தத் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்திருந்தால் எம் இனம் அழிக்கப்பட்டிருக்காது.
தன் நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி துரத்தும், சுட்டுக் கொல்லும் ஒரு அண்டை நாட்டை எந்த நாடாவது நட்பு நாடு என்று கூறுமா? நமது மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்றுதான் இன்றுவரை இந்திய மத்திய அரசு கூறி வருகிறது. எதற்காக இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிக்க வேண்டும்? அந்த நாடு எந்த அண்டை நாட்டுடன் போர் செய்யப் போகிறது? தனது நாட்டு மக்களான தமிழர்களுக்கு எதிராகத்தானே அது போர் நடத்தியது? அபடியானால், தமிழர்களை அழிக்கும் போருக்கு இந்தியா பயிற்சியும் ஆதரவும் அளிக்குமானால், இந்தியாவிற்கு தமிழர்கள் பங்காளியா, பகையாளியா? தமிழ்நாட்டு மக்கள் இந்தியர்களா, இல்லையா? மத்திய அரசு விளக்க வேண்டும்.
போர் நடக்கும்போது டெல்லிக்கு இரகசியமாக வரவழைக்கப்பட்ட இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம், எனது கணவர் ராஜீவ் நினைவு நாளுக்குள் பிரபாகரனை கொன்றுவிட வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுள்ளார். இந்த அளவிற்கு நம் இனத்தினர் மீது பகை பாராட்டும் அரசா தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பார்த்து பயங்கரவாதிகள் என்கிறீர்கள். மூன்றாண்டுக் காலம் அங்கு போர் நடந்தது. தனது சொந்தங்கள் பல்லாயிரக்கணக்கில் இலங்கை இனவெறி இராணுவத்தால் கொன்று குவிக்கபட்ட நிலையிலும், தமிழ்ப் பெண்கள் பல நூற்றுக்கணக்கில் கற்பழிக்கப்பட்ட போதிலும், ஒரு சிங்கள பெண்ணின் தாவாணியை பிடித்த இழுத்தார்கள் என்றாவது ஒரு புலியையோ அல்லது ஈழத் தமிழர் ஒருவர் மீதோ உங்களால் குற்றம் சாற்ற முடியுமா? யார் பயங்கரவாதி? தன் நாட்டு மக்கள் மீதே வானத்தில் இருந்து குண்டு மழை பொழிந்தும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியும் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தாரே ராஜபக்ச, அவர்தானே அரச பயங்கரவாதி? அதை ஏன் ஒருவரும் சொல்ல மறுக்கிறீர்கள்?
தமிழீழ விடுதலை யாருக்கு? சுட்டுக்கொல்லப்பட்ட பாலசந்திரன் போன்ற பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்காக, அல்லது ஈழத் தமிழர்களுக்காக அல்லது பல பத்தாயிரக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்தனரே அந்த மாவீரர்களுக்கா? இவர்கள் யாருக்கும் இல்லை, இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ் மக்களுக்கான தேசம் தமிழீழம். தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழினத்திற்கான விடுதலையே. அதனை பெறாமல் தமிழினம் ஓயாது, ஒருபோதும் ஓயாது. அந்த விடுதலையை வென்றெடுக்க பாலசந்திரனின் இரத்தின் மீது உறுதியேற்போம் என்று சீமான் பேசினார்.


ஞாயிறு, 3 மார்ச், 2013

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் நாளை முற்றுகை - தமிழக கட்சிகள்,அமைப்புகள் அறிவிப்பு!


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.


மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அவர்கள் கூறியது:

ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத் தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் லயோலா கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திரண்டு கருப்புக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான் நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 விஷயங்களை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த உள்ளதாகக் கூறினர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
  

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அவர்கள் கூறியது:

ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத் தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் லயோலா கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திரண்டு கருப்புக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான் நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 விஷயங்களை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த உள்ளதாகக் கூறினர்.