மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 27 பிப்ரவரி, 2013

கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும்!

இந்த வாரம் உலத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொர்பானது. ஆமாம் அன்பர்களே! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை பாதுகாப்பு அரண் ஒன்றுக்குள் கொண்டு சென்று இறுதி நேர பசி தீர்க்க இனிப்;புப் பண்டமொன்றை கொடுத்து அவன் அதை சுவைப்பதை பார்த்து பரிகாசம் செய்த பின்னர் துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர காட்சி தொடர்பான புகைப் படங்களும் செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன. 2009ம் ஆண்டு மே மாதத்தில் நம்மையெல்லாம் கலங்கிக் கண்ணீர் விடச்செய்த முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகள் பற்றிய கோரமான சித்தரிப்புக்களும் சிந்தனைகளும் இன்னும் எம்மை வாட்டிக்கொண்டிருக்கையில் இந்த பாலகன் பாலச்சந்திரனின் கோரக் கொலை தொடர்பான செய்திகள்�� வெறுமனே ஒரு அனுதாப அலையை மட்டும் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எமக்குண்டு.
  "தமிழீழ மண்ணை நான் கைகளால் அள்ளி எறிந்து என் சுதந்திரத் தாகத்தை தீர்த்துக்கொள்வேன்" என்று தன் தந்தை வழி நின்று அந்த மண்ணின் சுகத்தை தான் பிறந்த நாள் தொடக்கம் அனுபவித்தவன்தான் இந்த செல்வம் பாலச்சந்திரன். வெளிநாடுகள் செல்லவும ஆடம்பரமாக வாழவும் எத்தனையோ சுகபோக வாய்ப்புக்கள் இருந்தும் பாலச்சந்திரனின் பிஞ்;சு உள்ளம் தந்தையின் காலடிக்குள் வளர்ந்தது�� ஒரு சுதந்திர வேட்கையோடு. அதுதான் அந்த சிங்களப் படைகளும் சின்னப்பையன் என்று பாராது துப்பாக்கிகளால் மென்மையான அந்த உடலை துளைத்து துளைத்து துவம்சம் செய்து விட்டன.
பாலகன் பாலச்சந்திரனின் வயதையொத்த பல வன்னிச் செல்வங்கள் வகை தொகையாக எறியப்பட்ட குண்டுகளின் கோரப்பிடிகளுக்குள் சிக்கி தங்கள் உயிர்களை தொலைத்திருப்பார்கள். ஆனால் உலகத்தை வியப்பிற்குள் ஆழ்த்திய ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவன் என்ற வகையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்பை மட்டுமல்ல அரசியலையும் கற்றுக்கொடுக்க அதனைப் பின்வற்றி வாழ்ந்தவன் என்பதனால் சின்னாப் பின்னமாகிவிட்டாடன் நமது சின்னவன் பாலச்சந்திரன்.
பாகனின் சரிந்து கிடக்கும் உடலைப் பார்த்து தமிழ் நாட்டின் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் குரல் கொடுக்கத் தொடங்கிவ்pட்டார்கள். அவர்களில் வைகோ அவர்கள் கண்களில் நீர் வடிய தனது ஆத்திரத்தை கொட்டித்தீர்க்கின்றார். அந்த உணர்வு மிக்க காட்சியை நாம் காணொலிகளில் கண்டோம். எல்லோரும் அழுதும் அலறியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றார். "நானும் பேசப்போகின்றேன்" என்று சாய்மனைக் கதிரையில் நிமிர்ந்தபடி அமருகின்றார் ஒரு "அநியாயத்திற்கு துணையான தமிழக அரசியல்வாதி" ஆமாம்! கருணாநிதி தனது கருத்துக்களை சொல்லுகின்றார் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக.
"விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது கொடுமை கொடுமை இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது. நேற்றைய தினம் வெளியிட்ட அந்தப் புகைப்படங்களைக் கண்டு கலங்கிக் கண்ணீர் விடாத கட்சித் தலைவர்களே தமிழகத்திலே இல்லை." என்கின்றார்.. ஏற்கெனவே கண்ணிர் விட்ட பழ நெடுமாறன்  வைகோ சீமான் போன்றவர்களோடு தன்னையும் சேர்த்துக் கொள்ள முயலுகின்றார் முத்துவேல் கருணாநிதி.
2009ம் ஆண்டு மே மாதம் வரையிலும் நாங்கள் எங்கே இருந்தோம்? இந்த கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதில் சில விடயங்கள் வெளியே வந்தன. பல ரகசிய விடயங்கள் வெளியே வரவில்லை. ஆனால் வெளிவந்தவையும் வெளியே வராதவையுமாக அநியாயங்களை செய்து கொண்டிருந்த கருணாநிதி இப்போது போலியாக கண்ணீர் விடுகின்றாராம்.. நமக்கு நன்கு தெரியும் கபடத்தனம் கொண்ட கருணாநிதியின் கண்ணீரிலும் நிச்சயம் கபடம் கலந்திருக்கும் என்று.
முள்ளிவாய்க்காலில் நமது உறவுகளின் உயிர்கள் போராளிகளாகவும் பொதுமக்களாகவும் மகிந்தாவின் மேற்பார்வையில் கொடூரமாக பறிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது உலகெங்கும் இருந்து எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழ் மக்கள் கருணாநிதி அவர்களை நோக்கி தங்கள் கரங்களை நீட்டி தாழ்மையாக வேண்டிக்கொண்டார்கள். மன்றாடினார்கள். கூக்குரலிட்டார்கள். "மத்திய அரசின் மனதை மாற்றும் வகையில ஏதாவது செய்து நமது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்" என்று. அவரது கைகளில் மேற்படி மக்கள் மன்றாடிக் கேட்டவற்றை சில நிமிடங்களுக்குள் செய்து கொடுக்கக் கூடிய சக்தி இருந்தது. அதனாற்தான் எண்திசைத் தமிழர்கள் "ஏதாவது செய்யுங்கள்" என்று கேட்டார்கள். ஆனால் கலைஞர் கருணாநிதியின் மனம் மாறவில்லை. அவர் மௌனமாக இருக்கையில் இலங்கையின் பக்கம்pருந்து அவருக்கு "மரியாதை" அதிகமானது. தங்கள் மரியாதையை வெளிகாட்டும் வகையில் கருணாநிதியின் கைகளுக்குள் மேலும்; நிதி வந்து சேர்ந்தது. இறுதியில் நமது மக்கள் அழிக்கப்படும் கொடூரத்தை தன் மனதால் கூட நினைத்துப் பார்ப்பதில்லை என்ற முடிவோடு நிம்மதியாக நித்திரைக்குப் போனார்.
2009ம் ஆண்டு அவரது ஆட்சி தமிழகத்தில். மத்தியில் அவரது கட்சி எம்பிக்கள் பலர் மந்திரிகளாக. ஒரு மந்திரிப் பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் ஒரு இலட்சம் தமிழர்களின் உயிர்களை வன்னி மண்ணில் காப்பாற்றியிருக்கலாம். மௌனத்திற்கு மேலாகவும் முதலமைச்சராக அவர் தனது அதிகாரத்தை காட்டினார் அந்த நாட்களில் தமிழ் நாட்டு தினசரிகள் பலவற்றின் மீது. இணையத்தளங்களில் பிரசுரமாகிய செய்திகளையும் புகைப்படங்களையும் பிரசுரித்த தமிழகப் பத்திரிகைகள் மீது அவர் தன் கோபத்தைக் காட்டினார். முள்ளிவாய்க்கால் படுகொலைச் செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்காதீர்கள். உங்களுக்கு தமிழ் நாட்டுச் செய்திகள் போதாதா? வன்னியின் படுகொலைச் செய்திகளை பிரசுரித்தால் உங்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்படும். மறந்து விடாதீர்கள்� என்று கர்ச்சித்தார் கருணாநிதி.
மேற்கண்டவாறு கருணாநிதியாலும் அவரது உதவியாட்களாலும் எச்சரிக்கப்பட்ட தமிழகத்தின் பத்திரிகையாளர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டார்கள். தங்கள் மொழியைப் பேசும் உறவுகளின் அழிப்பு பற்றிய செய்திகளைக் கூட ஆட்சியில் அமர்ந்திருக்கும் கருணாநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! ஏன் என்று தங்கள் வட்டத்திற்குள் கேட்டுக்கொண்டார்கள். அப்போதுதான் அவர்களிடம் கசிந்து வந்த செய்திகள் கூறி நின்றன. "கோடிக் கணக்கான நிதி அன்பளிப்புகளுக்கு அடங்கிப்போக வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு வந்து விட்டது என்று. அப்போதும் தனது கபடத்தனமான அரசியலால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டார்.
அடுத்து வந்த தேர்தலில் பதவியை இழந்து போன கருணாநிதி இப்போது அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார். டெசோ மாநாடு நடத்தப்படும் தனது நோக்கம் பற்றி அண்மையில் தமிழகப் பத்திரிகைகளுக்கு அவர் ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர் கூறுகின்ற விடயங்களை நாம் உன்னிப்பாக படிக்க வேண்டும். "இலங்கைத் தமிழர்களை நாமே இனி பாதுகாக்க வேண்டும். அதற்காக அகிம்சை வழியில் போராடிக் கொண்டே இருப்போம்" என்றார் கருணாநிதி. அப்படியானால் கபடம் நிறைந்த கருணாநிதி அவர்களிடம் நாம் கேட்பது இதுதான். "தமது சொந்த மண்ணிலிருந்த வண்ணம் பலமான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தியபடி இருந்த நமது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்படும் போது அதை வேடிக்கை பார்த்தபடியும் மௌனம் காத்தபடியும் இருந்துவிட்டு இப்போது நீங்கள் யாருக்காக அகிம்சை போராட்டம் நடத்தப் போகின்றீர்கள்? அப்படியானால் தாங்கள் நமக்காக அகிம்சைப் போராட்டம் ஒன்றை தலைமை தாங்கி நடத்துவதற்காகத்தான் விடுதலைப் புலிகள் என்ற மகத்தான விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு துணைநின்றீர்களா ஐயா??. அங்கேயும் தங்கள் கபடத்தனம் தான் முன்னிற்கின்றதா?
கதிரோட்டம்! 22-02-2013

பச்சிளம் பாலகன் படுகொலை போர்க்குற்றத்தின் அதியுச்சம்! - பனங்காட்டான்


போரின்போது பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையென்று மீண்டும் மீண்டும் கூறிவந்த இலங்கை அரசு, இப்போது இந்தப் பாலகன் யுத்தத்தின்போது மரணித்ததாக சொல்லி தப்ப முனைவது, முன்னர் கூறிய பொய்களை நிர்வாணமாக்கி வைத்துள்ளது.
பாலச்சந்திரன் கள்ளம் கபடம் ஏதுமற்ற பச்சிளம் பாலகன். இவனது ஒளிப்படத்தைப் பார்ப்பவர்கள் மனதில் எழுகின்ற நிதர்சனமான பதிவு இது.
இவன் பிறந்தது 1997ஆம் ஆண்டு. இப்போது உயிருடன் இருந்தால் வயது பதினாறு. பதின்ம வயது இளைஞனாக இருந்திருப்பான்.
  இவரது தாயார் மதிவதனிக்கு பாலச்சந்திரன் என்ற பெயரில் சகோதரன் ஒருவன் இருந்தான்.
முப்பது வருட யுத்தத்தின் முற்பகுதியில், மரணத்தை மண்ணுக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்களில் மதிவதனியின் சகோதரனும் ஒருவன்.
தங்களுக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைக்கு தம்பியின் பெயரான பாலச்சந்திரனின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர் மதிவதனியும் அவரது கணவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற வேளையில் பன்னிரண்டு வயதுப் பாலகன் பாலச்சந்திரனும் இறந்துவிட்டதாக செய்தியோடு செய்தியாக சொல்லப்பட்டது.
எவ்வாறு இந்தப் பாலகன் இறந்தான் என்பது அப்போது எவருக்கும் விபரமாகத் தெரியாது.
இந்த மரணத்தின் சூத்திரதாரிகளுக்கு அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரிந்திருந்தும், அதனை அவர்கள் வெளியிடாது மறைத்திருந்தனர்.
போர் நடைபெற்ற வேளையில் மரணித்த ஆயிரமாயிரம் பொதுமக்களில் இவனும் ஒருவன் என்றே அப்போது செய்திகள் சொல்லின.
இந்தப் பாலகன் ஒரு போராளி அல்ல. எவ்வகையிலும் ஆயுதப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்தியவனும் அல்ல.
பாலச்சந்திரன் எனும் இந்தப் பன்னிரண்டு வயதுப் பாலகனின் உடல் சூட்டுக்காயங்களுடன் காணப்படும் ஒளிப்படும் ஏற்கனவே வெளிவந்திருந்ததாயினும், இதனை யுத்தகால மரணங்களில் ஒன்றாகவே சித்தரித்த சிங்கள அரசாங்கம், அத்துடன் அந்தக் கதையை மெதுவாக முடிவுக்குக் கொண்டுவந்தது.
படுகொலையொன்றை கெட்டித்தனமாக மூடிமறைக்கும் முயற்சியில் ராஜபக்ச குடும்பம் வெற்றியும் கண்டது.
ஆனால், இந்த வாரம் 'சனல்-4' திடுதிப்பென வெளியிட்ட நான்கு ஒளிப்படங்களும் அதனையொட்டிய விவரணமும் இலங்கையையும் அதன் கூட்டாளிகளையும் பெரும் அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கிவிட்டது.
ஜெனிவா மாநாடு ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இப்படியாக சில உண்மைகள் வெளிவரும் என்று இவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கடந்த சில நாட்களாக இலங்கை தொடர்பான செய்திகளில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைத் தகவல்கள் முக்கியத்துவம் பெற்று இலங்கையைத் தர்ம சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
எவ்வளவுக்கெவ்வளவு இந்தப் படுகொலையை இலங்கை அரசு மறுத்துக் கூறிவருகிறதோ, அவ்வளவுக்கு இதுவொரு படுகொலைதான் என்ற நம்பகத்தன்மை அதிகரித்துச் செல்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
'சனல்-4"வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும்வீதிமறிப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
பாலகன் பாலச்சந்திரனின் கொலையை ஒரு போர்க்குற்றம் என்றும், இதுதொடர்பான சர்வதேச விசாரணை அவசியம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்தும் தனித்தும் இவ்விடயத்தில் ஒரே குரலில் நிற்பதைக் காணலாம்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி என்ற கோதாவில் தமது கன்னி உரையை பிரணப் முகர்ஜி ஆற்றும்போது, அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை - முக்கியமாக பாலச்சந்திரன் கொலையைக் கண்டித்து ஆரப்பாட்டம் நடத்தினர்.
தவிர்க்க முடியாத நெருக்கடியில் சிக்குண்ட பிரணப் முகர்ஜி, �இலங்கையில் தமிழர் சமாதானமாகவும், உரிமையுடனும் வாழ்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்� என்று பேசினார்.
ஆனால், மறந்தும்கூட பாலகன் பாலச்சந்திரன் படுகொலை பற்றி ஒரு வரிதானும் குறிப்பிடாது, தமது நண்பன் மகிந்தவை பாதுகாக்க முனைந்தது கண்டிக்கத்தக்கது.
பிரணப் முகர்ஜி தொடர்பாக வலையத் தளமொன்றில் தமிழக உணர்வாளர் விவேக் என்பவர் பதித்துள்ள கருத்தில், �இவனை எல்லாம் பேசவிடக் கூடாது. தமிழருக்கு ஆதரவாக இவன் குரல் எழுப்ப ஆரம்பிக்கும்போதே செருப்பைக் கழற்றி இவனை நோக்கி வீசவேண்டும்� என்று தமது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு இது.
கொழும்பு நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான கண்டனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேந்திரன் இங்கு உரையாற்றுகையில் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டுள்ளார்.
இதுவெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போகும் என்பது தெரிந்தாலும், எதிர்கால தேவைகளுக்காகவாவது பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தமிழரின் நம்பிக்கையான எதிர்பார்ப்பு.
அமெரிக்க ராஜாங்க அமைச்சு, மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன்னிப்புச் சபை என்பவையும் இப்படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டுள்ளன.
ஆனால், இந்திய அரசின் கருத்தும் போக்கும் விசனமளிப்பதாகவும், இலங்கையைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துள்ளன.
இந்திய அரசின் கருத்தை வெளிப்படையாகக் கூற எவரும் முன்வரவில்லையாயினும், �ஒரு படத்தை வைத்து எதுவும் கூற முடியாது. அந்தப் படத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை� என்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷியின் கருத்து, இவ்விடயத்தில் இந்தியாவும் பங்காளியாக இருப்பதால் உண்மையை மறைக்க வேண்டியிருக்கிறது என்ற அவசியத்தை பூடகமாக தெரியவைக்கின்றது.
இந்தியாவே இந்த யுத்தத்தை பின்னாலிருந்து நடத்தியது. இந்தியா இராணுவ ரீதியான சகல உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. இந்தியாவுக்காகவே நாங்கள் புலிகளுடன் யுத்தம் புரிந்தோம்� என்று கோதபாய ராஜபக்ச பல தடவை பகிரங்கமாக கூறியபோதும் இந்தியா ஏன் மறுதலிக்கவில்லை என்ற காரணத்தை சல்மான் குர்ஷியின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது.
பாலகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான படங்கள் போலியானவை என்றும் உள்நோக்கத்துடன் உருமாற்றப்பட்ட இப்படத்தின் பின்னணியில் விடுதலைப்புலி ஆதரவு சக்தி இருப்பதாகவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் கூறியுள்ளார்.
அஞ்சியவன் கண்களுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்பதுபோல, எப்பொழுது எங்கிருந்து உண்மைகள் ஈட்டியாக வருகின்றனவோ அங்கெல்லாம் புலிகள் இருப்பதாக இலங்கைத் தூதுவர்கள் கூறிவரும் வரலாற்றில் இதுவும் ஒன்று.
பன்னிரு வயதுப் பாலகனைக் கண்டிக்கும் வகையிலும் அதனால் துயருற்றிருக்கும் தழிமக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அதிரடி நடவடிக்கை ஒன்றை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் ஜூலைமாதம் நடைபெறவிருக்கும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கைக்குழுவும் பங்குபற்றவிருப்பதால் அதனை அங்கு நடத்தமுடியாதென்று ரத்துச் செய்துள்ளார்.
இவரது இந்தத் திடீர்முடிவு இந்திய மத்திய அரசுக்குப் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் ஒரே நேரத்த்தில் கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் ஐயரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராஜீவ் காந்தியின் பள்ளித் தோழரும், அவரது ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான மணிசங்கர் ஐயர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற சம்பவங்களை இப்போது மீட்டுப்பார்க்க கூடாது என்ற வகையில் சளாப்பியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் பாலச்சந்திரன் படுகொலை இடம்பெற்றிருந்தாலும், இப்போதுதான் அதற்குரிய ஆதாரங்களுடன் இது ஒரு போர்க்குற்றம் என்று தெரியவந்துள்ளதை மணிசங்கர் ஐயர் மறந்துவிட்டார்.
போரின்போது பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையென்று மீண்டும் மீண்டும் கூறிவந்த இலங்கை அரசு, இப்போது இந்தப் பாலகன் யுத்தத்தின்போது மரணித்ததாக சொல்லி தப்ப முனைவது, முன்னர் கூறிய பொய்களை நிர்வாணமாக்கி வைத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை பெற்ற ஒரு சிறைக்கைதியைக்கூட விரும்பியவாறு ஒருவர் கொலைசெய்வது படுமோசமான குற்றமாக இருக்கும் சர்வதேச சட்டத்தில், எந்தக் குற்றமும் செய்யாத பன்னிரண்டு வயதுப் பாலகனை �பங்கருக்குள்� இருத்தி�சுட்டுப்படுகொலை செய்தது எந்தச் சட்டத்தின் கீழ் நியாயமாகும்?
போதிய ஆதாரங்களுடன் உள்ள இந்தப் படுகொலையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனைப் படுகொலை செய்ததானது, இலங்கை அரசினது போர்க்குற்றத்தின் அதியுச்சம்.
இதற்கான தண்டனையை உரியவர்களுக்குச் சட்ட மன்று கொடுக்கத் தவறுமாயின், என்றாவது ஒருநாள் சமூக மன்று கொடுத்தே தீரும்.

அம்மாவும் அக்காவும் எங்கே?' - பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள்

News Service
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு இன்று உலக சாட்சி​யாக இருப்​பது சனல்-4 வெளியிட்ட 'நோ பயர் ஸோன்' வீடியோக்களும் புகைப்படங்களும்​தான். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்​படங்கள், ரமேஷின் வீடியோ தொடங்கி ஆயிர​மாயிரம் ஈழத் தமிழர்களின் குருதியற்ற உடல்கள் வரை விரியும் அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் மரண சாசனம்.   நோ பயர் ஸோன்' வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே-வைத் தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும், இலங்கை அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை.
கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?
ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53-ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.இனி உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் எந்த தகவல்​களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்​களை எடுத்த இரண்டு சிங்களப் படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்​பட்டவை. அவர்கள் இருவரும் 53-ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர். எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் இரகசியமாக எடுத்தவைதான்.இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.2009 மே மாதம் 18-ம் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் இராணுவம் கொளுத்தியது.
அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்குகுழியில் இருந்திருக்கிறார்.காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53-ம் படையில் சரணடைந்தனர். மே 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர்.சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கி​றார். 'அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பி​விட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்துவிடலாம். எல்லோரையும் போல அவனையும் கொன்றுவிடலாம்' என்று கோத்தபாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது.காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவது​தான் அந்த படைப் பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்றுவிட்டனர். பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். 'நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும்போது இடையில் அம்மாவைக் காணோம்.அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது' என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டிய​போதுகூட, தன்னைச் சுடப்​போகி​றார்கள் என்பது அவருக்குப் புரிய​வில்லை.கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?
ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை.
இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை என்றார் அழுத்தம் திருத்தமாக.நோ பயர் ஸோன் தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப் போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவரிடமும் பேசினோம்.
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு ​கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடை​பட்டிரு​ந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப் போனார்கள்.தமிழ் மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சரண​டைய வந்தனர். 'நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்' என்று கட்டளை இட்டது இராணுவம்.வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகா​மிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடு​கள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது.
ஒரே ஷாட்டில் 100-க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக்கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர்.சனல்-4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டுமொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.
நன்றி-ஜூனியர் விகடன்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஆதாரங்கள் இருந்தும் அசையாமல் நிற்கும் அனைத்துலகம் -இதயச்சந்திரன்


எத்தனையோ இன அழிப்பு ஆதாரங்களை சனல் 4 தொலைகாட்சி முன் வைத்தாலும், இந்த சர்வதேச சமூக ஸ்தாபனங்கள் செவிமடுப்பது போல் தெரியவில்லை. இன அழிப்பிற்கான விசாரணைகளை ,கொலையாளிகளே நடாத்த வேண்டுமென விடாப்பிடியாக இருக்கிறது.
தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் முன்பு வெளிவந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக சிங்கள இராணுவத்தின் பிடியில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
  இதேபோன்று கேணல் ரமேசின் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் வெளி வந்தன. சரணடைந்த நிலையில் தோழர் க.வே.பாலகுமாரனும் அவர் மகன் தீபனும் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகியும், அவர்கள் இருவரும் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
இவர்களைக் கைது செய்யவில்லையென்று கோத்தபாயா ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கினாலும், உயிரோடு இருந்த புகைப்படங்களைக் கொண்டு, சுயாதீன சர்வதேச விசாரணை நிகழ்த்தப்பட வேண்டுமென்பதை ஏன் இந்த சர்வதேசம் வலியுறுத்தத் தயங்குகின்றது என்பதுதான் தமிழ் மக்கள் முன்னுள்ள கேள்வி. அதுமட்டுமல்லாது, இறுதிப்போரில் தலைவரின் மனைவி,மகள் மற்றும் பாலச்சந்திரனிற்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாதென, இன அழிப்பினை வழிநடாத்திய சரத் பொன்செக்கா நழுவிச் செல்லப்பார்க்கிறார் .
இவைதவிர புதுவை இரத்தினதுரை, யோகி, பேபி சுப்ரமணியம், மற்றும் லோரன்ஸ் திலகர் போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள், இராணுவத்தால் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை நேரில் கண்ணுற்ற சாட்சிகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அதனைத் தெரிவித்தும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று மறுக்கின்றது கோத்தா கும்பல்.
கடந்த வருடம், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை மீதான தீர்மானத்தில், சிங்களம் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது . 'அதனைக் கண்காணிப்பதற்கு நாங்கள் வரமாட்டோம்' என்கிற செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியது.
இருப்பினும் கதவை தட்டாமலே உள்ளே வரக்கூடிய அனுமதியை வழங்கவேண்டுமென்கிற தீர்மானத்தை இம்முறை முன்வைக்கப்போகிறது அமெரிக்கா . இதனை சிங்களம் ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தையும் இப்புதிய தீர்மானம் வழங்குமென எதிர்பார்க்கலாம்.
இவர்களைப் பொறுத்தவரை , 2009 மே மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் இன அழிப்பென்று எதுவுமே நடைபெறவில்லை என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதை விரும்புகிறார்கள். அதனை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு, சிங்களத்தோடு கைகுலுக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றாகள்.
அண்மைக்கால 'மகிந்தரோடு கை குலுக்கும் கதைகள் ' மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை தெளிவாக உணர்த்துகிறது. 'சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல்' என்கிற இராஜதந்திரத்தை, அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பூர்வீக தேசிய இனம் கடைப்பிடித்தால், அழிவு கடுகதியில் வரும் என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. சிங்கக் கொடி பிடித்தலுக்கும், கை குலுக்குவதற்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் என்றொரு போட்டி வைத்தால் எவருமே வெற்றியடையமாட்டார்கள்.
12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட ஆதாரங்களையே போலியானதென உடனடியாக நிராகரித்த சிங்களம் , கை குலுக்கினால் மட்டும் இன அழிப்பினை ஏற்றுக்கொள்ளுமா?.
தமிழினத்தின் மீது சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பினை உலகறியச் செய்ய , பெரும் முயற்சியில் ஈடுபடும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டினை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்துவிடும் இந்தக் கைகுலுக்கும் இராஜதந்திரம்.
சிங்கக் கொடி பிடித்தாலும், என்னைக் கொல்ல புலிகள் திட்டமிட்டார்கள் என்று பொய்யுரைத்தாலும், அவர்களிடம் ஜனநாயகம் இல்லை என்று சாஸ்டாங்கமாக வீழ்ந்தாலும் , கை குலுக்கத்தயார் என்று நேசக்கரம் நீட்டினாலும் , சிங்களப் பேரினவாதம் தனது தமிழின அழிப்பினை நிறுத்தப்போவதில்லை.
மேற்குலகினரை அழைத்து மாநாடு நடாத்துபவர்கள் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு.
2012 இல் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு ஒரு தீர்மானம் வந்தது. 2013 இல் அதை கண்காணிக்க மனித உரிமைப் பேரவையின் சிறப்புப் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என்கிற தீர்மானம் வரும்.2014 இல் என்ன தீர்மானம் கொண்டு வரலாம் என்று திரைமறைவில் பேரம்பேசுதல் நிகழும்.
வழமை போன்று, சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்தவுடன் , இலங்கைக்கு எதிராக காட்டமான தீர்மானமொன்று வரப்போகிறது என்கிற பரப்புரை கட்டவிழ்த்து விடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பொன்று உருவாக்கப்படுகிறது .
சென்ற வருடமும் இதுதான் நடந்தது. இவ்வகையான கால நீட்சி இழுத்தடிப்புக்கள் மேற்குலகிற்குத் தேவை.
பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் ஒபாமா நிர்வாகம், இலங்கையை இராஜதந்திர மட்டத்தில் தனிமைப்படுத்தும் வகையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என்கிற கேள்வியை மேற்குலகின் அரசியல் நோக்கர் ஒருவர் அண்மையில் குறிப்பிடிருந்தார்.
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இன அழிப்பு , எதிர்பாராமல் நடந்த துன்பியல் சம்பவம் அல்ல என்று குறிப்பிடும் அவர், அமெரிக்காவின் மென்மையான தீர்மானங்கள் எப்போது இறுக்கமான, கடுமையான தீர்மானமாக மாறும் என்பதோடு, அமெரிக்காவின் இலங்கை குறித்தான திட்டம் என்ன என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
லிபியா, சிரியா மற்றும் மாலி பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்யாமல் , தனது நேச நாடுகளுக்கு பின்புலத்தில் இருந்து உதவிசெய்யும் அமெரிக்கா , இலங்கை விவகாரத்தில் ஏன் மென் போக்கினை கடைப்பிடிக்கிறது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்வது நல்லது.
ஏனெனில் சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் காட்டமான கருத்துக்களையும் , ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அறிக்கையினையும் அமெரிக்கா தனது தீர்மானத்தில் உள்வாங்குமா என்பது குறித்த எதிர்ப்பார்ப்போடு இருப்பது தவறு. ஐ.நா.சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது , மனித உரிமைப் பேரவை எத்தகைய தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும், அதனைச் செயல்படுத்தும் வல்லமை அதற்கு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்கிற ஐ.நா.சாசன ஆயுதங்களை வைத்தே, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறியவாறு தனது இன அழிப்பு நிகழ்ச்சிநிரலை மிகக் கொடூரமான வகையில் பௌத்த சிங்களப் பேரினவாதம் முன்னெடுக்கிறது.
இதனை எல்லோரும் புரிந்து கொள்கின்றார்கள். ஆனாலும் தத்தமது தேசிய, பூகோள நலனுக்கு ஏற்றவாறு எவ்வாறு இதனைக் கையாள்வது என்பதானது, சில இடங்களில் வன் அழுத்தம், பல இடங்களில் மென் அழுத்தம் என்கிற வகையில் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ் பிரதேச சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு , திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களும் முகாம் விரிவாக்கங்களும், அம்பாறையில் பறிக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் போன்ற சிங்கள ஆதிக்கச் செயல்பாடுகள் குறித்து இந்த நல்லிணக்க ஜாம்பவான்கள் அக்கறை கொள்வதில்லை.
இதற்கு எதிராக தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடாத்தும் போது , அதனை முறியடிக்க சிங்களம் கட்டவிழ்க்கும் வன்முறை குறித்து எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் மௌனமாக இருக்கின்றன இந்த வல்லரசுகள்.
சண்டே லீடர் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் சிராணி மீது கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை குறித்து பகிரங்கமாக கண்டனங்களைத் தெரிவிக்கும் மேற்குலகம் , தொடரும் நில அபகரிப்பிற்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
இருப்பினும்,இலங்கையில் மனித உரிமை மேம்பட வேண்டும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பேணப்பட வேண்டும், ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும், என்கின்ற பல வேண்டுகோள்களை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தனது அறிக்கையில் குறிப்பிட்டாலும், அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் தளம் இலங்கையில் அறவே இல்லை என்பதை அவர் உணர்வார்.
அதேவேளைஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாக , சிங்களத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கையை ,பலர் கொண்டிருப்பது போல் தெரிகிறது.
சிங்களத்தின் முழு நாட்டிற்குமான இறைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பால் நின்று தீர்வு குறித்துப் பேசாவிட்டால், இன நல்லிணக்கமோ அல்லது சமாதானமோ எப்போதும் சாத்தியமில்லை என்பதை இவர்கள் உணர்வார்களா?.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நாங்கள் மீண்டும் கோழைகளாக மாறிவிட்டோமா...?

News Service
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த நான்காவது வருடத்தில் வெளிவந்துள்ள புகைப்பட ஆதாரம் ஒன்று உலகத் தமிழர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் போராட்டங்கள் வெடித்துப் பூதாகரமாகியுள்ளன. சிங்களத் தூதரகம் முற்றுகைக்குள்ளாகியுள்ளது. சிறிலங்கா விமான நிறுவன அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மலேசியத் தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், நாம்...? நினைக்கவே அருவருப்பாக உள்ளது. புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்துவிட்டோமா...? விடுதலை உணர்வை வேரோடு சாய்த்துவிட்டோமா...? எதிரியின் திசையை நோக்கி தாள்பணிந்து விட்டோமா...? நாங்கள் மீண்டும் கோழைகளாக மாறிவிட்டோமா...? ஒன்றுமே புரியவில்லை.
   புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழர்கள் இப்போது கடைப்பிடிக்கும் தன்னுணர்வற்ற நிலைக்குக் காரணம் தெரியாமல் மனது தவிக்கின்றது. பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்காக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்துடன் அடங்கிவிட்டோமா...? அல்லது, அமெரிக்கா ஐ.நா. மன்றத்தில் கொண்டுவரும் 'சிறிலங்காவைத் தட்டி வைக்கும்' தீர்மானத்துள் திருப்திப்பட்டுவிட்டோமா...? எதுவுமே தெரியவில்லை. ஒரு இளைஞனின் தற்கொலை, துனீசிய நாட்டின் தலைவிதியையே மாற்றி எழுதியது. அது, அந்த மக்களது இனப் பற்றையும், அவர்தம் தேசத்தின்மீதான அக்கறையையும் உணர்த்தியது. பாலச்சந்திரனின் படுகொலை எமக்கு எதையுமே உணர்த்தவில்லையா...? போதையில் தன்னைத் தொலைத்து மாய்ந்து போனவனுக்கும் கண்ணீர் அஞ்சலி ஒட்டும் புலம்பெயர் தமிழர்கள், தமிழீழ நாயகனின் மகனுக்கு அஞ்சலி கூட நிகழ்த்தவில்லையே...
வெறி பிடித்த சிங்களத்தின் கோரக் கொலைவெறியால் குதறப்பட்ட அத்தனை இளம் பிஞ்சுகளினதும் அவலங்களின் அடையாளமாக வெளிவந்த பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சி இருண்டுபோன தமிழர் இதயங்களில் கோபத்தை மூட்டாவிட்டாலும், சோகத்தை ஊட்டவில்லையா...?கனவுகளுடன் விளையாடும் வயதில், கருணையே இல்லாத இதயங்களையும்கூட கண் கலங்க வைக்கும் காட்சியாக பாலச்சந்திரனின் மரணம் பதிவாகிப் போனது யாரால்...? எங்களது விடுதலைக்காக... எங்களது தேசத்தின் விடிவுக்காகப் போராடிய எங்கள் தேசியத் தலைவனின் மகனாகப் பிறந்ததை விடவும் அவன் புரிந்த குற்றம் என்ன...? நான்... எனது குடும்பம்... எனது பிள்ளைகள்... என்று வாழ்வதற்காகச் சற்றும் தலை சாய்க்காத விடுதலை இலட்சியத்தின் கடைசி வாரிசும் அந்த விடுதலைக்கே உரமாகிப்போனது எங்கள் மனதை நோகடிக்கவில்லை என்றால்... எங்கள் நெஞ்சங்களில் கோபத்தை மூட்டவில்லை என்றால்... எங்கள் வாழவின் வரலாற்றில் ஏதோ தவறு என்பதே உண்மை.
எங்கள் சூரியத்தேவன் நிகழ்த்திய வேள்வியில் குளிர் காய்ந்தவர்கள் பல ஆயிரம் பேர்... அவர்களை இப்போது வீதிகளிலும் காண முடிவதில்லை... இறுதிப் போர்க் களத்தில் எல்லாமே முடிந்ததென்று, உதறி வெளியேறிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பல ஆயிரம் பேர் இப்போது புலம்பெயர் தேசங்களில்... ஆனாலும், அவர்களை புலம்பெயர் போர்க் களங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை... மெய்க்காப்பாளர்கள் புடைசூழ, நெஞ்சு நிமித்தி நின்றவர்கள் எல்லாம், இப்போது பெரும் வர்த்தகர்கள் ஆகிவிட்டார்கள்... களமுனை வெற்றிகளின் பின்னாலும், களம் முற்றாக வீழ்வதற்கு முன்னாலும் கொடி பிடித்து ஆர்ப்பரித்த இளைய தலைமுறைகளையும் இப்போது காணவில்லை... அப்போ... ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கு என்ன வழி...? சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் சிதைந்து போகும் எங்கள் தமிழீழத்திற்கு ஏது நிலை... நடைபிணமாக, நாதியற்றவர்களாக, ஏன் என்று எதிர்த்துக் கேட்க முடியாமல் ஊனப்படுத்தப்பட்டவர்களாக, இறந்துபோன உறவுகளுக்கு விளக்கேற்ற முடியாமலும், தொலைந்து போன மனிதர்களைத் தேடுவதற்குத் திராணி இல்லாமலும் சாவுக்குள் வாழும் எங்கள் தமிழீழத்து உறவுகளுக்கு என்ன தீர்வு?
நாங்கள் மௌனமாக இருந்து எதனைச் சாதிக்கப் போகின்றோம்...? எதனைச் சம்பாதிக்கப் போகின்றோம்..? அழுவதற்கும், எழுவதற்கும், மனிதர்களாக வாழ்வதற்கும் துணிவற்றவர்களாக நாம் புலம்பெயர் தேசங்களில் சிதைந்து போகப் போகின்றோமா....? எந்த அர்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது...? ஏறத்தாள... 2000 வருடங்களுக்கும் மேலாகப் புலம்பெயர் வாழ்வையே நிரந்தரமாக நம்பிய யூதர்கள் ஜெர்மனிய நாசிகளிடம் பாடம் கற்றது போன்ற காலம்வரை, புலம்பெயர் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைக்கப் போகின்றார்களா...? அடிமை வாழ்வு இனி ஒருபோதும் வேண்டாம் என்று தமிழ் மக்கள் முடிவு செய்து முப்பத்தைந்து வருடங்கள் தாண்டிவிட்டது. சிங்கள தேசத்துடன் மீண்டும் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை சிங்கள ஆட்சியாளாகள் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைகள் நிரூபித்துவிட்டது. இரக்கமற்ற சிங்கள இனவாதக் கொடூரத்தின் உச்சம் பாலச்சந்திரனால் உலகத்திற்குச் சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது.
நீதி தேவதை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள தேசத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நீதியை விரைவு படுத்த வேண்டுமாயின், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தலைவர்களைத் தேடாத தொண்டர்களாக... தலைக்கு முடி தேடாத போராளிகளாக... தனக்கென்று எதுவுமே தேடாத தியாகிகளாகக் களத்தில் அணி சேர வேண்டும். எமக்கான போராட்டம் எங்கள் கைகளில்தான்... எமக்கான விடுதலையை யாராவது கையளிப்பார்கள் என்ற கனவான தீர்மானங்கள் இனியும் வேண்டாம். நாடுகளுடன் போரிடுவதற்குத்தான் ஆயுதங்கள் தேவை. உலகின் மனச்சாட்சியுடன் போர் புரிவதற்கு நியாயம் மட்டுமே போதுமானது. சத்தியமும், தர்மமும் எங்கள் பக்கம் உள்ளதால், இந்த ஜனநாயக மீட்புப் போரில் ஈழத் தமிழர்களது வெற்றி மட்டுமே சாத்தியம்!

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?

கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு:

1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார்

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது.

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்

5. கருணாநிதி ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது.. மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை..

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை...

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.

2009 போர் நடக்கும் வரை ந்டந்த அடக்குமுறைகள் இவை..

போர் நடந்த பிறகு 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனம் இன்னும் அதிகம்

courtesy :  The Voice Of People
thanks  சந்திப்போம் சிந்திப்போம்


வியாழன், 14 பிப்ரவரி, 2013

பேரறிவாளன், முருகன், சாந்தனை நோக்கி நகர்கின்றதா, இந்தியக் கொலைக் கரங்கள்?


News Service
'ஒவ்வொரு விடியலும் அச்சத்தைக் கொடுக்கிறது' என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் தாயார் கண்ணீர் வடித்துள்ளார். மும்பைத் தாக்குதலாளிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் குற்றவாளியாகக் கருதப்பட்ட அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். இந்த இரு தூக்குத் தண்டனைகளுமே வெளியார் எவருக்கும் தெரியாமல், குற்றவாளிகளின் உறவுகளுக்கும் தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக, யாருமே எதிர்பார்க்கப்படாத வேளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  இதனைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற அதிரடிப்படையின்மீது கள்ளிவெடித் தாக்குதல் நடாத்தி 22 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம், சிலவேந்திரன், மீசை மாதையன், சைமன் ஆகியோர் தூக்கிலிடப்படவுள்ளார்கள் என்ற செய்தி தமிழ் மக்களைத் திகில் கொள்ள வைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் குறி வைத்தே இந்த தொடர் மரண தண்டனைகள் இந்திய ஆட்சியாளர்களால் ஒத்திகை பார்க்கப்படுகின்றது என்பதே தமிழ் உணர்வாளர்களது கருத்தாக இருக்கின்றது. இதனையே, பேரறிவாளனது தாயார் அற்புதம்மாளின் கவலை பிரதிபலித்துள்ளது.ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து ஈழத் தமிழர்கள்மீது போர் தொடுத்த சோனியா காந்தியின் வன்மம், ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்டுள்ள நிலையிலும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீது அவரது கவனம் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெறாது என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தனக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஆட்சி நிறைவுக்குள் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் சோனியா காந்தி உறுதியதாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் முடிவில் மாற்றங்கள் எதுவும் நிகழாதிருக்குமானால், தமிழ் மக்களது மனங்கள் எல்லாம் ஜெனிவாவில் மையங்கொண்டிருக்கும் நாட்களில், இந்தத் தமிழர்களது தூக்குத் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதான செய்தி ஒரு அதிகாலைப் பொழுதில் வெளியிடப்படலாம் என தமிழக ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய அரசு உள்ளது. அமெரிக்காவால் இதற்கான வாக்குறுதியும் இந்திய தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் துக்குத் தண்டனையை நிறைவேற்ற சோனியா காந்தி முயலக்கூடும் என்பதே தமிழக ஊடக தரப்பின் அச்சமாக உள்ளது.
சோனியா காந்தியின் இந்தப் பழிவாங்கல் படுகொலைகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ தமிழக மக்களால் முடியாமலும் போய்விடலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்கும் கருணாநிதியுடனும் அதற்கான பேரங்கள் பேசப்பட்டிருக்கும். ஒருவேளை, இந்தப் படுகொலையில் தனக்குச் சம்மந்தமே இல்லாததுபோல், கருணாநிதி தன் கவிதைகளால் இவர்களுக்கு மாலையிடவும் முனையலாம். ஆனால், தமிழகம் விழித்தே இருக்கும்.
தமிழகத்தில் இந்தப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் சுவடே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தமிழினத்தின் அழிவுகளில் பங்கேற்ற தி.மு.க.வுக்கும் இறுதி ஆணி அடிக்கப்பட்டு, குழிக்குள் இறக்கப்படும். இதுவரை, தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு ஈகப் போர் நடாத்திய தமிழ் உணர்வாளர்கள், எதிரிகளுக்கெதிரான வன்முறை சக்தியாகவும் மாறக்கூடும்.
தமிழகம் ஒருமுறை கொதித்தபோது, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டு, அண்ணா அவர்களிடம் வழங்கப்பட்டது. மறுமுறை கொதித்தபோது, தமிழகத்தின் ஆட்சி கருணாநிதியிடமிருந்து பறிக்கப்பட்டு, காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. இன்னொருதடவை தமிழகம் கொதித்தெழுமாக இருந்தால், தமிழகம் இந்தியாவின் மாநிலமாக இருப்பது சாத்தியமில்லாததொரு எதிர்காலத்தை உருவாக்கலாம்.
எனவே, ஒரு குடும்பத்தின் பழிவாங்கல் கொடூரத்திற்கு, தமிழகத்தின் தேசப்பற்று இரையாக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்தியர் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழகத்து மக்களில் எண்ணமாக உள்ளது.
- அகத்தியன்

புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!


இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப் போகின்றது.

  
தற்போதைய இந்திய ஆட்சி முறையில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட தென் மாநிலங்களே மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான 130 உறுப்பினர்களைத் தென் மாநிலங்களே தெரிவு செய்கின்றன. இந்த மாநில உறுப்பினாகளின் தயவிலேயே தற்போதைய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதிலும், கடந்த தேர்தலில் புதுவையின் 1 தொகுதி உட்பட, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே தற்போதைய ஆட்சியின் மிகப் பெரிய பலமாகும்.
கடந்த தேர்தலைப் போலல்லாது, தற்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் இந்தக் கூட்டணிக்குச் சவால் மிக்கதாகவே இருக்கப் போகின்றது.
இவர்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்று முடிந்த ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு யுத்தத்தினை தமிழக மக்கள் இன்றுவரை மறந்து விடுவதாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களது அழிவைத் தடுத்து சிறுத்தும் ஆற்றலும், அதிகாரமும் கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் தனது சுயநல தேவைகளுக்காகத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற ஆதங்கத்தின் வெறுப்பு இன்னமும் அடங்குவதாக இல்லை. இதே காரணத்தினாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பான்மையினோர் மக்களால் தண்டிக்கப்பட்டனர்.
எதிர்வரும் தேர்தலுக்காகத் தன்மீதான களங்கத்தைத் துடைப்பதற்காகவே கலைஞர் கருணாநிதி 'டெசோ' நாடகத்தைப் பல அரங்குகளிலும் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றார். ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறை தற்போதும் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழக காங்கிரசுக்குப் பலத்த சவாலைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் இந்திய ஆட்சியாளர்களுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா சிறிலங்காவை ஆதரிப்புமாக இருந்தால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். இதனால், இந்திய ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானதொரு கள நிலையை சர்வதேச அரங்கில் உருவாக்கும்.தற்போதைய நிலையில், இந்தியாவின் ஆட்சியாளர்கள், தங்களது அடுத்த தேர்தல்வரை தமிழீழ மக்களுக்கெதிரான எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவின் இக்கட்டான இந்த நிலைக்கு, தமிழக மக்களின் தமிழின உணர்வே காரணமாக அமைந்துள்ளது. இது கூர்மைப்படுத்தப்பட வெண்டும். இந்திய காங்கிரஸ் கட்சியின் நலனும், தமிழீழ மக்களின் நலனும் ஒரு கோட்டில் சந்திக்கவேண்டிய கட்டாய நிலையைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தரப்பு நலன் சார்ந்த மாற்றம் இரு தேசங்களின் நலன் சார்ந்ததாக மாறவேண்டும். அதற்குத் தமிழகம் மாபெரும் சக்தியாக மாறவேண்டும்.
தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் தமிழீழ நலன் சார்ந்ததாக உறுதிப்படுமானால், இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களாலும் தமிழீழத்தை வஞ்சிக்க முடியாது. தமிழர்களைக் கொலைக் களத்தில் நிறுத்த முடியாது.
தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!
- அகத்தியன் -