எல்லா நேரமும் நல்ல நேரம்!
தீரஜ்லால் (செயலர் - சோனா பொறியியல் கல்லூரி)
தெரியாதவிஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது மாணவராக வும், தெரிந்த விஷயங்களைச்சொல்லிக் கொடுக்கும்போது பேராசிரியராகவும் மாறவேண்டும் என்பதை கலாம்அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.
எங்கள்கல்லூரிக்கு வருகை தந்த கலாம், எங்கள் மாணவர்கள் "இஸ்ரோ'வுக்காகதயாரித்துக் கொடுத் திருந்த பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார்கள் பற்றி மிகுந்தஆர்வத்தோடு கேட்டறிந்தார். சேட்டிலைட் பாதையை மாற்றும் கருவியைகண்காணிக்கும் வகையில் பிரஷ்லெஸ் டி.சி.மோட்டார்களை தயாரித்திருந் தார்கள்எங்கள் மாணவர்கள். மாபெரும் விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்தலைவர் என்கிறஎண்ணம் துளியும் இல்லாமல் எங்கள் மாணவர்களிடம் தன் சந்தேகங்களைக் கேட்டுதெரிந்துகொண்டார் டாக்டர் கலாம்.
மாணவர்களுடன்கலாம் உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சிலர் ""விழாவுக்கான நல்லநேரம் முடியப்போகுது சார்'' என்று அவரிடம் சொன்னார்கள். ""எல்லா நேரமும்நல்ல நேரம்தான் சார்'' என்றபடி தன் உரையாடலை தொடர்ந்தார். இறைநம்பிக்கைஉடையவராக இருந்தாலும் மூடநம்பிக்கை இல்லாதவராக இருந்தார் கலாம்.
தாங்களேபரிமாறிக்கொள்ளும் வகையில் "பஃபே' உணவு ஏற்பாடு செய்திருந்தோம். எவ்வளவோவேண்டிக்கொண்டும் விடாமல் தனக்கான உணவை தானே போய் எடுத்துக்கொண்டார்.அதேபோல, எங்கள் கல்லூரி மூலம் தொழிற்பயிற்சி மேற்கொள்ளும் கிராமப்புறகுழந்தைகளுடன் அவர்களுக்கு நிகராக கீழே அமர்ந்து பேசிஉற்சாகப்படுத்தினார். அந்தக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்கமுடியாது. பிறகு அந்தக் குழந்தைகளை பார்க்க கிராமங்களுக்கு சென்றபோது என்கையைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். டாக்டர் கலாமை நேரில்பார்க்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்கே என்னை கொண்டாடினார்கள் என்றால்கலாம் மீது அவர் களுக்கு எவ்வளவு பாசம் இருக்கும் என்பதைபுரிந்துகொள்ளலாம். எளிமை தரும் உயர்வை டாக்டர் கலாமிடம் கற்றுக்கொண்டமாணவர்களில் நானும் ஒருவன். unarchitamilan |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக