தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பல்கலைக்கழகம்: |
தமிழீழ விடுதலைப் போராட்டம் யாருக்காக ? வீறு கொண்டு, களம் புகுந்து எதிரியை விரட்டியடிக்கும் வீரவேங்கைகளுக்காகவா ? தாயக மண்ணில் தவியாய் தவிக்கும் எம் இனிய உடன் பிறப்புகளின் இன்றைய வாழ்விற்காகவா ? அல்லது அவர்களது நாளை தற்பாதுகாப்பிற்காகவா ? தமிழீழத்தை விட்டு வெளியேறி உயிரைக்கையில் வைத்திருக்கும் சிறீலங்கா வாழ் தமிழீழத் தமிழருக்காகவா ? இலங்கைத் தீவிலிருந்து புலம் பெயர்ந்து தரணியெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழருக்காகவா ? தரணியெங்கும் தமிழன் எழுபது நாடுகளில் ஏழுகோடி மக்களாக வாழ்ந்தும் தனக்கென ஒரு நாடு இல்லையே என ஏங்கிக் கிடக்கும் தமிழினத்திற்காகவா ? |
உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் சொந்த மண்ணை இழந்து வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட உலக உரிமையிழந்த பல்லின மக்களுக்காகவா ? தாயகத்தமிழர் எனும் சிறிய வட்டத்தில் இருந்து பரந்துபட்ட உலகளாவிய ரீதியிலான பரந்துபட்ட வட்டம் வரைக்கும் சென்று பார்த்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய உலகளாவிய நிலை நன்கு புலனாகும். �நாலு பெடியள் நாற்சந்தியில் நின்றனர். பெடியளில் பெடியளாய் தோன்றினர் வீரவேங்கைகள். அதிகாரத் தமிர் கொண்டு, ஆயுதப் பலன் கண்டு அப்பாவி தமிழ் சிறுமிகளின் மேல் மிருக இச்சைகளை வீசியும் தமிழர் உரிமைகளை கொய்தும்வரும் சிங்கள அரச இராணுவம் பெடியளை கணக்கெடுக்கவில்லை� அந்த இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற விடுதலைப் போராட்டம் இன்று உலகளாவிய ரீதியில் தனக்கென தனியிடம் பெற்றிருக்கிறது. உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைக்கிருக்கும் மதிப்பு, ஆதரவு, கெளரவம், பெருமை என்பன வெகுசன தொடர்பு சாதனங்கள் மூலம் பெருமளவு ஆதரவு வழங்குபவர்களால் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மரபு முறை அரசுகளின் வாயிலாக வெளிப் படுத்தப்படவில்லை. கொடி பிடித்து, ஊர்வலம் நடத்தி, அணிதிரண்டு ஆதரவாக அறிவிக்கப்படவில்லை. நசுக்கப்பட்ட பல இனமக்கள் தம்மேல் நசுக்கும் அரக்கர் கால்களை தூக்கி எறிய முயற்சிக்கும் வேளை, தமிழீழவிடுதலைப் புலிகள் எறிந்து வருவதினைக் கண்டு உவகை கொள்கிறார்கள். தூக்கி எறிய முடியாது என தயக்கம் கொண்ட தலைமையில் வாடுபவர்கள் தமக்குக் கிடையாத தலைமைத்துவத்தைக் கொண்ட தமிழராவது தலை நிமிர்ந்து நிற்கட்டும் என மன நெகிழ்வுறுகிறார்கள். தன்னலம் மிக்க தலைமையின் கீழ் தலைவர்கள் பதவி, பரிவாரம், பட்டம், சுயவிளம்பரத்திற்காக பொதுமக்கள் உரிமைகளை பூண்டோடு அழித்து வரும் நிலைகண்டு தலைகுனிந்து வாழுபவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டாம் கண்டு பெருமைப்படுகிறார்கள். இவர்கள் வரிசையில் உலகின் சில இன மக்கள் கொட்டிய உள்ளிக்கிடக்கைகளை மறைந்தும் மறையாத மனித குல மாபெரும் சுடராகத் திகழும் மாவீரர்களுக்கு காணிக்கையாக படைக்க விரும்புகிறேன். நை[_ரியா நாட்டின் ஈபோ (IBO) இனமக்கள் ஆயிரத்து தொழாயிரத்து அறுபதுகளில் அரும்பி எழுபதுகளில் மடிந்த விடுதலை மலர்கள் �பயபரா� எனப்பட்டது. அம்மலர்கள் காயாய் கனியாக முன் கொய்யப்பட்டு கசக்கி எறியப்பட்டன. அவர்கள் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டது. யொருயா எனும் பெரும்பான்மை இன அரசிற்கு எதிராக முன்எடுத்து சென்ற ஈபோ இன மக்கள் போராட்டம் நசுக்கப்படக் காரணமாகவும் இருந்தனர். இந்த ஈபோ மக்களில் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மெச்சுகிறார்கள். இராணுவ கட்டுகோப்பை, போர் உத்தியை பாராட்டுகிறார்கள். ஆனால் மேடை அமைத்து வானளாவ முழங்க முன்வரவில்லை. அது விடுதலைப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்று வெற்றி காணத் தவறிய இனத்தினரால் தரப்படும் ஆதரவு. இந்நிலையில் சீக்கியர்கள் பலா தமிழீழ விடுதலைப் புலிகளை தமது முன்னோடி வீரர்கள் என உள்ளத்தே இருத்தி பெருமைப்படுகிறார்கள். காளிஸ்தான் எனும் தனிநாடு காண விளைந்து உக்கிரமாக போராடியவர்கள். பாகிஸ்தான் அரசின் சுயநலநோக்குடன் அமெரிக்க ஏகாதிபத்திய பின்னணியில் இயங்கியவர்கள், போராட்டம் பின்னடைவு பெற்றிருக்கிறது. தன் மண்ணில் தன் தலைமைத்துவத்தில் பெருமளவு நம்பி இயங்க தவறியதின் பாடம் ஒன்றை எம்மிடம் சீக்கியர்கள் கற்றுத் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்திட்டங்களை பாராட்டு கிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலை பற்றி நன்கு தெரிந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாளக பாட்டாளி வர்க்க ஆட்சியென்ற போர்வையில் பொதுவுடமை ஆட்சியில் உலகப் பாட்டாளி வர்க்க இணைப்பு நாடி போராடப்பட்டதாகக் கூறப்பட்டு இனவாரியான அடக்குமுறையில் பலர் நசுக்கப்பட்டவர்கள். அவர்கள் பொதுவுடமை அரசுகள் தகர்க்கபட்ட நிலையில் தம் இனவிடுதலை நாடிப் போராடினர் போராடுகிறார்கள் போராடவும் உள்ளனர். அவர்கள் தமிழீழ விடுதலைபற்றிப் பொதுமக்கள் நிலையில், விடுதலைத்தாகம் மிக்கவர்களால் நன்கு அறியப்பட்டிருக்கிறது. அவர்கள் தமிழீழ விடுதலை பற்றி அதன் இராணுவ நுணுக்கம் பற்றி, விடுதலை வேங்கைகளின் கட்டுக்கோப்பான, திடகாத்திரமான கொள்கைபற்றி, செயற்திறன், தியாக உணர்வு பற்றி சக உரிமை இழந்த சகோதரர்கள் என்ற முறையில் பாராட்டி உள்ளவர்கள். தென் அமெரிக்க கண்டத்தில் பல நாடுகள் ஸ்பானிய ஆதிக்கத்தின் கீழ் தம் இன, மொழி, பண்பாட்டு கூறுகளை இழந்து வாழுகிறார்கள். அவர்கள் விழித்தெழுந்து பொதுவுடமை உணர்வு மிக்க தலைவர்கள் கீழ் போராட்டினார்கள். மதத் தலைவர்கள் கூட விடுதலைப் பணியே தெய்வீகப் பணியெனக் கூறி ஆதரவு நல்கினார்கள். உலக வல்லரிசினால் அந்த வடுதலைப் போராட்டங்கள் நசுக்கபட்டன. சிதறடிக்கப்பட்டன, சீர்குலைக்கப்பட்டன, சின்னாபின்னமாக்கப்பட்டன. அவர்களில் உலக அரசியல் நடப்புகள் அறிந்தவர்கள். விடுதலை சுடரை தம்மகத்தே கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் போரை தம்மத்தே கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் போரை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். அதுமட்டுதமல்ல அந்த போராட்டத்தை உலக சக்திகள் நசுக்க எடுத்துவரும் சக்திமிக்க உலக நாடுகள் சிலவற்றின் நடடிக்கைகளையும் அவற்றினை தமிழீழ விடுதலைப் போராளிகள் கையாளும் முறைகளையும் அவதானமாகக் கவனித்துவருகிறார்கள். அவர்கள் தாம் இந்த எதிர்ப்பு சக்திகளை ஏற்கனவே சந்தித்தனர். அச்சக்திகளை விரட்டியக்க முனைந்தனர். பலமுறை தோல்வி கண்டனர். சிலமுறை வெற்றி கண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இது சம்பந்தமான செயற்பாடுகளைக் கண்டு மெச்சி வருகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் கையாளும் யுத்திகள் பற்றியும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த யுத்திகளில் சிலவற்றை தாம் கையாண்டனர். தாம் கையாண்ட வித்தைவிட விடுதலை வேங்கைகள் கையாளும் மாறுபட்ட தரமான முறைகண்டு பெருமை கொண்டனர். தாம் கையாளாத புதிய யுத்திகள் சிலவற்றை வேங்கைகளிடம் அறிந்து கொள்கிறார்கள். புதிய யுத்திகள் சிலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய விடுதலை இயக்கங்கள் மற்றும் சில நாடுகளில் கையாண்டு வருகின்றன. அவற்றையும் ஒப்பிட்டு பார்த்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டுகிறார்கள். தென்கிழக்காசியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றிய கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. வியட்னாம் தொட்டு பர்மா வரைக்கும் தமிழீழ விதலைப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கணிசமானவர்கள் இருக்குகத்தான் செய்கிறார்கள். அங்கு வாழும் பல இனமக்கள் தாம் பிற இனமக்களினால் நசுக்கப்படுவதை உணருகிறார்கள். ஆனால் அது தம் தலையெழுத்து என முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அது தம் தலையெழுத்து என முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடமும் உள்ள முற்போக்கு சக்திகள் உலகளாவிய ரீதியில் இடம் பெறும் விடுதலை சக்திகளின் போராட்டங்களை கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒர் முன் உதாரணமாக அமைந்திருக்கிறது. சறீலங்காவில் கூட நசுக்கப்பட்ட பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு மிக்கவர்களிடம் தமிழீழ விடுதலைப் போராட்ட யுக்திகள் ஓர் பாடமாக கற்கப்படுகிறது. அவர்கள் சறீலங்கா அரச பொருளாதாரம் சீர் குலைவதையிட்டு கவலைப்படவில்லை. பதிலாக நல்ல வாய்ப்பாகக் கருதுகிறார்கள். அவர்கள் சிறீலங்கா தேசத்தின் துரோகிகள் அல்ல. தேசபற்று மிக்கவர்கள் என தன்மை கருதிக்கொள்கிறார்கள். அவர்கள் கருத்தின்படி சிறீலங்கா பொருளாதாரம் சீர் கெட்டநிலை அடையும். அவர்கள் கருத்தின்படி சிறீலங்கா பொருளாதாரம் சீர் கெட்டநிலை அடையும் போதுதான் மக்கள் முதலாளித்துவ ஆட்சியை எதிர்த்து புரட்சி ஒன்றை நடத்த வீறுகொண்டு எழுபவர்கள் எனக் கருதுகிறார்கள். அம்மக்கள் ஆதரவு கொண்டு புரட்சி நடத்த விரும்பும் அவர்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரதீர செயல்கள் முன்கற்கும் பாடங்களாக அமைகின்றன. மத்திய கிழக்கில் பல இனமக்களிடம் தமிழீழ விடுதலைப் போரட்டாம் கற்கக் கடினாமான ஆனால் பயனுள்ள பாடமாக அமைந்துள்ளது. நிலப்பிரபுத்துவ அடக்குமுறை ஆட்சி, மதப்பற்று என்ற போர்வையால் மூடப்பட்டு இடம்பெறுகிறது. அவர்கள் தனியாரால் பறிக்கப்பட்ட சுதந்திரம், சுரண்டப்பட்ட பொருளாதார நிலை ஒருபுறம் இருக்கிறது. மறுபுறம் தமக்குள் இன சுரண்டல், இன ஒதுக்கல் அடக்கு மக்கள் தம் உரிமைகள் பெற முனைகிறார்கள், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் விடுதலை வேட்கை தணியாத தாகமாக இருக்கிறது. எப்போது எங்கு எரிமலை வெடிக்கும் எனத் தெரியாத நிலை ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது. மீண்டும் ஆபிரக்காக் கண்டத்தினுள் நுழைவோமானால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அவதானித்து வருபவர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் தென்சூடானில், கெனியாவில், ரன்சானியாவில், மொசாம்பிக்கில், சயரில், உகண்டாவில், பெர்க்கினோ பாசபில் என சில நாடுகளை குறிப்பிடலாம். இங்கெல்லாம் மக்கள் மத்தியில் இல்லாவிடினும் அரசியல் விழிப்புணர்வுமிக்க செல்வாக்கை மடைதிறந்து பாயவல்லவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒர் பல்கலைக்கழகமாக அமைகிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் கற்கும் பல துறைப் பாடங்களில் போர்த்திறன் ஒர் முக்கிய பாடமாக இருக்கிறதே தவிர முழுமையான பாடமாக இல்லை. இராணுவம், நிர்வாகத் திறன், குறைந்த இழப்பில் பாரிய வெற்றி, பொது நிர்வாகம், மக்கள் ஆதரவு, அக்கறை, எதிர்கால பாரிய வளர்ச்சி திட்டம், அகில உலக பிரச்சாரம், தொடர்புகள் எனபல்ல துறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சி உலகளாவிய ரீதியில் கற்கப்படும் பாடத்திட்டமாக அமைந்திருக்கிறது. உண்மைகள் உண்மைகளாவே வளர்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் உலக அடக்கப்பட்ட இன எழுச்சிக்கு ஒர் உந்து கோலாகிறது. அது அம்பலத்திலல்ல. அரங்கிற்குப் பின்னர் கல்விக் கூடமாய் காட்சி தருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியைக் கற்று தம் விடுதலை வேட்கைக்கு களமமைக்க முனைகிறார்கள். இந்த வகையில் பார்க்கும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் அனைத்து தமிழரது போராட்டம் மட்டுமல்ல அடக்கப்பட்ட இனங்களின் போராட்டத்துடன் சங்கமிக்கிறது. அத்தகைய போராட்டத்தினை செயல்வடிவத்தில் காணத் தம் இன் உயிர் ஈர்த்த மாவீரருக்கு எமது உளபூர்வமான அங்சலிகள். அவர்கள் அங்சலியை உள்ளத்தாலும் மலர்களாலும் மட்டுமன்றி அவர்கள் கண்ட அக்கனவை நினைவாக்க உழைப்பதாலும் அமையட்டும்� சாமி அப்பாத்துரை |
பக்கங்கள்
|
திங்கள், 3 ஜனவரி, 2011
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பல்கலைக்கழகம்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக