மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 8 ஜனவரி, 2011

பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?

பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்? 
பல உலக நாடுகளுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்தது. இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியில் போராடி மே 2009-இல் ஆயுதங்களை மௌனிக்க செய்வதாக அறிவித்த ஒரு இயக்கத்தை எதற்காக தொடர்ந்தும் தடைசெய்து வைத்திருக்க வேண்டும் என்கிற கேள்வியுடன் களம் இறங்கியுள்ளது பிரான்ஸின் தமிழ் நடுவம் என்கிற அமைப்பு. இவ்வமைப்பின் உள்நோக்கம் என்ன என்கிற வாக்குவாதத்தை புறம் தள்ளிவிட்டு தமிழர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்க முற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதே புத்திசாலித்தனம்.

குறிப்பிடப்பட்ட தமிழ் நடுவம் என்கிற அமைப்பு பல வெகுசனப் போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறது. பிற நாடுகளில் வதியும் தமிழர்களும் பிரான்ஸின் தமிழ் நடுவகத்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்து வெகுசனப் போராட்டங்களை நடத்துவதன் மூலமாக புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தமிழர்களின் மனங்களில் எழும் கேள்வி.
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கக் கோரும் வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்ஸினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. பல பொதுசன போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பொது அமைப்பு பிரதிநிதிகள்�� சமூக ஆர்வலர்கள்�� செயற்பாட்டாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என சொல்லப்பட்டது.
இப்புதிய ஆண்டிலாவது ஈழத்தமிழர்களின் அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க உலக நாடுகள் வழி அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே பல தமிழர்களின் அவா. 2009-இல் ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவித்தார்கள். ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளி தான் இல்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் அடித்துக்கூறப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செய்வதாக கூறி தமிழின அழிப்பையே மேற்கொண்டுவந்த சிறிலங்கா அரசுஇ உலக நாடுகளின் ஆதரவைப் பெறவே புலிகள் ஆயுதங்கள் மீதுதான் அதீத நம்பிக்கையை வைத்து போர் செய்து வந்தார்கள் என்கிற பொய்யான பரப்புரையை மேற்கொண்டது. உலக நாடுகளும் இதனை ஏற்று தமிழ் மக்களை அழிக்க உதவிகளை வழங்கி வந்துள்ளது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை மழுங்கடிக்க உதவிய உலக நாடுகளுக்கு மே 2009-இல் இடம்பெற்ற சம்பவம் பாரிய தலையிடியை கொடுத்தது. பல நாடுகள் சிறிலங்காவின் போரையே கண்டிக்குமளவு புலிகளின் திறனாய்வு இருந்தது. அடித்தால் திருப்பி அடிப்பார்கள் புலிகள் என்று எண்ணினார்கள் ஈழத்தமிழரின் விடுதலையை விரும்பாத பல நாடுகள். இந்நாடுகளின் எண்ணங்களுக்கு மாறாக இறுதிவரை மௌனத்தை கடைப்பிடித்தார்கள் புலிகள்;.
சிறிலங்காவுக்கு ஆதரவளித்த நாடுகள் பல புலிகள் அப்பாவி சிங்களவர்களை கொலை செய்வார்கள் என்று கூட நினைத்திருந்தார்கள். இதன் மூலமாக புலிகளை இராஜதந்திர ரீதியில் மரணிக்கப் பண்ணலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புலிகள் நிரூபித்தார்கள்.
ஈழப் போராட்டத்தை புலம்பெயர் இழைஞர்களிடம் ஒப்படைப்பதாகவும்�� சனநாயக வழிமூலம் அடுத்த கட்ட ஈழப்போரை தொடருவதன் மூலமாக தமிழீழ தனியரசுக்கான போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்கிற நோக்கத்தினாலையோ என்னவோ புலிகளின் தலைமை துன்பகரமான முடிவை எடுத்தது.
சனநாயக போராட்டமே வெற்றியைத் தேடித்தரும்:
விடுதலை என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல. இரத்தம் சிந்தி�� பல துயர்களினூடாக வருவதுதான் உண்மையான சுதந்திரம். தியாகம் இல்லாமல் ஒரு நாட்டை பெற்றால்�� குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் பல இடர்களை சந்திப்பார்கள். மேற்கு பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) என்கிற நாடு இந்தியாவின் துணையுடன் விடுதலையை பெற்றது.
இதன் விடுதலையென்பது குறுகிய காலத்திற்குள் இடம்பெற்றது. உண்மையான தியாகம் என்றால் என்ன என்று பல பங்களாதேஷிகளுக்கு தெரியாமலே சுதந்திரம் கிடைக்கபெற்றது. சுதந்திரம் கிடைத்து சில தசாப்தங்கள் ஆனாலும் இன்றும் இந்நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் உள்ளது. அன்றாட சீவியத்திற்காக பல லட்சம் மக்கள் திண்டாடுகிறார்கள். ஈழ விடுதலை என்பது அப்படியல்ல. நாளையே ஈழம் கிடைத்தால் சிங்கப்பூரை விட ஆசியாவின் முன்மாதிரியான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாறும்.
நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதே புத்திசாலித்தனம். நான்காம் கட்ட ஈழப் போரில் இடம்பெற்ற தமிழின அழிப்பை உலக நாடுகளே கண்டிக்குமளவு வளர்ச்சிகண்டுள்ளது. ருவாண்டா கொசோவோ யுகோஸ்லாவிய போன்ற கொடுமையான இன அழிப்புகளை ஒட்டியே ஈழத் தமிழரின் அழிவையும் உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்துள்ளன. போரக்; குற்றத்திற்காக சிறிலங்காவின் அரச தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட பலரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வரத் தொடங்கியுள்ளது. உலகத்தமிழர்களின் தொடர் சனநாயக வழிப் போராட்டங்களினாலேயே உலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான கொள்கை மாற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அன்று புலிகள் ஆயுதங்களை மௌனிக்க செய்யாமல் இருந்திருந்தால் உலக நாடுகளே இணைந்து ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் அழித்திருப்பார்கள். சனநாயக வழியினூடகவே ஈழத்தமிழரின் விடுதலையை அடைய முடியும். ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலக நாடுகளிடம் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவை பெறுவதனாலையே ஈழத்தமிழரின் விடுதலையை பெற முடியும். பலவிதமான சனநாயக வழிப் போராட்டங்களை புலம்பெயர் ஈழத்தமிழர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர் போராட்டங்களினூடாகவேதான் உலக நாடுகளின் கண்களை திறக்க முடியும். ஈழத்தில் நடைபெறும் சம்பவங்கள் உட்பட ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்காவில் தற்போது இடம்பெறும் சம்பவங்களையும் உலகநாடுகள் முன் கொண்டுசென்று நியாயம் கேட்பதுடன் ஈழத்தமிழர்கள் ஓன்றும் ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் உணரும் விதமாக செயற்பட வேண்டும்.
புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கச்செய்வதன் மூலமாக தமிழர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இனமில்லை என்பதை உலகறியச் செய்ய முடியும். புலிகளின் தடையை உலக நாடுகள் நீக்குவதனூடாக ஈழத்தமிழர் சிந்திய குருதிக்கும் பட்ட இன்னல்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டாகும். இதனூடாக ஈழத்தமிழரின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வழியமைக்கப்படும்.
உலகத்தமிழர்கள் பிரெஞ் தமிழர்களை பின்பற்றுவார்களா? ஆறுமாதத்திற்கு ஒரு தடவை�� ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதுப்பிக்கப்பட்டு வரும் பயங்கரவாத பட்டியல் தொடர்பிலான முடிவினை கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் இந்த வெகுசனப் போராட்டத்தின் மக்கள் கையொப்பங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதென்றும் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் இதனை முன்னெடுப்பதென்றும் பிரெஞ்சு தமிழ் நடுவம் நடாத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வேண்டுகோள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட இருக்கும் மனுவிற்காக இக்கோரிக்கைக்கு சார்பாகவும் ஆதரவாகவும்�� பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடமும் ஏனைய பிற இன மக்களிடமும்�� கையொப்பங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன என கூறியிருக்கிறது இவ்வமைப்பு.
புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனித்து முற்றிலும் சனநாயக அமைதிவழி நடவடிக்கைகளை ஆதரித்து நிற்கையில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸ் அரசும் புலிகள் வரித்துக்கொண்டுள்ள அமைதிவழி சனநாயக பூர்வ நிலைப்பாடுகளை ஊக்குவித்து தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவளிக்குமுகமாக புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பில் கோரும் இந்தப் போராட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் யாவரும் பங்கேற்குமாறு பிரெஞ்சு தமிழ் நடுவம் கோரியுள்ளது.
சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புக்களையும் பெரும் தியாகங்களையும் புரிந்துவரும் விடுதலைப் பேரியக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவதன் மூலம் தமிழ்ச் சமூகம் தனது�� அடையாளங்களுடன் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க ஊக்குவிப்பாய் இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று கூறியுள்ளது பிரெஞ்சு தமிழ் நடுவம்.
எமது தேசிய விடுதலை இயக்கம் மீதான �பயங்கரவாத இயக்கம்� என்ற அநீதியான குற்றச்சாட்டை நீதியின் பேராலும் அமைதியின் பேராலும் சனநாயகத்தின் பேராலும் விடுதலையின் பேராலும் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரான்ஸ் அரசையும் கோரும் எமது போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் தமிழர் அமைப்புக்கள் சங்கங்கள் என்பன இதயசுத்தியுடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் இவ்வாறு தமிழர் நடுவம் தெருவித்துள்ளது.
ஏழு கோடிக்கு அதிகமான தமிழர்கள் வாழும் இந்தியாவே முதலில் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது. இதன்பின்னர் பல நாடுகளும் புலிகளை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது. ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்க புலிகள் மீது போடப்பட்ட இத்தடை மூலமாக சிறிலங்கா அரசுகள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களின் சாவுக்கும் இப்பயங்கரவாத முத்திரையே காரணமாக இருந்தது. புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதே உலகத்தமிழர்களின் இராஜதந்திர போராட்டத்தின் முதற்படியாக அமையும். புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் சனநாயக வழிப் போராட்டங்களை நசுக்க புலிகள் மீதான தடை ஒன்றே போதும். புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் பல நாடுகளில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் சனநாயக வழிப் போராட்டங்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும்.
இதுநாள் வரை செய்த தியாகங்கள் வீண்போகாமல் இருக்கப்பட வேண்டுமானால்இ உலகத் தமிழர்கள் ஓன்றுபட்டு புலிகள் அமைப்பு தடை செய்யபட்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுத்து புலிகள் மீது விதிக்கபட்டிருக்கும் தடையை நீக்க செய்வதே புத்திசாலித்தனம். ஏழு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் மாபெரும் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக புலிகள் மீதான தடையை நீக்கச் செய்யலாம். இதைப்போலவே புலிகளை தடை செய்துள்ள பிறநாடுகளிலும் வெகுசனப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக நடவடிக்கைகளை எடுத்து புலிகளின் தடையை விலக்க செய்யலாம். பிரெஞ்சு தமிழ் நடுவம் மேற்கொண்டிருக்கும் செயலை பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக