முத்துக்குமாரா.. தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்! ![]() |
தமிழீழம் எரிந்து கொண்டிருந்த வேளையில், தூங்கிக்கொண்டிருந்த தமிழகத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்பத் தன்னோடு போர் தொடுத்தது முத்துக்குமாரன் என்ற அக்கினிக் குஞ்சு. சிங்கள தேசம் தடை செய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளை வீசி, ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துக்கொண்டிருந்த காலத்தில், தன்னையே எரித்துத் தமிழீழம் காக்கப் புறப்பட்ட வீரத் தமிழன் முத்துக்குமாரன் தமிழகத்தின் ஆட்சித் தலைவரையே தோற்கடித்த நாள் ஜனவரி 29, 2009. |
முத்துக்குமாரா� எங்கள் ஈகைப் போரெளியே�! தமிழகத்தை எழுச்சி கொள்ள, தமிழக மக்களை ஒன்றாக எழ வைக்க உன்னை அக்கினிக்கு இரையாக்கினாய்! உனது உன்னதமும், உனது புனிதமும் உன் கனவுகளை நிறைவேற்றும். தமிழீழ மக்களுக்காய் தமிழகம் பொங்கி எழும். எங்களுக்காய் ஒன்றாக எழுந்து போராடும். எங்களைக் காப்பாற்றத் தடை தகர்க்கும். எங்களை மீட்க கடல் கடக்கும் என்று தமிழீழ மக்கள் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். தெற்கின் சிங்களமும், வடக்கின் ஹிந்தியமும் தமிழர்களைப் பூண்டோடு அழிப்பதற்குப் புதிது புதிதாக என்னதான் முயன்றாலும், காலம் மாறும் என்று கரம் கூப்பி நிற்கின்றார்கள். முத்துக்குமாரா.. எங்கள் தாய்நிலத்துத் தளபதியே�! நீ மூட்டிய தீ அன்று எம்மைக் காப்பாற்றாது தடுக்கப்படலாம்� ஆனாலும், நீ தீட்டிய போர்வாளாக அது ஆயிரம், ஆயிரம் தோழர்கள் கைகளில் ஆயுதங்களாக உயரும். உண்மையும், தியாகமும் வீணாகித்தான் போகும் என்றால் உலகில் வாய்மை எதற்கு�? சிலுவையில் அறையப்பட்டதனால், யேசுவின் கதை முடிந்து விடவில்லை. சுட்டுக் கொன்றதனால், காந்தியின் வரலாறும் அழிந்துவிடவில்லை. சத்தியம் செத்துவிடுமென்றால், யூதாஸ் கரியோனும், கோட்சேயும் அல்லவா வரலாறாகப் பதிவாகியிருப்பார்கள். முத்துக்குமாரா� போலிகளை வீழ்த்திப் புடமாகிப் போனவனே�! �வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்� என்று நீ கதை பேசவில்லை. அதை வாழ்ந்து காட்டியவன் நீ. கட்டுமரமாய் மிதந்து நீ, தமிழர்களைக் கரை சேர்ப்பாய் என்று இப்போதும் நாங்கள் நம்புகின்றோம். இதயத்தால் உன்னைப் பூசிக்கிறோம்� உன்னைப் பின்பற்றி எத்தனையோ தமிழர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்தார்கள், ஆனாலும், தமிழீழத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே� தமிழர்கள் என்றுமே எதிரிகளால் வீழ்த்தப்பட்ட வரலாறு கிடையாது. துரோகிகளாலேயே தமிழீழமும் வீழ்ந்தது. முத்துக்குமாரா.. தமிழகத்தின் மாவீரனே�! உன்னை வணங்குகின்றோம்�! எங்கள் மண்ணெல்லாம் விதைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் எழும் காலத்தில் நீயும் எழுந்து வருவாய்� தமிழீழக் கொடி பறக்கும் தேசத்தின் காற்றிலும், மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும் உன் நாமம் கலந்து வியாபிக்கும் காலத்தில் கட்டாயம் நீ மீண்டும் வருவாய்� நீ மூட்டிய தீயினை நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் ஏந்தி நிற்கின்றோம். நாங்கள் தோற்றுப்போக மாட்டோம். எந்தத் தடை வரினும், தளர்ந்து நிற்காமல் வெற்றித் திசை நோக்கி விரந்து பயணிப்போம்! தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்! தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்! unarchitamilan |
பக்கங்கள்
| |||
|
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
முத்துக்குமாரா.. தமிழீழத்தை மீட்டு, உனக்குக் காணிக்கையாக்குவோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக