மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 28 டிசம்பர், 2010

துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்தியா இரகசியத் திட்டம்!

துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்தியா இரகசியத் திட்டம்!இந்திய அரசின் 'ரா' உளவுத்துறை தமிழீழ அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

1986ஆம் ஆண்டில் 'ரா' உளவுத்துறை விடுதலைப் புலிகளுக்கு எதிராக டெலோ, ஈபிஆர்.எல்.எஃப் ஆகிய இயக்கங்களை தூண்டிவிட்டும் ஏராளமான ஆயுதங்களைத் தந்தும் மோதல் ஏற்படவைத்தது. அந்த மோதல்களில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்றிபெற்றதோடு மட்டுமல்ல இந்திய உளவுத்துறையால் துரோக இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த ஆயுதங்களையும் பறித்தெடுத்தது. திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில் 'ரா' உளவுத்துறை என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்தது.

ராஜீவ்-செயவர்த்தனா உடன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு புதிய இயக்கம் ஒன்றினை 'ரா' உளவுத்துறை கட்டமைத்தது. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளோட் ஆகிய துரோகக் குழுக்களை ஒன்றிணைத்து மூன்று நட்சத்திர அமைப்பு என்ற பெயரால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிறகு இந்த அமைப்பின் பெயர் ஈ.என்.டிஎல்.எஃப் என்று மாற்றப்பட்டது. ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்திய அமைதிப்படையின் முகாம்களுக்கு அருகே தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டு ஆள்காட்டும் வேலையில் ஈடுபட்டார்கள். விடுதலைப்புலிகளின் குடும்பத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை இந்தியப்படைக்கு அடையாளம் காட்டும் வேலையை இவர்கள் செய்தார்கள். இதன் விளைவாக பலர் உயிரிழந்தார்கள். ஏராளமானவர்கள் சித்திரவதைகள், சிறைவாசம் போன்ற கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மக்களின் பேராதரவோடு இந்திய அமைதிப்படையோடு போராடி அதை தங்கள் மண்ணிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினார்கள். அமைதிப்படை வெளியேறும்போதே அவர்களுடன் சேர்ந்து துரோகக் கும்பலும் இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டது.

இக்குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா அதிலிருந்து விலகி தனது தலைமையில் மற்றொரு ஒட்டுக்குழுவை அமைத்துக்கொண்டு சிங்கள ஆட்சியாளர்களுடன் ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவியைப் பெற்றார்.

இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்ட பிறகு அதனுடன் சேர்ந்து தப்பி ஓடி இந்தியாவில் தலைமறைவாக இருந்த வடக்கு-கிழக்கு மாநிலத்தின் முன்னாள் பொம்மை முதலமைச்சரான வரதராஜபெருமாள் முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு தைரியமாக இலங்கை திரும்பினார்.

கடந்த நவம்பர் 13, 14 தேதிகளில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரகசியக் கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள். பிரிட்டன் போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இருநாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இவர்கள் கலந்துரையாடியதுடன் இந்திய அரசிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்கள்.

வட-கிழக்கு மாநிலத்திற்கு சுயாட்சி உரிமை அளிக்கவேண்டும் என்று கேட்டுப் போராடவுள்ளதாகவும் இதற்கான பிரகடனம் ஒன்றினையும் விரைவில் வெளியிடப்போவதாகவும் அதற்கு இந்திய அரசு முழுமையான ஆதரவு தரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளும் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் தங்களுக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு பண ஆசை உட்பட பல்வேறு ஆசைகளைக் காட்டி அவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்குள் நுழைவதற்கு யாரையும் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. ஆனால் இந்த துரோகக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்விதமான தங்கு தடையுமில்லாமல் பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஆள்சேர்க்கும் வேலைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக இவர்கள் வசம் பெருந்தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய 'ரா' உளவுத்துறையே இவர்களைப் பின்னின்று இயக்குவதாகக் கூறப்படுகிறது.

தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக இந்திய அரசு இந்த வேலைகளில் ஈடுபடுவதன் பின்னணி என்ன? விடுதலைப்புலிகள் தலைமையில் ஈழத்தமிழர்கள் போராடியபோது அந்தப் போராட்டத்தை ஆதரிக்காததோடு அதை முறியடிக்க, சிங்கள இராணுவத்திற்கு ஆயுத உதவிஉட்பட அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்ததது. ஆனால் இப்போது மாநில சுயாட்சி கேட்டுப் போராட ஈழத்தமிழர்களைத் தூண்டிவிடுகிறது.

சீனாவின் இறுக்கமான பிடியில் சிக்கியிருக்கும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவரவும் விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சியைத் தடுத்து நிறுத்தி தமிழர் பகுதியை தனது தீவிரக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் இந்தத் துரோகக் கும்பலைப் பயன்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஈழத்தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட துரோகக் கும்பலை இந்திய அரசு மீண்டும் மீண்டும் நம்புவதும், பயன்படுத்துவதும் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக