மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஓவரா பண்றாங்க!

ஓவரா பண்றாங்க!
24 மணி நேரமும், ஏழு நாட்களும் என்ற கான்செப்ட்டில் நியூஸ் சேனல்கள் வந்துவிட்டபிறகு, எல்லா செய்திகளும் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. எது நடந்தாலும், உடனடியாக நேரடி ஒளிபரப்பு, நிபுணர்கள் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து விவாதிப்பது, யாரையாவது கேமரா முன்னால் பிடித்து நிறுத்திவைத்து குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு திணற வைப்பது... இப்படியாக அலப்பறை செய்வார்கள். அடுத்ததாக வேறு ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் போதும்... இப்போது அலசி ஆராய்வதை அப்படியே விட்டுவிட்டு அதன் பின்னால் ஓடுவார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிடைத்ததும் ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலை மறந்துவிட்டார்கள். மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரி கார்கரே பற்றி காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்ததும், இரண்டு நாட்களாக ‘ஸ்பெக்ட்ரம்’ என்ற வார்த்தையைக்கூட நியூஸ் சேனல்களில் கேட்க முடியவில்லை...

‘மக்களின் ஞாபகமறதிதான் அரசியல்வாதிகள் ஊழல் செய்தபிறகும் துணிச்சலோடு அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க வருவதற்குக் காரணம்’ என்பார்கள். அந்த ஞாபகமறதிக்கு இந்த சேனல்களும் செய்தித்தாள்களும்தான் பிரதான காரணம் என்று சொல்லலாம்.

‘டெஹல்கா’ வார இதழில் விஜய் சிம்ஹா தொடர்ச்சியாக எழுதிவரும் பகுதி, ‘10 விஷயங்கள்.’ கடந்த வாரம் அவர் தொட்டிருப்பது, ‘இந்திய பத்திரிகைகளும் நியூஸ் சேனல்களும் ஓவர் டோஸ் ஆக ரிப்போர்ட்டிங் செய்துவரும் 10 விஷயங்கள்’ மற்றும் ‘கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய 10 விஷயங்கள்’.

‘செய்தி’ என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் சில குறிப்பிட்ட விஷயங்களையே நாம் பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் நேர்கிறது. அந்தப் பத்து விஷயங்கள்...

1. வெற்று அரசியல் பிரசாரங்கள்.
2. கிரிக்கெட்.
3. பாலிவுட் பிரபலங்கள் பற்றிய செய்திகள்.
4. அயோத்தி.
5. வெளிநாடுகளில் இந்தியர்கள் பெறும் வெற்றிகள் பற்றிய செய்திகள்.
6. ஷேர் மார்க்கெட் ஏற்றமும் சரிவும். இதுவா இந்தியப் பொருளாதாரத்தின் அளவுகோல்?
7. மறுபிறவி, மரத்தில் பூனை ஏறி வசிப்பது போன்ற ‘உருப்படியான’ செய்திகள்.
8. பாகிஸ்தான்.
9. மருத்துவ உண்மைகள்; பெரும்பாலும் அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக இருக்கும்.
10. அமெரிக்கா. (இன்னுமா அந்த நாட்டை ‘பெரியண்ணன்’ என உலகம் நம்புகிறது?)

விஜய் சிம்ஹா தந்திருக்கும் இன்னொரு பட்டியல், செய்திகளைத் தரும் இடத்தில் இருப்பவர்களை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வைக்கும்... ‘மக்கள் இதைத்தான் படிக்கிறார்கள் என்பதால் தருகிறோம்’ என ஒவ்வொரு பத்திரிகையும் காரணம் ஒன்றைச் சொல்லும்; ‘இதைத்தான் எல்லோரும் தருவதால், வேறு வழியின்றி படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது’ என பெரும்பாலான வாசகர்கள் சொல்லக்கூடும். நியூஸ் சேனல்கள் விஷயத்திலும் இப்படி கருத்து இருக்கிறது. ‘கோழி முதலிலா; முட்டை முதலிலா...’ என்ற முடிவில்லாத விவாதம் போன்றது இது. ஆனாலும், இந்த ஏரியாக்களில் இன்னும் நியூஸ் கவரேஜ் தேவை என்ற இந்தப் பட்டியல் அவர்களை யோசிக்க வைக்கலாம்...

1. மாவோயிஸ்ட் அமைப்பில் நடக்கும் அதிகார யுத்தங்கள். எதற்காக அவர்கள் தலைமைப் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்; அவர்களுக்குள் இருக்கும் ஜாதி மோதல்கள், அவர்களின் போராட்ட உத்திகள்.

2. மீடியாக்களில் நடக்கும் மோசடிகள். பத்திரிகையாளர்களுக்கான நெறிகளை மீறி சிலர் செயல்படுவது, அரசியல்வாதிகளுடன் உறவு வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் உள்ளடி வேலைகள், லஞ்சம், வேண்டுமென்றே சிலர் மீது அவதூறு பரப்புவது... ) நீரா ராடியா டேப் விவகாரம் பாதி பேரை சந்திக்கு இழுத்துவிட்டது. இன்னும் நிறைய பேர் பாக்கி இருக்கிறார்கள்...)

3. போதைக் கொலைகள். குடி போதையில் ஒரு அப்பா ஐந்து பெண்கள் அடித்துக் கொல்கிறார்; ஒரு போலீஸ்காரர் ஏழு சக போலீசாரை சுட்டுக் கொல்கிறார்; போதையில் பள்ளி மாணவன் பிளாட்பாரத்தி தூங்குபவர்கள் மீது கார் ஓட்டிக் கொல்கிறான். இதையெல்லாம் பரபரப்பாக வெளியிடுகிறார்களே தவிர, சமூக அக்கறை அதில் இல்லை.

4. சாலைகளில் வாழ நேர்ந்தவர்களின் அவலம் பற்றி... அவர்கள் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்பது பற்றி...

5. டெல்லி போன்ற அதிகார மையங்களில் இருந்து ஆட்சி செய்பவர்களை யார் யார் சந்திக்கிறார்கள்... அந்த சந்திப்புக்குப் பின், அவர்களுக்கு சாதகமாக என்ன முடிவு எடுக்கப்படுகிறது? அது ஏன் எடுக்கப்படுகிறது? அதனால் அவர்கள் அடையும் ஆதாயம் என்ன என்பது பற்றி?

6. மத அடிப்படைவாதிகளான மாஃபியாக்கள் பற்றி. வெளியில் தெரியாத அதிகார மையங்களான இவர்கள் பணத்தையும் மக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

7. சோதனைகளுக்கு அப்பாற்பட்ட மையங்களாகக் கருதப்படும் வெளிநாட்டுத் தூதரகங்கள் உண்மையில் நம் மண்ணில் என்ன செய்கின்றன? அவர்கள் அக்கறை காட்டும் விஷயங்கள் என்ன?

8. இளைய தலைமுறை அரசியல்வாதிகள் மாற்றத்தைக் கொண்டுவருவதாக ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் சாதி, பணம், மாஃபியா பவர் என அவர்களது ரகசிய சந்திப்புகள் வேறு மாதிரி இருக்கின்றன.

9. கலைப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் திருட்டு, மோசடி என கோடிக்கணக்கில் நிழல் பிசினஸ் செய்யும் கும்பல்கள், பல பிரபல கலைஞர்கள், ஓவியர்களைச் சுற்றி செயல்படுகின்றன. அவர்களைப் பற்றியும், அவர்கள் பிசினஸ் பற்றியும்...

10. எரிசக்தித் துறை. பெட்ரோலுக்கும் மாற்றும் எரிபொருள்களுக்கும் இங்கு யுத்தமே நடக்கிறது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எதிர்கால மோதல்கள் இதனால் வரலாம். பருவநிலை மாற்றத்தை எரிசக்திக்கான தேவை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி!


unarchitamilan manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக