மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

காலம் பலரை கௌரவித்திருக்கிறது. நல்லகண்ணு போன்ற சிலர்தான் காலத்தைக் கௌரவித்து இருக்கிறார்கள்!

நல்லகண்ணு
அறிமுகமற்ற மனிதரிடமும்
நீ எனக்கு சகோதரத்துவம் கொடுத்தாய்!
என்னுள் கருணையின் வளம்
நெருப்புபோல கனன்று எரியச் செய்ய,
நீ எனக்குக் கற்றுக்கொடுத்தாய்...
நீ என்னை இறப்பவற்றவனாக்கி இருக்கிறாய்!
இவ்வாறெனில் இனி நான்
எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்!
தன்னை மக்கள் கவிஞனாக மாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நோபல் பரிசு பெற்ற பாப்லோ நெருடா எழுதிய கவிதையின் வரிகளில் கண்பதிக்கிறார் நல்லகண்ணு. ‘‘இந்தக் கவிதைக்கு, ‘எனது அரசியல் கட்சிக்கு...என்று தலைப்பு வைத்தார் பாப்லோ நெருடா. அவரைப்போல எனக்கு நேர்த்தியான வார்த்தைகளால் சொல்லத் தெரியாது. என்னால் முடிந்த அளவு நெருடாவின் வார்த்தைகளை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மக்கள் நலன் கருதும் ஒரு பொதுவாழ்வை வாழச்செய்த எனது கட்சிக்கும், தோழர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்...’’ ஒரு குழந்தையைப் போல சிரிக்கிறார் அந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர்.
‘‘1925-ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம்தான் நான் பிறந்த ஊர். சாதாரண நடுத்தர விவசாயி என் அப்பா. தானுண்டு தன் வேலையுண்டுஎன்று வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு, என்னைப் பற்றி வரும் பஞ்சாயத்துகளைத் தீர்ப்பதே வேலையாகிவிட்டது. நாலெழுத்துப் படிச்சு வேலைக்குப் போகாம, போராட்டம், அரசியல்னு கொடி பிடிச்சுக்கிட்டு அலையுறானே...என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லும் புகார்களின் பேரில் என் மீது தினமும் விசாரணை நடக்கும். விலக்கிவிட்டாலும் தாயின் கால்களை ஓடிவந்து கட்டிக்கொள்ளும் குழந்தையைப்போல, மீண்டும் மீண்டும் நான் போராட்டக் களத்தில் போய் நின்றேன்.
தொழிலாளர்களோடுதான் ஆரம்பித்தது என் பொது வாழ்க்கை. தமிழகத்தின் முதல் பஞ்சாலை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் சுரண்டலை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம்தான் என்னுடைய முதல் சுவடு. சொல்லக் கொதிக்குடா நெஞ்சம்; வெறும் சோற்றுக்கா வந்ததிந்த பஞ்சம்?’ என்ற பாரதியின் வரிகளைப் படித்துவிட்டு நிமிர்ந்தால் பஞ்சாலை தொழிலாளர்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்தனர். பள்ளியில் படிக்கிற எனக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கியது. பனையோலை பெட்டியைத் தலையில் சுமந்தபடி வீடுவீடாக அரிசி சேகரித்தேன். மனநிறைவு என்றால் என்னவென்று உணர்ந்த முதல் நிகழ்வு அது.
தொழிலாளர்களின் வறுமை என்னைப் பாதித்தாலும் நான் காங்கிரஸ் சார்பாளனாகவே இருந்தேன்.  என் எதிர்ப்பு மனோபாவம், ‘வெள்ளையர்களே வெளியேறுங்கள்என இருந்த நேரத்தில், பலவேசன் செட்டியார் என்கிற ஆசிரியர் என் வாழ்வில் வந்து சேர்ந்தார். பொதுவுடைமைக் கொள்கைகளையும், தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சாதிய அடக்குமுறைகளையும் பற்றி மணிக்கணக்காக பேசுவார். இது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளையர் அரசாங்கம் தடைசெய்த புத்தகங்கள் எல்லாம் எனக்குப் படிக்கக் கிடைத்த காலம் அது. எம்.எஸ் சுப்பிரமணி அய்யர் எழுதிய, ‘பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறுபுத்தகத்தை வகுப்பில் வைத்து படித்ததற்காக தண்டிக்கப்பட்டேன். வெகு அமைதியானவனான என்னிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்த தலைமை ஆசிரியர், ‘மண்பூனை எலி பிடிக்க ஆரம்பிச்சுடுச்சா?’ என்று கேட்டார்.
திரு.வி.கலியாணசுந்தரனாரின் நூல்கள், தேசியமும் பொதுவுடைமையும் கலந்த சிந்தனைக் கருவூலங்களாக இருந்தன. கார்ல் மார்க்ஸ் முனிவர்என்ற பெயர் எனக்கு அவர் நூல்கள் மூலமாக  அறிமுகமானது. சாதிக் கொடுமையை மிகநேரடியாகப் பார்க்கிற அனுபவமும் கிடைத்தது. கேரளாவில் புழுக்களைவிட மோசமாக கருதப்பட்ட ஈழவ மக்களைப் போலவே தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார்என்கிற கைத்தறி நெசவு செய்யும் சாதியினர் இருந்தனர். மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வெளியூர்களுக்குக் கிளம்பிப் போவதைப் பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் குறைந்தபட்ச மானத்தோடு வாழ வழியில்லாமல், வேறு ஊர்களில் அடைக்கலமாகப் போனார்கள். இது என்னைக் கடுமையாக பாதித்தது.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படிக்க சேர்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனேன். சுதந்திர போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போராட்டத்தில் இருந்தபோது, ‘நாட்டு விடுதலைக்கு மட்டும் போராடிப் பயனில்லை; மக்கள் விடுதலைக்கும் போராட வேண்டும்என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்னை வெகுவாக ஈர்த்தது. புத்தகங்களுக்குள் அடங்கிப்போகும் வெறும் தத்துவமாக, கம்யூனிச கொள்கைகள் இல்லை. ஒடுக்கப்படுகிற மக்களின் ஆயுதமாகவும் இருந்தது.
காங்கிரஸ் கட்சியினர் தேசிய விடுதலை என்றால் உயிரையும் தர முன்வந்தனர். ஆனால், சாதிக் கொடுமைகள் பற்றி வாயே திறக்காமல் மௌனமாக இருந்தனர். மக்கள் விடுதலையில் போதிய தெளிவோ, உறுதியோ இல்லாத தன்மையும், பலவேசன் செட்டியாரின் தாக்கமும் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கியது. அந்த நேரத்தில் கட்சிப் பணியாற்ற முழுநேர ஊழியராக வரமுடியுமா என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டுக் கிளம்பினேன்.
என் முடிவால் வீட்டில் அதிர்ச்சி அலை வீசியது. அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கக்கூடிய நான், படித்து உத்யோகத்திற்கு வருவேனென்று நம்பிக் கொண்டிருந்தனர். வீட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தங்கியிருந்து முழுநேரம் பணியாற்ற கட்சியால் பணிக்கப்பட்டேன். அங்கு பேராசிரியர் ந.வானமாமலை இருந்தார். ஆரோக்கியமான விவாதங்களின் மூலம் என்னையும், என் சிந்தனைகளையும் செழுமைப்படுத்தினார். இது போன்ற பெரியவர்களின் தொடர்பும், அவர்கள் தந்த உற்சாகமும் சோர்வில்லாமல் போராட பெரிதும் உதவின.
வெள்ளையர்கள் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருந்தது. ராஜா காலங்களில் நிலத்தில் விளைச்சல் இருந்தால் மட்டுமே வரி கட்டிய விவசாயிகள், பிரிட்டிஷ் ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாமல் போனாலும் வரி கட்டுவது கட்டாயமானது. மேலும், அப்போது பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதால் நெல் விலை மோசமாக சரிந்தது. இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் ரங்கூன் மோசமாக தாக்கப்பட்டதால், அரிசி போக்குவரத்து திடீரென்று நின்றுபோனது. அரிசிக்கு கடும் தட்டுப்பாடு. நிலைமையை சமாளிக்க அரசு ரேஷன் முறையை அமலுக்குக் கொண்டு வந்தது.
அப்போது பிரிட்டிஷ் அரசால் உணவுக்குழுஒன்று அமைக்கப்பட்டது. பலகட்சியைச் சேர்ந்தவர்களும், பல சாதியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். நானும் இளம் வயதிலேயே அதில் உறுப்பினரானேன். உயர்சாதி நிலபிரபுக்கள் நெல்லை பதுக்கிவைத்து, கேரளாவுக்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் கடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர். உணவுக்குழுவில் இருந்த நான், இதை கடுமையாக எதிர்த்தேன். அரசுக்கு புகார் கடிதம் எழுதினேன். கடத்தல்காரர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். உயிருக்கே ஆபத்தான இத்தகைய முயற்சிகளில் என்னுடைய முரட்டுத் துணிச்சலும், கட்சியின் கொள்கை பலமும் கைகொடுத்தன.
1946-ஆம் ஆண்டில் விவசாயிகளைத் திரட்டி, சைவ ஆதீனங்கள், வைணவ மடங்களுக்கு எதிராகப் போராடினோம். ஏராளமான நிலங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத அமைப்புகள், ஏழை விவசாயிகளை மிகக் கேவலமாக நடத்தின. ஓடுங்குடிஎன்று பெயரிடப்பட்டு, உழைக்கும் மக்கள் அவமானப்படுத்தப்பட்டனர். தாங்கள் வேலைபார்க்கும் நிலத்தில் வீடுகட்டக் கூடாது. கூரைமட்டும் போட்டுக்கொள்ளலாம். திண்ணையோ, சுவரோ எழுப்பக்கூடாது என்று கொடுமையாக நடந்துகொண்டனர்.
அதே நேரம் நிலத்தில் உழைக்கிற மக்களுக்கு உரிய கூலியையும் முறையாக வழங்காமல் சுரண்டின மடங்கள். நெல்லும் தானியங்களும் ரொம்ப நாள் தேக்கத்திலிருந்து கெட்டுப்போனாலும் பரவாயில்லை, மக்களுக்குத் தரமாட்டோம்என்ற கருத்து யாருக்கும் கோபத்தை உருவாக்கும். அதனால் சில நேரங்களில் வன்முறையில் இறங்குவது தவிர்க்க முடியாதிருந்தது. அடிப்படையில் மென்மையான குண இயல்பைக் கொண்டிருந்த நான், மக்களுடன் போராடும்போது, ‘கொடுக்காவிட்டால், எடுத்துக்கொள்வோம்என்று தீவிரமாக இறங்கி செயல்பட்டேன். இன்று நக்ஸலைட்டுகள் செய்வதை அன்று நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். போராட்டத்தில் ஆயுதம் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.
எங்களை அடிப்பதற்காக அடியாட்கள் வரவழைக்கப்பட்டனர். ஆன்மிகம் வளர்ப்பதாகச் சொல்லும் மடங்களிலும் ஆதீனங்களிலும் அடியாட்களே நிரம்பி வழிந்தனர். 
ஏழைகளைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வதாக எங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது. போராட்டம் என்பது வெறும் கோஷம்போடுகிற செயலோ, சாராயம், பிரியாணி பொட்டலம் வாங்கித்தந்து ஆள் சேர்க்கிற இன்றைய அரசியல் கூட்டமோ அல்ல. உயிருக்கே ஆபத்தான நிலை எந்த நேரத்திலும் வரும்.
கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, மக்கள் ஒன்று திரண்டு போராட மாட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு அவமானங்களையும், அவலங்களையும் சந்திப்பவர்களாக மக்கள் இருந்தனர். அதுதான் அவர்களை ஒன்று சேர்த்தது. அதற்கு நாங்கள் ஒரு கருவியாக இருந்தோம். அவர்களுடைய காயங்களுக்குப் போராட்டங்களே மருந்தாக அமைந்தன.
தீவிரமான அரசியல் நடவடிக்கையில் இயங்கிய என்னை 1949-ஆம் ஆண்டு நெல்லை சதி வழக்கில்காவல்துறை கைது செய்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டேன்.  ஆறாண்டுகள் சிறைவாசம். உண்மையிலேயே நான் ஓய்வெடுத்த காலம் அதுதான்.
விடுதலையான பிறகும் போராட்டமும் சிறைவாசம் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருந்தது. இந்திய சுதந்திரத்தின் வயதைவிட என்னுடை அரசியல் வாழ்க்கையின் காலம் அதிகம். ஜீவா, ராமமூர்த்தி, சீனிவாச ராவ் போன்ற கம்யூனிச தலைவர்களோடும், பெரியார், காமராஜர், அண்ணா போன்ற மாற்றுக் கட்சி தலைவர்கள் அரசியலில் இருந்த காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே என்னுடைய பெருமையாகக் கருதுகிறேன்.
அறுபது ஆண்டுகளுக்கு மேல் மக்களோடு இருந்தாலும், ஒரு தேர்தலில்கூட நான் வென்றது இல்லை. இரண்டு முறை சட்டமன்ற தேர்தலிலும், ஒரு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சி என்னை வேட்பாளர் ஆக்கியது. மூன்று முறையும் தோல்விதான் பரிசு. வருத்தமாக இல்லையா?’ என்று பலர் கேட்டிருக்கிறார்கள். எதற்காக நான் வருத்தப்பட வேண்டும்?
களத்தில் நின்று போராடிய தருணங்களின் பலனைப் பார்க்கிற வாய்ப்பு பல தலைவர்களுக்குக் கிடைப்பதில்லை. என் போராட்டங்களின் பலன்களைக் கண்முன்னால் பார்க்க முடிந்ததே மனநிறைவாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்கு முன்பு சொந்த இழப்புகள் பெரிதாகப் படவில்லை. எனக்கு எதையும் இழந்துவிட்ட உணர்வும் இல்லை. கைசுத்தமான ஒரு பொது வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனநிறைவுக்கு முன்னால் வேறென்ன பெரிதாக இருந்துவிட முடியும்?’’
-கம்பீரமாகக் கேட்கிறார் தோழர் நல்லகண்ணு.
காலம் பலரை கௌரவித்திருக்கிறது. நல்லகண்ணு போன்ற சிலர்தான் காலத்தைக் கௌரவித்து இருக்கிறார்கள்!
  unarchitamilan

சனி, 8 ஜனவரி, 2011

பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்?

பிரான்ஸ் தமிழர்களை பின்பற்றுவார்களா உலகத்தமிழர்கள்? 
பல உலக நாடுகளுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலைப்புலிகளை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்தது. இந்த முடிவை மீள் பரிசீலனை செய்து தமிழீழ விடுதலைக்காக ஆயுத வழியில் போராடி மே 2009-இல் ஆயுதங்களை மௌனிக்க செய்வதாக அறிவித்த ஒரு இயக்கத்தை எதற்காக தொடர்ந்தும் தடைசெய்து வைத்திருக்க வேண்டும் என்கிற கேள்வியுடன் களம் இறங்கியுள்ளது பிரான்ஸின் தமிழ் நடுவம் என்கிற அமைப்பு. இவ்வமைப்பின் உள்நோக்கம் என்ன என்கிற வாக்குவாதத்தை புறம் தள்ளிவிட்டு தமிழர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்க முற்படும் அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதே புத்திசாலித்தனம்.

குறிப்பிடப்பட்ட தமிழ் நடுவம் என்கிற அமைப்பு பல வெகுசனப் போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுகிறது. பிற நாடுகளில் வதியும் தமிழர்களும் பிரான்ஸின் தமிழ் நடுவகத்தின் செயலை முன்னுதாரணமாக எடுத்து வெகுசனப் போராட்டங்களை நடத்துவதன் மூலமாக புலிகள் மீது போடப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதே தமிழர்களின் மனங்களில் எழும் கேள்வி.
ஐரோப்பிய தமிழ் சமூகத்தின் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்கக் கோரும் வெகுசனப் போராட்ட முன்னெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (2 சனவரி) தமிழர் நடுவம் - பிரான்ஸினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. பல பொதுசன போராட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பொது அமைப்பு பிரதிநிதிகள்�� சமூக ஆர்வலர்கள்�� செயற்பாட்டாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என சொல்லப்பட்டது.
இப்புதிய ஆண்டிலாவது ஈழத்தமிழர்களின் அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க உலக நாடுகள் வழி அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதே பல தமிழர்களின் அவா. 2009-இல் ஆயுதங்களை மௌனிப்பதாக புலிகள் அறிவித்தார்கள். ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளி தான் இல்லை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் அடித்துக்கூறப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செய்வதாக கூறி தமிழின அழிப்பையே மேற்கொண்டுவந்த சிறிலங்கா அரசுஇ உலக நாடுகளின் ஆதரவைப் பெறவே புலிகள் ஆயுதங்கள் மீதுதான் அதீத நம்பிக்கையை வைத்து போர் செய்து வந்தார்கள் என்கிற பொய்யான பரப்புரையை மேற்கொண்டது. உலக நாடுகளும் இதனை ஏற்று தமிழ் மக்களை அழிக்க உதவிகளை வழங்கி வந்துள்ளது.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை மழுங்கடிக்க உதவிய உலக நாடுகளுக்கு மே 2009-இல் இடம்பெற்ற சம்பவம் பாரிய தலையிடியை கொடுத்தது. பல நாடுகள் சிறிலங்காவின் போரையே கண்டிக்குமளவு புலிகளின் திறனாய்வு இருந்தது. அடித்தால் திருப்பி அடிப்பார்கள் புலிகள் என்று எண்ணினார்கள் ஈழத்தமிழரின் விடுதலையை விரும்பாத பல நாடுகள். இந்நாடுகளின் எண்ணங்களுக்கு மாறாக இறுதிவரை மௌனத்தை கடைப்பிடித்தார்கள் புலிகள்;.
சிறிலங்காவுக்கு ஆதரவளித்த நாடுகள் பல புலிகள் அப்பாவி சிங்களவர்களை கொலை செய்வார்கள் என்று கூட நினைத்திருந்தார்கள். இதன் மூலமாக புலிகளை இராஜதந்திர ரீதியில் மரணிக்கப் பண்ணலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தமிழர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை புலிகள் நிரூபித்தார்கள்.
ஈழப் போராட்டத்தை புலம்பெயர் இழைஞர்களிடம் ஒப்படைப்பதாகவும்�� சனநாயக வழிமூலம் அடுத்த கட்ட ஈழப்போரை தொடருவதன் மூலமாக தமிழீழ தனியரசுக்கான போராட்டத்தை துரிதப்படுத்தலாம் என்கிற நோக்கத்தினாலையோ என்னவோ புலிகளின் தலைமை துன்பகரமான முடிவை எடுத்தது.
சனநாயக போராட்டமே வெற்றியைத் தேடித்தரும்:
விடுதலை என்பது காசு கொடுத்து வாங்கும் பொருளல்ல. இரத்தம் சிந்தி�� பல துயர்களினூடாக வருவதுதான் உண்மையான சுதந்திரம். தியாகம் இல்லாமல் ஒரு நாட்டை பெற்றால்�� குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழும் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் பல இடர்களை சந்திப்பார்கள். மேற்கு பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) என்கிற நாடு இந்தியாவின் துணையுடன் விடுதலையை பெற்றது.
இதன் விடுதலையென்பது குறுகிய காலத்திற்குள் இடம்பெற்றது. உண்மையான தியாகம் என்றால் என்ன என்று பல பங்களாதேஷிகளுக்கு தெரியாமலே சுதந்திரம் கிடைக்கபெற்றது. சுதந்திரம் கிடைத்து சில தசாப்தங்கள் ஆனாலும் இன்றும் இந்நாடு வறுமைக்கோட்டின் கீழ் தான் உள்ளது. அன்றாட சீவியத்திற்காக பல லட்சம் மக்கள் திண்டாடுகிறார்கள். ஈழ விடுதலை என்பது அப்படியல்ல. நாளையே ஈழம் கிடைத்தால் சிங்கப்பூரை விட ஆசியாவின் முன்மாதிரியான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாறும்.
நடந்த சம்பவங்களை மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதே புத்திசாலித்தனம். நான்காம் கட்ட ஈழப் போரில் இடம்பெற்ற தமிழின அழிப்பை உலக நாடுகளே கண்டிக்குமளவு வளர்ச்சிகண்டுள்ளது. ருவாண்டா கொசோவோ யுகோஸ்லாவிய போன்ற கொடுமையான இன அழிப்புகளை ஒட்டியே ஈழத் தமிழரின் அழிவையும் உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்துள்ளன. போரக்; குற்றத்திற்காக சிறிலங்காவின் அரச தலைவர்கள் இராணுவ அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட பலரை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர உலக நாடுகள் முன்வரத் தொடங்கியுள்ளது. உலகத்தமிழர்களின் தொடர் சனநாயக வழிப் போராட்டங்களினாலேயே உலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான கொள்கை மாற்றத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
அன்று புலிகள் ஆயுதங்களை மௌனிக்க செய்யாமல் இருந்திருந்தால் உலக நாடுகளே இணைந்து ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் அழித்திருப்பார்கள். சனநாயக வழியினூடகவே ஈழத்தமிழரின் விடுதலையை அடைய முடியும். ஈழத் தமிழர்களின் பிரச்சினையை உலக நாடுகளிடம் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவை பெறுவதனாலையே ஈழத்தமிழரின் விடுதலையை பெற முடியும். பலவிதமான சனநாயக வழிப் போராட்டங்களை புலம்பெயர் ஈழத்தமிழர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர் போராட்டங்களினூடாகவேதான் உலக நாடுகளின் கண்களை திறக்க முடியும். ஈழத்தில் நடைபெறும் சம்பவங்கள் உட்பட ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்காவில் தற்போது இடம்பெறும் சம்பவங்களையும் உலகநாடுகள் முன் கொண்டுசென்று நியாயம் கேட்பதுடன் ஈழத்தமிழர்கள் ஓன்றும் ஆயுதம் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை உலக நாடுகள் உணரும் விதமாக செயற்பட வேண்டும்.
புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கச்செய்வதன் மூலமாக தமிழர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இனமில்லை என்பதை உலகறியச் செய்ய முடியும். புலிகளின் தடையை உலக நாடுகள் நீக்குவதனூடாக ஈழத்தமிழர் சிந்திய குருதிக்கும் பட்ட இன்னல்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டாகும். இதனூடாக ஈழத்தமிழரின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வழியமைக்கப்படும்.
உலகத்தமிழர்கள் பிரெஞ் தமிழர்களை பின்பற்றுவார்களா? ஆறுமாதத்திற்கு ஒரு தடவை�� ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதுப்பிக்கப்பட்டு வரும் பயங்கரவாத பட்டியல் தொடர்பிலான முடிவினை கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் இந்த வெகுசனப் போராட்டத்தின் மக்கள் கையொப்பங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒப்படைப்பதென்றும் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் இதனை முன்னெடுப்பதென்றும் பிரெஞ்சு தமிழ் நடுவம் நடாத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வேண்டுகோள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட இருக்கும் மனுவிற்காக இக்கோரிக்கைக்கு சார்பாகவும் ஆதரவாகவும்�� பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடமும் ஏனைய பிற இன மக்களிடமும்�� கையொப்பங்கள் சேகரிக்கப்பட இருக்கின்றன என கூறியிருக்கிறது இவ்வமைப்பு.
புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனித்து முற்றிலும் சனநாயக அமைதிவழி நடவடிக்கைகளை ஆதரித்து நிற்கையில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரான்ஸ் அரசும் புலிகள் வரித்துக்கொண்டுள்ள அமைதிவழி சனநாயக பூர்வ நிலைப்பாடுகளை ஊக்குவித்து தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவளிக்குமுகமாக புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் சார்பில் கோரும் இந்தப் போராட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் யாவரும் பங்கேற்குமாறு பிரெஞ்சு தமிழ் நடுவம் கோரியுள்ளது.
சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்புக்களையும் பெரும் தியாகங்களையும் புரிந்துவரும் விடுதலைப் பேரியக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவதன் மூலம் தமிழ்ச் சமூகம் தனது�� அடையாளங்களுடன் சனநாயகவழிச் செயற்பாடுகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க ஊக்குவிப்பாய் இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று கூறியுள்ளது பிரெஞ்சு தமிழ் நடுவம்.
எமது தேசிய விடுதலை இயக்கம் மீதான �பயங்கரவாத இயக்கம்� என்ற அநீதியான குற்றச்சாட்டை நீதியின் பேராலும் அமைதியின் பேராலும் சனநாயகத்தின் பேராலும் விடுதலையின் பேராலும் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் பிரான்ஸ் அரசையும் கோரும் எமது போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் தமிழர் அமைப்புக்கள் சங்கங்கள் என்பன இதயசுத்தியுடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் இவ்வாறு தமிழர் நடுவம் தெருவித்துள்ளது.
ஏழு கோடிக்கு அதிகமான தமிழர்கள் வாழும் இந்தியாவே முதலில் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது. இதன்பின்னர் பல நாடுகளும் புலிகளை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது. ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்க புலிகள் மீது போடப்பட்ட இத்தடை மூலமாக சிறிலங்கா அரசுகள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களின் சாவுக்கும் இப்பயங்கரவாத முத்திரையே காரணமாக இருந்தது. புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதே உலகத்தமிழர்களின் இராஜதந்திர போராட்டத்தின் முதற்படியாக அமையும். புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் சனநாயக வழிப் போராட்டங்களை நசுக்க புலிகள் மீதான தடை ஒன்றே போதும். புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் பல நாடுகளில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் சனநாயக வழிப் போராட்டங்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கும்.
இதுநாள் வரை செய்த தியாகங்கள் வீண்போகாமல் இருக்கப்பட வேண்டுமானால்இ உலகத் தமிழர்கள் ஓன்றுபட்டு புலிகள் அமைப்பு தடை செய்யபட்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுத்து புலிகள் மீது விதிக்கபட்டிருக்கும் தடையை நீக்க செய்வதே புத்திசாலித்தனம். ஏழு கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் மாபெரும் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக புலிகள் மீதான தடையை நீக்கச் செய்யலாம். இதைப்போலவே புலிகளை தடை செய்துள்ள பிறநாடுகளிலும் வெகுசனப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக நடவடிக்கைகளை எடுத்து புலிகளின் தடையை விலக்க செய்யலாம். பிரெஞ்சு தமிழ் நடுவம் மேற்கொண்டிருக்கும் செயலை பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்!

தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்! சீமான்!.. திருப்பி அடிப்பேன்! - (பாகம் 07)

ஈழத்து அக்கினியாய் இன முழக்கம் எழுப்பிய புதுவை இரத்தினதுரை இன்றைக்கு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. தகிக்கத் தகிக்கத் தமிழ்ப் பேசிய அந்தக் கவிஞனின் நிலையை அறியக்கூட இந்தத் தொப்புள்கொடி சொந்தத்துக்குத் துப்பில்லாமல் போய்விட்டது.

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா - வரிப்
புலிகள் எழுந்து புயலைக் கடந்து
போர்க்களம் ஆடுது தமிழா - இன்னும்
உயிரை நினைந்து உடலைச் சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா?

ஈழத்து அக்னியாய் இன முழக்கம் எழுப்பிய புதுவை இரத்தினதுரை இன்றைக்கு இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியவில்லை. தகிக்கத் தகிக்கத் தமிழ்ப் பேசிய அந்தக் கவிஞனின் நிலையை அறியக்கூட இந்தத் தொப்புள்கொடி சொந்தத்துக்குத் துப்பில்லாமல் போய்விட்டது.
வெறும் ஒன்றரைக் கோடிப் பேரை மட்டுமே கொண்ட சிங்கள இனம், 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களை வீழ்த்தி இருக்கிறது. இந்த வேதனை விசித்திரம் ஏன் நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கக்கூட எங்கள் தமிழர்களுக்கு நேரம் இல்லை!
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு ராஜபக்ஷ உரையாற்ற வருகிறார் என்பது தெரிந்து, கொட்டும் பனியில் 20 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் இரண்டு மணி நேரத்துக்குள் கூடினார்களே... காமன்வெல்த் விழாவுக்கு ராஜபக்ஷ வந்தபோது நம்மில் ஏனய்யா அப்படி ஒரு கூட்டம் கூடவில்லை? தமிழகத் தமிழனின் உணர்வுகள் இந்த அளவுக்கா தளர்ந்துபோய் விட்டது?
ஈழத்துக்காக முத்துக்குமார் தொடர்ந்து 16 பேர் மடிந்தபோதும், அவர்கள் ஏன் இறந்தார்கள் என்கிற ஆராய்ச்சிதான் இங்கு நடந்ததே தவிர, ஆவேசம் எழவில்லை!
இனவெறிக் கொடூரன் ராஜபக்ஷ சிங்கள மக்களுக்கு உண்மையாக இருக்கிறான். அவனுக்கு சிங்கள மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், அவனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் என் அண்ணன் பிரபாகரன். அவருக்கு இந்தத் தமிழினம் ஒரு விழுக்காடுகூட உண்மையாக இல்லாமல் போய்விட்டது. காரணம், சாதியையும் மதத்தையும் தாண்டியது இனம் என்பது தமிழகத்து தமிழர்களுக்கு இன்னமும் புரியவில்லை.
ராவுக்கு, ரெட்டியாருக்கு, நாயுடுவுக்கு என சாதியத்துக்காக ஆந்திராவில் கட்சி இல்லை. பெருமகனார் ராமராவ் கட்சி தொடங்கிய போதுகூட "தெலுங்கு தேசம்" என்றுதான் பெயர் வைத்தார். சகோதரர் சிரஞ்சீவியும் "பிரஜா ராஜ்யம்" என்றுதான் கட்சி தொடங்கினார். மும்பையில் வசிக்கும் மூன்று லட்சம் மலையாளிகள், 'மலையாள சமாஜம்� அமைத்து அரசியல் சக்தியாக வாழ்கிறார்கள்.
ஆனால், அங்கே 20 லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கும் தமிழர்கள் நாடார், செட்டியார், பிள்ளைமார் என சாதி பெயரில் சங்கங்கள் வைத்துக் கூறுபட்டுக் கிடக்கிறார்கள். சங்கம் சங்கமாக பிரிந்து கிடக்கும் வரை நம்மை அங்கம் அங்கமாக வெட்டத்தானே செய்வார்கள்? தமிழனுக்குள் சாதி என்று இல்லாமல் சாதிக்குள் தமிழன் என்றாகிவிட்டதால்தானே இத்தனை துயரங்களும்... எது செத்தாலும் சாதி சாகக்கூடாது எனக் காத்தான் என் மூத்தோன். அதனால்தான் இன்றைக்கு இனத்தையே இழவுக்குக் கொடுத்துவிட்டுக் கதறிக் கிடக்கிறோம்.
ஈழத்துக்கு நான் போயிருந்த போதே இந்த ஆதங்கம் இருந்தது. ''உங்களுக்கு உண்மையாக இல்லாத தமிழர்களுக்காகப் போராடுகிறோமே என எப்போவாவது எண்ணி இருக்கிறீர்களா அண்ணா?'' என ஆதங்கத்தோடு கேட்டேன். சட்டெனப் பதறிப்போனவர், ''அப்படி சொல்லக்கூடாதுப்பா... நம்மளை நேசிக்கிறவங்க, எதிர்க்கிறவங்க எல்லாருக்கும் சேர்த்துதான் நாம நாடு அடையணும். அதுதான் நம்ம கடமை!'' என்றார்.
அரசியல் ரீதியா நீங்க எந்த முயற்சியும் எடுக்கலைன்னு சிலர் சொல்றாங்களே அண்ணே..." எனத் தயங்கியபடியே கேட்டபோது, அமைதியாக என் முகம் பார்த்தார். ''நான் தண்ணிக்குள்ள நிற்கிறேன். என்னால நீந்தத்தானே முடியும். தரையில நிற்கிற நீங்கதானேப்பா ஓடணும். தண்ணிக்குள்ள இருக்கிற நானே நீந்தணும்... நானே ஓடணும்னு எதிர்பார்த்தால் எப்படிப்பா சரியா இருக்கும்? நமக்கான தேச விடுதலைக்கான போரை இந்த அண்ணன் செய்யலாம். அதுக்கான போராட்டத்தையும் அரசியலையும் புரட்சியையும் தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த எம்மக்களும் தானேப்பா செஞ்சிருக்கணும்?" என்றார். என் முகத்தை ஆழமாக ஊடுருவியவராக, "இந்த நாடு எனக்கானதா... நமக்கானது இல்லையாப்பா?" எனக் கேட்டபோது அவருடைய முழு வலியும் புரிந்தது.
புலிகள் போர் செய்த அளவுக்கு அரசியல் செய்யவில்லை?'' என விமர்சனம் வைக்கும் அதிமேதாவிகளிடம் இதற்குப் பதில் இருக்கிறதா? அண்ணனின் கேள்வியையே அவர்களிடமும் வைக்கிறேன்... அவர் போர் செய்தபோது, நீங்கள் என்ன செய்தீர்கள்?
இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் நாம் எழுச்சி பெறாமல் இருப்பதற்குக் காரணம்... சாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வீதிக்குக் கொடுக்கத் தயங்கியதுதான். மதத்துக்கு கொடுத்த மரியாதையை தமிழ் இனத்துக்குக் கொடுக்க மறந்ததுதான்.
பிணமான பின்பும் ரணமாக்கப்பட்ட இசைப்பிரியா இந்தச் சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால், அதன் கொந்தளிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழச்சியாக மட்டுமே இருந்ததால்தான் அங்கே அவள் நாதியற்றுக் கிடந்தாள். அங்கே இடிக்கப்பட்ட என் பாட்டன் பண்டார வன்னியன், தாகத்தையும் ஆயுதமாக ஏந்திய அண்ணன் திலீபன் உள்ளிட்டவர்களின் சிலைகள் சாதியத் தலைவர்களின் சிலைகளாக இருந்திருந்தால், தமிழகமே குமுறிக் கொந்தளித்து இருக்கும்.
தமிழர்களுக்குத் தலைவர்களாய் வாய்த்தவர்கள் இனப் பற்று இற்றுப்போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டார்கள். ஒருவேளை இனப்பற்று இற்றுப்போவதுதான் தங்களின் பணப்பற்றுக்குப் பாதுகாப்பு என அவர்கள் எண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இயக்கங்களையோ, தலைவர்களையோ ஒருங்கிணைக்காமல், இனத்துக்காக எதையும் செய்யத் துணிந்த சிறு சிறு நெருப்புப் பொறிகளாக சிதறிக் கிடப்பவர்களை ஒருங்கிணைத்து பெருநெருப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். சாதி மறந்து, மதம் துறந்து, கட்சிப் பாகுபாடு களைந்து தமிழால் இணைந்து "நாம் தமிழராக" நிமிர்வதுதான் ஒரே வழி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் என்னை அடைத்திருந்தார்கள். 'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டாக்கிவிடக் கூடாது� என்பதற்காகவே வேட்பு மனு தேதி முடிந்த பிறகு வெளியே விட்டார்கள். வெறும் ஏழெட்டு நாட்கள்தான் பரப்புரையில் இறங்கினேன்.
இனத்தின் ரணத்தைத் துடைக்கத் துப்பற்றுக் கிடந்த இயலாமையை மனதில் ஏற்றி, காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தேன். அதற்கான பலனை நாங்கள் அடைந்தோமா என்பதைத் தோற்றுப்போன காங்கிரஸ் தலைவர்களின் துடிப்பே தமிழ் மக்களுக்கு உணர்ந்திருக்கும்!
அன்றைக்கு இருந்த ஆதங்கமும் அடிபட்ட வலியும் இன்றைக்கு ஆயிரம் மடங்கு அதிகமாய்ப் பெருகிப்போய்க் கிடக்கிறது. இப்போதும் ஐந்து மாதங்கள் சிறையில் கிடந்திருக்கிறேன். பசித்துப் பசித்து இரைக்காகக் காத்திருக்கும் புலியைப் போலவே வெளியே வந்திருக்கிறேன். என் இரை... இனத்தைப் பலிவாங்கிய காங்கிரஸ். இனத்தை அழித்த பழிகார காங்கிரஸையும், அதற்குத் துணைபோன தி.மு.க-வையும் எங்களின் இலட்சிய நெருப்பின் தகிப்பு, சூறையாடப்போகும் நாள் தூரத்தில் இல்லை!
ஏற்கெனவே, 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!� என நான் சொன்னது சிலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க-தான் போட்டியிட்டது. அப்படியிருக்க, 'நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீங்க யாருக்கோ போடுங்க...� என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.
களத்தில் நிற்கும் காங்கிரஸ்தான் என் எதிரி. எதிரியைக் கொல்லக் கையில் கிடைப்பது களைகொத்தோ... மண்வெட்டியோ... எதுவாக இருந்தாலும் எடுத்து அடிப்பதுதானே சரியாக இருக்கும். அந்த நேரத்தில் என் கையில் கிடைத்தது இரட்டை இலை என்கிற ஆயுதம். அதனால்தான் அதை எடுத்து அடித்தேன். இலைக்கு வாக்குக் கேட்டதை வம்பாக மாற்றியவர்கள் பம்பரத்துக்கும், மாம்பழத்துக்கும், சுத்தியல் நட்சத்திரத்துக்கும் நான் ஓட்டுக் கேட்டதை நயமாக மறந்து விட்டார்கள்.
ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி, என்னைக் களங்கப்படுத்தி விடலாம் என நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... இந்தத் தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அ.தி.மு.க-வாக இருந்தால், இந்த சீமானின் குரல் இரட்டை இலைக்குத்தான் பரப்புரை செய்யும். இதை வைத்தே, 'அம்மையார் அள்ளிக் கொடுத்துவிட்டார்� எனக் கிளப்பிவிடத் துடிக்கும் அரைகுறைகளே... உங்களுக்குச் சொல்கிறேன்...
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் இந்த சீமான் இருக்கப்போவது சிறைச்சாலையில்தான்!
தொடரும்..திருப்பி அடிப்பேன்!
UNARCHITAMILAN

புதன், 5 ஜனவரி, 2011

மாவீரன்திலீபன் குழும சிங்களவனின் இனப்படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது! திருப்பி அடிப்பேன் - சீமான் (பாகம் 06)

மாவீரன்திலீபன் குழும சிங்களவனின் இனப்படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது! திருப்பி அடிப்பேன் - சீமான் (பாகம் 06)
[Saturday, 2011-01-01 15:47:36]
இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... "அண்ணா, முழங்கால் அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை.

மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு!"
என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே... இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம்.
ஈழத்தில் இழவு விழுந்தாலும், இராமேஸ்வரம் இரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்... மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், 'ஐயோ� எனக் கதறினால், 'அனுப்புங்கள் போலீஸை...� என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.
இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பயிற்சி அளிக்கும். இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்!� என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க... அதை எதிர்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை.
எதற்கு அங்கே இந்திய இராணுவம்? மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா? எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்... சீனன் சுட்டான்... இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா? இல்லை, 'நீங்கள் சரியாகச் சுடுவதில்லை... நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும்! எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா?" என காங்கிரஸ் அரசின் சட்டையை உலுக்கி கேள்வி கேட்க இங்கே ஆள் இல்லை.
கச்சத்தீவைச் சுற்றி சீன இராணுவம் இருப்பது ஏன்?� எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், 'சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்� என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே!
நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், 'சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும்!� எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா? ஆற்காட்டார் இருக்கும் வரை 'இருண்ட பூமி'யாகத்தானே தமிழ்நாடு இருக்கும்?
குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில்? அதையும் மீறிப் பேசினால், இறையாண்மை அஸ்திரத்தை ஏவிவிடுகிறார்கள். எங்களைப்போல் இறையாண்மையைக் காக்கக் கூடியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா இந்த மண்ணில்? இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி...
சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா? இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன்பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா? மலையாள மீனவனைத் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பது சிங்களவனுக்குத் தெரியும். இந்திய அரசியலில் அதி முக்கிய சக்திகளாக இருக்கும் மலையாளிகள் சிங்களவனின் குடுமியை உலுக்கிவிடுவார்கள்.
ஆனால், எத்தனை தமிழர்கள் சிங்களவனால் சிதைக்கப் பட்டாலும், எங்கள் பிரதிநிதிகள் எதிர்த்துக் கேட்கப்போவது இல்லை. தியாகப் பெருந்தகை, அருட்பெருஞ்ஜோதி அன்னை சோனியா காந்தியின் முகம் சுண்டிவிடக் கூடாது என்பதுதான் இங்கு இருப்பவர்களின் முழு நேரக் கவலை.
இந்த தைரியத்தில்தான் தமிழர்களின் தலையில் கால் வைத்து விளையாடுவதில் அன்னை சோனியாவுக்கும் அறிவார்ந்த மன்மோகன் சிங்குக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
சிங்கள இராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியில் இறங்க இந்திய இராணுவம் செல்வது ஏன்? இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய இராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா? இல்லை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா? சிங்களவனின் இனப் படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது என்பது என் அழுத்தமான குற்றச்சாட்டு.
கொஞ்சம் இரத்தம் தாருங்கள்... நிறைய சுதந்திரம் தருகிறோம்� என்றான் இந்திய தேசிய இராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 'நிறைய இரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் உலகத்திலே!� என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள்.
புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா? 'என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது!� என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என இப்போதும் கூட்டுப் பயிற்சிக்குப் படை அனுப்புகிறது.
பெருமதிப்புக்குரிய பிரதமர் அவர்களே...
காமன் வெல்த் மோசடி, அலைக்கற்றை அமளி துமளி என உங்களைச் சுற்றி இத்தனை களேபரங்கள் நடக்கையிலும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தவறாமல் செய்கிறீர்களே... சிங்களத்துக்கும் சீக்கியத்துக்கும் அப்படி என்ன அண்ணன் - தம்பி உறவு?
ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா ஐயா? பொழுதுபோகாத குறைக்கு 'புலிகள் கொல்லப் பார்க்கிறார்கள்� எனக் கிளப்பிவிட்டுத் தாடியை நீவிக்கொள்ளவும் செய்கிறீர்கள். இதை எல்லாம் முன்கூட்டியே கண்டுபிடித்து உங்களை உஷார்படுத்திய உளவுத் துறை, மும்பையில் 25 தீவிரவாதிகள் நுழைந்து 150-க்கும் மேற்பட்டோரை சல்லடையாக்கியபோது எங்கே போய் உறங்கிக்கிடந்தது?
கார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே... இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே... ஊழல் செய்வது எப்படி? அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி? விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி? அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி? ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க... காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?!
அதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?
தங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.
சோனியாஜி... மன்மோகன்ஜி... 2ஜி... 3ஜி... அடச்சீ!
திருப்பி அடிப்பேன் தொடரும்....

கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம் - 11
ஈழத்தில் கொலைகளும், தமிழகத்தில் தற்கொலைகளும் அரங்கேறும் அவலமான காலகட்டம் இது. கொலைகளைத் தடுக்க முடியாமலும், தற்கொலைகளை நியாயப்படுத்த முடியாமலும் குற்ற உணர்ச்சியோடு தவிக்கிறோம். மக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படாமல் அலட்சியம் நிலவிய நேரங்களில் சமூகத்தில் மாற்றங்கள் வந்திருக்கின்றன. ‘இந்தி திணிப்பில்’ மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மரியாதை தராமல் போனதால்தான், திராவிட இயக்கம் எழுச்சி பெற்றது. மக்களின் உணர்வுகள் நசுக்கப்படும் நேரங்களில் இப்படி சமூகத்தில் புரட்சியே வந்திருக்கிறது.

மகாபாரதத்தில் ஒரு காட்சி... தன் சீடர்களுக்கு வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார் துரோணாச்சாரியார். எல்லா சீடர்களும் கையில் வில்லேந்தி, மரத்திலிருக்கும் ஒரு கிளியைக் குறிபார்த்து காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும், ‘குறிபார்க்கிற உன் கண்ணுக்கு என்னென்ன தெரிகிறது?’ என்று கேட்கிறார் குரு. ‘எனக்கு மரம் தெரிகிறது’, ‘வானம் தெரிகிறது’, ‘கிளை தெரிகிறது’, ‘இலை தெரிகிறது’, ‘கிளி தெரிகிறது’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்கிறார்கள். வில் வித்தைக்கே இலக்கணமாகப் பிறந்த அர்ஜுனனிடம் துரோணாச்சாரியார் கேட்கிறார். ‘உனக்கு மரம் தெரிகிறதா? வானம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? இலை தெரிகிறதா? கிளி தெரிகிறதா?’ அர்ஜுனன் தீர்மானமாக பதில் சொல்கிறான்... ‘என் கண்ணுக்கு இவை எதுவுமே தெரியவில்லை!’ ‘வேறென்ன தெரிகிறது?’ என்று குரு மீண்டும் கேட்க, ‘என் இலக்கான கிளியின் கழுத்துப் பகுதி மட்டுமே தெரிகிறது’ என்கிறான் சீடன்.

காலம் மாறுகிறதே... போருக்கும் விதி வகுத்து நேர்மையாக யுத்தம் செய்த மகாபாரத காலம் இல்லையே இது. சொந்த நாட்டு மக்களை ராணுவம் அனுப்பி சூறையாடுகிற அரசுகளும், அதற்கு நியாயம் கற்பிக்கும் நாடுகளும் இருக்கும் காலம் அல்லவா இது? குருவாக சகுனியும், சீடனாக துரியோதனனும் இருக்கும்போது விதி மீறலும், சதி வகுத்தலும் நிகழ்வது தவிர்க்க முடியாதே! மருத்துவமனைகளும், அங்கெல்லாம் சிகிச்சை பெறும் நோயாளிகளுமே கொடூர போர் விமானங்களுக்கும் ஏவுகணைகளுக்கும் இலக்காகிறார்கள் ஈழத்தில். கை, கால்களை இழந்து, ஏராளமான ரத்தத்தையும் இழந்து, உயிரை மட்டுமே மிச்சம் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை கிடைக்காமல் அரைப்பிணமாக படுக்கையில் கிடக்கும் குழந்தைகளையும் பெண்களையும் குண்டுவீசிக் கொன்று, ‘பயங்கரவாதிகளை அழித்ததாக’ மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் காதுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் பதைபதைப்பான குரல் கேட்கவில்லையே!   

தமிழக மக்கள் தாங்களாகவே போராட்டத்தைக் கையிலெடுத்து விட்டார்கள். வீதியில் இறங்கி போராடுகிறார்கள் மாணவர்கள். சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து, சாவதற்கும் தயாராகிவிட்டனர் இளைஞர்கள். வழக்கறிஞர்கள், வணிகர்கள், பெண்கள், அரவாணிகள் என அனைவரும் ‘ஈழத்தில் போர் நிறுத்தப்பட வேண்டும்’ என்று தங்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும்போது, ‘அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது’ என்கிறது மத்திய அரசு.

மக்களும் அதையே கேட்கிறார்கள். இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களைக் கொல்ல ஏன் ஆயுதம் அளித்தது இந்தியா? ராணுவ வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசின் கொக்கரிப்புக்குப் பின்னால் இந்தியாவின் ரேடார் கருவி உதவிகள், செயற்கைக்கோள் உளவு வேலைகள் இருப்பதை பகிரங்கமாக மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இன்னொரு நாட்டின் உள் விவகாரத்தில் ஏன் இந்தியா தலையிட்டது? இலங்கை அரசின் போர் விளையாட்டில் தமிழர்களின் உயிர் பலியிடப்படுவதற்கு ஏன் துணைபோனது இந்தியா? தன் நாட்டு அரசாங்கம் நிகழ்த்தும் அத்துமீறலை, அராஜகத்தை தாங்களே தனித்து நின்று இத்தனை ஆண்டு காலம் போராடினார்கள் தமிழர்கள். அமைதிப்படை என்கிற பெயரில் இன்னொரு நாட்டுக்குள் ஆள் அனுப்பியும், இப்போது ஆயுதம் அனுப்பியும் வேறொரு நாட்டு உள் விவகாரத்தில் தலையிட்டது ஏன்?

ஒரு தமிழ்ப் படத்தில் ராணுவ வீரனாக வரும் கதாநாயகன், தேசிய கீதம் பாடும்போது ‘சல்யூட் அடித்து விறைப்பாக நின்று’ நாட்டுக்கு மரியாதை செலுத்துகிற காட்சி. அப்போது வில்லன்கள் அவரின் தங்கையை பல ராணுவ வீரர்களுக்கு முன்பாக கற்பழிப்பார்கள். காப்பாற்றும் பலம் இருந்தும், தங்கையாக இல்லாமல் போனாலும், சக மனுஷி என்றாவது காப்பாற்றுவதுதானே தர்மம். ‘சல்யூட் அடிக்கிற’ கடமை உணர்வுக்கு முன்னால் தன் தங்கை கற்பழிக்கப்படுகிற நிகழ்வு மிகச் சாதாரணமானது என்பதை சொல்வதற்காக அப்படி ஒரு அசட்டுக் காட்சியை வைத்திருப்பார்கள்.

இரக்கமற்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்க முடியாதபடி ‘சட்டச் சிக்கல்’ இருப்பதாகச் சொல்வதற்கும், சினிமாவில் சொந்த தங்கை சீரழிக்கப்படும்போது ‘சல்யூட் அடித்து; விறைப்பாக நிற்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சட்டக் கல்லூரியில் ஒரு மாணவனை சிலர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்த காட்சியை, ‘அனுமதி இல்லாமல் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முடியவில்லை’ என்று காரணம் சொல்லி வேடிக்கை பார்த்த காவல் துறையின் செயல்பாட்டிற்கும், நம் மத்திய அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தனி மனிதர்கள் செய்தால் அராஜகம். அரசாங்கம் செய்தால் அது வெளியுறவுக் கொள்கை. 

‘மக்கள் பின்னால் ஓடுபவர்கள் பிச்சைக்காரர்கள்; மக்களைத் தன் பக்கம் திருப்புகிறவர்கள் புரட்சிக்காரர்கள்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. தேர்தல் நேரத்தில் மக்களின் பின்னால் ஓடி ஓட்டுகேட்கும் நம் தலைவர்களுக்கு மத்தியில், எல்லா மக்களையும் தன் பக்கம் திருப்பினான் முத்துக்குமார். இறந்துபோகலாம் என்று தெரிந்தே, மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிராக மக்களைக் காப்பாற்ற இறங்கிய மத்திய அதிரடிப் படையினரில் சிலர் எதிர்பார்த்தபடி இறந்தே போனார்கள். அவர்கள் மரணம் தியாகம் என்று நாடே மரியாதை செலுத்தியது. உறைக்கும்படி ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல நினைத்த முத்துக்குமார் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு செத்துப்போனான். அவன் மூட்டிய தீயின் வெளிச்சத்தில் தமிழக மக்களின் உணர்வு தெரிந்தது. ஈழத்தில் தமிழர்களின் அவலம் தெரிந்தது. 

தன் தலைவனுக்காக தீக்குளிக்கும் உணர்ச்சிவயப்பட்ட தற்கொலை அல்ல முத்துக்குமாரின் மரணம். காதல் தோல்வி, கடன் தொல்லையால் ஏற்பட்ட விரக்தியல்ல முத்துக்குமாரின் மரணம். நம் அரசியல்வாதிகளின் சுயநல அநாகரிகத்திற்கு எதிரான கோபம். ஆதரிப்பார் யாருமின்றி குண்டு வீச்சில் நாளும் செத்துக்கொண்டிருக்கிற தமிழர்களுக்கு விடிவு வரவேண்டி செய்த தியாகம். சொந்த நாட்டின் ஆட்சியாளர்களே தங்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அநீதியை எதிர்த்த ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தந்த தார்மீக ஆதரவு.

தன் மரணத்தின் மூலம் ‘தியாகம்’ என்கிற சொல்லின் அர்த்தத்தைப் புதுப்பித்திருக்கிறான் முத்துக்குமார். ‘அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்’ என்று தன் மரணம் வெறும் தற்கொலை இல்லையென வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

உயிரே ஆயுதமாகிற போராட்டத்தை ஜெயிக்கிற சக்தி எந்த அதிகாரத்திற்கும் இல்லை. யாரும் தியாகிகளாக முடியாமல் போனாலும் பரவாயில்லை; தமிழினத்தை அழிக்கிற வஞ்சகத்தில் பங்கேற்று துரோகிகள் ஆகாமல் இருந்தால் அதுவே போதும்!    
 

கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம் - 10
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது யாரோ ரசித்து பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக படித்திருக்கிறோம். ‘ஒரு நாடே பற்றி எரியும்போது ஒருவன் எப்படி பிடில் வாசிக்க முடியும்?’ என்று நம்ப மறுத்தவர்கள் உண்டு. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படும் ஒரு நாட்டில், இரு நாட்டு அரசுகளின் அனுமதியோடு இரண்டு அணிகள் கிரிக்கெட் விளையாடும்போது பிடில் வாசிப்பது பெரிய விஷயம் இல்லையே? ‘எம்மக்கள் உயிருக்குப் பயந்து காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் நேரத்தில், இந்தியா இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் விளையாடக்கூடாது’ என்ற கோரிக்கையை, கோடிகளில் வியாபாரம் நடக்கும் வர்த்தக விளையாட்டு வல்லுநர்களால் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்?

போராளிகளின் கை ஓங்கியிருந்த நேரத்தில் ‘ராணுவ வீரர்கள்’ இலங்கைக்குப் புறப்பட்டார்கள். ராணுவத்தின் கை ஓங்கியிருக்கும் தருணத்தில் தமிழர்களின் மரணத்தைக் கொண்டாட ‘கிரிக்கெட் வீரர்கள்’ புறப்பட்டார்கள். இலங்கை மக்களுக்கும், இந்திய மக்களும் தட்டுவதற்கு இரண்டே கைகள் இருந்ததை எண்ணி வருத்தப்படுகிற சூழல் வந்தது. ராணுவ விமானம் ‘கேட்க நாதியற்ற தமிழர்களின்’ மீது குறிபார்த்து குண்டெறிவதற்கு கைதட்டுவதா? கிரிக்கெட் வீரர்கள் நேர்த்தியோடு விளையாடி அடித்த ‘சிக்ஸர்’களுக்கு கைதட்டுவதா என்று குழம்பித்தான் போனார்கள் மக்கள்.

நம் தலைவர்களை தலைகுனிய வைக்கிற கேள்விகளைக் கேட்டு, வெரிதாஸ் வானொலிக்கு கடிதம் எழுதினாள் ஒரு தமிழ்ச் சகோதரி. அமைதிப்படை என்கிற பெயரில் 1987&89 காலப்பகுதியில் இந்திய ராணுவம் ஆடிய கோரத் தாண்டவங்களைப் பட்டியலிடுகிற அந்தக் கடிதத்தின் கேள்விகளுக்கு இந்தியத் தமிழனாக வெட்கப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது?

ஈழத்தின் பருத்தித்துறை பெண்ணொருத்தியின் கடிதம் இது...

‘இந்த மண்ணில் இந்தியப் படைகளால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளின், பாலியல் வல்லுறவுகளின் கணக்கு தெரியுமா உங்களுக்கு? சிதைக்கப்பட்ட பெண்களின் வாழ்வை உங்களால் சீர்படுத்த முடியுமா? இல்லை... இதனால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் உயிரை உங்களால் மீட்டுத்தர முடியுமா? இவற்றுக்கெல்லாம் காரணம் யார்? வீட்டுக்கொரு பிள்ளையாக இருந்த எத்தனை இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டு, பெற்றோர்கள் மலடாக்கப்பட்டனரே... ஏன்? அவர்களின் பிரதேச வல்லாண்மையைக் காட்டுவதற்கு சுதந்திரத்திற்காக ஏங்கும் இந்த சிட்டுக்குருவிகளின் சின்ன இறகுகளை ஏன் சிதைத்துக் கொன்றார்கள்? மொழியால் ஒன்றானவர்கள் என்று சொல்லப்படும் அயலகத்துத் தமிழர்களிடம் தார்மீக ஆதரவை வேண்டி நின்றதற்குத் தண்டனையா இது? 

வீதிவலம் வந்த இந்தியப் படைகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, எனது தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்கள் இழுத்துச் சுடப்பட்ட ஞாபகங்கள் இன்னும் நெஞ்சுக்குள் கனக்கின்றனவே! 15 அப்பாவி இளைஞர்களை அன்று கொன்றுவிட்டு, ‘15 எல்.டி.டி.ஈ. பயங்கரவாதிகள் இன்று பருத்தித்துறையில் கொல்லப்பட்டனர்’ என்று சொன்னதைக் கேட்டு நிறுத்திக்கொண்டோம் இந்திய வானொலிச் செய்தி கேட்பதை!

புரிந்துகொண்டோம், இந்தியப் படைகளுக்கும், ஸ்ரீலங்காவின் படைகளுக்கும் இடையிலான ஒரேயொரு வித்தியாசம் எண்ணிக்கை மட்டுமே என்பதை! இத்தனை நாட்களாக நாம் மனிதனாகப் பிறந்ததற்காகவல்ல, பெண்களாகப் பிறந்துவிட்டோமே என்பதற்காக எமக்குள்ளேயே எம்மை வெறுத்துக் கொண்டிருந்தோம். அந்த அளவு நாம் இம்சைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு நாம் எப்படி விளங்கப்படுத்துவது?

தமிழகத்தின் ஆறு கோடித் தமிழர்களை நினைக்கும்போதெல்லாம் ஏற்படும் பயத்தில் சிங்களவர்கள் எம்மைத் தாக்கி அழித்தார்கள்; அழிக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... நாம் என்றுமே சென்னையைவிட கொழும்பு தொலைந்துபோவதை விரும்பாதவர்கள் என்று. சந்தேகம் அவர்களைத் துரத்த, அவர்கள் எம்மைத் துரத்துகிறார்கள். ஆனால், தமிழகத்திலோ எம்மை ஈழத்தமிழர்கள் என்று தெரியுமே ஒழிய, தமிழர்கள் என்று புரிவதில்லை.

இறந்து கிடக்கும் எம்மவர்களின் பெயராலே கேட்கிறேன்... பதிலளியுங்கள். எறும்புகள் கொல்லப்படும்போது சத்தம் எழுப்புவதில்லையாம். அதனால் அவற்றின் அநியாயமான இறப்புகள்கூட அங்கீகரிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், நாம் தொண்டை கிழியக் கத்துகிறோமே... கேட்கவில்லையா? இல்லை, காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு விட்டீர்களா?’
பாதிக்கப்பட்ட ஒரு ஈழத் தமிழ்ப் பெண்ணின் நீளும் கேள்விகளின் வெப்பம் பொறுக்க முடியவில்லை. குற்றங்களை அங்கீகரித்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறோம்? 1990&ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் சிங்கள ராணுவத்தின் புக்காரா விமானங்களின் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயந்து 10 அடி அகலமுள்ள சாலையில் 5 லட்சம் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்த மனிதகுல அவலத்தைப் பார்த்து அமைதியாகத்தானே இருந்தோம். ஒரே இரவில் அத்தனை மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி, சொந்த நாட்டிலேயே அகதியாகி, அடுத்தவேளை உணவுக்குக் கையேந்திய காட்சியைக் கண்டும் காணாமல்தானே இருந்தோம்.

வயிற்றில் சுமக்க முடிந்த பிஞ்சுகளை கையில் நெடுந்தூரம் சுமக்க முடியாமல் வழுக்கிக்கொண்டு, ஆயிரக்கணக்கானோர் காலடியில் மிதிபட்ட கோரத்தைத் தடுக்க ஏதும் செய்யவில்லையே? வெயிலின் தாகத்தில் நாக்கு வறண்டவர்களின் மீது கருணை கொண்ட மழைதானே தாகம் தீர்க்க தண்ணீர் தந்தது. நமக்கெல்லாம் மழையில் நனையாமல் இருக்கப் பயன்படும் குடைகள் அவர்களுக்கு மழை நீர் பிடிக்கும் குடங்களான சோகத்தை நாம் கண்டுகொள்ளவே இல்லையே? பசித்து மயங்கியவர்களுக்கு அந்த சாலைகளின் நெடுக இருந்த மரங்கள் பழங்களைக் கொடுத்து பசியாற்றின. சின்ன வயதில் வயிற்றிலும், மார்பிலும் சுமந்த பெற்றோரைச் சுமக்க முடியாமல் மருகி நின்ற பிள்ளைகளை, அந்த சாலையில் இருந்தவர்கள் தேற்ற வார்த்தைகளின்றி தடுமாறியது நம் பார்வையில் படவே இல்லையே? ராஜீவ் அப்போது உயிருடன்தான் இருந்தார். அவருடைய மரணத்திற்கு முன்பே நம்மிடம் அலட்சியம் இருந்தது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு நம் அலட்சியத்திற்கு ஒரு காரணம் கிடைத்தது.

நார்வே, இலங்கைக்கு அண்டை நாடு இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான தமிழர்கள் நார்வேயில் பிறக்கவும் இல்லை; வாழவும் இல்லை. தமிழர்களை மனிதர்களாகப் பார்க்கிற அன்பு இருந்தது; அக்கறை இருந்தது. மனிதநேயம் இருந்தது. போர்நிறுத்தம் செய்யச்சொல்லி நார்வே தலைவர்கள் இலங்கை அரசுடன் பேசினார்கள். இது எல்லாமே நமக்கு வெறும் செய்திதான். கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்ததற்கே பஸ் எரித்து, கடைகள் கொளுத்துகிற நாம், பேரினவாதம் ஆடிய பேயாட்டத்திற்கு எதிராக, கொல்ல வரும் கழுகிடம் தம் குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிகள் காட்டுகிற எதிர்ப்பைக்கூட காட்ட இயலாத துர்பாக்கிய நிலையில் இருந்தவர்களை பயங்கரவாதிகள் என்றோம். மும்பையில் ஒரு பீகாரி அடித்துக் கொல்லப்பட்டதால், ஒட்டுமொத்த பீகார் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து ராஜ் தாக்கரேவை கைது செய்ய வைத்தார்கள். இறந்துபோன தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடுகிற தலைவர்கள், உயிருக்குப் போராடும் அப்பாவி மக்களைப் பார்த்து ஏன் கண்மூடிக் கொள்கிறார்கள்?

ஐந்து லட்சம் மக்கள் ஒரு குறுகிய சாலையில் வாழ்வு தேடி பயணித்தபோது இந்திய ராணுவத்தை அனுப்பினோம். இப்போது ஐந்து லட்சம் தமிழர்கள் காடுகளில் தஞ்சமடைந்து தவிக்கும்போது கிரிக்கெட் அணியை அனுப்பினோம். இன்னும் போர் நீடித்து, ஒட்டுமொத்த தமிழர்களும் பிணக்குவியலாகும்போது, சகோதரத் தமிழர்களுக்கு வாய்க் கரிசியும், ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்ப நேரிடலாம்.

ஈழத்தமிழர்களின் அழுகை நமக்கு முதலில் கேட்டால் போதும்; பிறகு உலகம் கேட்கும். ரோம் நகரத்தை எரித்தவர்களைவிட, பிடில் வாசித்த ஒருவன்தான் வரலாற்றில் இப்போதும் குற்றவாளி. தமிழ் இனப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் நம் அத்தனைப் பேரையும், அடுத்த தலைமுறை ‘பிடில் வாசித்த’ குற்றவாளிகளாக நிறுத்தக்கூடும்.
 
unarchitamilan

திங்கள், 3 ஜனவரி, 2011

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பல்கலைக்கழகம்:

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பல்கலைக்கழகம்:
தமிழீழ விடுதலைப் போராட்டம் யாருக்காக ? வீறு கொண்டு, களம் புகுந்து எதிரியை விரட்டியடிக்கும் வீரவேங்கைகளுக்காகவா ? தாயக மண்ணில் தவியாய் தவிக்கும் எம் இனிய உடன் பிறப்புகளின் இன்றைய வாழ்விற்காகவா ? அல்லது அவர்களது நாளை தற்பாதுகாப்பிற்காகவா ? தமிழீழத்தை விட்டு வெளியேறி உயிரைக்கையில் வைத்திருக்கும் சிறீலங்கா வாழ் தமிழீழத் தமிழருக்காகவா ? இலங்கைத் தீவிலிருந்து புலம் பெயர்ந்து தரணியெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழருக்காகவா ? தரணியெங்கும் தமிழன் எழுபது நாடுகளில் ஏழுகோடி மக்களாக வாழ்ந்தும் தனக்கென ஒரு நாடு இல்லையே என ஏங்கிக் கிடக்கும் தமிழினத்திற்காகவா ?

உரிமைகள் பறிக்கப்பட்டு, தன் சொந்த மண்ணை இழந்து வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட உலக உரிமையிழந்த பல்லின மக்களுக்காகவா ? தாயகத்தமிழர் எனும் சிறிய வட்டத்தில் இருந்து பரந்துபட்ட உலகளாவிய ரீதியிலான பரந்துபட்ட வட்டம் வரைக்கும் சென்று பார்த்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய உலகளாவிய நிலை நன்கு புலனாகும்.
�நாலு பெடியள் நாற்சந்தியில் நின்றனர். பெடியளில் பெடியளாய் தோன்றினர் வீரவேங்கைகள். அதிகாரத் தமிர் கொண்டு, ஆயுதப் பலன் கண்டு அப்பாவி தமிழ் சிறுமிகளின் மேல் மிருக இச்சைகளை வீசியும் தமிழர் உரிமைகளை கொய்தும்வரும் சிங்கள அரச இராணுவம் பெடியளை கணக்கெடுக்கவில்லை� அந்த இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற விடுதலைப் போராட்டம் இன்று உலகளாவிய ரீதியில் தனக்கென தனியிடம் பெற்றிருக்கிறது. உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைக்கிருக்கும் மதிப்பு, ஆதரவு, கெளரவம், பெருமை என்பன வெகுசன தொடர்பு சாதனங்கள் மூலம் பெருமளவு ஆதரவு வழங்குபவர்களால் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மரபு முறை அரசுகளின் வாயிலாக வெளிப் படுத்தப்படவில்லை. கொடி பிடித்து, ஊர்வலம் நடத்தி, அணிதிரண்டு ஆதரவாக அறிவிக்கப்படவில்லை.
நசுக்கப்பட்ட பல இனமக்கள் தம்மேல் நசுக்கும் அரக்கர் கால்களை தூக்கி எறிய முயற்சிக்கும் வேளை, தமிழீழவிடுதலைப் புலிகள் எறிந்து வருவதினைக் கண்டு உவகை கொள்கிறார்கள். தூக்கி எறிய முடியாது என தயக்கம் கொண்ட தலைமையில் வாடுபவர்கள் தமக்குக் கிடையாத தலைமைத்துவத்தைக் கொண்ட தமிழராவது தலை நிமிர்ந்து நிற்கட்டும் என மன நெகிழ்வுறுகிறார்கள்.
தன்னலம் மிக்க தலைமையின் கீழ் தலைவர்கள் பதவி, பரிவாரம், பட்டம், சுயவிளம்பரத்திற்காக பொதுமக்கள் உரிமைகளை பூண்டோடு அழித்து வரும் நிலைகண்டு தலைகுனிந்து வாழுபவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டாம் கண்டு பெருமைப்படுகிறார்கள்.
இவர்கள் வரிசையில் உலகின் சில இன மக்கள் கொட்டிய உள்ளிக்கிடக்கைகளை மறைந்தும் மறையாத மனித குல மாபெரும் சுடராகத் திகழும் மாவீரர்களுக்கு காணிக்கையாக படைக்க விரும்புகிறேன்.
நை[_ரியா நாட்டின் ஈபோ (IBO) இனமக்கள் ஆயிரத்து தொழாயிரத்து அறுபதுகளில் அரும்பி எழுபதுகளில் மடிந்த விடுதலை மலர்கள் �பயபரா� எனப்பட்டது. அம்மலர்கள் காயாய் கனியாக முன் கொய்யப்பட்டு கசக்கி எறியப்பட்டன. அவர்கள் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டது. யொருயா எனும் பெரும்பான்மை இன அரசிற்கு எதிராக முன்எடுத்து சென்ற ஈபோ இன மக்கள் போராட்டம் நசுக்கப்படக் காரணமாகவும் இருந்தனர்.
இந்த ஈபோ மக்களில் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மெச்சுகிறார்கள். இராணுவ கட்டுகோப்பை, போர் உத்தியை பாராட்டுகிறார்கள். ஆனால் மேடை அமைத்து வானளாவ முழங்க முன்வரவில்லை. அது விடுதலைப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்று வெற்றி காணத் தவறிய இனத்தினரால் தரப்படும் ஆதரவு.
இந்நிலையில் சீக்கியர்கள் பலா தமிழீழ விடுதலைப் புலிகளை தமது முன்னோடி வீரர்கள் என உள்ளத்தே இருத்தி பெருமைப்படுகிறார்கள். காளிஸ்தான் எனும் தனிநாடு காண விளைந்து உக்கிரமாக போராடியவர்கள். பாகிஸ்தான் அரசின் சுயநலநோக்குடன் அமெரிக்க ஏகாதிபத்திய பின்னணியில் இயங்கியவர்கள், போராட்டம் பின்னடைவு பெற்றிருக்கிறது. தன் மண்ணில் தன் தலைமைத்துவத்தில் பெருமளவு நம்பி இயங்க தவறியதின் பாடம் ஒன்றை எம்மிடம் சீக்கியர்கள் கற்றுத் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்திட்டங்களை பாராட்டு கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலை பற்றி நன்கு தெரிந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாளக பாட்டாளி வர்க்க ஆட்சியென்ற போர்வையில் பொதுவுடமை ஆட்சியில் உலகப் பாட்டாளி வர்க்க இணைப்பு நாடி போராடப்பட்டதாகக் கூறப்பட்டு இனவாரியான அடக்குமுறையில் பலர் நசுக்கப்பட்டவர்கள். அவர்கள் பொதுவுடமை அரசுகள் தகர்க்கபட்ட நிலையில் தம் இனவிடுதலை நாடிப் போராடினர் போராடுகிறார்கள் போராடவும் உள்ளனர். அவர்கள் தமிழீழ விடுதலைபற்றிப் பொதுமக்கள் நிலையில், விடுதலைத்தாகம் மிக்கவர்களால் நன்கு அறியப்பட்டிருக்கிறது. அவர்கள் தமிழீழ விடுதலை பற்றி அதன் இராணுவ நுணுக்கம் பற்றி, விடுதலை வேங்கைகளின் கட்டுக்கோப்பான, திடகாத்திரமான கொள்கைபற்றி, செயற்திறன், தியாக உணர்வு பற்றி சக உரிமை இழந்த சகோதரர்கள் என்ற முறையில் பாராட்டி உள்ளவர்கள்.
தென் அமெரிக்க கண்டத்தில் பல நாடுகள் ஸ்பானிய ஆதிக்கத்தின் கீழ் தம் இன, மொழி, பண்பாட்டு கூறுகளை இழந்து வாழுகிறார்கள். அவர்கள் விழித்தெழுந்து பொதுவுடமை உணர்வு மிக்க தலைவர்கள் கீழ் போராட்டினார்கள். மதத் தலைவர்கள் கூட விடுதலைப் பணியே தெய்வீகப் பணியெனக் கூறி ஆதரவு நல்கினார்கள். உலக வல்லரிசினால் அந்த வடுதலைப் போராட்டங்கள் நசுக்கபட்டன. சிதறடிக்கப்பட்டன, சீர்குலைக்கப்பட்டன, சின்னாபின்னமாக்கப்பட்டன. அவர்களில் உலக அரசியல் நடப்புகள் அறிந்தவர்கள். விடுதலை சுடரை தம்மகத்தே கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் போரை தம்மத்தே கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் போரை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள். அதுமட்டுதமல்ல அந்த போராட்டத்தை உலக சக்திகள் நசுக்க எடுத்துவரும் சக்திமிக்க உலக நாடுகள் சிலவற்றின் நடடிக்கைகளையும் அவற்றினை தமிழீழ விடுதலைப் போராளிகள் கையாளும் முறைகளையும் அவதானமாகக் கவனித்துவருகிறார்கள்.
அவர்கள் தாம் இந்த எதிர்ப்பு சக்திகளை ஏற்கனவே சந்தித்தனர். அச்சக்திகளை விரட்டியக்க முனைந்தனர். பலமுறை தோல்வி கண்டனர். சிலமுறை வெற்றி கண்டனர். அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இது சம்பந்தமான செயற்பாடுகளைக் கண்டு மெச்சி வருகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் கையாளும் யுத்திகள் பற்றியும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த யுத்திகளில் சிலவற்றை தாம் கையாண்டனர். தாம் கையாண்ட வித்தைவிட விடுதலை வேங்கைகள் கையாளும் மாறுபட்ட தரமான முறைகண்டு பெருமை கொண்டனர். தாம் கையாளாத புதிய யுத்திகள் சிலவற்றை வேங்கைகளிடம் அறிந்து கொள்கிறார்கள். புதிய யுத்திகள் சிலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய விடுதலை இயக்கங்கள் மற்றும் சில நாடுகளில் கையாண்டு வருகின்றன. அவற்றையும் ஒப்பிட்டு பார்த்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டுகிறார்கள்.
தென்கிழக்காசியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றிய கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது. வியட்னாம் தொட்டு பர்மா வரைக்கும் தமிழீழ விதலைப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் கணிசமானவர்கள் இருக்குகத்தான் செய்கிறார்கள். அங்கு வாழும் பல இனமக்கள் தாம் பிற இனமக்களினால் நசுக்கப்படுவதை உணருகிறார்கள். ஆனால் அது தம் தலையெழுத்து என முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அது தம் தலையெழுத்து என முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடமும் உள்ள முற்போக்கு சக்திகள் உலகளாவிய ரீதியில் இடம் பெறும் விடுதலை சக்திகளின் போராட்டங்களை கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒர் முன் உதாரணமாக அமைந்திருக்கிறது.
சறீலங்காவில் கூட நசுக்கப்பட்ட பாட்டாளி மக்களின் விடுதலை உணர்வு மிக்கவர்களிடம் தமிழீழ விடுதலைப் போராட்ட யுக்திகள் ஓர் பாடமாக கற்கப்படுகிறது. அவர்கள் சறீலங்கா அரச பொருளாதாரம் சீர் குலைவதையிட்டு கவலைப்படவில்லை. பதிலாக நல்ல வாய்ப்பாகக் கருதுகிறார்கள். அவர்கள் சிறீலங்கா தேசத்தின் துரோகிகள் அல்ல. தேசபற்று மிக்கவர்கள் என தன்மை கருதிக்கொள்கிறார்கள். அவர்கள் கருத்தின்படி சிறீலங்கா பொருளாதாரம் சீர் கெட்டநிலை அடையும். அவர்கள் கருத்தின்படி சிறீலங்கா பொருளாதாரம் சீர் கெட்டநிலை அடையும் போதுதான் மக்கள் முதலாளித்துவ ஆட்சியை எதிர்த்து புரட்சி ஒன்றை நடத்த வீறுகொண்டு எழுபவர்கள் எனக் கருதுகிறார்கள். அம்மக்கள் ஆதரவு கொண்டு புரட்சி நடத்த விரும்பும் அவர்களிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரதீர செயல்கள் முன்கற்கும் பாடங்களாக அமைகின்றன.
மத்திய கிழக்கில் பல இனமக்களிடம் தமிழீழ விடுதலைப் போரட்டாம் கற்கக் கடினாமான ஆனால் பயனுள்ள பாடமாக அமைந்துள்ளது. நிலப்பிரபுத்துவ அடக்குமுறை ஆட்சி, மதப்பற்று என்ற போர்வையால் மூடப்பட்டு இடம்பெறுகிறது. அவர்கள் தனியாரால் பறிக்கப்பட்ட சுதந்திரம், சுரண்டப்பட்ட பொருளாதார நிலை ஒருபுறம் இருக்கிறது. மறுபுறம் தமக்குள் இன சுரண்டல், இன ஒதுக்கல் அடக்கு மக்கள் தம் உரிமைகள் பெற முனைகிறார்கள், ஈரான், ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் விடுதலை வேட்கை தணியாத தாகமாக இருக்கிறது. எப்போது எங்கு எரிமலை வெடிக்கும் எனத் தெரியாத நிலை ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது.
மீண்டும் ஆபிரக்காக் கண்டத்தினுள் நுழைவோமானால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அவதானித்து வருபவர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் தென்சூடானில், கெனியாவில், ரன்சானியாவில், மொசாம்பிக்கில், சயரில், உகண்டாவில், பெர்க்கினோ பாசபில் என சில நாடுகளை குறிப்பிடலாம். இங்கெல்லாம் மக்கள் மத்தியில் இல்லாவிடினும் அரசியல் விழிப்புணர்வுமிக்க செல்வாக்கை மடைதிறந்து பாயவல்லவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒர் பல்கலைக்கழகமாக அமைகிறது. அந்தப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் கற்கும் பல துறைப் பாடங்களில் போர்த்திறன் ஒர் முக்கிய பாடமாக இருக்கிறதே தவிர முழுமையான பாடமாக இல்லை. இராணுவம், நிர்வாகத் திறன், குறைந்த இழப்பில் பாரிய வெற்றி, பொது நிர்வாகம், மக்கள் ஆதரவு, அக்கறை, எதிர்கால பாரிய வளர்ச்சி திட்டம், அகில உலக பிரச்சாரம், தொடர்புகள் எனபல்ல துறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சி உலகளாவிய ரீதியில் கற்கப்படும் பாடத்திட்டமாக அமைந்திருக்கிறது. உண்மைகள் உண்மைகளாவே வளர்கின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உலக அடக்கப்பட்ட இன எழுச்சிக்கு ஒர் உந்து கோலாகிறது. அது அம்பலத்திலல்ல. அரங்கிற்குப் பின்னர் கல்விக் கூடமாய் காட்சி தருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியைக் கற்று தம் விடுதலை வேட்கைக்கு களமமைக்க முனைகிறார்கள். இந்த வகையில் பார்க்கும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் அனைத்து தமிழரது போராட்டம் மட்டுமல்ல அடக்கப்பட்ட இனங்களின் போராட்டத்துடன் சங்கமிக்கிறது. அத்தகைய போராட்டத்தினை செயல்வடிவத்தில் காணத் தம் இன் உயிர் ஈர்த்த மாவீரருக்கு எமது உளபூர்வமான அங்சலிகள். அவர்கள் அங்சலியை உள்ளத்தாலும் மலர்களாலும் மட்டுமன்றி அவர்கள் கண்ட அக்கனவை நினைவாக்க உழைப்பதாலும் அமையட்டும்�
சாமி அப்பாத்துரை