மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 22 நவம்பர், 2013

பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர். பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற ம்துரை கிளை அவர்களுக்கு பிணை வழங்கியதை அடுத்து, இன்று  திருச்சி சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர்.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்" என  உலகத் தமிழர் பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பக்கம் இருந்த சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா, நீரூற்று, மரங்களை தஞ்சை மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேரோடு, விருதுநகர் மாவட்டத்தை அண்ணாமலை என்ற 20 வயதுடைய சிறுவனையும் கைது செய்த போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.  இவர்களுக்கு கடந்த 20ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை 9.05 மணியளவில் சிறையில் இருந்து  பழ.நெடுமாறன் உள்பட 83 பேரும் விடுவிக்கப்பட்டார். அவரை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் வரவேற்றார். மேலும், ம.தி.மு.க, நாம் தமிழர், மள்ளர் மீட்பு களம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சிறைக்கு முன்பு கூடி நெடுமாறன் வருகைக்காக காத்திருந்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த நெடுமாறனை பார்த்த தொண்டர்கள், மாவீரன் பிரபாகரன் வாழ்க, அய்யா நெடுமாறன் வாழ்க முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசு ஒழிக என கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், நாங்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் பூங்கா கட்டியிருக்கிறோம். அதிகாரிகள் சொல்வதுபோல் நாங்கள் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து எங்களிடம் முறைப்படி பதில் கேட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு நாங்கள் அதிக பொருட் செலவில் கட்டிய முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.
 
 
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இந்த இடிப்புக்கு பின்னணியில் தமிழக அரசு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் தமிழ் மக்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

எங்களை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நாங்கள் நீதிமன்றம் மூலம் வெளியே வந்துள்ளோம். அதேபோல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோதமானது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் கட்டியே தீருவோம்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதோடு, தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.  
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக