மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 1 நவம்பர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! - வைகோ அறிக்கை


VaikoSpeaking Smallerமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரண்டு வரும்படி ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங்களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக 
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் விழுமிய ஏற்பாட்டால், நம் இருதயங்களின் அழியாத காட்சிகளாகச் சித்தரிக்கும் முள்ளிவாய்க்கால் நினை வு முற்றம், நவம்பர் 8 ஆம் தேதி, தஞ்சை திருநகர்-விளார் புறவழிச் சாலையில் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் திறப்பு நிகழ்ச்சி அரங்கேறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெருவுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டியபோது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற்றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலித்தன.
தமிழ்த்தாயின் பேருரு, சிலை வடிவில்!
ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்!
வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள்; உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள்; தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்!பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர்வயதினரும், பாலகர்களும் உடன்வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்!குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!தொப்புள்கொடி உறவுகள் இப்படி நாதியற்றுச் சாவதோ? இந்த அக்கிரமக் கொடுமைக்கு இந்திய அரசே துணை போவதோ? தாக்குதல் நிற்காதா? தமிழர்கள் சாகும் அவலம் தணியாதா? இன்னுமா உறக்கம் தாய்த்தமிழகத்தில்? மான உணர்ச்சியற்ற சதைப்பிண்டங்களா தமிழர்கள்? என்ற சவுக்கடி, தமிழர்கள் நெஞ்சில் விழட்டும்.நெருப்பில் கருகும் என் உடலும், விடியலுக்கு ஏங்கும் என் உயிரும் அந்தச் சவுக்காக மாறட்டும் என்று, மரண நெருப்புக்குத் தங்கள் ஆவியைத் தந்த முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உருவங்கள் சிலை வடிவில்!ஆம்; இந்தச் சிலைகள் பேசுகின்றன. உயிர்த்துடிப்புடன் நம்மீது கேள்விகளை வீசுகின்றன. காரணம், இந்தச் சிலைகளை வடித்த சிற்பிகளின் மனதில் மூண்ட ஆவேசத்தீ, அவர்களின் கரங்களை இயக்கி உள்ளது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது, இப்புவி எங்கும் வாழும் மனிதகுலத்துக்கு, தாய்த் தமிழகத்தின் தன்மானத் தமிழர்கள் விடுத்துள்ள அறைகூவல் பிரகடனம் ஆகும். தமிழ் ஈழத் தாயகத்தில், விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலகங்களை, கொடியவன் ராஜபக்சே இடித்துத் தகர்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டான். நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தை மண்மேடாக்கி விட்டான். கிளிநொச்சியில் யுத்தகளத்தை இயக்குவதற்கு, தலைவர் பிரபாகரன் அமைத்து இருந்த நிலவறையை, அண்மையில் குண்டு வைத்துத் தகர்த்தான். ஆனால், ராஜபக்சே ஒரு வடிகட்டிய முட்டாள்.
அந்த ஈழ மண்ணில் புலிகள் சிந்திய இரத்தத்துளிகளும், அவர்களின் எலும்புத்துகள்களும் நீக்கமறக் கலந்து இருப்பதை, சுதந்திரத் தமிழ் ஈழம் என்று அவர்கள் எழுப்பிய போர்முழக்கமும், அவர்களின் உணர்வோடு கலந்த சுவாசமும் அக்காற்று மண்டலத்திலே சுற்றிச்சுற்றிச் சுழல்வதை, அம்மடையன் அறிய மாட்டான்.
இதோ, 18 கல் தொலைவுக்கு அப்பால் அமைந்து உள்ள தஞ்சைத் தரணியில் இருந்துதான் கரிகால் பெருவளத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் படையெடுத்துச் சென்று, சிங்களவர்களைச் சிறைப்பிடித்து, இங்கு கொண்டு வந்து சோறு போட்டு, காவிரியின் கரைகளை உயர்த்த வேலை வாங்கினான். இராசராச சோழனும், இராசேந்திரச் சோழனும் படையெடுத்து, புலிக்கொடியை ஆட்சிக் கொடியாக்கினர்.
மாமன்னன் சங்கிலி, போர்த்துகீசியரோடு போர் தொடுத்தபோது, தஞ்சை இரகுநாத நாயக்க மன்னன் வருணகுலத்தான் தலைமையில் படைகளை சங்கிலிக்குத் தோள் கொடுக்க அனுப்பினான்.
இன்று அதே தஞ்சைத் தரணியில் ஈழத்தமிழர் படுகொலையை, அழியாத சாட்சியமாக உலகத்திற்குக் காட்டவும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்கு தாய்த்தமிழகத்து இளம் தலைமுறையினர் வஞ்சினம் பூணவும் குறிக்கோளாகக் கொண்டு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அண்ணன் பழ.நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பி உள்ளார்.
மாவீரர் மண்டபத்தில் முதல் மாவீரன் சங்கர் முதல் மாவீர மகன் பாலச்சந்திரன் வரை, கண்ணையும், கருத்தையும் ஈர்க்கும் சித்திரங்களைக் காணலாம். பலியான முதல் பெண் போராளி மாலதி முதல் அங்கயற்கண்ணி வரை, கரும்புலி மாவீரர்களை, தியாகதீபம் திலீபன் முதல் கரும்புலி மாவீரன் கேப்டன் மில்லர் வரை, பேசும் சித்திரங்களாகப் பார்க்கலாம்.
இந்திய அமளிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூளக் காரணமான, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர், சயனைடு குப்பி கடித்து உயிர் துறந்த அவலத்தை, நம் போற்றுதலுக்குரிய வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் வீர மைந்தன் சார்லÞ ஆண்டனியின் வீரப்புன்னகையை, ஓவியமாகப் பார்க்கலாம்.
அடுத்து, முத்தமிழ் மண்டபத்திற்குள் நுழைவோம்.
இங்கு, அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள், இலக்கிய வித்தகர்கள், இசைவாணர்கள், கலை உலகில் கருவூலமான வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்க்களத்தில் அடக்குமுறைக்குப் பலியானவர்கள் தீக்குளித்து மாண்ட தியாகிகள் அனைவரது புகைப்படத்தையும் இங்கு காணலாம்.
தமிழர்கள் மட்டுமல்ல; உலகெங்கும் இருந்து இந்த நாட்டில் காலெடுத்து வைப்பவர்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம்.
முன்னர், நான்மாடக்கூடல் மதுரைக்கு அருகில் அழகர் கோவில் பக்கத்தில், குன்றக்கடவுள் முருகனுக்கு பழமுதிர் சோலை ஆலயம் எழுப்பினார் மதுரை பழனியப்பனார்.
அவரது அருமைந்தர் பழ.நெடுமாறன், வரலாற்றில் அழியாத முள்ளிவாய்க்கால் முற்றத்தை உருவாக்கி உள்ளார்.
நவம்பர் 8 ஆம தேதி மாலையில் நடைபெறும் தமிழர்களின் மான உணர்ச்சியின் வெளிப்பாடான திறப்பு விழாவிற்கு, நாலாத் திசைகளில் இருந்தும் தமிழர்களே திரண்டு வாரீர்.
கழகக் கண்மணிகளே, இந்நிகழ்வில் பங்கேற்று, உள்ளத்தில் உரம் பெற வாருங்கள்.
மாணவச் செல்வங்களே, இளம் வேங்கைகளாக சபதம் பூண வாருங்கள்.
9,10 ஆகிய இரு நாள்களில்

கா லை முதல் இரவு வரை நடக்கும் கருத்துக் களங்களில், தமிழரின் சங்கநாதம் கேட்க, தவறாமல் பங்கேற்பீர்.
நம் வாழ்வில் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பது தலையாய கடமை என்ற வீர உணர்வுடன், அனைவரும் தஞ்சையில் சங்கமிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக