தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்? தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ...
ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்
...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக
காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ... இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?...
என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான்
என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து
எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ....
மாறி
மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும்
காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற
...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி
அளிக்கும் இந்த கிழவன் யார்?..
"இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்...... இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று ..... யாருக்கு தெரியும்?.............................
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சுற்றி காவல்துறை வைத்த முள்வேலியை அகற்றும் பொதுமக்கள். வேலி போட்டு இன உணர்வை அடக்க முடியாது மாண்புமிகு முதல்வர் அவர்களே!! நீங்கள் இருக்கும் முதல்வர் நாற்காலி என்பது நாங்கள் உங்களுக்கு தந்தது! அதை தமிழர் நலனுக்காக பயன்படுத்துங்கள்! நியாயமாக பார்த்தால் இப்படி ஒரு முற்றத்தை தமிழக அரசே கட்டியிருக்க வேண்டும்! ## நீங்கள் இருக்கும் முதல்வர் நாற்காலி என்பது நாங்கள் உங்களுக்கு தந்த வாக்கு (பிச்சை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக