மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...

.ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...

''போன வருஷம் ஒரே ஒரு மாருதி கார்தான் வச்சிருந்தாரு. இப்ப ஸ்விஃப்ட், ஐ10, இண்டிகான்னு மூணு காரை வாங்கிட்டாரே...!''
''இரண்டு வருஷத்துக்கு முன்னாடிகூட வாடகை வீட்லதான் குடியிருந்தாரு. இப்ப பங்களா மாதிரி வீடு வாங்கிட்டாரே...!''
யாரைப் பற்றியாவது இப்படி பலரும் சொல்லி வியப்பதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? சம்பந்தப்பட்ட நபர் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சொத்து பத்துகள் அதிகரித்திருப்பதை, வசதி வாய்ப்புகள் கூடியிருப்பதை அவர் களின் பொருளாதார முன்னேற்றத் துக்கான ஓர் அடையாளமாகச் சொல்கிறோம்.
இது போல ஒரு நாடு முன்னேறுகிறதா, இல்லையா என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு எளிய அளவீடுதான் ஜி.டி.பி. அதாவது, (Gross Domestic Product.) தமிழில் இதை 'ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி’ என்கிறோம். 
இந்த ஜி.டி.பி-யை எப்படி அளவிடுகிறார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கிவிட முடியாது. காரணம், உற்பத்தி, விற்பனை என பல விஷயங்களை உள்ளடக்கியது இது. ஜி.டி.பி. என்பது ஓர் ஆண்டின் அனைத்து சேவை மற்றும் உற்பத்தியான பொருட்களின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படுகிறது. உற்பத்தி முறை (Output approach), செலவீன முறை, வருமான முறை என பல முறைகளின் அடிப்படையில் இந்த ஜி.டி.பி. கணக்கிடப்படுகிறது.
வருமான முறை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கணக்கிடும் முறையாகும். செலவீன முறை என்பது தனிமனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவது. இந்தியாவில் செலவீன முறையைக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு வருகின்றனர்.
செலவீன முறையின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இப்படித்தான் கணக்கிடுகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + (ஏற்றுமதி - இறங்குமதி)
நுகர்வு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு, பொழுதுபோக்கு, மருத்துவம் முதலான சொந்தச் செலவுகளைக் குறிக்கும்.
முதலீடு என்பது ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான செலவைக் குறிக்கும். தொழிற்சாலைக்கு இடம் வாங்குதல், மென்பொருள் களுக்கு காப்புரிமை பெறுதல், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கும்.
அரசு செலவினங்கள் என்பது ஒரு நாட்டின் அரசு, அதன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் மற்றும் இதர அம்சங்களுக்கும் செய்யும் செலவின் மதிப்பீட்டைக் குறிக்கிறது.
ஏற்றுமதி, இறக்குமதி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாக ஒரு நாட்டின் ஜி.டி.பி-யானது சென்ற ஆண்டு அல்லது கடைசியாக வெளியான காலாண்டு முடிவோடு ஒப்பிட்டுச் சொல்லப்படும். எடுத்துக் காட்டாக, ஒரு நாட்டின் ஜி.டி.பி. 5% உயர்கிறது எனில், அந்த நாடு கடந்த ஆண்டைவிட பொருளாதார ரீதியில் 5% வளர்ந்திருப்பதாக அர்த்தம்.                                                 unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக