மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

பலி வாங்கும் போட்டி அரசியல்!பலி வாங்கும் போட்டி அரசியல்!
தமிழ்நாட்டில் ஒவ்வொருமுறை தேர்தல் நெருங்கும்போதும் ஏதோ ஒருவகையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்குக்கு சர்வதேச முக்கியத்துவம் கிடைத்துவிட, வெற்றிவீரராக தமிழ்நாட்டுக்கு வந்து அதிரடிகள் நடத்திக்கொண்டிருக்கிறார் அவர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்காக சுவாமிக்கு முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதில் அதிரடியாக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுனரிடம் மனு கொடுத்திருக்கிறார் சுவாமி. தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைகளை விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டுக்குத்தான் சுவாமி வழக்கு தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

சுவாமியின் அரசியல் சரியா, தவறா... அவர் கூறும் புகார்கள் நூறு சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவையா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன்கீழ் முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையும், பொதுவாகவே பேரவையிலும் வெளியிலும் நடக்கும் விவாதங்களும்... தமிழக அரசியல் எந்த திசையில் போகிறது என்ற வேதனை தரும் கேள்வியை தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பது நிஜம்.

‘வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள் மற்றும் மனைகளில் 15 சதவீதத்தை விருப்புரிமை அடிப்படையில் அரசு குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்குவது காலம் காலமாக இருக்கும் நடைமுறைதான்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், முதல்வர் அலுவலக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் என பலருக்கும் ஒதுக்கப்பட்டது போல, ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் செங்கோட்டையன், நாகூர் மீரான், தம்பிதுரை போன்ற அமைச்சர்களின் உறவினர்கள், தேவாரம், விஜயகுமார், நடராஜ் போன்ற போலீஸ் அதிகாரிகள், எம்.ஜி.ஆரின் டிரைவர் பூபதி என பலருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், ‘இப்படி அரசு விருப்புரிமை அடிப்படையில் வீடுகள், மனைகளை விரும்புவோருக்கு வழங்கலாம் என அரசாணை போட்டதே 1979ல் அ.தி.மு.க. ஆட்சியில்தான்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசு திருப்பித் தரவேண்டிய ஒட்டுமொத்த கடன் தொகை ஒரு லட்சத்து 1541 கோடி ரூபாயாக இந்த நிதி ஆண்டின் இறுதியில் உயரப் போகிறது. இலவசத் திட்டங்கள், வருவாய்க்கு வழியில்லாத கட்டுமானப் பணிகள் என எல்லாவற்றுக்கும் கடன் வாங்கி செலவு செய்வதால் (உதாரணமாக புதிய தலைமைச் செயலகமும் சட்டப்பேரவை வளாகமும் கட்டுவதற்கே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகி இருக்கிறது!), கடன் அளவு உயர்ந்துகொண்டே போகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்குப் பிறகு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்கிற தொகை எல்லாம் சாதாரணம் என்கிற அளவுக்கு மக்களுக்குப் பழகிவிட்டாலும், வரி வருவாயிலிருந்தே இவ்வளவு கடனுக்கும் வட்டி கட்டியாக வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது.

இதுபற்றி ஜெயலலிதா கேள்வி எழுப்பினால், ‘உங்கள் ஆட்சியில் வாங்கிய கடனையும் சேர்த்துத்தான் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வந்திருக்கிறது’ என்று பதில் சொல்கிறார் முதல்வர்.


‘சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாயைத் திறந்தால் போதும்... ‘உங்கள் ஆட்சியில் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தாக்கப்பட்டார், சுப்பிரமணியன் சுவாமிக்கு கோர்ட் வளாகத்தில் கறுப்புக்கொடி காட்டினீர்கள், கும்பகோணம் மகாமகக் குள மரணம், வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் உயிரோடு எரிப்பு...’ என்று தி.மு.க. தரப்பிலிருந்து பட்டியல் நீள்கிறது.

‘வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது’ என்று அ.தி.மு.க. உறுப்பினர் யாராவது குரல் கொடுத்தால், ‘அரசு வேலைக்கு ஆட்களை எடுக்கக்கூடாது என்று தடைச்சட்டம் போட்ட நீங்கள் அதைப்பற்றிப் பேசுவதா?’ என்று எதிர்கேள்வி தி.மு.க. தரப்பிலிருந்து ஆக்ரோஷமாக கேட்கப்படுகிறது.

இப்படி எதிர்க்கட்சி எதைக் கேட்டாலும், ‘நீங்கள் செய்யாததையா நாங்கள் செய்துவிட்டோம்’ என்கிற பாணியில் ஆளுங்கட்சி சொல்வது ஆபத்தான விஷயம்! 5 ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சி செய்தபிறகு, அந்த ஆட்சியின் நிறை, குறைகளை அலசிப் பார்த்து அதை நிராகரித்துவிட்டு, எதிர்க்கட்சிக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள். கடந்த 5 தேர்தல்களாக இதுதான் நடந்துவருகிறது. ஆனால், ஒரு கட்சி தங்கள் ஆட்சியில் செய்த அதே தவறை, அதே அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ செய்வதுதான் இன்னொரு கட்சியின் ஆட்சிமுறை என்றால் எதற்கு ஆட்சிமாற்றம்? அவர்களே அந்தத் தப்பை தொடர்ந்து செய்துகொள்ளட்டும் என்று மக்கள் விட்டிருப்பார்களே! ஒரு கட்சி தவறான பாதையில் போனால், இன்னொரு கட்சி நல்லாட்சி தரலாமே!

ஒரு கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவரான அப்பா சம்பாதிக்க, இரண்டு ஊதாரிப் பிள்ளைகள் மாறி மாறி வீண் செலவு செய்து, அதற்கும் அப்பாவின் வருமானம் போதாமல் கடன் வாங்கி, அந்த சுமையையும் குடும்பத் தலைவர் தலையில் கட்டுவது போல இருக்கிறது தமிழகத்தின் நிலைமை.

குடும்பத் தலைவரான ‘மிஸ்டர் வாக்காளர்’ யோசித்துக் கொண்டிருக்கிறார்!
       unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக