மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 17 பிப்ரவரி, 2011

வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்


வெங்காய விலையும் , வெட்டி விவசாயமும்



லகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு இதுவரை ஏழாயிரம் கோடி ருபாய் கடன் தள்ளுபடி செய்தும் , விவசாயிகளுக்கு பல மானியங்களும் வழங்கி , வட்டியில்லா கடன் வழங்கி பல நன்மைகளை செய்துள்ளது . அதோடு மட்டுமல்லாமல் விவசாயக் கொள்கை விவசாய உற்பத்தியின் இலக்குகள் மற்றும் முறைகளிலேயே கவனம் செலுத்துகிறது. இத்துடன் விவசாயிகளின் வாழ்க்கை தரம் பொருளாதாரம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. கொள்கை மட்டத்தில், விவசாயத்தின் பொதுவான இலக்குகளுள் பின்வருவன அடங்கும்:

* பாதுகாத்தல்

* பொருளாதார நிலைப்புத்தன்மை

* சுற்றுச்சூழல் தாக்கம்

* உணவுத் தரம் : உணவு அளிப்பு சீராகவும் தரம் தெரிந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வது.

* உணவு தன்னிறைவு : ஜனத்தொகை தொடர்பிலான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல்.

* உணவு பாதுகாப்பு : உணவு அளிப்பு மாசுபாடு இன்றி இருப்பதை உறுதிப்படுத்துவது.

* உணவு பாதுகாத்தல் : உணவு அளிப்பு மக்கள்தொகை தேவைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.

* நிலச்சீரமைப்பு மற்றும் மேம்பாடு

* சுற்றுச்சூழல் தாக்கம்

* பொருளாதார உறுதிப்பாடு.

* வறுமை குறைப்பு

 வேளாண் துறை சார்பாக பல பயிற்சிகள் நடத்துகிறது . எங்கள் ஒன்றியத்தில் இப்பயிற்சிக்கு சுமார் ஆயிரம் விவசாயிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்தும் வெறும் ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொண்டது வருந்தத்தக்க ஒன்று .. நேரத்தை வீணாக்கி போராட்டம் , மறியல் , மாநாடு போன்ற செயல்களில் ஈடுபடும் இவர்கள் ஏன் இது போன்ற பயிற்சிகளை புறக்கணித்தும் அரசாங்கத்தினை குறை கூறிக்கொண்டும் உள்ளனர் ...??

விவசாயி விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் அவன் வாழ்வில் முன்னேற்றம் என்பது வெறும் பகல் கனவாகவே இருக்கும் ..இது போன்ற பயிற்சிகளில் கலந்துகொண்டு இயற்கை விவசாயம்,புதிய தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியாக லாபம் அடைவது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் ..

கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.

இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் விவசாயத்தில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாத காராணத்தால் குறைந்த அளவு மகசூல் வரும் சூழல் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் பெறும் வகையில் புதிய விவசாய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.


வரப்பு இல்லா விவசாயம்:

விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம், புதிய விவசாய தொழில்நுட்ப அறிமுகம், அதிகளவு சந்தை வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டுதான் வரப்பு இல்லா விவசாயம் என்ற புதிய விவசாய முறை இந்தியாவின் சில வேளாண் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.

இந்த புதிய விவசாய செயல்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் கூடிப் பேசி, தங்களின் சிறிய நிலங்களை வரப்புகளை அகற்றி ஒன்றுபடுத்த வேண்டும். இவ்வாறு கிராம அளவில் ஒன்றாக 10 முதல் 15 விவசாயிகள் ஒன்றாக சேரும் போது ஒரளவு அதிக பரப்பளவு நிலத்தை ஒன்றாக சாகுபடியின் கீழ் கொண்டு வர முடியும்.

பின்னர் மண் மற்றும் நீர் பரிசோதனை வாயிலாக அறிவியல் பூர்வமாக நிலத்தின் தன்மைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நிலத்தின் தன்மைக் கேற்ப ஒரு பகுதியில் காய்கள், தோட்டக்கலை பயிர்கள், சிறு தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைக்கேற்ப தேவைப்படும் வேளாண் விளை பொருள்களை நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டமிட்டு சாகுபடி செய்யலாம். வரப்பு இல்லா விவசாயத்துக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கேற்ப வேளாண் விளை பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்புதிய செயல் திட்டத்தில் உருவாக்கப்படும் பொதுவான விவசாய கட்டமைப்புகளை பொதுவான விவசாய நிலப்பரப்புகளில் குறிப்பாக வாய்க்கால் பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் அமைத்துக் கொள்வதன் வாயிலாக பல நிகழ் மற்றும் எதிர்கால தேவை மற்றும் பொது பயன்பாடு பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்வுகள் பெறலாம். இவ்வாறு வரப்பு இல்லாத விவசாயத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் ஒரு விவசாய சங்கமாக தங்களை பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து நிதி சேவைகளை பெறலாம். இச்செயல் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்கள் தனியாகவே பதிவு செய்யப்பட்டு பட்டா உள்ள நிலையில் தனி நபராகவும், விவசாய நலத்திட்டங்களில் பங்கு பெற முடியும்.

பிற பயன்கள்: 


Fill the form:
Fields marked (*) are mandatory
சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டமிட்டு விவசாயப் பணிகளை இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்தும் போதும் அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய முடியும். உதாரணமாக சிறு விவசாயி தனிப்படை முறையில் ஆழ்கிணறுகள் தனியாக அமைப்பதை விட கூட்டாக அமைக்கும் போது செலவுகள் குறையும், பல புதிய விவசாய தொழில்நுட்பங்களாக சொட்டு நீர் பாசனம் ​(Drip​ irrig​ation), தெளிப்பு நீர் பாசனம் ​(sprinkler​ Irrig​ation)​ ஆகியவற்றில் அதிகளவு வேளாண் முதலீடுகள் செய்து தங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை வெகுவாக பெருக்க முடியும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவுக்கு ஏற்பவும், தங்களின் மனித உழைப்புக்கு ஏற்பவும் வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளலாம். வெளி ஊர்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் பல விவசாய நிலங்கள் உற்பத்தி இல்லாமல் தரிசாக கிடப்பது தவிர்க்கப்படும். அவர்களுக்கு விவசாயிகள் நிர்ணயம் செய்த குத்தகைப் பணத்தை பருவம் தோறும் வழங்கலாம். பெரிய வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முன்பே விலை நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்து விற்று அதிகளவு லாபம் பெறலாம.

எனவே தமிழகத்தின் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும் இதுபோன்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்திகள் வாயிலாக அதிகளவு லாபம் பெறலாம்.

வரப்பு இல்லா விவசாயத்தை கிராமங்களில் அறிமுகம் செய்து, விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும்

குறிப்பு :-

"இலவச வேளாண் வணிகப் பயிற்சி"

மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.விவசாயிகள் அனைவரும் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இலவச ஆலோசனை

விவசாயிகள் தங்களின் கேள்விகளுக்கு இலவசமாக பதில் பெற ""கிஸான் கால் சென்டர்'' மையத்தை கட்டணமில்லாத எண்ணை 1800 - 180 - 1551 தொடர்பு கொள்ளவும்.

இலவச வானிலை தகவல்

தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையும் அறிய ' 1800 - 180 -1717 ' அழைக்கவும்.
 
 


UNARCHITAMILAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக