மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

உலகம் தூற்றுகிறது, டெல்லி போற்றுகிற!

சிறிலங்க நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதருமான சமல் ராஜபக்ச தலைமையில் வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இந்தியாவின் மக்களவையில் வரவேற்பு அளித்து மரியாதை தரப்பட்டுள்ளது. இன்று காலை சமல் ராஜபக்ச தலைமையில் மக்களவையின் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்த குழுவினரை வரவேற்று அவைத் தலைவர் மீரா குமார் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அப்போது அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சொரணையுள்ள உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால், ப்ளீஸ் சிட் டவுன் என்று தொடர்ந்து கூறி, ஏதோ ஒன்றும் தெரியாத பள்ளிப் பிள்ளைகளை அடக்குவது போல் கோவத்தை விழியில் காட்டி, தனது ராஜ விசுவாசத்தை காட்டினார் மீரா குமார்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேசையைத் தட்டி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்தக் காட்சியைக் கண்ணுற்ற ஒவ்வொருத் தமிழனுக்கும் நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தது போல் இருந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப் பொறுத்தவரை, வந்திருந்தவர்கள் தங்களுடைய கோரிக்கையை ஏற்று ஈழத் தமிழினத்தை அழித்த கொலைக் கூட்டாளிகள் அல்லவா? அதனால்தான் எந்த அசூசையுமின்றி வரவேற்றார்கள். இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழினப் படுகொலைக்கு தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவை, டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவிற்கு இந்திய அரசு அழைக்கவில்லையா? தூய்மையானதொரு நிர்வாகத்தைத் தந்து உலகில் இந்திய நாட்டின் பெருமையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக்கொண்டிருக்கும் நமது நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்ச அருகில் அமர்ந்து அரசு ரீதியான மதிப்பைத் தரவில்லையா? அப்படிப்பட்ட ஒரு பண்புள்ள அரசைத் தந்துக்கொண்டிருக்கும் கட்சியின் சார்பாக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லவா மீரா குமார்? அந்தப் �பண்பாட்டை�க் காப்பாற்றுகிறார். இதை தமிழக உறுப்பினர்கள் புரிந்துகொள்ளாததால் அவர் கோவப்படுகிறார், அவ்வளவுதான்.
எந்த நாட்டின் நாடாளுமன்றக் குழு அது? இலங்கையின் நாடாளுமன்றக் குழு, அதன் தலைவர் சமல் ராஜபக்ச! இங்கே எப்படி காந்திக் குடும்பமோ, அதற்கு இணையானது இலங்கையில் ராஜபக்ச குடும்பம். ஒரே வித்தியாசம்தான், அங்கு அந்தக் குடும்பம் அதிபர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பாதுகாப்புச் செயலர், நாடாளுமன்றத் தலைவர் என்று எல்லா முக்கிய பதவிகளையும் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்கிறது. இங்கு சோனியா காந்தி குடும்பம் இந்த நாட்டை கட்டியாள அடுத்த பிரதமரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அது வரை அமெரிக்க ஆதரவு பெற்ற ஒரு பொருளாதார நிபுணரை பிரதமராக சகித்துக் கொண்டிருக்கிறது, இது மட்டும்தானே வித்தியாசம்? சோனியா சொன்னதைக் கேட்டு மன்மோகன் சிங் நடக்கவில்லையா? அப்படி நடந்த ஒன்றுதானே இலங்கையில் தமிழின அழிப்புப் போர்?
பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் தலைகள் வேண்டும் என்பதற்காக, இலங்கைத் தமிழர்கள் மீது போர் தொடுக்குமாறு கூறி, அதற்கு ராடார் முதல் பேரழிவு ஆயுதங்கள் வரை தந்து, ஏற்கனவே இனவெறியில் ஊறித் திளைத்தவர்களை உசுப்பி, தமிழினத்தைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் மக்களை அழித்தொழித்து, இன்று அவர்கள் இருக்க வீடின்றி, உழைக்கக் காணியின்றி, சாப்பிட உணவின்றி, சொந்த மண்ணிலேயே அகதியாய் திரிய வைத்து, இன்றுவரை அவர்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு அகமகிழும் சோனியா அன்னையின் கூட்டாளியின் அண்ணனை மதித்து அழைக்க வேறு என்ன காரணம் வேண்டும்? நாமும் மதிக்கவில்லை என்றால், நமது டெல்லி அரசின் நட்பு நாடான அந்நாட்டுக் குழுவை யார்தான் வரவேற்பார்கள்? இது தமிழினத்திற்குப் புரிய வேண்டும்.
அவர்களாகவே முன்வந்தா ஈழத் தமிழினத்தை அழித்தார்கள், அப்படிச் செய்திருந்தால், நாம் வரவேற்க முடியாததுதான். ஆனால் நமது அன்னை சொல்லியல்லவா அழித்தொழித்தார்கள்? வரவேற்காமல் இருக்க முடியுமா? அதனால்தானே, 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் �முடிக்கப்பட்ட� உடனேயே ஜெனிவாவில் கூட்டப்பட்ட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில், இலங்கையில் நடந்த போரில் நடந்த மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியாவின் தூதராக இருந்த கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளி எதிர்த்துப் பேசி தோற்கடித்தது மட்டுமின்றி இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றித் தந்து காப்பாற்றவில்லையா? அந்தத் தீர்மானத்தைத்தானே மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் நிபுணர் குழு மனித உரிமை மன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது? அதற்காக இந்திய மத்திய அரசு வெட்கப்பட்டதா என்ன?
தமிழன அழிப்புப் போரை ஒவ்வொரு நாளும், நானும், அதிபர் ராஜபக்சவின் செயலர் லலித் வீரதுங்காவும், சகோதரன் பசில் ராஜபக்சவும், இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகிய மலையாளிகளும், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகிய மூவருடன் கலந்தாலோசித்தே நடத்தினோம் என்று கோத்தபய ராஜபக்ச வெளிப்படையாகவே அறிவித்தார் அல்லவா? அப்படிப்பட்ட அரசு ரீதீயான உறவினர்களை வரவேற்பது தவறா? தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பான் கி மூனுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ஆதரிக்கின்றனவே, இந்திய மத்திய அரசு மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறது? கொலையைச் செய்யச் சொல்லி, அதற்கு ஆயுதத்தையும் தந்துவிட்டு, இன்றைக்கு வழக்குப் போடு, விசாரணை நடத்து என்று நாமே கூற முடியுமா? அதனால்தான், கொழும்பு சென்ற நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், �மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்த இந்தியா ஒப்புக்கொள்ளாது" என்று டிப்ளமாட்டிக்காக கூறினார். அதன் பொருள் என்ன? அவனை விசாரித்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்பதல்லவா? இதனை தமிழினம் உணர வேண்டும்.
இந்தியாவின் அயலுறவுச் செயலராக இருந்து நேற்றுடன் ரிட்டையர் ஆன நிருபமா மேனன் ராவ், பதவி துறப்பதற்கு முன்னர் எங்கே சென்றார்? அதையும் கவனிக்க வேண்டும். கொழும்புவிற்குச் சென்றார், அவருக்கு ராஜபக்ச பிரிவு உபசார விருந்து கொடுத்து அனுப்பி வைத்தார் என்று கொழும்பு செய்திகள் கூறுகின்றன! புதுமையாக இருக்கிறதா? அதுதான் இந்தியா - இலங்கை அரசுக்கு இடையிலான "ஆழமான" நட்புறவு. இந்த இரு நாடுகளிடையில் ஆன நட்பின் ஆழம் தானே இன்று வரை தமிழினத்தின் உடலில் இருந்து இரத்தம் கொட்டக் காரணம். அப்படி இரத்தத்தால் ஆன உறவு இருந்த்ததால்தான், இன்னமும் இருப்பதால்தான், எதிர்காலத்திலும் நீடிக்க வேண்டும் என்பதால்தான், இந்த நாட்டின் அயலுறவு அமைச்சராக இருந்தவருக்கு அந்த நாட்டில் பிரிவு உபசார விருந்து நிகழ்கிறது! இதெல்லாம் தெரியாமல் தமிழன் கோவப்பட்டால் எப்படி?
சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட �இலங்கையின் கொலைக்களங்கள்� என்ற ஆவணப் உலகின் மனசாட்சியை உலுக்கியது. இந்திய அரசுக்கு அப்படி ஏதாவது ஏற்பட்டதா? இல்லை, ஏன்? நிசத்தை நிகழ்த்தியவர்களுக்கு படத்தைப் பார்த்தால் பதற்றம் ஏற்படுமா?
இப்போது கூட மற்றொரு ஆதாரத்தை சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. போர் முடியும் தருவாயில், முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் உள்ள அத்தனை மக்களையும் அழித்துவிடுங்கள் என்று கோத்தபய ராஜபக்சதான் உத்தரவிட்டார் என்று, சிறிலங்க இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகளே சாட்சியமளித்துள்ளார்கள். ஆனால், அங்கிருந்தவர்களை மட்டுமின்றி, வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களையெல்லாம் கொன்று குவித்து �குயிக்காக� முடிக்குமாறு கோத்தபய ராஜபக்சவிற்கு உத்தரவிட்டது யார்� என்ற ஆதாரமும் ஒரு நாள் வெளிவரத்தான் போகிறது. அது வெளிவந்தால் என்ன ஆகும்? இதையெல்லாம் இந்திய மத்திய அரசு யோசித்திருக்காதா?
எனவேதான், இந்த ஜனநாயக நாட்டின் மானம் கப்பலேறாமல் தடுக்க அந்த நாட்டின் அதிபரின் அண்ணனுக்கு ராஜ மரியாதை அளிக்கிறது இந்திய மத்திய அரசு. இதனை புரிந்து வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள், அதனால்தான் அவையில் இருந்தும் அமைதி காத்துள்ளனர். புரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே, புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொண்ட விடயங்களுக்கு விடை தேடுங்கள், அப்போதுதான் விடிவு பிறக்கும்.

நன்றி : வெப்துணியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக