மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 27 ஆகஸ்ட், 2011

ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள்: மே பதினேழு இயக்கம் அழைப்பு.

திரு. பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய சித்திரவதைகளை ஒரு வேளை மகாத்மா காந்தி மீது நட்த்தி இருந்தால் அவரும் கூட தான் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உதவி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருப்பார். இந்த ஏழை நிரபராதி தமிழர்கள் மீது நட்த்தப் பட்ட சித்திரவதைகளை ஐ. நா வில் புகார் செய்தால் புலனாய்வு அதிகாரிகளுக்கே தூக்கு தண்டனை பரிசாக கொடுக்கப்படும்.
சந்தேகம் உள்ள நபர்களாக அறிவிக்கப்பட்ட சந்திரசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்காமல் அவர்களையும் இதர நபர்களையும் காப்பாற்றுவதற்காக மூன்று நிரபராதி ஏழைத் தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்து பொய் குற்றம் சாட்டி தூக்கு தண்டனை அளித்திருக்கிறது. இவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் கூட இது வரை நிரூபிக்கப்படவில்லை.
1. ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற மூன்று நிரபராதித் தமிழர்கள் திரு.பேரறிவாளன், திரு.சாந்தன், திரு. முருகனை தூக்கிலேற்றுகிறார்கள். தூக்கிலேற்றப்படுவதற்கு இவர்கள் தமிழர்கள் என்பது மட்டுமே ஒரே காரணம்.
2. பெல்ட் பாம் செய்ய உதவினார்கள் என்பது குற்றசாட்டு. ஆனால் சி.பி.ஐ உயர்அதிகாரி பெல்ட் பாம் செய்தவர் யாரேன்று இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.
3. 9 வோல்ட் பேட்டரி வாங்கி தந்ததாக குற்றம். ஆனால் பேட்டரியைக் கொண்டே குண்டு வெடிக்கப்பட்டது என நிரூபிக்கப்படவில்லை.
4. பேட்டரி வாங்கியதற்கு ஆதாரமாக, பெட்டிக்கடையில் பேட்டரி விற்றதற்கு பில் இருந்ததாக காட்டினார்கள். 21 வருடங்களுக்கு முன் மட்டுமல்ல இப்பொழுதும் கூட எந்த பெட்டிக்கடையில் 10 ரூபாய்க்கு பில் தருகிறார்கள்?
5. குண்டை தயார் செய்தவன் பேட்டரி வாங்க முடியாதவனா அல்லது வாங்க வக்கில்லாதவனா என்ன?
6. தடா சட்ட்த்தில் இவ்வழக்கை பதிவு செய்தது தவறு என சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஆனால் தடா சட்டத்தில் வாங்கிய வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது, உலகெங்கும் நடக்காத நீதித்துறை அவலம்.
7. காவல் நிலையத்தில் வாங்கும் வாக்குமூலங்கள் விசாரணையில் ஏற்கப்படுவது இல்லை. எனினும் இவ்வழக்கில் காவல் துறை வாக்குமூலம் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டுள்ளது.
8. கடுமையான சித்திரவதை செய்து எழுதிவைக்கப்பட்ட வாக்குமூல காகிதத்தில் ரத்த கையெழுத்தே வாங்கப்பட்டது.
9. மூவரிடம் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கிய காவலதிகாரி 1993ல் வேறொரு வழக்கினை கேரளாவில் ஒரு கொலையை தற்கொலை என பொய்யாக மூடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
10. அடிப்படை மேல்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்காட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சராசரி குற்றவாளிகளிக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட நீதி மன்றத்தில் அப்பீல் செய்ய கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு மறுக்கப்பட்டது.
11. கொலையில் பங்கு உண்டு என சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்க வேண்டும் என்று சொல்லிய ஜெயின் கமிஷன் அறிக்கை மூடி மறைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களையும் விசாரிக்கவேண்டும் எனச் சொல்லிய வர்மா கமிஷன் பாதியில் கலைக்கப்பட்ட்து.
12. பல் நோக்கு விசாரணை குழு இன்னும் தனது விசாரணையை முடிக்கவில்லை. விசாரணை முடியும் முன் தூக்கு தண்டனை என்பது உலகில் இதுவே முதல் முறை. வெள்ளையர்கள் கூட இத்தகய அநீதியை செய்தது இல்லை.
பஞ்சாபில் சீக்கிய இனத்தை சேர்ந்த புல்லர் என்பவர்க்கு இதே போல தூக்கு தண்டனை அளித்த போது சீக்கிய இனம் சினத்துடன் எழுந்து நின்றது. தில்லி இந்திய அரசு பணிந்தது. அப்சல் குருவிற்கு தூக்கு என்றவுடன் காசுமீர் கோபமுடன் திரண்டெழுந்தது. காங்கிரஸ் அரசு அஞ்சியது. அப்சலை தூக்கிலிட்டால் தண்டனை அளித்த நீதிபதிகளின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என காசுமீர் முதல்வர் அறிவித்தார்.
ராசீவ் காந்தி சாவு எனச் சொல்லி எத்தனை ஒடுக்குமுறைகளை தமிழகம் சந்தித்தது. காங்கிரஸ் அரசு இதுவரை எத்தனை லட்சம் ஈழத்தமிழர்களை பலி வாங்கியது. சிங்கள அரசிற்கு ஆயுதமும், பணமும் கொடுத்து தமிழர்களை கொன்றது. தமிழினத்தை அழிக்க துடிக்கும் இந்த காங்கிரஸ் மத்திய அரசை நாம் விட்டு வைக்க முடியுமா?...கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு. நிரபராதி தமிழர்களுக்கு 21 ஆண்டு சிறைக்கு பிறகு தூக்குத்தண்டனை. என்ன நியாயம் இது. தமிழினம் இனிமேலும் பேசாதிருக்குமா? தமிழர்கள் நாம் கோழைகளா?
தமிழர்கள் மட்டும் தன் இன கொழுந்துகளை பலியிட மெளனம் காப்பார்களா? நிரபராதிகளை தூக்கிலிடுவதை நாம் கண்டும் காணாது இருப்போமா?... காசுமீரிகள், சீக்கியர்கள் போல நாமும் நியாயத்திற்காக வீரத்துடன் போராட மாட்டோமா. தமிழீழத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது காத்த அமைதியை இப்பொழுது நாமும் காக்கப் போகிறோமா?
நீதிக்காக போராடாத இனம் ஒரு மனித இனமா.. போராடுவோம் தமிழர்களே, இந்த நிரபராதித் தமிழர்களை விடுவிக்கும் வரை போராடுவோம்.
உண்மை குற்றவாளிகளை விட்டு நிரபராதிகளை தூக்கிலேற்றுவது பச்சைப் படுகொலையாகாதா? தமிழீழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்களை பழிவாங்கிய காங்கிரஸ் தற்போது தமிழகத்திலும் கொலைகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு, நிரபராதி தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை. தமிழா, நான்கறிவு விலங்குகள் கூட இதற்கு மேலும் அமைதி காக்காது. போராட வீதிக்கு வா. பச்சைப்படுகொலையை தடுக்க வா.
நம் சகோதரர்களை காப்பற்ற செவ்வாய்கிழமை(30-08-11) காலை 9 மணிக்கு உச்ச நீதி மன்றத்தில் கூடுவோம். பச்சைப்படுகொலைகளை தடுப்போம்.
மே பதினேழு இயக்கம். 9600781111- 9443486285

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக