மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 31 ஜூலை, 2011

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த ஓர் நாள் இன்றைய நாள்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த ஓர் நாள் இன்றைய நாள். 24 ஆண்டுகளின்முன் இதே நாளில்தான் அப்போதைய இந்தியப்பிரதமர் இராசீவ் காந்தியும் - ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முற்றாக அழிப்பதையே நோக்காகக் கொண்ட இந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்றவென தமிழீழமண் விரைந்த இந்திய ஆக்கிரமிப்புப்படையினர் 8000 அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்றுகுவித்தனர். 5000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் இந்தியப் படையினரால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு மனநிலைசிதைக்கப்பட்டு, நடைபிணங்களாக்கப்பட்டனர். யாழ். பொது மருத்துவமனையில், மருத்துவ வல்லுனர்கள், மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள், காயப்பட்டவர்கள், அப்போதே பிறந்திருந்த சிசுக்கள் என ஈவு இரக்கமின்றி எல்லோரையும் கொன்று குவித்தது இந்திய ஆக்கிரமிப்புப் படை. 'அண்ணன் பிறந்த ஊர்' என்று வல்வெட்டித்துறை மண்ணையே சுடுகாடாக்கியது, பிஞ்சுக்குழந்தைகளை அவர்கள் பெற்றோர் கண்முன்னேயே சுவரில் அடித்துக்கொன்றது, குடும்பமே பார்த்துக் கதறி அழ, அவர்கள் கண்முன்னேயே பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது, இளையவர்களை நிரைப்படுத்தி படுக்கவைத்து அவர்கள்மேல் கவசவாகனத்தை ஏற்றி உடல்களைச் சிதைத்துக்கொன்றது, 'ஹிந்தி'யில் ஏதேதோ கேட்டுவிட்டு, எதுவும் புரியாமல் பதில்சொல்லத்தெரியாது விழித்த அப்பாவித் தமிழ் மக்களின் வாய்களுக்குள்ளே சுடுகலனை வெடிக்கவைத்துக் கொன்றது. பேருந்துகள், இயந்திர வண்டிகள் போன்றவற்றில் பயணித்த பயணிகளை நிரைப்படுத்தி சுடுகலனது அடிக்கட்டையால் அடித்துக் குதறிய தமிழ் உடல்கள் இன்றும் அவற்றின் வடுக்களைத் தாங்கியே உள்ளன. பாரததேசத்தின் பொய்யான அகிம்சை முகமூடியைக் கிழித்தெறிந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் எங்கள் திலீபன் அண்ணா. இன்றைய நாள் நெஞ்சுகனக்கும் வேதனையோடும் வலியோடும் எம் மக்களின்/மாவீரர்களின் நினைவுகளை மட்டும் மனதில் சுமக்க நினைத்தாலும், ஆக்கிரமிப்பாளன் மீதான அடங்காத வன்மம் இன்றும், என்றும் - எம் தமிழ் மக்களின் குருதிக்கொதிப்பில்! கண்ணீர் வணக்கம் என் மக்களே!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக