சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
பக்கங்கள்
|
புதன், 31 ஆகஸ்ட், 2011
முதல் அமைச்சர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக