மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 27 பிப்ரவரி, 2013

அம்மாவும் அக்காவும் எங்கே?' - பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்கள்

News Service
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு இன்று உலக சாட்சி​யாக இருப்​பது சனல்-4 வெளியிட்ட 'நோ பயர் ஸோன்' வீடியோக்களும் புகைப்படங்களும்​தான். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்​படங்கள், ரமேஷின் வீடியோ தொடங்கி ஆயிர​மாயிரம் ஈழத் தமிழர்களின் குருதியற்ற உடல்கள் வரை விரியும் அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் மரண சாசனம்.   நோ பயர் ஸோன்' வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே-வைத் தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும், இலங்கை அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை.
கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?
ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53-ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர்கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.இனி உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் எந்த தகவல்​களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்​களை எடுத்த இரண்டு சிங்களப் படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்​பட்டவை. அவர்கள் இருவரும் 53-ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர். எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் இரகசியமாக எடுத்தவைதான்.இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.2009 மே மாதம் 18-ம் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் இராணுவம் கொளுத்தியது.
அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்குகுழியில் இருந்திருக்கிறார்.காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53-ம் படையில் சரணடைந்தனர். மே 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர்.சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கி​றார். 'அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பி​விட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்துவிடலாம். எல்லோரையும் போல அவனையும் கொன்றுவிடலாம்' என்று கோத்தபாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார். அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது.காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவது​தான் அந்த படைப் பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்றுவிட்டனர். பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். 'நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும்போது இடையில் அம்மாவைக் காணோம்.அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது' என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டிய​போதுகூட, தன்னைச் சுடப்​போகி​றார்கள் என்பது அவருக்குப் புரிய​வில்லை.கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?
ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை.
இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை என்றார் அழுத்தம் திருத்தமாக.நோ பயர் ஸோன் தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப் போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவரிடமும் பேசினோம்.
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு ​கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடை​பட்டிரு​ந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப் போனார்கள்.தமிழ் மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சரண​டைய வந்தனர். 'நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்' என்று கட்டளை இட்டது இராணுவம்.வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகா​மிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடு​கள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது.
ஒரே ஷாட்டில் 100-க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக்கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர்.சனல்-4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான். ஒட்டுமொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.
நன்றி-ஜூனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக