மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!


இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப் போகின்றது.

  
தற்போதைய இந்திய ஆட்சி முறையில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட தென் மாநிலங்களே மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான 130 உறுப்பினர்களைத் தென் மாநிலங்களே தெரிவு செய்கின்றன. இந்த மாநில உறுப்பினாகளின் தயவிலேயே தற்போதைய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதிலும், கடந்த தேர்தலில் புதுவையின் 1 தொகுதி உட்பட, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே தற்போதைய ஆட்சியின் மிகப் பெரிய பலமாகும்.
கடந்த தேர்தலைப் போலல்லாது, தற்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் இந்தக் கூட்டணிக்குச் சவால் மிக்கதாகவே இருக்கப் போகின்றது.
இவர்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்று முடிந்த ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு யுத்தத்தினை தமிழக மக்கள் இன்றுவரை மறந்து விடுவதாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களது அழிவைத் தடுத்து சிறுத்தும் ஆற்றலும், அதிகாரமும் கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் தனது சுயநல தேவைகளுக்காகத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற ஆதங்கத்தின் வெறுப்பு இன்னமும் அடங்குவதாக இல்லை. இதே காரணத்தினாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பான்மையினோர் மக்களால் தண்டிக்கப்பட்டனர்.
எதிர்வரும் தேர்தலுக்காகத் தன்மீதான களங்கத்தைத் துடைப்பதற்காகவே கலைஞர் கருணாநிதி 'டெசோ' நாடகத்தைப் பல அரங்குகளிலும் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றார். ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறை தற்போதும் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழக காங்கிரசுக்குப் பலத்த சவாலைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் இந்திய ஆட்சியாளர்களுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா சிறிலங்காவை ஆதரிப்புமாக இருந்தால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். இதனால், இந்திய ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானதொரு கள நிலையை சர்வதேச அரங்கில் உருவாக்கும்.தற்போதைய நிலையில், இந்தியாவின் ஆட்சியாளர்கள், தங்களது அடுத்த தேர்தல்வரை தமிழீழ மக்களுக்கெதிரான எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவின் இக்கட்டான இந்த நிலைக்கு, தமிழக மக்களின் தமிழின உணர்வே காரணமாக அமைந்துள்ளது. இது கூர்மைப்படுத்தப்பட வெண்டும். இந்திய காங்கிரஸ் கட்சியின் நலனும், தமிழீழ மக்களின் நலனும் ஒரு கோட்டில் சந்திக்கவேண்டிய கட்டாய நிலையைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தரப்பு நலன் சார்ந்த மாற்றம் இரு தேசங்களின் நலன் சார்ந்ததாக மாறவேண்டும். அதற்குத் தமிழகம் மாபெரும் சக்தியாக மாறவேண்டும்.
தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் தமிழீழ நலன் சார்ந்ததாக உறுதிப்படுமானால், இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களாலும் தமிழீழத்தை வஞ்சிக்க முடியாது. தமிழர்களைக் கொலைக் களத்தில் நிறுத்த முடியாது.
தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!
- அகத்தியன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக