மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 27 பிப்ரவரி, 2013

பச்சிளம் பாலகன் படுகொலை போர்க்குற்றத்தின் அதியுச்சம்! - பனங்காட்டான்


போரின்போது பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையென்று மீண்டும் மீண்டும் கூறிவந்த இலங்கை அரசு, இப்போது இந்தப் பாலகன் யுத்தத்தின்போது மரணித்ததாக சொல்லி தப்ப முனைவது, முன்னர் கூறிய பொய்களை நிர்வாணமாக்கி வைத்துள்ளது.
பாலச்சந்திரன் கள்ளம் கபடம் ஏதுமற்ற பச்சிளம் பாலகன். இவனது ஒளிப்படத்தைப் பார்ப்பவர்கள் மனதில் எழுகின்ற நிதர்சனமான பதிவு இது.
இவன் பிறந்தது 1997ஆம் ஆண்டு. இப்போது உயிருடன் இருந்தால் வயது பதினாறு. பதின்ம வயது இளைஞனாக இருந்திருப்பான்.
  இவரது தாயார் மதிவதனிக்கு பாலச்சந்திரன் என்ற பெயரில் சகோதரன் ஒருவன் இருந்தான்.
முப்பது வருட யுத்தத்தின் முற்பகுதியில், மரணத்தை மண்ணுக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்களில் மதிவதனியின் சகோதரனும் ஒருவன்.
தங்களுக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைக்கு தம்பியின் பெயரான பாலச்சந்திரனின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர் மதிவதனியும் அவரது கணவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற வேளையில் பன்னிரண்டு வயதுப் பாலகன் பாலச்சந்திரனும் இறந்துவிட்டதாக செய்தியோடு செய்தியாக சொல்லப்பட்டது.
எவ்வாறு இந்தப் பாலகன் இறந்தான் என்பது அப்போது எவருக்கும் விபரமாகத் தெரியாது.
இந்த மரணத்தின் சூத்திரதாரிகளுக்கு அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரிந்திருந்தும், அதனை அவர்கள் வெளியிடாது மறைத்திருந்தனர்.
போர் நடைபெற்ற வேளையில் மரணித்த ஆயிரமாயிரம் பொதுமக்களில் இவனும் ஒருவன் என்றே அப்போது செய்திகள் சொல்லின.
இந்தப் பாலகன் ஒரு போராளி அல்ல. எவ்வகையிலும் ஆயுதப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்தியவனும் அல்ல.
பாலச்சந்திரன் எனும் இந்தப் பன்னிரண்டு வயதுப் பாலகனின் உடல் சூட்டுக்காயங்களுடன் காணப்படும் ஒளிப்படும் ஏற்கனவே வெளிவந்திருந்ததாயினும், இதனை யுத்தகால மரணங்களில் ஒன்றாகவே சித்தரித்த சிங்கள அரசாங்கம், அத்துடன் அந்தக் கதையை மெதுவாக முடிவுக்குக் கொண்டுவந்தது.
படுகொலையொன்றை கெட்டித்தனமாக மூடிமறைக்கும் முயற்சியில் ராஜபக்ச குடும்பம் வெற்றியும் கண்டது.
ஆனால், இந்த வாரம் 'சனல்-4' திடுதிப்பென வெளியிட்ட நான்கு ஒளிப்படங்களும் அதனையொட்டிய விவரணமும் இலங்கையையும் அதன் கூட்டாளிகளையும் பெரும் அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்கிவிட்டது.
ஜெனிவா மாநாடு ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இப்படியாக சில உண்மைகள் வெளிவரும் என்று இவர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கடந்த சில நாட்களாக இலங்கை தொடர்பான செய்திகளில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைத் தகவல்கள் முக்கியத்துவம் பெற்று இலங்கையைத் தர்ம சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
எவ்வளவுக்கெவ்வளவு இந்தப் படுகொலையை இலங்கை அரசு மறுத்துக் கூறிவருகிறதோ, அவ்வளவுக்கு இதுவொரு படுகொலைதான் என்ற நம்பகத்தன்மை அதிகரித்துச் செல்வதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
'சனல்-4"வெளியிட்டுள்ள ஒளிப்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும்வீதிமறிப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
பாலகன் பாலச்சந்திரனின் கொலையை ஒரு போர்க்குற்றம் என்றும், இதுதொடர்பான சர்வதேச விசாரணை அவசியம் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.
மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இணைந்தும் தனித்தும் இவ்விடயத்தில் ஒரே குரலில் நிற்பதைக் காணலாம்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி என்ற கோதாவில் தமது கன்னி உரையை பிரணப் முகர்ஜி ஆற்றும்போது, அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை - முக்கியமாக பாலச்சந்திரன் கொலையைக் கண்டித்து ஆரப்பாட்டம் நடத்தினர்.
தவிர்க்க முடியாத நெருக்கடியில் சிக்குண்ட பிரணப் முகர்ஜி, �இலங்கையில் தமிழர் சமாதானமாகவும், உரிமையுடனும் வாழ்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்� என்று பேசினார்.
ஆனால், மறந்தும்கூட பாலகன் பாலச்சந்திரன் படுகொலை பற்றி ஒரு வரிதானும் குறிப்பிடாது, தமது நண்பன் மகிந்தவை பாதுகாக்க முனைந்தது கண்டிக்கத்தக்கது.
பிரணப் முகர்ஜி தொடர்பாக வலையத் தளமொன்றில் தமிழக உணர்வாளர் விவேக் என்பவர் பதித்துள்ள கருத்தில், �இவனை எல்லாம் பேசவிடக் கூடாது. தமிழருக்கு ஆதரவாக இவன் குரல் எழுப்ப ஆரம்பிக்கும்போதே செருப்பைக் கழற்றி இவனை நோக்கி வீசவேண்டும்� என்று தமது ஆத்திரத்தைக் கொட்டியுள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு இது.
கொழும்பு நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான கண்டனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேந்திரன் இங்கு உரையாற்றுகையில் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டுள்ளார்.
இதுவெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போகும் என்பது தெரிந்தாலும், எதிர்கால தேவைகளுக்காகவாவது பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தமிழரின் நம்பிக்கையான எதிர்பார்ப்பு.
அமெரிக்க ராஜாங்க அமைச்சு, மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன்னிப்புச் சபை என்பவையும் இப்படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டுள்ளன.
ஆனால், இந்திய அரசின் கருத்தும் போக்கும் விசனமளிப்பதாகவும், இலங்கையைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துள்ளன.
இந்திய அரசின் கருத்தை வெளிப்படையாகக் கூற எவரும் முன்வரவில்லையாயினும், �ஒரு படத்தை வைத்து எதுவும் கூற முடியாது. அந்தப் படத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை� என்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷியின் கருத்து, இவ்விடயத்தில் இந்தியாவும் பங்காளியாக இருப்பதால் உண்மையை மறைக்க வேண்டியிருக்கிறது என்ற அவசியத்தை பூடகமாக தெரியவைக்கின்றது.
இந்தியாவே இந்த யுத்தத்தை பின்னாலிருந்து நடத்தியது. இந்தியா இராணுவ ரீதியான சகல உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. இந்தியாவுக்காகவே நாங்கள் புலிகளுடன் யுத்தம் புரிந்தோம்� என்று கோதபாய ராஜபக்ச பல தடவை பகிரங்கமாக கூறியபோதும் இந்தியா ஏன் மறுதலிக்கவில்லை என்ற காரணத்தை சல்மான் குர்ஷியின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது.
பாலகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான படங்கள் போலியானவை என்றும் உள்நோக்கத்துடன் உருமாற்றப்பட்ட இப்படத்தின் பின்னணியில் விடுதலைப்புலி ஆதரவு சக்தி இருப்பதாகவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் கூறியுள்ளார்.
அஞ்சியவன் கண்களுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்பதுபோல, எப்பொழுது எங்கிருந்து உண்மைகள் ஈட்டியாக வருகின்றனவோ அங்கெல்லாம் புலிகள் இருப்பதாக இலங்கைத் தூதுவர்கள் கூறிவரும் வரலாற்றில் இதுவும் ஒன்று.
பன்னிரு வயதுப் பாலகனைக் கண்டிக்கும் வகையிலும் அதனால் துயருற்றிருக்கும் தழிமக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அதிரடி நடவடிக்கை ஒன்றை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் ஜூலைமாதம் நடைபெறவிருக்கும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கைக்குழுவும் பங்குபற்றவிருப்பதால் அதனை அங்கு நடத்தமுடியாதென்று ரத்துச் செய்துள்ளார்.
இவரது இந்தத் திடீர்முடிவு இந்திய மத்திய அரசுக்குப் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் ஒரே நேரத்த்தில் கொடுத்துள்ள அதிர்ச்சி வைத்தியம்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் ஐயரால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராஜீவ் காந்தியின் பள்ளித் தோழரும், அவரது ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான மணிசங்கர் ஐயர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கருத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்னர் முடிவுற்ற சம்பவங்களை இப்போது மீட்டுப்பார்க்க கூடாது என்ற வகையில் சளாப்பியுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் பாலச்சந்திரன் படுகொலை இடம்பெற்றிருந்தாலும், இப்போதுதான் அதற்குரிய ஆதாரங்களுடன் இது ஒரு போர்க்குற்றம் என்று தெரியவந்துள்ளதை மணிசங்கர் ஐயர் மறந்துவிட்டார்.
போரின்போது பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லையென்று மீண்டும் மீண்டும் கூறிவந்த இலங்கை அரசு, இப்போது இந்தப் பாலகன் யுத்தத்தின்போது மரணித்ததாக சொல்லி தப்ப முனைவது, முன்னர் கூறிய பொய்களை நிர்வாணமாக்கி வைத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை பெற்ற ஒரு சிறைக்கைதியைக்கூட விரும்பியவாறு ஒருவர் கொலைசெய்வது படுமோசமான குற்றமாக இருக்கும் சர்வதேச சட்டத்தில், எந்தக் குற்றமும் செய்யாத பன்னிரண்டு வயதுப் பாலகனை �பங்கருக்குள்� இருத்தி�சுட்டுப்படுகொலை செய்தது எந்தச் சட்டத்தின் கீழ் நியாயமாகும்?
போதிய ஆதாரங்களுடன் உள்ள இந்தப் படுகொலையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனைப் படுகொலை செய்ததானது, இலங்கை அரசினது போர்க்குற்றத்தின் அதியுச்சம்.
இதற்கான தண்டனையை உரியவர்களுக்குச் சட்ட மன்று கொடுக்கத் தவறுமாயின், என்றாவது ஒருநாள் சமூக மன்று கொடுத்தே தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக