மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 14 பிப்ரவரி, 2013

பேரறிவாளன், முருகன், சாந்தனை நோக்கி நகர்கின்றதா, இந்தியக் கொலைக் கரங்கள்?


News Service
'ஒவ்வொரு விடியலும் அச்சத்தைக் கொடுக்கிறது' என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் தாயார் கண்ணீர் வடித்துள்ளார். மும்பைத் தாக்குதலாளிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் குற்றவாளியாகக் கருதப்பட்ட அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். இந்த இரு தூக்குத் தண்டனைகளுமே வெளியார் எவருக்கும் தெரியாமல், குற்றவாளிகளின் உறவுகளுக்கும் தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக, யாருமே எதிர்பார்க்கப்படாத வேளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  இதனைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற அதிரடிப்படையின்மீது கள்ளிவெடித் தாக்குதல் நடாத்தி 22 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம், சிலவேந்திரன், மீசை மாதையன், சைமன் ஆகியோர் தூக்கிலிடப்படவுள்ளார்கள் என்ற செய்தி தமிழ் மக்களைத் திகில் கொள்ள வைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் குறி வைத்தே இந்த தொடர் மரண தண்டனைகள் இந்திய ஆட்சியாளர்களால் ஒத்திகை பார்க்கப்படுகின்றது என்பதே தமிழ் உணர்வாளர்களது கருத்தாக இருக்கின்றது. இதனையே, பேரறிவாளனது தாயார் அற்புதம்மாளின் கவலை பிரதிபலித்துள்ளது.ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து ஈழத் தமிழர்கள்மீது போர் தொடுத்த சோனியா காந்தியின் வன்மம், ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்டுள்ள நிலையிலும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீது அவரது கவனம் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெறாது என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தனக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஆட்சி நிறைவுக்குள் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் சோனியா காந்தி உறுதியதாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் முடிவில் மாற்றங்கள் எதுவும் நிகழாதிருக்குமானால், தமிழ் மக்களது மனங்கள் எல்லாம் ஜெனிவாவில் மையங்கொண்டிருக்கும் நாட்களில், இந்தத் தமிழர்களது தூக்குத் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதான செய்தி ஒரு அதிகாலைப் பொழுதில் வெளியிடப்படலாம் என தமிழக ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய அரசு உள்ளது. அமெரிக்காவால் இதற்கான வாக்குறுதியும் இந்திய தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் துக்குத் தண்டனையை நிறைவேற்ற சோனியா காந்தி முயலக்கூடும் என்பதே தமிழக ஊடக தரப்பின் அச்சமாக உள்ளது.
சோனியா காந்தியின் இந்தப் பழிவாங்கல் படுகொலைகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ தமிழக மக்களால் முடியாமலும் போய்விடலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்கும் கருணாநிதியுடனும் அதற்கான பேரங்கள் பேசப்பட்டிருக்கும். ஒருவேளை, இந்தப் படுகொலையில் தனக்குச் சம்மந்தமே இல்லாததுபோல், கருணாநிதி தன் கவிதைகளால் இவர்களுக்கு மாலையிடவும் முனையலாம். ஆனால், தமிழகம் விழித்தே இருக்கும்.
தமிழகத்தில் இந்தப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் சுவடே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தமிழினத்தின் அழிவுகளில் பங்கேற்ற தி.மு.க.வுக்கும் இறுதி ஆணி அடிக்கப்பட்டு, குழிக்குள் இறக்கப்படும். இதுவரை, தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு ஈகப் போர் நடாத்திய தமிழ் உணர்வாளர்கள், எதிரிகளுக்கெதிரான வன்முறை சக்தியாகவும் மாறக்கூடும்.
தமிழகம் ஒருமுறை கொதித்தபோது, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டு, அண்ணா அவர்களிடம் வழங்கப்பட்டது. மறுமுறை கொதித்தபோது, தமிழகத்தின் ஆட்சி கருணாநிதியிடமிருந்து பறிக்கப்பட்டு, காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. இன்னொருதடவை தமிழகம் கொதித்தெழுமாக இருந்தால், தமிழகம் இந்தியாவின் மாநிலமாக இருப்பது சாத்தியமில்லாததொரு எதிர்காலத்தை உருவாக்கலாம்.
எனவே, ஒரு குடும்பத்தின் பழிவாங்கல் கொடூரத்திற்கு, தமிழகத்தின் தேசப்பற்று இரையாக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்தியர் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழகத்து மக்களில் எண்ணமாக உள்ளது.
- அகத்தியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக