மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 30 ஏப்ரல், 2011

முள்ளிவாய்க்காலில் போராளிகள் மட்டுமா கொல்ப்பட்டும் சித்தரவதைக்கும் ஆளாகினர்? போர்க்குற்ற விசாரணைக்கான அறிகுறிகள் தென்படும் போது இவை அவசர அவசரமாக வெளியிடவேண்டிய தேவைகள் எவை..? பொது மக்கள் மீதான போர்க் குற்றங்கள் என்னவாகின?

அந்த தேவைகள் யாருக்கு சாதகமானவை?
அவற்றால் பயன்பெறபோகிறவர்கள் யார் யார்..?
காலகாலமாக சிங்களம் செய்துவரும் மனோவியல் தாக்குதலை இம்முறை பொறுப்பெடுத்து நடாத்தும் ஏஜன்டுகள் யார்..?
போர்க்குற்றங்களாகவே இவற்றை வெளியிடுகிறோம் என்கிறார்கள்.
அப்படியானால் ஏன் போர்க் குற்றத்ததை விசாரித்த நிபுணர் குழுவுக்கு இந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படவில்லை. ஏன் பொதுமக்களது புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை?
போர்க்குற்றத்தில் சிங்களம் ஈடுபட்டது என நிபுணர் குழு உறுதியாக தெரிவித்து இருக்கும் இந்த பொழுதில், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிங்களம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும்படி புலம்பெயர் தமிழர்கள் எழுச்சி கொள்ளவேண்டிய நேரத்தில் போராளிகளது புகைப்படங்கள் மட்டும் வெளிவந்த காரணம் என்ன..?
இரண்டு வருடமாகியும் இன்னும் உயிர்ப்புடன் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒருவகையான இறுதித்தாக்குதல் இது. நாம் அறிந்தவரையில் இது ஒரு பகுதிதான். கட்டம் கட்டமான உளவியல் தாக்குதல்கள் இனிவரும் சில நாட்களில் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
புலம்பெயர் தமிழர்களை மிக அதிர்ச்சிக்குள்ளும், அந்த அதிர்ச்சிக்கூடாக மௌனத்திலும் புதைந்துபோக வைக்க இதைவிட சில காட்சிகளை வெளியிடும் திட்டங்களும் அவர்களிடம் உள்ளன. அவர்களின் தேவையும் சிங்களத்தினதும், வல்லாதிக் கசக்தியினது தேவையும்ஒன்றாகவே இருக்கிறது.
அவற்றை இனம்கண்டு அவற்றை நிராகரிப்பதுதான் இப்போதைய தேவை.
அவர்கள் எமது வீரர்களின் சிதைந்துபோன உயிரற்ற உடல்களை காட்டி எமது மன உறுதியை உடைக்க நினைக்கிறார்கள்.! ஆனால் எமது வீரர்கள் உயிரோடு இருந்து போராடிய நீண்ட வருடங்களில் அவர்கள் காட்டிய வீரத்தையும், விடுதலை மீதான பற்றுதலையும், உறுதியையும் என்றும் எஙகள் நினைவில் மீண்டும் மீண்டும் வரட்டும்.
விடுதலைப் போராளிகளையோ கிழர்ச்சியாளர்களையோ அல்லது ஒரு நாட்டு படையினரை எதிரி நாட்டு படையினரோ யுத்தகாலத்தில் கொல்வது போர்க் குற்றமாக அனைத்துலகத்தால் கருதப்படலாகாது. இது உலக நியதி. பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய படங்களும் ஆதாரங்களும் மட்டுமே உலக மணிதாபிமானிகளால் போர்க் குற்றமாக முதலில் கருதப்படுகிறது.
எனவே விடுதலைப்புலிகள் போராளிகளது கொல்லப்பட்ட புகைப்படங்களை படையினரிடம் இருந்து வெகுமதி கொடுத்து எடுத்ததாக கூறுபவர்கள். பொதுமக்கள் மற்றும் யுவதிகள் பலர் கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்ட ஆதாரங்களும் பெரியளவில் அவர்களிடம் இருக்கும் அதையும் வாங்கி பிரசுரித்தால் மிக மிக பிரயோசனமாக இக்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்குமே! செய்வார்களா?
பாரிசிலிருந்து:நிலா மகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக