காவிரியில்
தமிழக அரசு கோரும் தண்ணீரை திறந்து விடக் கோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை
மீட்புக் குழு சார்பில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
கர்நாடக
அணைகளில் இப்போதுள்ள 80 டி.எம்.சி. தண்ணீரில் தமிழக அரசு கோரியுள்ள 30
டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். தண்ணீர் இன்றி கருகிப்
போன சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க
வேண்டும், அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,
வேளாண்மைக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய பேரணியை தமிழக விவசாயிகள்
சங்கத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி
கீழ்ப்பாலம், ரயிலடி, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக ஆப்ரஹாம்
பண்டிதர் சாலையில் முடிவடைந்தது.
இதில்,மத்திய அரசு, பிரதமர், கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீர் விட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், காவிரி உரிமை மீட்புக்
குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர்
அய்யானாபுரம் சி. முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
அ. நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்
குடந்தை அரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலர் தெ. காசிநாதன், வோளாண்மை
உழவர் இயக்கம் கோ. திருநாவுக்கரசு, இயற்கை வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர்
கே.கே.ஆர். லெனின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, ஆப்ரஹாம்
பண்டிதர் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
தொடரட்டும் இந்த ஒற்றுமை!
காவிரி
பிரச்னை என்றாலே... கர்நாடகத்தின் மைசூர், மாண்டியா பகுதி விவசாயிகள்
மிகவும் ஒற்றுமையோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆனால், தமிழகத்தில்
அரசியல் உள்ளிட்ட பற்பல காரணங்களால் அந்த ஒற்றுமையை பார்க்க முடியாமலே
இருந்து வந்த நிலை, தற்போது மாற ஆரம்பித்துள்ளது. சமீப காலங்களாக அந்தப்
பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை... வியக்க வைக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி
மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறது 'காவிரி உரிமை மீட்புக்குழு'.
இக்குழுவில் அனைத்து விவசாய சங்கங்களும் இடம்பெற்றுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக