மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 20 ஜூலை, 2011

ஈழத் தமிழரை அழித்தவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது

நாதியற்ற தமிழனை அழித்தால் யாரும் தட்டிக்கேற்கமாட்டார்கள் என்கிற இறுமாப்பில் இருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரண்டு போர்க்குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள். பிரித்தானியாவைச் சேர்ந்த "சனல்-4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்கிற பெட்டக நிகழ்ச்சி பலரின் மனக்கதவை திறக்கவைத்துள்ளது.
மே 2009-இல் முடிவுக்கு வந்த நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் பல அடுக்கடுக்கான உண்மை நிகழ்வுகளை சனல்-4 தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் இத்தொலைக்காட்சி தனது ஊடகத் தர்மத்தை நெஞ்சில் சுமந்து தர்மத்திற்காக குரல் கொடுக்கிறது. இப்படியான நிறுவனங்களை உலகத்தமிழர்கள் போற்றுவதுடன், தம்மாலான ஆதரவை நல்கி இவர்களின் சேவையைப் பல மடங்காக்க ஊக்கமளிக்க வேண்டும்.
ஈழத்தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சனல்-4 தொலைக்காட்சி மிகத் தெட்டத்தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுடன், உலகப் பத்திரிகைகள் மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கும் கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல், வெகுவிரைவில் ஐந்து இலட்சம் பிரதிகளை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதிகள் வெளிவந்தால் நிச்சயம் சிங்கள அரசுக்கு ஆதரவளிக்கும் பல நாடுகள் தமது நிலையை பரிசீலிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
ஐநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு வெறும் அறிக்கைவாயிலாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துவந்த ஆஸ்திரேலிய அரசு, சமீபத்தில் ஒளிபரப்பாகிய சிறிலங்காவின் கொலைக்களம் என்கிற பெட்டக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் கடம் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடவடிக்கை தேவை என்பதை பகிரங்கமாகவே கேட்டுள்ளார்.
நான்காம் கட்ட இறுதி யுத்தத்தின் போது சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐநாவின் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கெவின் ரூட் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனிதவுரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தான் கோரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல தமிழ் மக்களை சிங்கள அரச படையினர் சிறைச்சாலையில் அடைத்துவைத்து பல அட்டூழியங்களைக் குறித்த சிறைவாசிகளுக்கு செய்தது. குறித்த பல சிறைவாசிகள் தற்போது விடுதலைபெற்றோ அல்லது பணத்தை கொடுத்தோ நாட்டை விட்டு தப்பித்து மேற்குலக நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்கள். இவர்களை ஒன்றிணைத்து குறிப்பிடப்பட்டவர்களை நேரடி சாட்சிகளாக இணைத்து சிங்கள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிராக உலக நீதிமன்றங்களில் வழக்குப்போட சில அமைப்புக்கள் முயற்சிகளை எடுத்துவருகின்றன. இப்படியாக பல வழிகளில் சிங்கள அரசுக்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக