மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 10 ஜூன், 2012

"மார்க்சியத்திடமிருந்து பிரபாகரன் பெற்ற மாவீரம்'' நூல் அறிமுக விழாவில் மகேந்திரன் முழக்கம்

சோசலிசத் தமிழீழத்தை பெறுவதற்கான போராட்டத்தின் உத்வேகத்தை பிரபாகரன் மார்க்சியத்திலிருந்தும் பொதுவுடைமையிலிருந்தும்தான் பெற்றி ருப்பார் என நான் நம்புகிறேன்' என்று கம்யூனிஸ்டுக் கட்சியின் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் குறிப்பிட்டார். 17-04-12 அன்று மதுரையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
நான் பொதுவுடைமை இயக்கத் தின் சார்பில் வாழ்த்துக் கூற ஒரு அடிப் படைக் காரணம் இருக்கிறது. பெருமைக் குரிய சோசலிச தமிழீழத்தைப் பெற வேண்டும் என்ற போராட்டத்தின் உத்வேகத்தை பிரபாகரன் எங்கிருந்து பெற்றிருப்பார் என்று நான் மீண்டும் மீண்டும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மார்க்சியத்திலிருந்தும் பொதுவுடைமையிலிருந்தும் தான் அந்த மாபெரும் வீரத்தைப் பெற்று அது தமிழீழமாக மலர வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

பழ.நெடுமாறன் அவர்களுடைய பெருமைகள் பற்றி எல்லாம் இந்த மேடையில் பேசப்பட்டது. உள்ளபடியே நான் இந்த நூலை வாசித்து முடித்த போது, தமிழகத்தின் அடுத்த தலை முறையைப் பற்றிய அக்கறையையும் நம்முடைய காலத்திலேயே தமிழீழத் திற்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்ற உணர்ச்சியைச் சாத்தியப்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்ட நூலாகத் தான் நான் இதைக் கருதுகிறேன்.

இதைச் சொல்கிற போது நான் மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்பதை மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. மார்க்சிய அடிப்படையிலே - பொதுவுடைமைக் கொள்கை அடிப்படையிலே - தமிழகத் தின் பொதுவான பாரம்பரியததின் அடிப் படையிலே ஆராய்ந்து நோக்குகின்ற போது, எதிர்காலத் தமிழர்கள் வீறு கொள்வதற்கு - தமிழர்கள் உணர்ச்சி கொள்வதற்கு - தமிழர்கள் சோசலிசம் நோக்கி நகர்வதற்கு இதைவிட சம காலத்து நூல் வேறு எதுவும் இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்த நூல் உள்ளது. என்பதை மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)

இந்த நூலின் அனைத்து அம்சங்களையும் உற்றுப் பார்க்கிறபோது கிட்டத்தட்ட இந்த நூலைப் படித்துப் பார்க்கிற போது மிகச் சிறப்பான அணுகுமுறை இந்த நூலில் உள்ளது. பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். ஒரு நூல் என்று சொன்னால் அது கூறுகின்ற கருத்து, அந்த நூல் தொகுக்கப்பட்ட விதம் இவைகள் தான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றார். அந்த அடிப்படையில் பார்க்கிற போது அந்த நூலை அவர் தொகுத்திருக்கிற விதமும் கூறப்படும் கருத்துகளும் பாராட்டுக் குரியன. பிரபாகரன் அவர்களுடைய அடிப்படையான பெருமை என்ன, அரசியல் என்ன என்பதை அவருடைய பேட்டியின் மூலமாகவே கூறுகிறார். அவரைச் சந்தித்த அனுபவம் எப்படிப் பட்டது என்பதைச் சொல்கிறார். அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டி யிலே அந்த இலட்சியவாதி தன்னுடைய வாழ்வின் இலட்சியம் என்ன என்பதைப் பற்றிக் குறிப்பிட்டதையும் எழுதி யியிருக்கிறார்.

இங்கே நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது பிரபாகரன் அவர் களுக்கு இயற்கைதான் நட்பு; அவருக்கு யார் நட்பு என்று சொன்னால் யார் உறவு என்று சொன்னால் இயற்கைதான் அவருக்கு உறவு.

அதைப்போல இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது "வாழ்க்கை என்பது என்னுடைய தத்துவ ஆசிரியர் "வாழ்க் கைதான் அவருக்குத் தத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது.

மூன்றாவதாக அவர் கூறுகிறார் - "வாழ்நாள்தான் என் வழி காட்டி''. இந்த மூன்று அம்சங்களையும் குறிப் பிடுகிறார். அந்த பேட்டியின் அடிப் படையில் இந்து பத்திரிகையின் நிருபர் உங்கள் சித்தாந்தம் என்ன? என்று கேட்கிறபோது என்னுடைய சித்தாந்தம் என்பது இலங்கையில் உள்ள சிங்களர் களை வெற்றி கொள்வது என்னுடைய சித்தாந்தம் அல்ல. அல்லது சிங்களரு டைய பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தன்னுடைய சித் தாந்தம் என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் கூறுவது தமிழ் ஈழத்தில் புரட்சிகர சோசலிசத்தை உருவாக்குவதுதான் என் வாழ்வின் இலட்சியம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். (கைதட்டல்)

சாதாரணமாக பிரபாகரன் என்றால் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்று கூறுவார்கள்-ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சயனைட் குப்பிகளைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு எதையுமே அறிந்திராதவர் பிரபாகரன் என்று உலகம் பூராவும் பரப்பப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கான தத்துவம் எது என்று சொன்னால் அது புரட்சிகர சோச லிசம் தான் என்று சொல்லுகிற போது அதைவிட வேறு அரசியல் கட்டாயம் இருக்க முடியாது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பேட்டியின் எல்லா அம்சங்களையும் பார்த்தால் புரட்சியைப் பற்றிப் பார்க்கிற போது அதன் தாக் கத்தைப் பற்றிப் பார்க்கிற போது அது சமகாலத்தில் எப்படிச் செயல்பட்டிருக் கிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். 1947க்கு முன்பு இந்தியாவில் நடத்தப்பட்ட அத்தனை இயக்கங்களும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தப்பட்ட அத்தனை இயக்கங்களும் வெள்ளைக்காரர்களால் ஒரு பயங்கர வாத இயக்கமாகத்தான் கருதப்பட்டது. பகத்சிங் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியது - இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சி, - எதை எடுத்து நீங்கள் பார்த்தாலும் சரி ஆங்கில வரலாற்றைப் பார்த்தாலும் சரி அவைகள் எல்லாம் பயங்கரவாதம் என்று தான் குறிப்பிடப் பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு அந்த வரலாறு மீண்டும் மறுபரிசீலனை செய் யப்பட்டது. மீண்டும் உற்றுப் பார்க்கிறது. எப்படி பொய்யான தகவல்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்பதையெல்லாம் அலசிப் பார்த்து மீண்டும் தீர்ப்பு கூறப்பட்டது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு புனிதமான பங்களிப்பு பகத்சிங் போரா டிய போராட்டம் என்று பதிவு செய்யப் பட்டது. அதைப் பதிவு செய்தார்கள்

அதைப்போலத்தான் பழ நெடு மாறன் அவர்கள் எழுதிய புத்தகம் என் பது விடுதலைப்புலிகளின் இயக்கத்தை யும் மாவீரன் பிரபாகரன் வரலாற்றையும் - எவ்வாறெல்லம் புனைந்துரைகள் உள்ளன என்பதைப் பார்த்து அவற்றை எல்லாம் அகற்றி விட்டு அதில் மறைந் திருக்கக் கூடிய புனிதத்தை கண்டறியக் கூடிய புதிய நூலாக இது உள்ளது.

ஐயா அவர்கள் 1200 பக்கங்கள் - 1200 பக்கங்கள் என்று சொன்னாலும் கூட 1988ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சிகளை 126 பக்கங்களிலே அவர் எழுதியிருக்கிறார். விளக்கங்கள் கூட கொடுத்துள்ளார். இந்த நூலில் 91 அதி காரங்கள் - அத்தியாயங்கள் உள்ளன. நான்கு இணைப்புகள் இருக்கின்றன . ஒரு முழுமையான நூல். இந்தமாதிரி ஒரு நூலை 1200 பக்கங்களிலே எந்த விதமான சங்கடமும் - சிக்கலற்ற முறையில் சிரமம் இல்லாமல் படிப்பதற்கு ஐயா பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் கூறியதைப் போலமிக அழகிய தமிழில் இலக்கியச் சுவை குன்றாமல் எழுதக்கூடிய நீண்ட அனுபவம் ஐயாவுக்கு இருக்கிறது.

இப்படி பழ.நெடுமாறன் ஐயா வால் தான் எழுத முடியும். உலகத்தில் பல சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய நூலாக இது வெளிவந்துள்ளது. மிக அடிப்படையான காரணம் அவருடைய உழைப்பு என்றாலும் அவருடைய அனுபவம் ஒரு காரணம் என்று சொன் னாலும் எல்லாவற்றையும்விட ஒரு மாவீரனை நம் முன் நிறுத்தியிருப்பது தமிழகத்தில் யாருக்கும் இல்லாத மிகச்சிறந்த நேர்மைதான் என்பது ஒரு காரணம். (கைதட்டல்)

பிரபாகரனைப் பற்றி புகழுவதற் காக பழ.நெடுமாறன் ஐயா இந்த புத்த கத்தை எழுதி இருக்கிறாரா? ஏனெனில் அவரைப் பற்றி பத்திரிகைகளில் பார்க் கும் போது அவர்கள் சித்தரிக்கும் விதம் எப்படி இருக்கிறது? விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பவர் என்ற வகையில்தான் காட்டுகிறார்கள். ஆனால் அப்படி அல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டு பார்த்தால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்காக தன்னுடைய உயிரே போனாலும் தன்னுடைய உடல்நலமே போனாலும் தன்னுடைய குடும்பமே அழிந்தாலும் தன்னுடைய எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தமிழ் மண்ணில் போராடும் தலைவர் யார் என்று சொன்னால் ஐயா பழ.நெடுமாறன்தான். (கைதட்டல்)

தமிழகத்தில் மூதத அரசியல் வாதி. பழம் அரசியல்வாதி. முன்னாள் முதல்வரை விட அரசியலில் தைரியத் தில் கல்வித் தகுதியில் உயர்வு இருக் கிறது. இருந்தாலும்கூட ஐயா அவர்கள் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த நூலை எழுதியிருப்பதற்கு அடுத்த தலைமுறை யைப் பற்றி அவரிடம் உள்ள ஏக்கம்தான் காரணம். அதில் எந்தப் புகழ்ச்சியையும் பார்க்க முடியவில்லை. மிகைப்படுத்தி கூறப்பட்டது பொய்யானது என்ற மரபு எதுவுமே இல்லை. ஒட்டு மொத்தத்தில் அதில் உண்மையை மட்டும்தான் பார்க்க முடிகிறது. அந்த உண்மையில் இருந்து புறப்பட்டிருக்கிற அந்த வீரியத்தைத்தான் காணமுடியும். வீரத்தை உருவாக்கக் கூடிய வலிமை பொருந்திய மாற்றத்தை உருவாக்கக் கூடிய கருத்துகளைத் தான் இந்த நூலில் பார்க்க முடியும்.

ஆயுதம் ஏந்துகிறார்கள் - ஆயுதம் ஏந்திய போராட்டம் என்கிறார் கள். துப்பாக்கிகள் - ஏ.கே.47 போன்ற ஆயுதங்கள் எதற்கு என்றால் ஆயுதங் களுக்காக ஆயுதங்கள் அல்ல. அரசி யலுக்காகத்தான். அதனால்தான் இந்த நூலில் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசு அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? இந்த

நூலில் அதைக் காண முடிகிறது. பொது வுடைமைச் சிந்தனைகளைக் காண முடிகிறது. 400 ஆண்டுகளல்ல 500 ஆண்டுகளானாலும் அந்த ஈழத் தமிழர் களைத் தோற்கடிக்க முடியாது என்ற ஒரு வீரத்தை, ஒரு தத்துவத்தை ஒரு பாதையை எப்படி உருவாக்கிக் காட்டி யிருக்கிறார் பிரபாகரன் என்பதைத் தான் மிகச் சிறப்பாக இந்த நூலிலே காண முடிகிறது. நமக்கே ஒரு பிரமிப்பு ஏற் படும் வகையில் தொகுத்து எழுதி யிருக்கிறார்.

இந்த நூல் கிட்டத்தட்ட ஒரு நாவல் மாதிரி இருக்கிறது. ஐயா அவர்கள் மிகச் சிறந்த நாவலை எழுத முடியும் என்ற நம்பிக்கையையும் இந்த நூல் எனக்கு அளிக்கிறது. துவக்கம் அது தான் தொடங்குகிற இடம் எது என்றால் நம்முடைய சென்னையில் உள்ள மத்திய சிறைச்சாலை. நூலின் துவக்கம் அங்கே தான் உள்ளது. நான்கு இளைஞர்களைப் பார்ப்பதற்காகச் செல்கிறார். அந்த நான்கு இளைஞர்கள் யார் என்று கேட்டீர்களேயானால் விடு தலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் கள். அந்த விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுள் இவருடைய கண் ஒருவரை நோக்கிக் குறிப்பாகப் பார்க்கிறது. அந்த நான்கு பேரில் ஒருத்தர் பிரபாகரன். அந்த பிரபாகரன் யார் என்று தேடுகிறார் இவர். ஒருவர் வந்து சொல்கிறார். நான்தான் பிரபாகரன். நான் உங்களை இளங்குமரன் என்னும் பேபிசுப்பிரமணித்துடன் வந்து நான் உங்களைச் சந்தித்து இருக்கிறேன். அப்போ எல்லாம் நான் யார் என்று உங்களிடம் சொல்லவில்லை. அதற்காக நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் அவர். இரண்டு மூன்று நாட்கள் பிரபாகரனைப் பற்றிய சிந்தனை இவருக்கு. இப்படி ஒரு இளைஞனா? நம் கூடவே இருந்திருக் கிறான். பிரபாகரன் யார் யார் என்று கேட்கும் போது தான் நான் தான் பிரபாகரன் என்று சொல்லக்கூடிய ஒருவன் இயக்கத்தை ஒரு இரகசியத்தை தன்னுள் வைத்திருக்கக் கூடிய தெளி வான ஒரு இளைஞனோடு நாம் பழகி யிருக்கிறோமே - என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அதுதான் தொடக்கம் இந்த நூலுக்கு.

அதைப் படித்த உடனேயே இரண்டு மூன்று பக்கங்களில் ஒரு பொய்யை உருவாக்கி விடுவார்கள். இதை பின்னணியாக வைத்தே பல ஆசிரியர்கள் கதையை பின்னிவிடு வார்கள். ஆனால் இவரோ அதைத் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அதிலிருந்து தொடங்கி கடைசியில் மரணத்தை வென்றவன் என்று முடிக்கிற வரையில் ஒருங்கிணைந்த மனத்தோடு சொல்கிறார். எந்தத் தடையும் இல்லாமல் கடினமான விஷயத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டால் முடிந்திருக் கிறது என்பது தெரிகிறது. ஒன்றுக்குள் ஒன்று மற்றொன்றுக்குள் ஒன்று எனத் தொடர்கிறது இவ்வளவு கடினமான விஷயத்தைச் சொல்ல முடியுமா என்று சொன்னால் அவருடைய உழைப்பு இதில் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அதில் இருக்கக் கூடிய மென்மையான பகுதி இது.

இந்த மதுரை மாநகரில்தான் சங்கரின் மரணம் நிகழ்கிறது. சங்கர் ஈழ மண்ணில் போரில் தாக்கப்பட்டு குற்று யிராக குலையுயிராக இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகிறார். சேர்ப்பதற்கு முன்பு ஐயா பழ.நெடுமாறன் அவர்க ளிடம் பிரபாகரன் நேரடியாக ஒரு வாகனம் வேண்டும் என்று கேட்கிறார் கள். வாகனத்தை எடுத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்று அவரைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் யார் என்று கேட்க, அவர் உறவு முறையைக் கேட்கிறார்கள். தம்பி தம்பி என்று சொல்கிறார். இந்த தகவல் பிரபாகரனுக்குத் தரப்படுகிறது. பிரபா கரன் ஓடோடி வருகிறார். சங்கரை அவர் மடியில் கிடத்துகிறார். மடியில் சங்கரின் உயிர் பிரிகிறது. ஒன்றை நாம் இதில் பார்க்க வேண்டும் ஆயிரம் போரை ஆயிரம் யுத்தத்தை நாம் பார்க்கலாம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு. எல்லையில்லா அந்த அன்பு.- இன்றும் நான் சொல்கிறேன். இந்த அன்பும் இந்த உணர்வும் இந்த தோரணையைத்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய யாராலும் அழிக்க முடியாத சக்திவாய்ந்த ஆயுதம்- பலம் என்று சொல்வேன். (கைதட்டல்)

அதே தோரணையைத் தான் சங்கரைத் தன் மடியில் கிடத்தி அந்த உயிர் பிரிகிற அந்தத் தருணம் அந்த சங்கமத்தைப் பார்த்தேன். அந்த உணர்வுகளின் சங்கமத்தைப் பார்த்தே அதை மிகச் சிறப்பாக ஐயா அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப அபூர்வமானது. அதேபோல நம் அருமைத்தங்கை உமா என்ற பூங்குழலியுடன் விளையாடி கொஞ்சி மாமா என்ற உரிமையுடன் நடந்து கொண்டது. இதெல்லாம் 82 83களில் நிகழ்ந்த அந்தப் பாசத்தை மறக்காமல் -எவ் வளவு போர்ச்சூழல் நடுவே தினம் தினம் செத்துப் பிழைக்கிற ஒரு காலகட்டத்தில் ஐயா நெடுமாறன் அவர்கள் இதை நினைவில் வைத் திருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருடைய குழந்தை விளையாடிய அந்த அன்பு பாசம் எதையும் மறக்கா மல் ஐயா. கொழும்பு சென்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பும் நேரத்தில் அரசியல் பிரிவின் தலைவர் நடேசன் வந்து ஒரு சின்ன அன்பளிப்பைக் கொடுக்கிறார். அதில் ஒரு ஆயத்த ஆடையும் நோட்டுப் புத்தகமும் இருக்கிறது. அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் குறிப்பை - குறிப்புகளை எழுதுமாறு கூறி உமாவுக்கு அன்பு மாமா பிரபாகரன் அனுப்பியது என பிரபாகரனின் கையெழுத்துடன் இருக்கிறது. அது தான் வாழ்க்கை. ஒரு புரட்சிக்காரனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். அவர் பெருமைக்காக உலகத்தை ஆளவேண்டும் என்று நினைக்க வில்லை. அன்பால் அனைவரையும் வென்றெடுக்க வேண்டும் என்பது தான் அவர் கொள்கை. மிகத் தலைசிறந்த கொள்கை. அதில் கடைசிவரை நின்றான். சிங்களன் தமிழன் என்ற வேறுபாடு கிடையாது. சிங்களப் பெண்ணை ஒரு வீரன் பாலியல் பலாத்காரம் செய்தான் என்றால் உடனே தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அவரிடம்.

நச்சுக்குப்பியும் - ஜே.வி.பி. இயக்கமும்

அங்கு அடக்குமுறை ஒடுக்கு முறை மோதல் எல்லாம் தடை செய்யப் பட்டிருந்தது. . சயனைட் குப்பி பற்றிச் சொல்லுகிற போது அதை அணிந்து கொண்டு மரணத்தை வெல்லுவேன் என்ற மாவீரத்தோடு அவர்கள் செல்லு கிறார்கள். - பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் கூறியதைப் போல தாங்கள் செல்லும் போது துப்பாக்கியுடன் மட்டும் செல்லவில்லை. சவப்பெட்டியுடன் செல்லுகிறோம் என்று கூறுவார்கள் அந்த வீரர்கள். சயனைட் குப்பியுடன் செல்கிறோம் என்ற உணர்வு அவர்களி டம் உள்ளது.. இந்த சயனைட் குப்பி இருக்கிறதே விடுதலை தான் எங்கள் இலட்சியம். அந்த இலட்சியத்திற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதற் காகத் தான் நாங்கள் போராடுகிறோம் என பிரபாகரன் கூறியதைக் கேலிசெய்த ஜே.வி.பி. இயக்கத் தலைவர் ரோகண விஜயவீராவின் செயலாளராக இருந்த மெண்டிஸ் என்பவர் பின்வருமாறு கூறினார்.

நான் ஆரம்பத்தில் இந்த சயனைட் குப்பிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவர் ரோகண விஜய வீராவிடம் சயனைட் குப்பி இருந்திருக்குமானால் அவர் இராணுவத்திடம் உயிரோடு சிக்கி யிருக்க நேர்ந்திருக்காது. சித்ரவதை களைத் தாங்கமுடியாமல் இயக்க முன்னணி யினரைக் காட்டிக்கொடுக்க நேர்ந்திராது. எமது இயக்கமும் அழிந் திராது' என்று மனந்திறந்து கூறினார்.

விடுதலைப் புலிகளின் போராட் டம் ஒரு தனித்துவம் வாய்ந்த போராட் டம். முதலில் 50000 பேரும் பின்னர் இலட்சக்கணக்கான பேரும் முள்ளி வாய்க்காலில் இறந்து போனார்கள். ஆனாலும் அந்த போராட்டத்தின் வலிமை என்ன ஆச்சு? கொல்லப்பட்டாலும் இன்று உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரபஞ்சம் முழுவதும் இருக்கக் கூடிய மக்கள் ஈழமக்களுக்கான அரசி யல் தீர்வை பெற்றுத்தான் கொடுத்துத் தான் தீர வேண்டும் என்னும் புதிய அர சியல் சூழ்நிலை உண்டாகி இருக்கிறது.

2008ம் ஆண்டு உலகம் ஈழ மக்களைப் பற்றி எவ்வாறெல்லாம் விமர்சித்து இருப்பார்கள்? இப்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மனித உரிமைக்காக மக்கள் உரிமைக்காக ஈழ விடுதலைக்காக ஒன்றுகூடியிருக்கிற ஒரு புதிய சகாப்தம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தப் போராட்டத்தின் வலிமையைப் பற்றிய ஒவ்வொரு கண்ணோட்டத்தையும் நாம் பார்க்க வேண்டும். அதைப்பற்றிய விளக்கங்கள் ஆயிரம் ஆயிரம் இந்த நூலிலே இருக்கிறது. நேரமாகி விட்டது. நான் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இரத்தினச் சுருக்கமாக நான் உங்களிடம் சொல்லிக் கொள்வது இது ஒரு வரலாற்று நூல் என்பது மட்டும் அல்ல - ஒரு வரலாற்றுப் பெட்டகமா என்றால் இல்லை - தமிழ்நாட்டுக்கான அடுத்த தலைமுறை விடுதலை பெறுவதற்கான தலைசிறந்த ஆயுதம் இது. (பலத்த கைதட்டல்)

இந்திய அரசியலில் தமிழர்கள் நிலை என்ன? இதற்கு முன்பு நாம் பேசிய தேசியத்தை வைத்திருக்கப் போகிறோமா? அல்லது 25 சதவீதம் இராணுவத்திற்குச் செலவு செய்து இந்திய தேசியம் வளரப் போகிறதா? ஒட்டு மொத்த இந்தியாவுக்கான ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டுமா? இந்தியாவை உடைக்கிறது பிரிக்கிறது என்ற கேள்வியே இல்லை.

இன்றைக்கும் பார்த்தால் வட இந்தியாவில் இந்தி மொழி பேசப் படுகிறது. 200-300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தி மொழி வளர்ச்சி இல்லை. இப்பொழுது வளர்ந்துள்ளது. இதனால் என்ன ஆச்சு? பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்பட்ட புகழ்பெற்ற பாலி மொழி. போசுபூரி, மைதிலி மொழி கள் அழிக்கப்பட்டன. அந்த இளைஞர் கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். என் மொழி எங்கே என்று இப்போது கேட்கிறார்கள்.

ஏன் தமிழ் மொழி மீது அவர் களுக்குக் கோபம் வருகிறது என்றால் 2000 ஆண்டுகளாக தேவநாகரி என்றும் தற்போது சமசுகிருதம் என்று சொல் கிறார்களே அந்த மொழியை தைரிய மாக எதிர்த்து இன்று வரை உயிரோடு இருக்கும் ஒரே மொழி நம் மொழி தான்.(பலத்த கைதட்டல்( தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன இலங்கையில். யாரும் கவனிக்கவில்லை. ஆனால் 2000 ஆண்டு காலமாக சமசு கிருதத்தை எதிர்த்து நிற்கிற அல்லது இன்று ஆட்சிமொழியாகத் துடிக்கும் இந்தியை எதிர்த்து நிற்கிற ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கிற ஒரே மக்கள் தமிழ் மக்கள் தான். அதனால் தான் சுதந்திரத் தைப் பற்றிப் பேசுகிற போது தமிழர் களைப் பற்றி பேசவேண்டி இருக்கிறது. அதனால் தான் ஈழ விடுதலை என்பது அல்லது ஈழமக்களின் விடுதலைப் போராட்டம் என்பது தமிழகத்தில் ஒரு சரியான இடத்தைப் பெற்று இருக்கிறது. போராட்டத்தோடு இணைந்து நிற்பவர் கள் தமிழர்கள் என்பதை நான் பார்க்கிறேன்.

மாற்றத்திற்கு வித்திடும் நூல்

இரத்தமும் சதையுமாக தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்கள் சாத்தியப் படுத்த முடியும். அந்த மாற்றத்திற்கான அடிப்படை இந்த நூலில் இருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு உணர்வு ஊட் டக்கூடிய வகையில் தமிழகத்தில் இருக் கக்கூடியவர்களை உணர்வு உள்ளவர் களாக உருவாக்க வேண்டும் என்றால் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த நூலால் முடியும். இப்படிப்பட்ட நூல்களைக் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு தொடர்ந்து எழுதவேண்டும். வெறும் வாழ்க ஒழிக என்ற கோசம் மட்டும் அரசியலாகிவிடாது. (கைதட்டல்).

விடுதலைக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. சமத்துவம் அதற்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. அதைத்தான் அந்த போராட்டங்கள் அனைத்தும் நமக்கு வலியுறுத்துகிறது. இந்த நூலைத் திருப்பித் திருப்பிப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஒரு தடவை தான் படிக்க முடிந்தது. குறிப்பு கள் எடுத்தேன். அந்த குறிப்புகளிலிருந்து புதிய சிந்தனைகளை எனக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. ஐரோப் பிய நாடுகளிலே ஒன்றான ஸ்பெயின் நாட்டு மக்கள் நானூறு வருடம் போராடினார்கள். விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்கள். மொழியை இழந்து பண்பாட்டை இழந்து நாம் வாழ முடியாது செத்துப் போய்விடுவோம் என்கிறார்கள். மொழி இருந்தால்தான் நாம் உயிர்வாழ முடியும் என்பதை வலியுறுத்துகிறார்கள். எத்தனை தேசிய இனங்கள் இப்படிப் போராடு கிறார்கள். அப்படிப் போராடிய தேசிய இனங்கள் அனைத்திற்கும் வலிமையைக் கொடுத்தது மொழியும் பண்பாடும் கலாசாரமுமே. அதுதான் திருப்பித் திருப்பி வருகிறது.

விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் விடுதலைப் புலிகள். கலைஞர் அவர்கள் அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் பேசும்போது நாங்க ளெல்லாம் தனித் தமிழ்நாடு என்ற இலட்சியத்தை விட்டுக் கொடுத்தோம். நீங்கள் கூட விட்டுக் கொடுத்தால் என்ன என்று கேட்டார்கள். அவர் கேட்கிறார் இலட்சியத்தை விட்டுவிட்டு ஏன் உயிர்வாழ வேண்டும்? கலைஞர் தன் தந்திரத்தை உபயோகிக்கிறார். இந்த இலட்சியம் தான் உயிர். இலட்சிய வாதிக்கு இலட்சியம் தான் உயிர். குறுகிய எண்ணம் கொண்ட நாற்ற மெடுக்கும் இந்த பதவி நாற்காலியில் உட்கார வேண்டும் என்கிற ஆசை கொண்டவர்களுக்கும் எல்லா மோதல் களும் இப்படித்தான்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு மனித நேயப் போராட்டம் இது. இது ஐயாவின் நூலில் நிறைந்து பல இடங்களில் நிறைந்து காணப்படுகிறது. இது புகழாரம் சூட்டக்கூடிய நூல் அல்ல. ஒரு சமூக விஞ்ஞானத்தை தமிழர்கள் வாழ்க்கையை, தமிழர்களின் போராட்டக் கலையை பல கோணங் களில் அறிந்து கொள்வதற்கான ஒரு சயின்டிபிக் வால்யூ. இன்றைய காலத்தை உணர்ந்து கொள்ளக் கூடிய - இன்றைய காலத்தை உணரப் பயன்படும் ஒரு நூல் இது.

இந்த நூலின் பின்னணியில் நான் இன்னும் பார்க்கிறேன். உலகமயப் பின்னணியை இது காட்டுகிறது. முத

லில் கலாசாரத்தை அழிப்பது. மொழி களை அழிப்பது. பண்பாட்டை அழிப் பது. பண்பாட்டை அழித்தால் தான் தனக்கு வெற்றி என்று நினைக்கிறார்கள். ஆகவே எந்த மொழி பலமாக உள்ளதோ அதை அழிப்பது. இன்னொரு கோணத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது கூட இந்த உலகமய அரசியலின் ஒரு பகுதி தான். இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். உலக மக்களின் பல கூறுகளில் இது சிந்திக்க வைக்கிறது. அந்த வகையில் மிகச் சிறந்த நூலை - தமிழகத்திற்கு சிறந்த ஆயுதமாகப் பயன்படப் போகிற நூலை உருவாக்கிக் தந்த ஐயா பழ.நெடுமாறனுக்கு தனிப்பட்ட முறை யில் நான் அவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு அவருடைய ஆளுமை அவரு டைய நேர்மை ஆகியவை. தமிழ் நாட்டில் இரண்டு பெரிய தலைவர்களை நான் பார்க்க முடிகிறது. ஒருவர் தலைவர் நல்லகண்ணு மற்றொருவர் ஐயா பழ.நெடுமாறன். அவர் வேகமாகப் பேச மாட்டார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கக் கூடிய இந்த நூலை படைத்தளித்த ஐயா பழ நெடுமாறன் அவர்களுக்கு என் சார்பிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலும் மனமார்ந்த என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு இந்த நூலை தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செலலுகின்றபோது தான் வெற்றியடை யும். அதற்குரிய முயற்சியை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டும் என்று இந்தநேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக