"விடுதலைப் புலிகள்'' இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. எனினும் பழ. நெடுமாறன், "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற தலைப்பில் எழுதியுள்ள பெரிய புத்தகம் (1208 பக்கங்கள்) தனிச்சிறப்பு வாய்ந்தது.
இலங்கையில் போர் நடந்த காலத்திலேயே, அங்கு பலமுறை சென்று வந்தவர் பழ. நெடுமாறன், போர்க்களத்தை நேரில் கண்டவர். பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய வர். எனவே இலங்கைத் தமிழர் போராட்டம் தொடங்கியது முதல் அண்மைக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை வரலாறும், இதுவரை வெளிவராத பல தகவல் களும் இதில் இடம் பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத் தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் களின் படங்களும் இடம் பெற் றுள்ளன. பிரபாகரன் கைப்பட எழுதிய பல முக்கிய கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் போர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள, சர்வதேசத் தரத்துடன் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.
நன்றி : "தினத்தந்தி' 23-5-12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக