மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 27 மே, 2012

நூல் வெளியீட்டு விழா

பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு விழா 13-4-12 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை, பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் செ.ப. முத்தமிழ் மணி வரவேற்றார். கவிஞர் காசி. ஆனந்தன் விழாவிற்குத் தலைமை வகித்து சிறப்பானதொரு உரையாற்றினார். தொகுப்புரையை முனைவர் த. செயராமன் வழங்கினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் கணக்காயர் மு. பாலசுப்பிரமணியம், மதுரா டிராவல்ஸ் அதிபர் வி.கே.டி. பாலன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் சா. சந்திரேசன், திருச்சி கே. செளந்தராசன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.

கா. பரந்தாமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. நல்லக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். பூங்குழலி நன்றியுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக