ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத்
தூதரகத்தை நாளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள்
நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ,
பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள்
கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்
தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர்
இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச்
சந்தித்தனர்.அவர்கள் கூறியது:
ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி ஜெனீவாவில்
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத்
தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத்
தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில்
லயோலா கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திரண்டு கருப்புக் கொடியுடன்
ஊர்வலமாகச் சென்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.
ஐ.நா.
மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான்
நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள
வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது
சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள்
எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம்
பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 விஷயங்களை ஆர்ப்பாட்டத்தின்போது
வலியுறுத்த உள்ளதாகக் கூறினர்.
ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத்
தூதரகத்தை நாளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள்
நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ,
பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள்
கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்
தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர்
இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச்
சந்தித்தனர்.அவர்கள் கூறியது:
ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி மார்ச் 4-ம் தேதி ஜெனீவாவில்
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத்
தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத்
தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில்
லயோலா கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திரண்டு கருப்புக் கொடியுடன்
ஊர்வலமாகச் சென்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான் நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 விஷயங்களை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த உள்ளதாகக் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக