மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முளுமையான படத்தொகுப்பு
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சான்றாக விளங்கவுள்ள “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்”
வரும் அக்டோபர் பதினொன்று ,பனிரெண்டாம் தேதிகளில் திறப்புவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டில் பல
நாடுகளின் அரசியல் கூட்டுச்சதியால், சிங்களவர் கொத்தணிக்குண்டுகள் கொண்டு,
தமிழரின் வீரம் செறிந்த உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அடக்கி ஒடுக்ககிய
நிலையில். தமிழரின் வீரம், தியாகம், பண்பாடு காத்த, காப்பதற்கென்று தம்
உயிரையும் கொடுத்து, தம் உதிரத்தை நீராக்கி விதையுண்ட மாவீரர்களின்
நினைவகம் புலிக்கொடி தாங்கிய சோழநாடான தஞ்சாவூரில் தமிழ் உணர்வாளர்களால்
நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்ர்களின் பாரம்பரிய,
புகழ்பெற்ற சைவத் திரு ஆலயங்கள் ஆகியன அமையப்பெற்ற அழகிய இடத்திலேயே
இம்மாவீரர் நினைவகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனத்தின் தலைவரும் தமிழ் நாட்டின் உணர்வுள்ள
தலைவர்களில் ஒருவருமான திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில்
அமைக்கப்பட்டுள்ள குழுவொன்று அங்கு முழுநேரமாக பணியாற்றிய வண்ணம் அங்கு
மேற்படி நினைவு வளாகத்தை அமைத்து வருகின்றது.
தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் உருவாக்கம் தொடர்பான முழுமையான படத்தொகுப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக