மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 23 மே, 2013

நந்திக்கடல் சுடர்ந்த இரத்தம் குமரியில் குமுறி - உலக நதிகளை உடைத்தது


சீதையின் தீக்குளிப்பில்
சந்தேகம் எரிந்தது
முள்ளிவாய்கால் இனக்கொலையில்
சந்ததியே எரிந்தது

யார் யாரென்று பெயரிடுவது?
சேணை தளபதிகளோடுதான்
யூதாசுகள் அசிங்கம்

புலிகள் தூங்காத
கானகப் பாசறையில்
உடனிருந்த குள்ளநரிகள்
ஊளையிட்டு உயிரழிப்பு!

நரிகளின் சாயம் வெளுத்துப்போக
சிங்களவன் பியங்கள் மீதேறி
ஈனம் காட்டியது-அந்த
கோத்தபாய உன்மத்தனம்!

ஏவிய கொத்துக்குண்டில்
முலைகவிவிய சிசு
இறந்தது தெரியாத தாய்
நெருப்புவிழி; அரும்பு
பிரபாகரன் கரும்பு - வர
இருப்பறிந்து அஞ்சாள்
இருப்பில் தமிழிச்சி!!

20ஆயிரம் பச்சிளம்
பாலச்சந்திரர்கள்
குருத்து மார்பில்
தவழ்ந்தது ஜந்துநிலா

தொட்டிலாடிய நட்சத்திரச்
சிரிப்பில் மின்னியது
கரிகாலன் ரூபம் !
புறம் நிமிர்த்திய தமிழினி!!
சன்னங்கள் பேசும் என்பதறிந்து
குமுதமலர் சிரிப்பில் மதிவதனி!

நந்திக்டல் ஓடி கோடிகைக்கரை
மிதந்தது தமிழர்பிணம்!
கவிபடைத்த செம்மெழி
சோழன் கல்லணையின்
வீரகாவிய நடுக்கல் ஆனவர்!

நாற்பதாயிரம் விழுப்புண்
விதவைகள் விழிகளில்
புலியின்கண் நெருப்பு

சூரியன் பந்தியமர்ந்தவன்
முந்தியோடி முத்தமிட்டான்!
சிங்களத்தி முலைசுரந்தபால்
பளிச்சென்றது நாய்மேனி!
அன்றே!அலகை சிரித்தது!!

இலட்சம் பிணமிதப்பு
முள்ளிவாய்கால் நாலாண்டு
அணையாது பிரபாகரன்
பெயர்- நெருப்பு
வரும்-காலம் மோசமாய்
சிங்களர் ஈரக்குலை
எரிக்கும் பொறி!

பல்லாயிரம் இசைப்பிரியா
நிர்வாணம்..உரித்தவன் விலங்கு
வல்லூறின் நெடுந்தண்டு
அறுத்தெறியும் ஆற்றல்.'...'
ஏலாதவன்? கோழை.!

பிரபாகரன் ஆணையில்
நில்லாதோடிய சேனை
குணம் எரிமலை
சொல்லாது எழும்!!

நிஜவுலகில் தலைமுறைதேற
அழுதவர் சிரித்தவர்-முன்
சூரியன் பயன்-தளராதென
துரிரகை வரைவு அறம்கூறும்!

நாலாண்டு ராஜபக்சாக்கள்
தலைதெறித்தாடித் தூங்குவது
மாலதி அங்கையற்கன்னி
சுடுபொறி மௌனத்தினால்!

நாலாண்டு
நெஞ்சில் கனத்தது
கரிகாலன் பூமியெங்கும்
சிங்களத்தி-சீனத்திகள்
விபச்சார விடுதிகள்-தமிழ்
திண்ணை கனத்துவிட்டதால்!

நிலம்
சங்கிலிமன்னன் தீலிபன் கிட்டு
கலைகள் சூறையாடும்-கீழ்த்தனம்
மகத்துவம் அறியாத்தனம்;-மாவீரர்
கல்லறைக் களவானிகள்-அநீதி
எல்லாம் பதிவு ஆறெழுத்தில்!!!

தலை- தமிழ்
சிந்திக்கிறது
சிங்கள கெடுதலை
எடுக்கும் நாளை!

கைமுனுவின் மண்ணில்
எரிமலை எழும்-எப்போது
என்று சொல்வதில்லை
நாலு நாற்பதானபோதும்
விடிவு விரைண்து வரவே

பதுங்கும் புலி பதுங்கிப் பாய்ந்து
வெடித்தால்தான் விடிவு பிறக்கும்?


கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக