ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாக ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகூட்டதொடரில் சிறீலங்கா மீதான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வெற்றி அமைகின்றது என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நொடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார். |
ஜ.நா மனிதஉரிமைகள் அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் தமிழ்மக்களுக்கு முழுமனநிறைவு அளிக்காத தீர்மானமாக இருந்தாலும் அந்த தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து வெற்றிபெற செய்தது என்பது தமிழ்மக்களுக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. ஜ.நாடுகள் சபையிலோ அல்லது அது சார்ந்த துணைஅமைப்புக்களிலேயோ உள்நுளைந்து ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாகும் தொடர்ந்து நாங்கள் எடுத்துக்கொள்கின்ற முயற்சிகள் இறுதி வெற்றி கிடைப்பதற்கு வளிவகுக்கும் அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நின்று நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்தியாஅரசு தன்னுடைய நிலையினை மாற்றிக்கொண்டு தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது இன்னெரு பாரிய வெற்றியாகும். இந்தியாவின் போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் தொடர்ந்து நீடிக்கவேண்டும் அதற்கு 7கோடி தமிழ்மக்களின் ஒன்று பட்டபோரட்டமூலமே சதிக்கமுடியும் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் வெற்றிபெறுவோம். என்று தமிழக தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தில் இந்த செய்தியினை தெரிவித்துள்ளார். |
பக்கங்கள்
|
வெள்ளி, 30 மார்ச், 2012
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் - ஈழத்தமிழர் பிரச்சனைக்கான வாசல் கதவு திறந்துவிட்டது:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக