மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 22 நவம்பர், 2013

பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர். பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற ம்துரை கிளை அவர்களுக்கு பிணை வழங்கியதை அடுத்து, இன்று  திருச்சி சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர்.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்" என  உலகத் தமிழர் பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பக்கம் இருந்த சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா, நீரூற்று, மரங்களை தஞ்சை மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேரோடு, விருதுநகர் மாவட்டத்தை அண்ணாமலை என்ற 20 வயதுடைய சிறுவனையும் கைது செய்த போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.  இவர்களுக்கு கடந்த 20ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை 9.05 மணியளவில் சிறையில் இருந்து  பழ.நெடுமாறன் உள்பட 83 பேரும் விடுவிக்கப்பட்டார். அவரை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் வரவேற்றார். மேலும், ம.தி.மு.க, நாம் தமிழர், மள்ளர் மீட்பு களம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் சிறைக்கு முன்பு கூடி நெடுமாறன் வருகைக்காக காத்திருந்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த நெடுமாறனை பார்த்த தொண்டர்கள், மாவீரன் பிரபாகரன் வாழ்க, அய்யா நெடுமாறன் வாழ்க முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசு ஒழிக என கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், நாங்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் பூங்கா கட்டியிருக்கிறோம். அதிகாரிகள் சொல்வதுபோல் நாங்கள் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து எங்களிடம் முறைப்படி பதில் கேட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு நாங்கள் அதிக பொருட் செலவில் கட்டிய முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.
 
 
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இந்த இடிப்புக்கு பின்னணியில் தமிழக அரசு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் தமிழ் மக்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

எங்களை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நாங்கள் நீதிமன்றம் மூலம் வெளியே வந்துள்ளோம். அதேபோல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோதமானது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் கட்டியே தீருவோம்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதோடு, தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.  
 


வெள்ளி, 15 நவம்பர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர், பூங்கா இடிப்பு காட்சிகள்.



ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அத ிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
- வைகோ
 


யார் இந்த கிழவன்...?
தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்?
தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ...
ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ...
இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?...

என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ....

மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?..

"இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்......
இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று .....
யாருக்கு தெரியும்?.............................
Photo: யார் இந்த கிழவன்...?
+++++++++++++++++++++++
தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்?
தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ...
ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ...
இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?...

என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ....

மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?..

"இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்......
இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று .....
யாருக்கு தெரியும்?..................................
ஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சுற்றி காவல்துறை வைத்த முள்வேலியை அகற்றும் பொதுமக்கள்.
வேலி போட்டு இன உணர்வை அடக்க முடியாது மாண்புமிகு முதல்வர் அவர்களே!!
நீங்கள் இருக்கும் முதல்வர் நாற்காலி என்பது நாங்கள் உங்களுக்கு தந்தது! அதை தமிழர் நலனுக்காக பயன்படுத்துங்கள்!
நியாயமாக பார்த்தால் இப்படி ஒரு முற்றத்தை தமிழக அரசே கட்டியிருக்க வேண்டும்!
## நீங்கள் இருக்கும் முதல்வர் நாற்காலி என்பது நாங்கள் உங்களுக்கு தந்
த வாக்கு (பிச்சை)
 

ராஜபக்சே அரசிற்கும் ஜெயலலிதா அரசிற்கும் எந்த வேறுபாடும் இல்லை - வைகோ

News Service
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்ததன் மூலம் ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
   தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது.
இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, ராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான்.
விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் ராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைவூட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அ.தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகஸ்ட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.
ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.
அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், 'எதற்காக இடிக்கின்றீர்கள்?' என்று காவல்துறையைக் கேட்டபோது, 'வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்' என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர். தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
2011 ஆகஸ்ட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது. இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீஸ் தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, 'இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ.நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன்.
ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன். ம.தி.மு.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சோறுபோட்டு செருப்பாலடி - இதுதாண்டா ஜெயாவின் ஈழ அரசியல்!


"காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், கலந்துகொள்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்" என்றெல்லாம் வீராவேசம் காட்டிய ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் அச்சாகும் வேளையில்� ஜெயா தமது இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தார். ஜெயலலிதாநேற்று இரவு ஒரு மணியளவிலேயே தஞ்சை சுற்றுவட்டார போலீசாருக்கு முற்றத்துக்கு வரும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. காலை ஐந்து மணியளவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே விளார் சாலையை நோக்கி செல்லும் சாதாரண ஆட்கள்கூட விசாரித்து அனுப்பப்பட்டனர்.
   கதவு உட்பட வேலியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்பே அரசு செய்திருக்கிறது.
ஆக நேற்றைய காமன்வெல்த் நாடகம் சட்டமன்றத்தில் நடந்த வேளையிலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தை சிதைப்பதற்கான முன்னேற்பாடுகளும் ஒத்திகையும் நடந்திருக்கின்றன என்பதை சுலபமாக அவதானிக்க முடியும். ஜெயாவுக்கு அணிவிக்கப்பட்ட ஈழத்தாய் முகமூடியை அவரால் சில மணி நேரம் கூட அணிந்திருக்க இயலவில்லை.
காலை ஏழு மணியளவில் முற்றம் இடிக்கப்படுவதாக தகவல் வந்தது. விளார் சாலை சென்றபோது மணி ஏழரை. முற்றத்துக்கான எல்லா பாதைகளும் போலீசாரால் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸ் காவலைத்தாண்டி நிகழ்விடத்தை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது. சற்றேறக்குறைய ஐந்நூறு போலீசார் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இடிக்க எதிர்ப்பு தெரிவித்த சிலர் போலீசரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த சில தலைவர்கள் டி.எஸ்.பி இளம்பரிதியிடம் கண்டனம் தெரிவித்த பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு போலீஸாரை அங்கே தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மக்கள் மோசமாக திட்டியும் அவர்கள் சும்மாயிருந்தார்கள். காரணம் வரவிருக்கும் தேர்தலாக இருக்கலாம் அல்லது இடிப்பு வேலைக்கு இடையூறு நேர்ந்து விடாதிருப்பதற்காக இருக்கலாம்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பழ.நெடுமாறன் நினைவிட வளாகத்தில்தான் தங்கியிருக்கிறார். கடந்த எட்டாம்தேதி கூட்டத்தில் அவர், �உங்களால் இடிக்க முடியுமா� என பெயர் குறிப்பிடாமல் சவால் விட்டார். அதற்கான பதிலை இரண்டே நாட்களில் சொல்லிவிட்டார் ஜெயா. ஏறத்தாழ 25,000 சதுர அடி நிலத்தை அரசு வேலியிட்டு மூடியிருக்கிறது. அரசின் திட்டம் முற்றத்துக்கான நுழைவுப் பாதையையும் மூடுவதுதான். நெடுமாறன் அங்கேயே இருப்பதாலும் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்களின் எதிர்ப்பாலும் பாதைக்கான இடம் மட்டும் விட்டு வைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தனது வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்கு போதுமான சிதைவுகள் அங்கே முழுமையாக செய்யப்பட்டு இருக்கின்றன.
நெடுஞ்சாலைத் துறையின் வேலி சிற்ப வேலைப்பாடுகளுக்கு மிக அண்மையில் நடப்பட்டிருக்கிறது. அங்கே அமைக்கப்பட்டிருக்கும் கல் நீரூற்று இடித்து நிரவப்பட்டிருக்கிறது. யாதும் ஊரே எனும் வார்த்தைகளோடு உள்ள இலச்சினையும் சுவரும் இடிக்கப்பட்டிருக்கின்றன. விளக்குத் தூண் சாய்க்கப்பட்டிருக்கிறது.
அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் இடிக்கப்பட்டதாக அரசும் ஊடகங்களும் சொல்கின்றன. அதிமுகவின் ஆவடி குமார், �ரத்த தானம் செய்வது மேன்மையான நடவடிக்கையாக இருந்தாலும், திருட்டு ரயிலில் போவது சட்டப்படி குற்றம்தானே� என்று தந்தி டிவியில் விளக்கம் சொல்கிறார். ஆனால் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டிருக்கிறது. குத்தகையை புதுப்பிக்கவில்லை என்பது அரசின் குற்றச்சாட்டு, திடீரென குத்தகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார் நினைவிடத்துப் பொறியாளர்.
75% சதவிகிதம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகத்தில், நிலஅபகரிப்பு ஒரு தனித் தொழிலாகவே நிலைபெற்றுவிட்ட தமிழகத்தில், மணற்கொள்ளையும் தாதுமணல் அபகரிப்பும் 24 மணி நேர பணியாகிவிட்ட தமிழகத்தில் குத்தகையை புதுப்பிக்காதது ஒரு கிரிமினல் குற்றமில்லையா? சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் இழுக்க, இதென்ன காவிரிப் பிரச்சனையா?
இது ஜெயாவிடம் திடீரென்று ஏற்பட்ட மாற்றமல்ல. ஈழ ஆதரவாளர்கள் மீதான மிக மோசமான ஒடுக்கு முறையை கையாண்டது ஜெயலலிதாதான். இதற்கு முன்னால் ஒரு சட்டமன்ற தீர்மானம் இயற்றப்பட்ட வேளையில்தான் செந்தூரன் உள்ளிட்ட அகதிகளை நாடுகடத்தும் வேலையை ஆரம்பித்தது ஜெயா அரசு. மூன்று பேருக்கான தூக்கை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில்தான் அவர்கள் மூவரது தூக்கை ரத்து செய்ய தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை எதிர்த்தது தமிழக அரசு.
ஈழ எதிர்ப்பு என்பது அரசின் கொள்கை என்பதைத் தாண்டி அதுதான் ஜெயலலிதாவின் இயல்பு. ஒருவேளை தன்மீது சுமத்தப்படும் ஈழ ஆதரவாளர் எனும் அடையாளத்தை வெறுத்து அதனைத் துறப்பதற்கு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம். �நீங்கள் என் வேலைக்கார ர்கள்தான், உறவுக்காரர்கள் அல்ல� என்று தமிழ்த் தேசிய இயக்கங்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம். அல்லது இது இந்தியாவின் வருங்கால பிரதமர் வேட்பாளர், வருங்கால காமன்வெல்த் தலைவர் ராஜபக்சேவுக்கு கொடுக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கலாம்.
கருணாநிதியும், ஜெயாவும், காங்கிரசும் , பாஜகவும் , இடது வலது கம்யூனிஸ்டுகளும் ஈழத்துக்கு எதிரிதான் என்பது தொடர்ந்து அம்பலப்பட்டாலும் இவர்களில் யாரையேனும் நம்பிச் செய்யப்படுவதாகவே தமிழ்தேசிய அரசியல் இருந்து வருகிறது. புதிய துரோகியை எதிர்கொள்ளும் பொருட்டு பழைய துரோகிக்கு பாவமன்னிப்பு தரும் தமிழ்தேசிய போர்தந்திரத்தையும் தந்திரோபாயப் பின்நகர்வுகளையும் செருப்பாலடித்து தோற்கடித்திருக்கிறார் ஜெயலலிதா.
முற்றத்துக்கு அருகாமையில் இருந்த மக்களில் பலர் ஜெயலலிதாவை கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்க, அங்கே என்னுடன் உரையாடிய ஒரு மூத்த தமிழறிஞர் �இது ஜெயாவின் அகில இந்திய அரசியலுக்கான நகர்வு� என குறிப்பிட்டார். அதாவது ஒரு முகாமின் அழுத்தத்துக்கு கட்டுப்படுவது அனைத்திந்திய அரசியலுக்குச் செல்லும் பிரதமர் வேட்பாளருக்கு நல்லதல்ல என அவரது ஆலோசகர்கள் சொன்னதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது அவரது கருத்து. இந்த நிலையிலும் ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! "லாயல் தேன் த கிங்" என்பது இதுதான்.
சோறுபோட்டு செருப்பாலடிப்பதை ஒரு பிச்சைக்காரன்கூட ஏற்கமாட்டான். ஆனால் தமிழ்தேசிய அரசியலின் அனேக நடவடிக்கைகள் ஒரு பிச்சைக்காரனுக்கு உரிய சுயமரியாதைகூட இல்லாதவையாக இருக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை வேலியை நிறுவிவிட்டு சென்றபின்னர், காலை பத்து மணி அளவில் அந்த வேலிகளை உடைத்து வீசினார்கள் மக்கள். மீண்டும் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருக்கிறது. சாமானிய மக்களின் ஆவேசத்தில் இருந்தாவது இவர்கள் சுயமரியாதையைக் கற்றுக் கொள்வார்களா பார்ப்போம்.
-வினவு-

வெள்ளி, 1 நவம்பர், 2013

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு விடுத்திருக்கும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா... தமிழர்கள் அனைவரும் அணி திரள வேண்டும் - சீமான் அழைப்பு


மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் வருகிற 8,9,10 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாகவும், குருதி தோய்ந்த ஈழத்தின் விடுதலைப் போரை ரத்தமும், சதையுமாக நினைவு கூர்கிற வகையிலும் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருந்தமிழர்.அய்யா.பழ.நெடுமாறன் தலைமையில் திறக்கப்பட இருக்கிறது. முதுபெரும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், பலதுறை அறிஞர்கள் என அனைவரும் ஒன்று சேர கூட இருக்கிற இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் அணி திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஈழ விடுதலைக்காக களமாடி விதையாய் புதைந்திருக்கிற மாவீரர்களின் ஓவியங்கள், தமிழ் காக்க உயிரை துச்சமென மதித்து களமாடிய மொழிப்போர் ஈகிகளின் உருவங்கள், தமிழ்மொழி வாழ.. உயிர் உருக்கி உழைத்த தமிழறிஞர்களின் புகைப்படங்கள், 2009 ல் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் துயரமும், குருதியும் படிந்த சிற்பங்கள் என தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாக விளங்க இருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருமதிப்பிற்குரிய தமிழர்கள் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா.பழ.நெடுமாறன், புதியபார்வை இதழின் ஆசிரியர்.முனைவர்.ம.நடராசன் ஆகியோரின் கடும் முயற்சியினால்..அளவற்ற உழைப்பினால் உருவாகி இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது. தமிழர்கள் அனைவரும் கூடுவோம் தஞ்சையில்..

என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இதையே என் அழைப்பாகவும், வேண்டுகோளாகவும் கருதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விற்கு வருகைதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! - வைகோ அறிக்கை


VaikoSpeaking Smallerமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரண்டு வரும்படி ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங்களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக 
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் விழுமிய ஏற்பாட்டால், நம் இருதயங்களின் அழியாத காட்சிகளாகச் சித்தரிக்கும் முள்ளிவாய்க்கால் நினை வு முற்றம், நவம்பர் 8 ஆம் தேதி, தஞ்சை திருநகர்-விளார் புறவழிச் சாலையில் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் திறப்பு நிகழ்ச்சி அரங்கேறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெருவுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டியபோது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற்றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒலித்தன.
தமிழ்த்தாயின் பேருரு, சிலை வடிவில்!
ஈழத்தில் சிங்களப் பேரினவாதக் கொடியோர் தமிழர்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைக் காட்சிகள் சிலை வடிவில்!
வானில் இருந்து கொத்துக்கொத்தாகத் தமிழர் மீது பாயும் குண்டுகள்; உடல்கள் சிதைந்து துடித்து மடியும் தமிழர்கள்; தமிழ்ப் பெண்களின் வயிறை பயனைட் கத்திகள் கிழித்துக் கருவில் உருவாகிய பிஞ்சுகள் அழிக்கப்பட்ட கொடூரம் சிலைவடிவில்!பிறந்த மண்ணை விட்டு கூட்டம், கூட்டமாக முதிர்வயதினரும், பாலகர்களும் உடன்வர, தமிழர்கள் அடைக்கல நிழல் தேடிச் செல்லும் பேரவலம் சிலை வடிவில்!குண்டுமழை நெருப்பில் துடிதுடித்துத் தமிழர்கள் செத்திடும் துன்பம் சிலைவடிவில்!தொப்புள்கொடி உறவுகள் இப்படி நாதியற்றுச் சாவதோ? இந்த அக்கிரமக் கொடுமைக்கு இந்திய அரசே துணை போவதோ? தாக்குதல் நிற்காதா? தமிழர்கள் சாகும் அவலம் தணியாதா? இன்னுமா உறக்கம் தாய்த்தமிழகத்தில்? மான உணர்ச்சியற்ற சதைப்பிண்டங்களா தமிழர்கள்? என்ற சவுக்கடி, தமிழர்கள் நெஞ்சில் விழட்டும்.நெருப்பில் கருகும் என் உடலும், விடியலுக்கு ஏங்கும் என் உயிரும் அந்தச் சவுக்காக மாறட்டும் என்று, மரண நெருப்புக்குத் தங்கள் ஆவியைத் தந்த முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உருவங்கள் சிலை வடிவில்!ஆம்; இந்தச் சிலைகள் பேசுகின்றன. உயிர்த்துடிப்புடன் நம்மீது கேள்விகளை வீசுகின்றன. காரணம், இந்தச் சிலைகளை வடித்த சிற்பிகளின் மனதில் மூண்ட ஆவேசத்தீ, அவர்களின் கரங்களை இயக்கி உள்ளது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது, இப்புவி எங்கும் வாழும் மனிதகுலத்துக்கு, தாய்த் தமிழகத்தின் தன்மானத் தமிழர்கள் விடுத்துள்ள அறைகூவல் பிரகடனம் ஆகும். தமிழ் ஈழத் தாயகத்தில், விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலகங்களை, கொடியவன் ராஜபக்சே இடித்துத் தகர்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டான். நான் நெஞ்சால் பூஜிக்கும் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தை மண்மேடாக்கி விட்டான். கிளிநொச்சியில் யுத்தகளத்தை இயக்குவதற்கு, தலைவர் பிரபாகரன் அமைத்து இருந்த நிலவறையை, அண்மையில் குண்டு வைத்துத் தகர்த்தான். ஆனால், ராஜபக்சே ஒரு வடிகட்டிய முட்டாள்.
அந்த ஈழ மண்ணில் புலிகள் சிந்திய இரத்தத்துளிகளும், அவர்களின் எலும்புத்துகள்களும் நீக்கமறக் கலந்து இருப்பதை, சுதந்திரத் தமிழ் ஈழம் என்று அவர்கள் எழுப்பிய போர்முழக்கமும், அவர்களின் உணர்வோடு கலந்த சுவாசமும் அக்காற்று மண்டலத்திலே சுற்றிச்சுற்றிச் சுழல்வதை, அம்மடையன் அறிய மாட்டான்.
இதோ, 18 கல் தொலைவுக்கு அப்பால் அமைந்து உள்ள தஞ்சைத் தரணியில் இருந்துதான் கரிகால் பெருவளத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் படையெடுத்துச் சென்று, சிங்களவர்களைச் சிறைப்பிடித்து, இங்கு கொண்டு வந்து சோறு போட்டு, காவிரியின் கரைகளை உயர்த்த வேலை வாங்கினான். இராசராச சோழனும், இராசேந்திரச் சோழனும் படையெடுத்து, புலிக்கொடியை ஆட்சிக் கொடியாக்கினர்.
மாமன்னன் சங்கிலி, போர்த்துகீசியரோடு போர் தொடுத்தபோது, தஞ்சை இரகுநாத நாயக்க மன்னன் வருணகுலத்தான் தலைமையில் படைகளை சங்கிலிக்குத் தோள் கொடுக்க அனுப்பினான்.
இன்று அதே தஞ்சைத் தரணியில் ஈழத்தமிழர் படுகொலையை, அழியாத சாட்சியமாக உலகத்திற்குக் காட்டவும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்கு தாய்த்தமிழகத்து இளம் தலைமுறையினர் வஞ்சினம் பூணவும் குறிக்கோளாகக் கொண்டு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அண்ணன் பழ.நெடுமாறன், முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பி உள்ளார்.
மாவீரர் மண்டபத்தில் முதல் மாவீரன் சங்கர் முதல் மாவீர மகன் பாலச்சந்திரன் வரை, கண்ணையும், கருத்தையும் ஈர்க்கும் சித்திரங்களைக் காணலாம். பலியான முதல் பெண் போராளி மாலதி முதல் அங்கயற்கண்ணி வரை, கரும்புலி மாவீரர்களை, தியாகதீபம் திலீபன் முதல் கரும்புலி மாவீரன் கேப்டன் மில்லர் வரை, பேசும் சித்திரங்களாகப் பார்க்கலாம்.
இந்திய அமளிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர் மூளக் காரணமான, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர், சயனைடு குப்பி கடித்து உயிர் துறந்த அவலத்தை, நம் போற்றுதலுக்குரிய வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் வீர மைந்தன் சார்லÞ ஆண்டனியின் வீரப்புன்னகையை, ஓவியமாகப் பார்க்கலாம்.
அடுத்து, முத்தமிழ் மண்டபத்திற்குள் நுழைவோம்.
இங்கு, அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள், இலக்கிய வித்தகர்கள், இசைவாணர்கள், கலை உலகில் கருவூலமான வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்க்களத்தில் அடக்குமுறைக்குப் பலியானவர்கள் தீக்குளித்து மாண்ட தியாகிகள் அனைவரது புகைப்படத்தையும் இங்கு காணலாம்.
தமிழர்கள் மட்டுமல்ல; உலகெங்கும் இருந்து இந்த நாட்டில் காலெடுத்து வைப்பவர்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம்.
முன்னர், நான்மாடக்கூடல் மதுரைக்கு அருகில் அழகர் கோவில் பக்கத்தில், குன்றக்கடவுள் முருகனுக்கு பழமுதிர் சோலை ஆலயம் எழுப்பினார் மதுரை பழனியப்பனார்.
அவரது அருமைந்தர் பழ.நெடுமாறன், வரலாற்றில் அழியாத முள்ளிவாய்க்கால் முற்றத்தை உருவாக்கி உள்ளார்.
நவம்பர் 8 ஆம தேதி மாலையில் நடைபெறும் தமிழர்களின் மான உணர்ச்சியின் வெளிப்பாடான திறப்பு விழாவிற்கு, நாலாத் திசைகளில் இருந்தும் தமிழர்களே திரண்டு வாரீர்.
கழகக் கண்மணிகளே, இந்நிகழ்வில் பங்கேற்று, உள்ளத்தில் உரம் பெற வாருங்கள்.
மாணவச் செல்வங்களே, இளம் வேங்கைகளாக சபதம் பூண வாருங்கள்.
9,10 ஆகிய இரு நாள்களில்

கா லை முதல் இரவு வரை நடக்கும் கருத்துக் களங்களில், தமிழரின் சங்கநாதம் கேட்க, தவறாமல் பங்கேற்பீர்.
நம் வாழ்வில் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பது தலையாய கடமை என்ற வீர உணர்வுடன், அனைவரும் தஞ்சையில் சங்கமிப்போம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி தமிழர்களே! தஞ்சையில் திரளுவீர்! - பழ. நெடுமாறன்

உலகத்தின் மூத்த மாந்தரினமான தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாறு காணாத அவலம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வீரமே ஆரமாகவும் தியாகமே அணியாகவும் பூண்டு வரலாற்றில் தன்னிகரற்ற முத்திரை பொறித்த தமிழினம் இந்த அவலத்தின் போது அழுது புலம்பி நின்றது.
காலத்தை வென்ற செவ்விலக்கியங்களைப் படைத்து உலக இலக்கிய வரிசையில் முன்னிடம் பெற்று நிகரற்றுத் திகழ்ந்தனர் தமிழர்..
வடக்கே இமயம் வரையிலும் தெற்கே ஈழம் வரையிலும் கிழக்கே கடல்கடந்த நாடுகளிலும் பகைவர் அஞ்சி ஒடுங்கும் வகையில் அடலேறுகளாகத் திகழ்ந்தனர் தமிழர்.
ஆனால் பெருமைக்குரிய தமிழினம் இன்று தலை தாழ்ந்து தேம்பிக் கிடக்கும் நிலை உருவானது ஏன்? எதனால்?
தமிழர் வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் முள்ளிவாய்க் காலில் 1,40,000 தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
20 கல் தொலைவில் இக்கரையில் தமிழ்நாட்டில் ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் கூட நம்மால் அந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வளவு பெருந்தொகையினரானத் தமிழர்கள் மிக அருகில் வாழ்கிறார்கள். அவர்கள் கொதித்தெழுந்தால் நம்முடைய கதி என்னாகும் என்ற அச்சம் சிங்கள வெறியர்களுக்கு அறவே இல்லை.
தில்லியும் அதற்குத் துணை போன அரசும் தமிழகத்தில் இருந்தது என்பதுதான் இதற்கு காரணமாகும் எனக் கூறி நம்மை நாமே அமைதிப்படுத்திக் கொள்கிறோம். இது எந்த அளவுக்கு உண்மை?
இந்தப் படுகொலைகளை இந்தியாவோ உலக நாடுகளோ கண்டிக்க முன் வராத நிலையில் சிங்கள வெறியர்கள் மேலும் துணிவுப் பெற்று அடுத்தக் கட்ட அழிவில் ஈடுபட்டனர். நாகரிக நாடுகள் எதிலும் இதுவரை செய்யப்படாத ஒன்றினைத் துணிந்து செய்தார்கள். தமிழீழத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் நினைவு இல்லங்களை அடியோடு தகர்த்து, கல்லறைகளில் துயின்ற மாவீரர்களின் எலும்புகளைக் கூட விடாமல் தோண்டி எடுத்து அழித்தனர் சிங்கள வெறியர்கள்.
தமிழீழப் பகுதியில் தமிழர்களின் அடையாளங்களே இல்லாமல் செய்யும் முயற்சியில் அடுத்து ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள வெறியர்களின் மேற்கண்ட செயல்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் என்றும் ஆறாத புண்களாகின. இந்தப் புண்களை ஆற்றும் முயற்சியாக எழுந்ததுதான் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாகும்.
தமிழீழத்தில் அழிக்கப்பட்டுவிட்டாலும் தமிழகத்திலேயாவது நினைவுச் சின்னம் நிறுவப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்தது.
தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் காலூன்ற ஆங்கிலேய வல்லாதிக்கம் முயன்ற காலத்தில் அதை எதிர்த்துத் துணிவுடன் போராடி மாண்டு மறைந்த மாவீரர்கள், அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரில் களத்தில் புகழை நிலைநிறுத்தி மண்ணில் வீழ்ந்து பட்ட மாவீரர்கள், தமிழ்நாட்டில் மொழி காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்த மான மறவர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து தங்களை அழித்துக் கொண்ட தீரர்கள் ஆகிய அனைவரின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பப்பட்டுள்ளது.
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இராசராசன் எழுப்பிய கற்கோவிலுக்குப் பயன்படுத்திய அதே தரமும் உறுதியும் நிறைந்த கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் பொருட்செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டு அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும் அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக-தமிழீழ வரலாற்றில் தம்முயிர் ஈந்து புகழுடம்பு எய்திய மாவீரர்களின் வண்ண ஓவியங்களைக் கொண்ட ஓவிய மண்டபம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.
மறைந்த தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் இசைவாணர்கள், நடிகர்கள், வட எல்லை, தென் எல்லைப் போராட்டத் தளபதிகள், தமிழ்த்தொண்டு புரிந்த சான்றோர் ஆகியோரின் உருவப்படங்களைத் தாங்கிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒலி, ஒளி குறும்படங்கள் திரையிட்டுக் காணும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு இயல், இசை அரங்குகள் நடத்த மேடையும் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப-ஓவிய நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த வேலைகள் தொடங்கப்பட்டன. மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த இரண்டாண்டு காலத்திற்கும் மேலாக இரவு பகல் பார்க்காமல் சிற்பங்களைச் செதுக்கும் பணியில் ஈடுபட்டு 2013ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்துள்ளனர்.
முத்துக்குமார் உட்பட 20 ஈகிகளுக்கும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கும் கையில் விளக்கு ஏந்தி தமிழ்ப்பாவை அஞ்சலி செலுத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பம் மிகப்பெரியது 60 டன் எடைக்கு மேல் உள்ள ஒரே கல்லில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 15 அடி உயரம் உள்ள எழில் மிக்க மேடையில் தூக்கி வைக்கப்பட்டு தொலை தூரத்தில் உள்ளவர்களையும் கவர்ந்து ஈர்க்கிறது.
பற்றி எரியும் நெருப்பில் கருகிய முத்துக்குமார் உட்பட 20 தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாகும். 3 அடி உயரம் உள்ள கருங்கல் மேடை மீது இந்தச் சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. காண்போரின் கண்களைக் குளமாக்கும் வகையில் இந்த ஒப்பற்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
காண்போர் மனம் நெகிழும் வகையில் முள்ளிவாய்க்கால் அவலக்காட்சிகளை உயிரோட்டமுடன் விளக்கும் சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் உள்ளதாகும். 3 அடி உயரம உள்ள கருங்கல் மேடை மீது இந்த சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது.
களத்தில் வீரத்தை நிலைநிறுத்தி மாண்ட மாவீரர்களுக்கான நெடுங்கல் ஒன்று தனியான மேடையின்மீது நாட்டப்பட்டுள்ளது.
வளாகம் முழுவதிலும் எழில் குலுங்கும் பூங்காவும் மனதைக் கவரும் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்திலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்பதற்கு விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் வந்து வழிபடும் புனித இடமாக இந்த கற்கோவில் உருவாகியுள்ளது. உலகத் தமிழர்கள் பலரும் தமிழகத் தமிழர்களும் வாரி வழங்கிய நிதியின் உதவிகொண்டு இந்த முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலும் அழியாமல் நின்று முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தையும் முத்துக்குமார் போன்ற ஈகிகளின் உன்னதத் தியாகத்தையும் வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய இந்த நினைவு முற்றத்தை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் உருவாக்கித் தந்துள்ளனர். தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவர்கள் அளித்துள்ள உன்னதப் படைப்பாகும் இது.

தஞ்சையில் இராசராசப் பெருமன்னன் எழுப்பிய கற்கோவில் அவன் பெற்ற வெற்றிகளின் பெருமித வடிவமாகும். அதே தஞ்சையில் இன்று எழுந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த மறக்க முடியாத அவலத்தின அடையாளமாகும்.
காலம் காலமாக தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னமாக இந்த முற்றம் திகழுகிறது.
இம்முற்றத்தின் திறப்பு நிகழ்வு வருகிற நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவிருக்கிறது. உலகத்தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழகத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்பட அனைவரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாகும். குறிப்பாக இளைய தலைமுறையினர் இதில் கலந்து கொள்வது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த ஒப்பற்ற நினைவுச் சின்னத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமையும் அவர்களைச் சார்ந்ததாகும். எனவே, அணி அணியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழர்களே! வருக தஞ்சைக்கு - பேராசிரியர் அறிவரசன்

அக்கரை ஈழத்தில் நேர்ந்த அவலத்தை
இக்கரையில் கண்டுபே ரெழுச்சி பெறுதற்கு

நெஞ்சில் கனல்ஏந்தி நேராகச் சென்றிடுவோம்
தஞ்சை மாநகரில் தமிழரெலாம் கூடிடுவோம்

முள்ளிவாய்க் கால்நினைவு முற்றத்தைக் கண்டுநம்
உள்ளத்தில் பகைவெல்லும் உறுதியினை ஏற்றிடுவோம்

இன்றமிழ் உறவுகளை இரக்கமிலாச் சிங்களவர்
கொன்றொழித்த கொடுமையினைச் சிற்பமாய் ஓவியமாய்க்

கண்டு மனம்பதைத்துக் கலக்கமுடன் நீள்நிலத்தில்
உண்டோ இதுபோல் ஒருகொடுமை என்றேங்கி

இன்றுள்ள வேற்றுமைகள் இல்லாமல் நாம்எல்லாம்
ஒன்றாகித் தமிழ்ஈழ விடுதலைக்கே உரமேற்றத்

தஞ்சையைச் சென்றடைவோம் "தமிழர்களே வருக''என
நெஞ்சார அழைக்கின்றார் நெடுமாறன், உறவுகளே!

முள்ளிவாய்க்கால் பின்னடைவால் தமிழ்வீரம் முடியவில்லை
துள்ளிஎழுந் தோம்என்று உள்ளத் துடிப்புடனே

இனமானம் காத்திடவும் இனப்பகையை வீழ்த்திடவும்
துணிந்தோம் எனமுழங்கித் தோள்தட்டித் தஞ்சையிலே

இணைந்திடுவோம் வாரீர் எழுந்து




ஞாயிறு, 20 அக்டோபர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா வருகிற நவம்பர்மாதம் 8,9,10 ம் தேதிகளில் நடைபெற இருகிறது அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்பபடி கேட்டுகொள்ளப்படுகிரார்கள்.தமிழர்கள் வரலாற்றில் திருப்புமுனைநிகழ்ச்சி.தமிழ்அறிஞர்கள்,தமிழ்த்தலைவர்கள்,மாணவர்கள்,புலவர்கள்,திரையுலகபிரபலங்கள் கலந்துகொள்க்கிரார்கள்.தஞ்சை நோக்கி அணி திரள்வீர்கள்.

       

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முளுமையான படத்தொகுப்பு


ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சான்றாக விளங்கவுள்ள “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்”
வரும் அக்டோபர் பதினொன்று ,பனிரெண்டாம் தேதிகளில் திறப்புவிழா நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நாடுகளின் அரசியல் கூட்டுச்சதியால், சிங்களவர் கொத்தணிக்குண்டுகள் கொண்டு, தமிழரின் வீரம் செறிந்த உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அடக்கி ஒடுக்ககிய நிலையில். தமிழரின் வீரம், தியாகம், பண்பாடு காத்த, காப்பதற்கென்று தம் உயிரையும் கொடுத்து, தம் உதிரத்தை நீராக்கி விதையுண்ட மாவீரர்களின் நினைவகம் புலிக்கொடி தாங்கிய சோழநாடான தஞ்சாவூரில் தமிழ் உணர்வாளர்களால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ர்களின் பாரம்பரிய, புகழ்பெற்ற சைவத் திரு ஆலயங்கள் ஆகியன அமையப்பெற்ற அழகிய இடத்திலேயே இம்மாவீரர் நினைவகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.


உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனத்தின் தலைவரும் தமிழ் நாட்டின் உணர்வுள்ள தலைவர்களில் ஒருவருமான திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவொன்று அங்கு முழுநேரமாக பணியாற்றிய வண்ணம் அங்கு மேற்படி நினைவு வளாகத்தை அமைத்து வருகின்றது.
 தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் உருவாக்கம் தொடர்பான முழுமையான படத்தொகுப்பு