மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஒருநாள் அடையாளஅய்யனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடத்தினர்

தஞ்சை மாவட்ட பூதலூர் அருகில் ( திருச்சி-தஞ்சை இரயில் வழியிலுள்ள ) அய்யனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள்அய்யனாபுரம் இரயிலடி முன்னபாக தமிழீழத்தில் நடைபெற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஒருநாள் அடையாள உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடத்தினர்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் பெ.மணியரசன் உண்ணாநோன்பு அறப்போராட்டத்தை தொடங்கி வைத்தர்.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்து தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் ,தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா அரசு ஏற்கவேண்டும் , உடனடியாக நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.