மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 26 மே, 2011

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.
பழ. நெடுமாறன்.
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

வெள்ளி, 20 மே, 2011

''தூதுவிடும் சோனியாவைத் துரத்தி அடியுங்கள்!''

சிலிர்த்துக் கிளம்பும் சீமான்
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
''இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி. இருட்டு, திருட்டு என எண்ண முடியாத அளவுக்கு இங்கே ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும்... ஈழத் துயரமும் இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் பட்ட துயரமுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் துரத்தி அடித்திருக்கிறது!'' என்கிறார் சீமான்.
''ஸ்பெக்ட்ரம் என்கிற ஒற்றை வார்த்தைதான் தி.மு.க. கூட்டணியை இந்த அளவுக்கு வீழ்த்தியதாகச் சொல்கிறார்களே?''
''கிடையாது! ஸ்பெக்ட்ரம் பிரசாரத்தையும் தாண்டி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. 'ஈழத் தமிழர் படுகொலையும் சீமானின் பரப்புரையும்தான் ஒரே நாளில் புதுச்சேரி அரசியலைப் புரட்டிப்போட்டது!’ என புதுவை முதல்வர் ரங்கசாமி சொல்லி இருக்கிறார். ஈழத்தை நாசம் செய்த காங்கிரஸோடு கூட்டணிவைக்க இனி எந்தக் கட்சியும் முன்வராது. அப்படியே கூட்டணி வைத்தாலும், ஈரக்குலையில் தீப்பிடித்தவனாக இருக்கும் தமிழன் அவர்களை நசுக்கி எறியத் தயங்க மாட்டான்! தோற்றவர்களுக்கு மட்டும் அல்ல... வென்றவர்களுக்கும் இந்தப் பாடம் பொருந்தும். 'ஈழம் குறித்த அரசியல் எல்லாம் இனி எடுபடாது’ என்கிற வார்த்தைகளை மேற்கொண்டு தமிழகத்தில் எவரும் உச்சரிக்க முடியாது!''
''வெற்றிக்குப் பிறகு ஈழம் குறித்து பேசிய ஜெய​லலிதா, 'மத்திய அரசால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்’ எனச் சொல்லி இருக்கிறார். இதைத்​​தானே முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சொன்னார்?''
''ஜெயலலிதா மீது நாங்கள் எவ்வித எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 'தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு. அதற்காக இந்திய ராணுவத்தை அனுப்பிவைக்கவும் தயங்க மாட்டேன்!’ எனச் சொன்னவர் ஜெயலலிதா. உடனே, 'இது ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதம்!’ எனப் பலரும் கூச்சல் கிளப்பினார்கள். இந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈழம் குறித்து அவர் பெரிதாகப் பேசாதது உண்மை. ஆனால், வாக்குப் பதிவுக்குப் பிறகு, 'ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக நிறுத்த இந்தியா முன்வர வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால், போரை நடத்தியதே இந்தியாதான் என்கிற குற்றச்சாட்டை நம்ப வேண்டி இருக்கும்!’ என உரக்கச் சொன்னார் ஜெயலலிதா. அபரிமித வெற்றியை அடைந்தபோதும், 'ஈழ விடிவுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன்!’ என்றும், 'ராஜபக்ஷேவின் போர்க் குற்றம் கண்டிக்கப்பட வேண்டியது!’ என்றும் ஜெ. சொன்னார். சட்டமன்றத்தில் இதனையே முதல் தீர்மானமாக அவர் இயற்றினால், புதை மணலாகப் புழுங்கிச் சாகும் தமிழ் மக்களின் வாழ்வில் முதல் மழை விழுந்ததுபோல் இருக்கும்!''
''காங்கிரஸை மூர்க்கமாக எதிர்ப்பவர் நீங்கள். ஆனால், ஜெ. வெற்றி பெற்ற உடனேயே சோனியா டீ பார்ட்டிக்கு அழைத்திருக்கிறாரே?''
''மரியாதை ரீதியான அழைப்பு. ஆனாலும், காங்கிரஸைத் தமிழ் மக்கள் துடைத்து வீசி இருக்​கிறார்கள் என்பது தமிழகத்தின் புதிய முதல்வருக்கு நன்றாகத் தெரியும். இன்றைய நிலையில் அ.தி.மு.க-வுக்கு சோனியாவின் தயவு தேவையே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸைத் தவிர்த்து​விட்டே, பல இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. வலை விரிப்பதும் ஈரல் குலை அறுப்பதும், சோனியாவின் வழக்கமான வேலைதான். இத்தகைய அழைப்புகளை எல்லாம் விரட்டி அடித்து, ஈழத் தமிழர்களின் விடிவுக்கான அழுத்தத்தை ஜெ. கொடுக்க வேண்டும்!''
''தமிழ் உணர்வாளர்கள் பலர் மீது முந்தைய ஜெய​லலிதா அரசில் நடவடிக்கை பாய்ந்தது... இப்போது உங்களை நோக்கியும் அத்தகைய அதிரடிகள் பாய்ந்தால்...?''
''எதுவாக இருந்தாலும் மகிழ்வோடு எதிர்கொள்வோம். கடந்த ஒன்றரை வருடங்களில் ஐந்து முறை சிறைக்குள் என்னைத் தள்ளியது தி.மு.க. அந்த சிறைவாசம் என்னை சிதைக்கவா செய்தது? உணர்வுகளையும் உத்வேகத்தையும் விதைக்கவே செய்தது. மக்களுக்கான போராட்டங்களை ஓர் அரசு நசுக்குகிறது என்றால், அது மக்கள் விரோத அரசு என்றுதானே அர்த்தம். எல்லாவற்றையும் தாண்டி, 'ஜெ. நல்லாட்சி தருவார்’ என நம்பலாமே!''
''முதியவர் என்றும் பாராமல் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையாக முழங்கி, அவரை நோகடித்துவிட்டோமே என்கிற வருத்தம் இருக்கிறதா?''
''அவர் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும்... என்னைப்போன்ற தமிழ்ப் பிள்ளைகள்தான் அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடினோம். கண் முன்னே நடந்த அத்தனைத் துயரங்களையும், ஆட்சிக்காகவும் கட்சிக்காகவும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்​ததை மன்னிக்கவே முடியாது! போரைத் தடுக்க முன்​வராவிட்டாலும், முத்துக்குமார் தொடங்கி எத்தனையோ இளங்குருத்துகள் தெருவில் இறங்கிய போராட்டங்களை ஒடுக்காமலாவது இருந்து இருக்கலாம். தன் குடும்பத்துக்காக அவர் இன்றைக்கு இழந்த ஆட்சியை, தமிழ்க் குடும்பங்களுக்காக அன்றைக்கே இழந்திருந்தால், வரலாறு அவரை வணங்கி இருக்கும். ஈழக் கோரங்களைத் தடுக்க எதையுமே செய்யாத அவர், கனிமொழி கைதைத் தடுக்க உயர்நிலைக் குழுவைக் கூட்டி, 'என் துணைவியின் வீட்டுக்குப் போய் மூன்று நாட்களாகிவிட்டது!’ எனக் கலங்கினார். வீட்டுக்குப் போய் மூன்று நாட்கள் ஆனதற்காக வருந்தியவர், எம் மக்கள் நாட்டுக்குப் போய் 30 வருடங்களாகிவிட்டதை நினைக்கத் தவறிவிட்டாரே!''
''வடிவேலு..?''
''இந்தப் பேட்டியின் கௌரவத்தைக் குறைத்து​விடாதீர்கள்!''
- இரா.சரவணன் 
                                                                                                                                        thanks
                                                                                                                                         vikatan


  unarchitamilan                                                                        

புதன், 18 மே, 2011

சுதந்திரம் தானே கேட்டோம்.



சிங்களனோ பலோ பலோவென(நாயே நாயே)
நிர்வாணமாக்கி நெற்றி பொற்றில்
தோட்டாவை சுமக்கச் செய்தான்
உயிர்காக்க வருமென்றிருந்த
செஞ்சிலுவை சங்கமோ
ஆடை அவிழ்க்கப்பட்டு பூட்சு கால்களால்
மிதிப்பட்டு கிடந்த எம்பிணங்களை
சுமக்க வந்தது,கணக்கெடுப்பதற்காய்.

குருதியில் எம்மண் சிவக்க
கடைசி வரை உதவ வருமென்றிருந்த
இந்தியாவோ,சிங்கள மாந்தர்களுக்கு
சிவப்பு கம்பல வரவேற்பளித்து
பகற்கனவாக்கியது ஈழக்கனவை.

இலட்சக்கணக்கில் செத்து கிடந்தோம்
ஐ.நா.வோ ஆயிரக்கணக்கில் மாண்டு
கிடந்தார்களென்று அறிக்கை வெளியிடுகிறது
மனிதநேய கடமைக்காய்,
போர்க்குற்ற விசாரணையையோ போர்
நடத்திவர்களிடமே கையளிக்கிறது
ஐ.நா. சபை.

சிந்தாபாத் சிந்தாபாத்தென வரலாற்று
புத்தகத்தில் வீரம் செறிந்த
நாடு இந்தியா என்றிருந்தோம்,
காந்தியை கண்டபொழுது எவருக்கும்
தீங்களிக்கா நாடு என்றிருந்தோம்,
இப்பொழுதே புரிந்தது இந்தியா
இந்தியரால் ஆளப்படவில்லை-நாட்டையே
காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளாலும்
இயேசுவையே சிலுவையில் ஏற்றிய
இத்தாலிக்காரியாலும் ஆளப்படுகிறது,என்பதை.

மலைப்போல் நம்பியிருந்தோம் எங்கள்
முத்தமிழறிஞரை அவரோ-காலை
சிற்றுண்டியை முடித்துக்கொண்டு
மதிய உணவிற்குள் முடித்துக்கொண்டார்
உண்ணாவிரதத்தை
ராசபக்சே போர் நிறுத்தத்தை
அறிவித்து விட்டாரென்று.
நேற்று பிறந்தாற் பிள்ளைப்போல்
அய்யகோ ! என் இனம் சாய்கிறதென்றும்
தனி ஈழமே தீர்வென்றும் கூச்சலிடுகிறார்,
போர் முடிவுற்ற பின்னரும்
கடிதம் வரைகிறார் போர் நிறுத்தத்திற்காக.

சுதந்திரம் தானே கேட்டோம் !
முள்வேலிக்குள் தள்ளும்
தந்திர சூத்திரமா கேட்டோம் ?
சுதந்திரம் தானே கேட்டோம் !

மகா.தமிழ்ப் பிரபாகரன்.

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!




ஊர்தாளி அறுத்த கதை
உறவு மானம் பறித்த கதை
என் தமிழர் ரத்தம் குடித்த கதை
இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ;

ஈழ-மது மலரும் மலரும்
என் பாட்டன் மண்ணில் உறவுவாழும்
காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா
உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா;

ஊருவிட்டு; வந்தவன் நீ
வீடு புகுந்து; தின்னவன் நீ
சோறு தின்ன மிச்சதுக்கு மண்ணை சேர்த்துத் கொண்டதெல்லாம்
ஊருக் கண்ணில் குத்துதே; உன் தலையெழுத்தா மாறுதே;

முள்ளிவாய்க்கால் முடிவுடா
உன் கொட்டம் அடங்கும் கணக்குடா
நீ தொட்ட பெண்கள் அத்தனையும் விட்ட சாபம்; சாப(ன்)டா
அவள் ரத்தம் சுத்தம் பாருடான்னு; பறக்கும் வெற்றிக் கொடி காட்டு(ன்)டா;

கர்ப்பிணிய கிழிச்சியே
குழந்தை காலை தலையை உடைச்சியே
வயசான கிழத்தைக் கூட வீழும்வரை அடிச்சியே
என் மானத்தி மானம் பரப்பி தமிழர் புகழை கெடுத்தியே;

ஒவ்வொன்னா வீழுது
உன் கிரிடம் சாயப் போகுது
கொள்ளும் களியும் தின்னும் போது
எங்க அலறல் சப்தம் புரியு(ன்)டா;

நீதி யொன்று உண்டுடா
உண்மை யென்றும் வெல்லு(ன்)டா
விட்ட சொட்டு ரத்தம் கூட -
எம் விடுதலையா முளைக்கு(ன்)டா;

எம் மடியில் கைய வச்சவன்
காம ரத்தம் குடித்தவன்
எல்லோரும் வாங்கடா, கதற கதற உருப்பறுத்த
கையாலயே இனி சாவுடா;

கத்தி கத்தி அழுதோமே
ஈ மொய்க்க கிடந்தோமே
முள்ளுக் கம்பி பின்னாலே எம்
வரலாறை புதைச்சோமே;

தொட்ட இடம் குத்துச்சே
தட்டு தூக்கி நின்னுச்சே
ராஜபாட்டை ஆண்ட மக்கள் தெருத்தெருவா அலஞ்சிச்சே
வீழ்ந்த நெருப்பில் கருகி கருகி மொத்த இனமும் அழிஞ்சிச்சே
அத்தனைக்கும் பதிலுடா; எம் மக்கள் ஈழம் வெல்லு(ன்)டா!!

வித்யாசாகர்

முடிந்து விட்டதா....?


முடிந்து விட்டதா....?
பதுங்கு குழிக்குள்ளேயே
பறித்தெடுக்கப்பட்ட
தாயின் முலையில்
பாலுக்காய் ஏங்கிய
பச்சிலங் குழந்தை..

வெற்றிலை மென்று
வெதும்பிய கண்களோடு
எறிகணை வீச்சில்
பறித்தெடுக்கப்பட்ட
வயோதிப மாது கூடவே
அவளுக்குத் துணையாய்
நின்ற கைத்தடி
முறிந்தருகில்....

செயற்க்கைக் காலிலும்
செல்லடிபட்டுச்
சிதறிக்கிடந்த உறவுகள்..

கருத்தாங்கிய மழலை
தாய்மண் தொடுமுன்
கிழித்தெறியப்பட்ட
எறிகணைக் காயம்..

பக்கத்தில் செல்விழ
பதுங்கு குழிக்குள்
படுக்கையோடு
மாரடைப்பால் இறந்த
என் தாத்தா...

வெள்ளை உடுப்பினில்
செங்குருதிபடியச்
சிதறிக்கிடந்த
என் தங்கை....

வைத்தியசாலையில்
காயத்துக்கு மருந்து
கட்டி முடிக்குமுன்பே
கிபீர்த் தாக்குதலில்
கொல்லப்பட்ட
உறவுகள்.....

வெட்டைவெளியில்
கொட்டில் அமைத்து
வெதும்பி வாழ்ந்த வழ்க்கை
முற்றுபெற்றுவிட்டதா
முள்ளிவாய்க்கால் மண்ணுடன்
எம்துயரம்...........?

BY: வன்னிச்செல்வன்

மே 18 போர்க்குற்ற நாளா? துக்க நாளா? மே 18 தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கரிநாள்.

முன்னணித் தளபதிகள் உட்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். பலநூறு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். பல்லாயிரம் சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்ட நாள். பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்ட நாள். மூன்று இலட்சம் மகக்ள் சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்ட நாள். ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய இயக்கமான தமிழ் தேசிய ஆன்மாவின் எழுச்சி மௌனிக்கப்பட்ட நாள்.

தமிழ் தேசிய ஆன்மா மீண்டும் எழுச்சிகொள்ள வேண்டாமா?
வெறும் துக்கநாள் என அழுதுவிட்டுப் போவதா? இத்தனைக்கும் காரணம் சிறிலங்கா அரசாங்கம் மட்டுமா? இல்லை. வல்லரசுகள் உட்பட 22 நாடுகள் உதவி செய்தன. அந்த நயவஞ்சகப் போர் முள்ளிவாய்க்காலில் நினைத்ததை முடித்தது.
தற்போது அதே வல்லரசுகளும் அதே நாடுகளுமே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக கர்ஐpக்கின்றன. அதே வல்லரசுகளே சிறிலங்கா போர்க்குற்றம் செய்துவிட்டதாக வர்ணிக்கின்றன. போர்க்காலத்தில் சிறிலங்கா அரசினால் துரத்தியடிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன சிறிலங்கா போர்க்குற்றம் செய்ததாக ஆதாரத்துடன் கூறுகின்றன. சர்வதேச ஊடகங்களான 'சனல் 4' 'அல்ஜசீரா' போன்ற ஊடகங்கள் சிறிலங்காவின் போர்க்குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிடுகின்றன. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சிறிலங்கா சனாதிபதியோ�� அமைச்சர்களோ தமிழர் வாழும் நாடுகளுக்கு விஜயம் செய்தால் போர்க்குற்றவாளியை வெளியேற்று என கவனயீர்ப்புச் செய்கின்றது. இவரகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சிறிலங்கா தூதர்களாக வரும் இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகள் எனக் கூறி திருப்பி அனுப்புகின்றது மேற்கத்தைய நாடுகள். இதேநேரம் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காக பிரித்தானியா பிரான்ஸ் தென் ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் பகிரங்க விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமெனக் கோருகின்றன.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை காரணம் காட்டி அதில் போர்க்குற்ற சாட்சியங்கள் நிறைய உள்ளன. தமிழீழப் பிரகடனத்துக்குத் தேவையான காலமும் நேரமும் உருவாகியுள்ளதாக அமெரிக்க சட்டவல்லுனர் பேராசிரியர் பொய்ல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு இதனால் கலக்கமடைந்துள்ளது. ஈழத்தமிழனைப் பொறுத்தவரை தமிழீழம் கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் 'துக்கநாள்'தான்
துக்கமென விக்கிவிக்கி அழுவதற்கான நாள் அல்ல மே 18.
தனித்துவப்படுத்தி அடையாளப்படுத்தி யூதர்களுக்கு ஒரு 'ஹொலக்கோஸ்ட்' (Holocaust) போல ஈழத்தமிழர்களுக்கு மே 18 போர்க்குற்றநாள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது வெறும் கொலை அல்ல: இனவழிப்பு என ஐ.நா. பிரகடனப்படுத்தி மகிந்தவின் பரிவாரங்களை குற்றக்நிண்டில் ஏற்றவேண்டும்.
;அப்போதுதான் எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வீரச்சாவடைந்த போராளிகளையும் மக்களையும் ஈழத்தமிழினம் மாத்திரம் அன்றி உலகம் இருக்கும் வரை ஹொலக்கோஸ்ட்டை நினைவுகொள்வது போல் மே 18 போர்குற்றநாளில் நினைவுகொள்வர்.
நான்கு திசையிலும் போர்க்குற்றம் என்பதே பேச்சாக உள்ளது. இந்நிலையில் மே 18 என்பதனை தமிழினத்தின் மீள் எழுச்சிக்காக போர்க்குற்றநாள் எனப் பிரகடனப்படுத்தி அந்நாளிலிருந்து எழுச்சி பெறவேண்டும். இந்நாளையே புலம்பெயர் சமூகம் கடந்த வருடம் போர்க்குற்றநாளாக அனுஸ்டித்தது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்நாளை துக்கநாளாக அறிவித்துள்ளது ஏன்?
வீரத்தளபதிகள் போராளிகள் வீரச்சாவடைந்த நாளை நினைவு கூர்வதற்கான நாளே மாவீரர் நாளாகும். அந்நாள் எழுச்சி நாளாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேட்டிலும் மாவீரர் நாளை மாவீரர் எழுச்சிநாள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (இதற்கு ஆதாரமாக உத்தியோகபூர்வ வெளியீடு உள்ளது.)
வீரத்தளபதிகள் போராளிகள் பல்லாயிரம் மக்கள் அழிக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடைபெற்ற நாளை அடையாளமாக வைத்து எழுச்சி பெறுவதனை விடுத்து�� ஏன் துக்கம் என அழுதுவிட்டுப் போக வேண்டும்? தேசியத்தலைவர் கூறியிருக்கிறார்:
"வலியைத் தந்தவனுக்கே வலியைக் கொடு" என எம் இனத்தை அழித்த எதிரிக்கு வலியைக் கொடுப்பதாயின் ஒரே வழி ஐ.நா. மூலமாக மகிந்தவையும் அவரது பரிவாரங்களையும் போர்க்குற்றவாளிக் நிண்டில் ஏற்றி ஐ.நா. மூலமாக அரசியல் தீர்வுகாண்பதே.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை வெளிவந்துள்ள சூழ்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் தனது ஆதரவு நாடுகளை நாடி ஓடுகின்றது. சிறிலங்காவின் உள்ள தமிழக் குழுக்கள் கட்சிகள் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அறிக்கை விடுமாறு வேண்டப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் தேசிய மக்கள் முன்னணி தவிர அனேகமான தமிழ் கட்சிகள் குழுக்கள் மகிந்த அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளன.
இதேநேரம் அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல" நிபுணர்குழு அறிக்கை" மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் கே.பி.யை களமிறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனக் கூறியிருக்கின்றார்.
இவ்வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போர்க்குற்ற நாளான எழுச்சிநாளை துக்கநாளாக அறிவித்துள்ளது பெரும் அச்சமடைய வைக்கிறது. ஒரு உறுப்பினரால் மே 18ஐ துக்கநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என தனிநபர் மசோதா கொண்டுவரப்பட்டதாகவும் அது சில மாற்றங்களின் பின் உறப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசின் அறிக்கை கூறுகின்றது. அந்த தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்தவர் யார்? அவர் கே.பி.யின் நெருங்கிய உறவினர் என அறியப்படுகின்றது.
இங்கு நாம் இவற்றை எழுதுவதால் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு எதிரானவர்கள் என நினைக்க வேண்டாம். நாம் முன்னரே கூறியுள்ளோம் சரியாயின் தட்டிக்கொடுப்போம் பிழையாயின் சுட்டிக்காட்டுவோம் என. நாடுகடந்த தமிழீழ அரசு நேர் வழியில் பயணிக்க வேண்டும் இலக்கை அடையவேண்டும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே சுட்டிக்காட்டுகிறோம். துரோக வரலாறு போதும். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம். முளையிலேயே கிள்ளுவோம். துக்க நாள் பிரகடனம் ஏதேனும் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகின்றது. தேசியத்தின்பால் பற்று வைத்திருந்து செயற்பட்ட பிழைகளைச் சுட்டிக்காட்டிய தேசியவாதிகள் நாடுகடந்த தமிழீழ அரசிலிருந்து நயவஞ்சகமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தை நேசிக்கும்(?) உறுப்பினர்கள் இதுபற்றி சிந்திக்கவில்லையா? தமிழர் தேசிய இயக்கத்தின் சட்ட ஆலோசகராகவும் பேச்சுவார்த்தைக் குழுவில் சில கட்டங்களில் அங்கம் வகித்தவருமான மதிப்புக்குரிய ருத்திரகுமாரன் அவர்களையும் தேசியத்தை நேசிக்கும் ஏனைய உறுப்பினர்களையும் தயவுகூர்ந்து எமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த மாவீரர் மேலும் மக்கள் மேலும் ஆணையிட்டுக் கேட்கிறோம். துக்கநாள் என்பதை போர்க்குற்ற நாள் எனப் பிரகடனம் செய்யுங்கள். கடந்த வருடம் ஏற்கனவே உலகளாவிய தமிழர் சமூகத்தால் பிரகடனம் செய்யப்பட்ட போர்க்குற்றநாள் என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசும் ஏற்றிருந்தது. எனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் தமிழ் சமூகத்தினருடன் ஒன்றித்து பயணிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் கனடாவிலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றபோதும் கனடிய அரசு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்றோ அல்லது மகிந்த அரசின் போர்க்குற்றத்தைக் கண்டித்தோ இன்னமும் ஓர் அறிக்கையைத் தானும் வெளியிடவில்லை.
எனவே மே 18 போர்க்குற்ற நாளில் ரொறன்ரோ நகரமத்தியிலுள்ள ஒன்ராறியோ பாராளுமன்றத்தின் முன்னால் குயின்ஸ்பார்க் திடல் அனைத்துத் தமிழ் மக்களும் திரண்டு கனடிய அரசிடம் நீதி கேட்பது தமிழர் தம் வரலாற்றுக் கடமையாகும். முதலில் நாம் வாழும் கனடா அரசை சிறிலங்கா அரசின் போர்க்குற்றத்தை கண்டிக்க வைக்கவும் ஐ.நா.வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கேட்பது நம் கடமையாகும். எனவே மீண்டும் கேட்கின்றோம் மே 18ம் திகதி போர்க்குற்ற நாள் அன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அனைவரையும் குயீன்ஸ் பார்க் திடலில் ஒன்று திரளுமாறு.
நாடுகடந்த அரசு துக்கநாள் என்பதனை போர்க்குற்றநாள் என மாற்றினால் என்ன மாற்றாவிட்டால் என்ன தமிழின நன்மை கருதி அனைத்துத் தமிழ் மக்களையும் மே 18 போர்க்குற்ற நாள் என மனதில் நிறுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் அந்தந்த நாட்டில் அன்றைய தினம் நடைபெறும் போர்க்குற்ற நாள் நிகழ்வுகளிலும் ஐ.நா முன்றலில் நடைபெறும் போர்க் குற்றநாள் நிகழ்வுகளிலும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
நன்றி: கனடா உலகத்தமிழர் பத்திரிகை

இன்று மே-18 இன அழிப்பு நாள் மற்றும் போர்க்குற்ற நாள்.

may18

தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.

மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் "பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்" சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது.
ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்:
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்:
இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றி மகாவம்சம் கூறுவதாவது:
எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?" என்று கேட்டான்."உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்" என்று கூறினாள். அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்' என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.
துட்ட காமினி (துட்ட கைமுனு)
இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்" என்று தகவல் அனுப்பினார்.
இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.
இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்."நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்."இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

செவ்வாய், 17 மே, 2011

தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!" தமிழக வாக்காளப் பெருமக்களை தலைவணங்கிய தினமணி பத்திரிகை.

தமிழக மக்கள் தன்மான தமிழர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள் என தமிழகத்திலிருந்து இன்று வெளியான தினமணி ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே  எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய          வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.
மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ �குடும்ப ஆட்சி� என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?
அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறா�ர்கள்.
தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தௌ;ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிர�ஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு� கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே� தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும்,  இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.
"தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!" என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை "தினமணி"பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!

நல்ல வேளையாக காந்தியடிகள் இல்லை! - பழ. நெடுமாறன்

2009 ஆம் ஆண்டு சனவரி முதல் மே வரை இலங்கைப் போரின் இறுதி ஐந்து மாதங்களில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சிங்கள இராணுவம் புரிந்தது.

ஜெனீவா உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது. தமிழர் பகுதிகளில் இருந்த குடியிருப்புகள், மருத்துவமனைகள், கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மனித உரிமை அமைப்புகளும் சாட்டிய இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010ஆம் ஆண்டு சனவரி 14 முதல் 16வரை கூடி விசாரணை நடத்தி மேலே கண்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை உறுதி செய்தது.

இதன் விளைவாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க முன்வந்தார். இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மர்சுகி தர்ஸ்மான், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையைத் திசை திருப்ப இராசபக்சே திட்டமிட்டார். குற்றம் செய்தவர்களை தாங்களே கண்டுபிடித்துத் தண்டிக்கப் போவதாக உலகிற்கு காட்ட நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக் குழு ஒன்றை அமைத்து நாடகம் ஆடினார். ஆனால் இந்த விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்க இலங்கை எதிர்க்கட்சி மறுத்துவிட்டது. இராசபக்சேயின் கைப்பாவைகளாக இயங்கி வரும் சில தமிழ்க் குழுக்கள் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளன.

விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. வை வற்புறுத்தியதிலும், குழு அமைக்கப்பட்ட பிறகு அதற்கு ஆதாரங்களைத் திரட்டித் தருவதிலும் இந்தியாவின் பங்கு அறவே இல்லை.

தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பங்கும் இதில் அறவே இல்லை. அவர் மனம் வைத்திருந்தால் எவ்வளவோ ஆதாரங்களைத் திரட்டி அளித்திருக்க முடியும். முள்ளி வாய்க்காலில் இருந்து தப்பியோடி வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்களின் வாக்கு மூலங்களையும் இதர ஆதாரங்களையும் திரட்டுவதற்கு குழு ஒன்றை அமைத்து செயல்பட்டிருந்தால் எவ்வளவோ உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவரது காவல்துறை அதற்கு நேர் மாறாக செயல்பட்டது. தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களிடமிருந்து ஆதாரங்களை நாங்கள் திரட்டிய போது அவர்களை எல்லாம் காவல்துறை மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு நடுவேதான் ஆதாரங்களை நாங்கள் திரட்டி டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்திற்கும் ஐ.நா. விசாரணைக் குழுவிற்கும் அனுப்பி வைத்தோம்.

ஐ.நா. விசாரணைக் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான உடன் சிங்கள அதிபர் இராசபக்சே ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறினார். அது மட்டுமல்ல அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச என்பவர் 6-7-10 அன்று கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார். ஐ.நா. அலுவலகத்தைச் சேர்ந்த 120 பேரை பணயக் கைதிகளாகப் பிடிப்பதுதான் தனது நோக்கம் என்றும் அறிவித்தார். பான்-கி-மூனின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது. ஐ.நா. மன்றம் எச்சரித்த பிறகே இவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது.

ஐ.நா. விசாரணைக் குழுவின் செயற்பாட்டை முடக்குவதற்கும் குழுவின் முன் சாட்சியம் அளிக்க முன்வருவோரை மிரட்டுவதற்கும் இலங்கை அரசு செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஐ.நா. விசாரணைக் குழு பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தனது கடமையைச் செவ்வனே செய்து ஐ.நா. பொதுச் செயலாளரிடம் தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் சர்வதேச மனித நல சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை இலங்கை இராணுவம் மீறியுள்ளது. போர்க் குற்றங்கள் வரையறைக்குள் வரும் கொடிய குற்றங்களைப் புரிந்துள்ளது. அரசுக்கு எதிரானவர்களும், அரசை விமர்சித்த ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசு அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். படுகாயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த செஞ்சிலுவைக் கப்பல் நின்ற கடற்கரைப் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னியில் அனைத்து மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி ஏராளமான நோயாளிகளையும் மருத்துவர்களையும் உதவியாளர்களையும் கொன்று குவித்தது. போர் முடிந்த பிறகு முகாம்களில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடத்தப் பட்டன என சிங்கள இராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் வெளியில் கசிந்தவுடன் இராசபக்சேயின் சகோதரரும் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய இராசபக்சே "அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பொம்மை பான்-கி-மூன் என மிகக் கடுமையாகச் சாடினார்.

அதிபர் இராசபக்சே ஒரு படி மேல் சென்று "போர்க் குற்ற விசாரணைக்கு எதிரான பேரணிகளை நடத்துமாறு சிங்கள மக்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் "ஐ.நா. விசாரணைக் குழு பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அவர் மேற்கு நாடுகளின் அரசுகளைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு இலண்டன் சென்றார். ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹக் அவரைச் சந்திக்கவே மறுத்துவிட்டார்.

அமெரிக்கா இலங்கைக்கு எதிரான நிலை எடுத்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அரசுச் செயலாளரும் முன்னாள் இலங்கைத் தூதுவருமான இராபர்ட் ஓ பிளாக் என்பவர் அமெரிக்கா காங்கிரஸ் அவையின் வெளியுறவுக்குழுவின் முன் உரையாற்றுகையில் "இலங்கை யில் சில விடயங்கள் மிக மோசமாக மாறி வருவதாகவும் அங்கு சனநாயக அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாகவும், மனித உரிமை நிலவரங்கள் மிகுந்த கவலைக்குரியவையாகவும் இருப்பதாக கூறினார்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த இராசபக்சே தனது நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். ஐ.நா.வை மட்டுமல்ல தனக்கு எதிரான நிலை எடுத்துள்ள மேற்கு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளையும் எதிர்ப்பதற்கு இராசபக்சே துணிந்திருக்கிறார். அவரது இந்தத் துணிவிற்கு பின்னணியில் சீனாவும், இந்தியாவும் உள்ளன.

ஐ.நா. விசாரணைக் குழு அளித்துள்ள விசாரணை யின் அடிப்படையில் இலங்கை மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கக்கூடாது என சீனா, ரஷ்யா, இந்தியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இரத்து அதிகாரம் படைத்த நிலையான உறுப்பினர்களாக சீனாவும், இரஷ்யா வும் உள்ளன அதே குழுவில் சுழற்சி முறையில்

தற்காலிக உறுப்பினர்களாக இந்தியாவும், போர்ச்சுகலும் இடம் பெற்றுள்ளன.

போர்க் குற்ற விவகாரங்களில் ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் பெரும்பான்மை இருக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் குறிப்பிட்ட நாட்டின் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க இரத்து அதிகாரம் படைத்த ஒரு நாடு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அந்த நடவடிக்கை கைவிடப்படும். இந்தச் சூழ்நிலையில் ஐ.நா. என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது.

1899 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நூரம்பர்க் சர்வதேச நீதிமன்றத்தில் நாஜித் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்ற விசாரணை அடிப்படையில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சர்வ தேச நாடுகள் ஒன்று கூடி இலண்டன் பட்டயத்தை வெளியிட்டன.

போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டன.

2ஆம் உலகப் போருக்குப் பின் 1946ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி டோக்கியோ போர்க் குற்ற நீதிமன்றம் சப்பானிய தலைவர்கள் மீது விசாரணை நடத்தியது. மூன்று விதமான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் இழைக்கப்பட்ட அமைதிக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டன.

டோக்கியோ நீதி மன்றத்தில் சப்பானிய பிரதமர்களாக இருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்சோ, ஜப்பானிய இராணுவ தளபதியான யோஷி ஜிரோ உமேசு, போர் அமைச்சராக இருந்த செய்ஷிரோ ஹிட்டஹாக்கி உட்பட பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அதைப்போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஹெர்மென் கோயரிங், எஸ்.எஸ். படையின் உயர் தளபதிகளாக இருந்த எர்னஸ்ட் கால்ட்டென் புரூனர், அடால்ப் ஈச்மென் ஆகியோர் உள்பட நாஜி உயர் தலைவர்கள் பலரும் தண்டிக்கப்பட்டனர்.

யூகோஸ்லோவியா குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக் போர்க் குற்றங்கள் புரிந்ததாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சிறையிலேயே மரணமடைந்தார்.

போஸ்னியா முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சூலை 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக் கொடிய போர்க் குற்றவாளி இராசபக்சே ஆவார். உலகம் முழுவதிலுமிருக்கக்கூடிய மனித உரிமை அமைப்புகள், நடுநிலை ஊடகங்கள், டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், ஐ.நா. விசாரணைக் குழு ஆகியவற்றின் சுட்டுவிரல்கள் போர்க் குற்றவாளி என இராசபக்சேயை நோக்கி நீளுகின்றன.

ஆனால் இந்திய அரசின் மனசாட்சியை இந்தத் தீர்ப்புகள் கொஞ்சமும் உறுத்தவில்லை. இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலேயே ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துத் தோற்கடிக்க முன் நின்ற நாடு இந்தியா ஆகும். மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இடம் பெறுவதற்கு இலங்கை போட்டியிட்டபோது அதற்கு ஆதரவு அளித்த நாடு இந்தியாவாகும்.

கடந்த காலத்தில் இராசபக்சே நடத்திய தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் துணை நின்றும் அந்தப் படுகொலைகளை உலகத்தின் கண் முன் மறைக்க உதவியும் செயல்பட்ட இந்தியா இப்போது ஐ.நா. விசாரணைக் குழுவே இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது எனத் தெளிவாக தீர்ப்பளித்த பிறகாவது இராசபக்சேயைக் கண்டிப்பதின் மூலமும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதின் மூலமும் கடந்த காலத்தில் தான் செய்த மாபெரும் தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் மூண்ட போது போர்க் களத்தில் இரு தரப்பினருக்கும் நடுவில் தான் நின்று போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ள விரும்புவதாக காந்தியடிகள் கூறினார். ஆனால் வெள்ளை அரசு அவரைப் பிடித்துச் சிறையிலடைத்தது.

போரில்லாத உலகத்தைக் காண வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகளைத் தேசத் தந்தையாகக் கொண்டுள்ள இந்திய அரசு போரில் கொடிய குற்றங்களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்ததையும், அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணை புரிந்து செயல்பட்டதையும் காண்பதற்கு நல்ல வேளையாக காந்தியடிகள் இன்றைக்கு இல்லை.

- நன்றி : "தினமணி' 4-5-11





unarchitamilan

"தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2011" தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம் விடுத்துள்ள அறிக்கை..


காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

தலைமைச்செயலகம்,
த/செ/ஊ/அ/04/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
16/05/ 2011.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் � 2011
அன்பான தமிழ் மக்களே,
மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.
காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.
பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.
எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.
போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல், பக்கச்சார்பானவையென்றும், உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
எம் அன்பிற்குரிய தமிழக மக்களே,
எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.
எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான உலகத்தமிழ் உறவுகளே,
தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

திங்கள், 2 மே, 2011

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. முள்ளி வாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசஇராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 டன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளி வாய்க்காலில் படுகொலை ஆகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.









unarchitamilan

உலகத் தமிழர் பேரமைப்பு அமைக்கும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

உலகத் தமிழர் பேரமைப்பு அமைக்கும்
முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்




unarchitamilan

கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள்

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

2009 மே 17-18இல் நிகழ்ந்த முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தமிழ்நாட்டில் - தஞ்சையில் - கருங்கல் சிற்பங்களால் அமைந்த மிகப்பெரிய நினைவுச் சின்னம் ஒன்றினை உருவாக்கும் பணியில் உலகத் தமிழர் பேரமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்கான சிற்ப வேலைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழகச் சிற்பக் கலைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.

நினைவுக் கூடம் ஒன்றை உள்ளடக்கியதாய் அமையும் இந்த 'முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில்' - முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிக் கொடுமைகள் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர் துயரங்களோடு - தமிழ்நாட்டில் முள்ளி வாய்க்கால் போரின் கொடுமைகளுக்கு எதிராகத் தீக்குளித்து மடிந்த மாவீரர்களுக்கும் சிலைகள் நிறுவப்படுகின்றன.

தமிழ் ஈழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளி வாய்க்கால் நினைவகம் திகழும்.

தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும்.

இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே!

தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி தந்து துணை நில்லுங்கள்.

இதையும் நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறு தொடர் நிகழ்வாய்க் கருதி இன்றே தோள் கொடுப்போம்

உங்கள் நிதி - தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர் சிந்திய போராளிகள் - பொதுமக்கள் - தமிழ்நாட்டில் அவர்களுக்காய் உயிர் கொடுத்த நெருப்பு மேனிகள் - மீண்டும் உயிர்ச் சிலைகளாய் நிமிர உதவும்.

நன்றி!

காசி ஆனந்தன்

தமிழீழம்

ஈழம்.. கொடூரமும் கொலையும்!

ழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... 
நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை
நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் ராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர். போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்க​வேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் ​துயரம்!
கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வை இட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்​பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்​தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்​கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.
புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்​களைக்கூட ராணுவம் சித்ரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வேன்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வேனில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்​பட்டவர்களின் உடல்கள், ரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!
மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வேன்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.
செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று ராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.
போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்​களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்​கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்​பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வேனில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்​பட்டார். பல செய்தி நிறுவனங்​கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்த​வில்லை.
இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளி​நொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை ராணுவம் தடுத்தது. தளவாடங்கள் மற்றும் பொருட்​களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்​கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.
இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது. இறுதிக் கட்டப் போரில், இலங்கை ராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. காய​மடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது ராணுவம்!.
- துயரங்கள் தொடரும்...

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ
சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​
கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.
அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.
இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.
இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.
ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும்,  தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!