மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்கலாமா?


ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்கலாமா?
மோசமான தோல்வியைச் சந்திக்கும் நேரத்தில், அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் பலரும் ஒரே மாதிரியாக கோஷம் போடுவார்கள்... ‘‘நாற்பது சதவீத வாக்காளர்கள் ஓட்டு போட வருவதே இல்லை. தேர்தலுக்கு விடுமுறை அறிவித்தால்கூட, வீட்டிலேயே இருந்துவிடுகின்றனர். எனவே ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்கவேண்டும்!’’ என்ற கோஷம்தான் அது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இதுபற்றி நாடெங்கிலும் விவாதங்கள் எழுந்தன. அப்போது தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த நவீன் சாவ்லா, ‘நடைமுறைக்கு சாத்தியப்படாத விஷயம் இதுஎன்றார். படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய மேற்கத்திய நாடுகளில்கூட இப்படி மக்களைக் கட்டாயப்படுத்தி ஓட்டு போடவைக்கும் சட்டம் கிடையாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் இப்படிச் செய்யமுடியாதுஎன்று சொன்னார் அவர்.
ஆனால் கடந்த டிசம்பரிலேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஓட்டு போடுவதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘பஞ்சாயத்து தேர்தல்களில் மக்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். போடாதவர்கள் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். காரணம் திருப்திகரமாக இல்லை என்றால், ரேஷன் கார்டை பறிமுதல் செய்வது போன்ற தண்டனைகள் வழங்கப்படும்என்பது அந்த சட்டத்தின் சாரம்சம்.
காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தும்கூட, இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தார் மோடி. மாநில கவர்னர் கமலா, ‘மக்களின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் சட்டம் இதுஎன சொல்லி இதை திருப்பி அனுப்பினார். இப்போது மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கிறது குஜராத் அரசு. இந்த வாரத்தில் சட்டம் நிறைவேற்றப்படும்என குஜராத் சட்ட அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.
இப்படி கவர்னர் முதல் முறை திருப்பி அனுப்பிய ஒரு சட்டத்தை, மீண்டும் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும்போது, வேறு வழியின்றி கவர்னர் அதில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் நேரிடலாம். ஆனாலும்கூட வேறுவிதமான சட்ட சிக்கல்கள் இந்த சட்டத்துக்கு வரக்கூடும். இதையெல்லாம் தாண்டி இந்த சட்டம் நிறைவேறினால், இதை மற்ற மாநிலங்களும் ஆசையோடு பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும் என நினைத்துப் பார்க்கவே கவலையாக இருக்கிறது!
அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை தரும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத ஒரு தேசமாக இந்தியா இருக்கிறது. கிராமங்களில் பிழைப்புக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில், நகரங்களை நோக்கி மக்கள் புலம்பெயர்வது சீனாவிலும் இந்தியாவிலும் அதிகம். சீன மக்களுக்கு பிரச்னை இல்லை; அங்கு தேர்தல்கள் இல்லை. இங்கு அப்படி நகரங்களுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. பெரும்பாலும் ஓட்டு போட முடியாதவர்கள் இவர்கள்தான்! வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கான சலுகை விலையில் உணவு தானியங்களை வாங்கமுடியாமல் போகிறவர்களை ஓட்டு போடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்
மற்றவர்களுக்கும் தேர்தல்களில் பிரச்னை இருக்கிறது. வாக்குச்சீட்டு சிஸ்டம் நடைமுறையில் இருந்தவரை, ‘யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லைஎன நினைப்பவர்கள் 49ஓஎன்ற படிவத்தை வாங்கி அதில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பிருந்தது. இப்போது எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு பட்டனை வைத்தால், வெற்றிபெறும் வேட்பாளரைவிட 49ஓவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துவிடப்போகிறது என்ற பயம் ஒருவேளை காரணமாக இருக்கலாம். எல்லா கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மோசமான வேட்பாளர்களை நிறுத்தினால், மக்களுக்கு ஓட்டு போட எப்படி ஆர்வம் வரும்? இப்போதைய சாய்ஸ், ‘தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறீர்களா அல்லது விஷம் குடித்து சாகப் போகிறீர்களா?’ என்பதாகவே இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் மக்களுக்குப் பிடிக்காத வேட்பாளர்களை கட்சிகள் சர்வாதிகாரமாக திணித்துவிட்டு, மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?
அனைவருக்கும் கல்விஎன்ற கட்டாயச் சட்டம் வந்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த முடியாத அரசாங்கத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை. பொது இடத்தில் புகை பிடிப்பது சட்ட விரோதம்என சட்டம் அமலாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதை நடைமுறைப்படுத்த போலீசாலும் முடியவில்லை; சுகாதார அதிகாரிகளுக்கும் சாத்தியப்படவில்லை. சட்டத்தை முறையாக அமல்படுத்தாத இவர்களை தண்டிக்க எதுவும் வழியில்லை.
அரசு தனது கடமையிலிருந்து தவறும்போது, ஆட்சியாளர்களையோ அதிகாரிகளையோ தண்டிக்க சட்டத்தில் வழியில்லை. அப்படி இருக்கும்போது மக்களை மட்டும் தண்டிக்க நினைப்பது எந்தவகையில் நியாயம்?
unarchitamilan manikandan
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக