மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நாங்கள் மீண்டும் கோழைகளாக மாறிவிட்டோமா...?

News Service
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த நான்காவது வருடத்தில் வெளிவந்துள்ள புகைப்பட ஆதாரம் ஒன்று உலகத் தமிழர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் போராட்டங்கள் வெடித்துப் பூதாகரமாகியுள்ளன. சிங்களத் தூதரகம் முற்றுகைக்குள்ளாகியுள்ளது. சிறிலங்கா விமான நிறுவன அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மலேசியத் தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், நாம்...? நினைக்கவே அருவருப்பாக உள்ளது. புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்துவிட்டோமா...? விடுதலை உணர்வை வேரோடு சாய்த்துவிட்டோமா...? எதிரியின் திசையை நோக்கி தாள்பணிந்து விட்டோமா...? நாங்கள் மீண்டும் கோழைகளாக மாறிவிட்டோமா...? ஒன்றுமே புரியவில்லை.
   புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழர்கள் இப்போது கடைப்பிடிக்கும் தன்னுணர்வற்ற நிலைக்குக் காரணம் தெரியாமல் மனது தவிக்கின்றது. பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்காக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படத்துடன் அடங்கிவிட்டோமா...? அல்லது, அமெரிக்கா ஐ.நா. மன்றத்தில் கொண்டுவரும் 'சிறிலங்காவைத் தட்டி வைக்கும்' தீர்மானத்துள் திருப்திப்பட்டுவிட்டோமா...? எதுவுமே தெரியவில்லை. ஒரு இளைஞனின் தற்கொலை, துனீசிய நாட்டின் தலைவிதியையே மாற்றி எழுதியது. அது, அந்த மக்களது இனப் பற்றையும், அவர்தம் தேசத்தின்மீதான அக்கறையையும் உணர்த்தியது. பாலச்சந்திரனின் படுகொலை எமக்கு எதையுமே உணர்த்தவில்லையா...? போதையில் தன்னைத் தொலைத்து மாய்ந்து போனவனுக்கும் கண்ணீர் அஞ்சலி ஒட்டும் புலம்பெயர் தமிழர்கள், தமிழீழ நாயகனின் மகனுக்கு அஞ்சலி கூட நிகழ்த்தவில்லையே...
வெறி பிடித்த சிங்களத்தின் கோரக் கொலைவெறியால் குதறப்பட்ட அத்தனை இளம் பிஞ்சுகளினதும் அவலங்களின் அடையாளமாக வெளிவந்த பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சி இருண்டுபோன தமிழர் இதயங்களில் கோபத்தை மூட்டாவிட்டாலும், சோகத்தை ஊட்டவில்லையா...?கனவுகளுடன் விளையாடும் வயதில், கருணையே இல்லாத இதயங்களையும்கூட கண் கலங்க வைக்கும் காட்சியாக பாலச்சந்திரனின் மரணம் பதிவாகிப் போனது யாரால்...? எங்களது விடுதலைக்காக... எங்களது தேசத்தின் விடிவுக்காகப் போராடிய எங்கள் தேசியத் தலைவனின் மகனாகப் பிறந்ததை விடவும் அவன் புரிந்த குற்றம் என்ன...? நான்... எனது குடும்பம்... எனது பிள்ளைகள்... என்று வாழ்வதற்காகச் சற்றும் தலை சாய்க்காத விடுதலை இலட்சியத்தின் கடைசி வாரிசும் அந்த விடுதலைக்கே உரமாகிப்போனது எங்கள் மனதை நோகடிக்கவில்லை என்றால்... எங்கள் நெஞ்சங்களில் கோபத்தை மூட்டவில்லை என்றால்... எங்கள் வாழவின் வரலாற்றில் ஏதோ தவறு என்பதே உண்மை.
எங்கள் சூரியத்தேவன் நிகழ்த்திய வேள்வியில் குளிர் காய்ந்தவர்கள் பல ஆயிரம் பேர்... அவர்களை இப்போது வீதிகளிலும் காண முடிவதில்லை... இறுதிப் போர்க் களத்தில் எல்லாமே முடிந்ததென்று, உதறி வெளியேறிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பல ஆயிரம் பேர் இப்போது புலம்பெயர் தேசங்களில்... ஆனாலும், அவர்களை புலம்பெயர் போர்க் களங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை... மெய்க்காப்பாளர்கள் புடைசூழ, நெஞ்சு நிமித்தி நின்றவர்கள் எல்லாம், இப்போது பெரும் வர்த்தகர்கள் ஆகிவிட்டார்கள்... களமுனை வெற்றிகளின் பின்னாலும், களம் முற்றாக வீழ்வதற்கு முன்னாலும் கொடி பிடித்து ஆர்ப்பரித்த இளைய தலைமுறைகளையும் இப்போது காணவில்லை... அப்போ... ஈழத் தமிழர்களின் வாழ்வுக்கு என்ன வழி...? சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் சிதைந்து போகும் எங்கள் தமிழீழத்திற்கு ஏது நிலை... நடைபிணமாக, நாதியற்றவர்களாக, ஏன் என்று எதிர்த்துக் கேட்க முடியாமல் ஊனப்படுத்தப்பட்டவர்களாக, இறந்துபோன உறவுகளுக்கு விளக்கேற்ற முடியாமலும், தொலைந்து போன மனிதர்களைத் தேடுவதற்குத் திராணி இல்லாமலும் சாவுக்குள் வாழும் எங்கள் தமிழீழத்து உறவுகளுக்கு என்ன தீர்வு?
நாங்கள் மௌனமாக இருந்து எதனைச் சாதிக்கப் போகின்றோம்...? எதனைச் சம்பாதிக்கப் போகின்றோம்..? அழுவதற்கும், எழுவதற்கும், மனிதர்களாக வாழ்வதற்கும் துணிவற்றவர்களாக நாம் புலம்பெயர் தேசங்களில் சிதைந்து போகப் போகின்றோமா....? எந்த அர்த்தத்தில் புலம்பெயர் தமிழர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது...? ஏறத்தாள... 2000 வருடங்களுக்கும் மேலாகப் புலம்பெயர் வாழ்வையே நிரந்தரமாக நம்பிய யூதர்கள் ஜெர்மனிய நாசிகளிடம் பாடம் கற்றது போன்ற காலம்வரை, புலம்பெயர் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைக்கப் போகின்றார்களா...? அடிமை வாழ்வு இனி ஒருபோதும் வேண்டாம் என்று தமிழ் மக்கள் முடிவு செய்து முப்பத்தைந்து வருடங்கள் தாண்டிவிட்டது. சிங்கள தேசத்துடன் மீண்டும் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை சிங்கள ஆட்சியாளாகள் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைகள் நிரூபித்துவிட்டது. இரக்கமற்ற சிங்கள இனவாதக் கொடூரத்தின் உச்சம் பாலச்சந்திரனால் உலகத்திற்குச் சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது.
நீதி தேவதை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள தேசத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நீதியை விரைவு படுத்த வேண்டுமாயின், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தலைவர்களைத் தேடாத தொண்டர்களாக... தலைக்கு முடி தேடாத போராளிகளாக... தனக்கென்று எதுவுமே தேடாத தியாகிகளாகக் களத்தில் அணி சேர வேண்டும். எமக்கான போராட்டம் எங்கள் கைகளில்தான்... எமக்கான விடுதலையை யாராவது கையளிப்பார்கள் என்ற கனவான தீர்மானங்கள் இனியும் வேண்டாம். நாடுகளுடன் போரிடுவதற்குத்தான் ஆயுதங்கள் தேவை. உலகின் மனச்சாட்சியுடன் போர் புரிவதற்கு நியாயம் மட்டுமே போதுமானது. சத்தியமும், தர்மமும் எங்கள் பக்கம் உள்ளதால், இந்த ஜனநாயக மீட்புப் போரில் ஈழத் தமிழர்களது வெற்றி மட்டுமே சாத்தியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக